Home » இதழ் 04 » வயிற்றெரிச்சல் தின்னும் கெட்டதுகள்-கவிதை

 
 

வயிற்றெரிச்சல் தின்னும் கெட்டதுகள்-கவிதை

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

 

– ஈழக்கவி

 


ஆக்கிரமிப்பு நிலத்தில்
தன்கண்முன்னால் வன்புணாச்சிக்கு ஆளான
தன்மகளை பெத்தமடியில் வைத்து
பித்துபிடித்து பதறியழும்
ஒரு காஷ்மீர் தாயின் வயிற்றெரிச்சலை
பூனை குட்டியொன்றை எலியாக உள்ளுறை உவமமாக்கி
பூனைகள் கடித்துக் குதறி தின்பது போல
இந்திய இராணுவ கெட்டதுகள் புசிக்கும்

ஒரு நூறு குடும்பங்கள் படுகொலையாக
சவக்காடாகி குருதி ஆற்றில் மிகுக்கும்
பலஸ்தீனத்தின் வயிற்றெரிச்சலை
தெருநாய்கள் நாறிய மாமிசத்தை உண்பது போல
இஸ்ரேலிய கெட்டதுகள் தின்னும்

கூடுகள் கலைந்து இறகுகள் உருக்குலைந்துப் போன
குருவிக் கூட்டம் போல
இருத்தல் சிதைந்த நம்மவர்களின் வயிற்றெரிச்சலை
பன்றி பீ தின்பது போல
துவேச கெட்டதுகள் நக்கித்தின்னும்

தலைநிமிர்ந்து நின்ற தேசங்களில்
யுத்த சூனியக்காரர்கள் மூட்டிவிட்ட சண்டைகளால்
உடைந்துப் போன தன்மான அரசியலின் வயிற்றெரிச்சலை
பெருச்சாளி புனிதநூல்களை அரிப்பது போல
அமெரிக்க கெட்டதுகள் அள்ளிமொத்தும்

வரலாறு முழுக்க கெட்டதுகள்
சாத்தான் போல
பிர்அவுன் போல
நம்ரூது போல
ஹிட்லர் போல
ஜோர்ஜ் புஷ் போல
சியோனிசம் போல
ஆட்சி பீடங்கள் போல
வயிற்றெரிச்சலை தின்ற வாறே

௦௦௦௦

2012.07.27 இரவு 11.05 மணி

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment