Home » இதழ் 06 » ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

 

ஏனஸ்ட் ஹெமிங்வே ,Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961)

 

 

-தமிழில் – சு.மகேந்திரன்

  ஏனஸ்ட் ஹெமிங்வே (Ernest Miller Hemingway (July 21, 1899 – July 2, 1961) 1899இல் பிறந்தார்; தகப்பனார் ஒரு டொக்ரர். ஆறு பிள்ளைகளில் ஹெமிங்வே இரண்டாவது மகன். சிக்காக்கோவின் புறநகர்ப்பகுதியான ஓக்பாக்கில் அவர்களது இல்லம் இருந்தது.

‘கென்னாஸ் சிற்றி ஸ்ரார்’  ;’ The Kansas City Star      என்ற புதின இதழில் 1917இல் நிருபராகச் சேர்ந்தார் ஏனஸ்ட் ஹெமிங்வே. அடுத்த வருடம் அவராகவே போர்ப்பகுதியொன்றிற்கு அம்புலன்ஸ் சாரதியாகப் பணிபுரிய, இத்தாலி அரங்கிற்கு சென்றார். இருமுறை கடுமையான காயப்பட்டு சேவையிலிருந்து ஓய்வெடுத்துக்கொண்டார். 1919இல் அமெரிக்காவிற்கு வந்தவர், 1921இல் திருமணம் செய்துகொண்டார். கிரேக்க – துருக்கி யுத்தத்தில் 1922 இல் நிருபராகத் தொழிற்பட்டார். இரு வருடங்களிற்குப் பின்னர் பத்திரிகைத்துறையை முற்றாக விட்டு முழுநேர எழுத்தாளராக மாறினார். மீண்டும் பாரிசுக்கு சென்றவர், அங்கே அமெரிக்காவிலிருந்து வந்து குடியேறியிருந்த எஸ்ராபவுண்ட், ஸ்ரெயின் என்பவர்களுடன் உறவுகளைப் புதுப்பித்துக்கொண்டார். இவற்றால் ஏற்பட்ட ஆர்வமும், விவாதங்களும் ஒரு சிறந்த எழுத்து நடையை உருவாக்க அவருக்கு உதவியது.

முதலில் ஹெமிங்வேயின் மூன்று கதைகளும் பத்துக் கவிதைகளும் வெளிவந்தன. ‘எங்கள் காலத்தில்’, ‘ரொரன்ஸ் ஒப் ஸ்பிரிங்’ என்பன தொடர்ந்து வெளிவந்தன. ஆயினும் ‘வெஸ்ரா’, ‘வென்வித் அவுட்வுமன்’ ‘பெயாவல் ரூ ஆம்ஸ்’ என்பன வெளிவந்த பின்னரே அவர் பெரிதாக தெரியப்பட்டார்.

காளை அடக்கும் போட்டிகள், பெருங்கடல் மீன்பிடி, பெரும் எடுப்பிலான வேட்டையாடுதல் என்பனவற்றில் முழுமூச்சில் ஈடுபட்டார் ஹெமிங்வே.

அவரது தனித்துவமான எழுத்துநடையைப் பின்பற்றி பலர் எழுத முற்பட்ட போதும் அவரது தனித்துவத்தை யாராலுமே அடையமுடியவில்லை. புதிய எழுத்துக்களில் அவரது பங்கு 1954 இல் அவருக்கு அளிக்கப்பட்ட ‘நோபிள் பரிசின்’ மூலம் அங்கீகரிக்கப்பட்டது. இது அவரது ‘கடலும் கிழவனும்’ என்ற நாவலுக்காக அளிக்கப்பட்டது. 1961 இல் ஹெமிங்வே மரணமடைந்தார்.

000000

 

“அந்தக்காலங்களில் என்னிடம் புத்தகங்கள் வாங்க பணம் இருந்ததில்லை. நான் சேக்ஸ்பியர் கொம்பனியரிடமிருந்து புத்தகங்கள் இரவல் வாங்கி வருவேன். அந்த இடம் *சில்வியா வீச்சுக்கு சொந்தமானது. 12 ரூட் எல் ஓடியனில், அந்தக்கடை லைபிரறியாகவும், புத்தக விற்பனை நிலையமாகவும் செயற்பட்டது. வெளியே கடும் குளிர்காற்று வீசும் தெருக்கள். ஆனால் லைபிரறி மட்டும் எப்போதும் நல்ல உஸ்ணமாக இருக்கும் வகையில் பேணப்பட்டது. உற்சாகம் தரும் வகையில் அமைந்த அந்த இடம், குளிர்கால பெரிய கணப்புக்களைக் கொண்டிருந்தது. மேசைகளும் றாக்கைகளும் புத்தகங்களால் நிறைந்திருந்தன. புதிய புத்தகங்கள் பார்வையில் படும்படி யன்னலோரமாக வைக்கப்பட்டிருந்தன. சுவர்களில் உயிரோடிருக்கும் மற்றும் மறைந்துபோன எழுத்தாளர்களின் படங்கள் இருந்தன. எல்லாமே எதேச்சையாக எடுக்கப்பட்ட படங்கள். ஆனால் இறந்தவர்கள்கூட படங்களில் உயிரோட்டத்துடன் இருந்தனர்.

*(சில்வியாபீச் (சேக்ஸ்பியர் அன் கொம்பனி)

 

சில்வியா உயிரோட்டத்துடனும் அழகிய சிலைபோன்ற முகத்துடனும் இருந்தாள். அவளது மண்ணிறக் கண்கள் ஒரு மிருகத்தினது போல், உயிரோட்டம் மிகுந்து ஒளிர்வுடனிருந்தன. ஒரு சிறு பெண்ணின் உட்சாகத்துடன் அவள் தோன்றினாள். அவளது அடர்தியான மண்ணிற கூந்தல் நன்றாக அமையப்பெற்ற அவளின் நெற்றியின் பின் புறமாக சீவப்பட்டு காதுக்கு கீழாக வெட்டப்பட்டிருந்தது. அழகான கால்களை வேறு கொண்டிருந்தாள். மிகுந்த இரக்க சிந்தையும் சந்தோச உணர்வும் சிரத்தையும் உடையவளாக தென்பட்டாள். வாயாடியாகவும் கேலி செய்யத் தெரிந்தவளாகவும் இருந்தாள். நான் இதுவரை யாரையுமே அவளுக்கு நிகராகக் கண்டதில்லை!

வாடகைக்கு புத்தகம் எடுக்கும் பகுதியில் சேர்வதற்கான பணம் என்னிடம் இருக்காததால் நான் லைபிரறிக்கு முதன் முதலாகச் சென்றபோது பெரிதும் வெட்கப்பட்டேன். ஆனால் அவளோ பணம் இருக்கும் போது கட்டலாம் எனக்கூறி நூலக அட்டையும் தந்து விரும்பியவாறு எத்தனை புத்தகங்கள் வேண்டுமானாலும் எடுக்கச் சொன்னாள்.

என்னை நம்புவதற்கான எக்காரணங்களும் அவளுக்கு இருக்கவில்லை. என்னையோ அல்லது எனது இருப்பிடத்தையோ அவளுக்குத் தெரியாது. அத்துடன் நான் அவளுக்கு கொடுத்த விலாசம் செல்வந்தர்கள் வாழும்பகுதியாக வேறு இருந்தது. அவளிடம் வரவேற்கும் மனப்பாங்கும் வசிகரமும் சந்தோசமும்  குடிகொண்டிருந்தன. அதன் அளவென்னவோ அந்தக்கட்டிடத்தின் உயர்தோங்கிய சுவர்களின் அளவிலானது. அந்தச்சுவர்களின் பின் அறைகள் வரை வியாபித்திருந்தன. அந்தச்சுவர்களைச் சார்ந்து, புத்தக ராக்கைகளும் புத்தக சாலையின் பெறுமதிமிக்க பொருட்களுமிருந்தன.

நான் ரெக்நோவின் புத்தகமொன்றையும், ஒரு விளையாட்டு வீரனின் கிறுக்கல்களின் இரண்டு பாகங்களையும், டீ.எச் லொறன்சின் ஆரம்பகால நாவலான ‘மைந்தர்களும் காதலர்களும்’ (என எண்ணுகின்றேன்) என்பனவற்றையும் எடுத்துக்கொண்டேன். சில்வியா மேலும் புத்தகங்களையும் எடுத்துக்கொள்ளச் சொன்னாள். நான் கொன்ஸ்ரன்ஸ்கானட் என்பவரின் மொழிபெயர்ப்பில் வந்த “போரும் சமாதானமும்’ டெஸ்ரவஸ்கியின் ‘சூதாடியும் வேறு கதைகளும்’ என்பனவற்றை எடுத்துக்கொண்டேன்.

“இவ்வளவையும் விரைவில் வாசித்து முடித்தால் ஒழிய, நீங்கள் இங்குவர வாய்ப்பில்லை”  என்றாள்.

“நான் பணத்தைக்கொடுக்க கட்டாயம் வர வேண்டும்தானே. பிளாற்றில் என்னிடம் சிறிது பணம் கூட இருக்கின்றது”

“நான் அந்த வகையில் கூறவில்லை. நீங்கள் உங்களுக்கு வசதிப்படும் போது பணத்தைக் கட்டலாம்.”

“எப்போதெல்லாம் ஜொயிஸ் இங்கு வருவார்?”

“அவர் லைபிரறிக்கு வரும்போது பின்னேரம் முழுமையாக கடந்திருக்கும்”  என்றவள் நீங்கள் எப்போதாவது அவரைக்கண்டுள்ளீர்களா?”

~நாங்கள் அவரை மக்கொல்ட்ஸ் ஹோட்டலுக்கு தனது குடும்பத்தவருடன் சாப்பிடவரும் போது கண்டிருக்கிறோம். ஆனால் அவர்கள் சாப்பிடும்போது யாரையுமே எதிர்கொள்வது சரியாக இருக்காது. அத்துடன் மக்கொல்ட்ஸ் ஒரு செலவுமிக்க இடம்.’

“நீங்கள் வீட்டில் தானே சாப்பிடுகிறீர்கள்?”

“அனேகமாக எம்மிடம் ஒரு நல்ல சமையல்காரி இருக்கிறாள்”

“நீங்கள் இருக்கும் இடத்தில் ஒரு நல்ல ரெஸ்ரோரண்ட் எதுவும் இல்லைத்தானே அப்படி ஏதாவது இருக்கிறதா?”

“லாபோட் இங்குதான் வசித்தார். இந்தக்குறையைத்தவிர மற்றவை எல்லாமே அவருக்குப்பிடித்தவை.”

“பென்ரியோன் பக்கமாக ஒரு ரெஸ்ரோரண்ட் உள்ளது. அதுதான் உங்களுக்கு அண்மையானது.”

“எனக்கு நீ சொல்லும் பகுதிப்பற்றித் தெரியாது. நாங்கள் வீட்டில்தான் சாப்பிடுகிறோம்.”

“நீங்கள் உங்கள் மனைவியையும் அழைத்துக்கொண்டு இங்கு ஒருமுறை வர வேண்டும்.”

“நூலகக்கட்டணத்தை கட்டியபின் கூட்டிவருவேன். நீ அதுவரை காத்திருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும் நன்றி.”

“விரைவில் வாசித்துவிடாதீர்கள்” என்றாள்.

அவர்களின் வீடு இரு அறைகளைக்கொண்டது. வென்னீர் வைக்கும் வசதிகளோ உட்புறக்குளியல் அறைகளோ கிடையாது. மெக்சிக்கனில் உள்ள வெளியில் மட்டும் ரொயலட் வசதிகள் கொண்ட வீடுகளில் வாழ்ந்து பழகியவர்களுக்கு, இவை ஒன்றும் வசதி குறைந்தவை அல்ல. ஆனால் வெளிச்சூழலைப் பார்த்து அனுபவிக்கக்கூடிய வகையில் எங்கள் பிளாட் அமைந்திருந்தது. கட்டில்கள் இல்லாமல் இருந்தாலும் கூட, ஸ்பிறிங்குகளுடன் கூடிய மெத்தைகள் இருந்ததால், படுக்கை வசதியானதாகவே அமைந்திருந்தது. சுவரில் தொங்கிக்கொண்டிருந்த படங்கள் அவர்களின் ரசனைக்குரியனவாக இருந்தன. உண்மையைச்சொல்வதானால், எங்கள் பிளாட் சந்தோசமும் உற்சாகமும் தரும் வகையில் அமைந்திருந்தது.

பிளாட்டை அடைந்தபோது அவ் உன்னத லைபிறறி பற்றி மனைவிக்குச் சொன்னேன். ஆனால் அவளோ “ரேற்றி, பின்னேரம் நீங்கள் மீண்டும் அங்கு சென்று கட்டணத்தை செலுத்திவிடுங்கள்” என்றாள்.

“கட்டாயம் செய்யவேண்டியதுதான். நாங்கள் இருவருமாக செய்வோம். ஆற்றங்கரை ஓரமாக நடந்து செல்லலாம். கப்பல் வந்து நிற்கும் பிளாட்போமிற்கும் போவோம்”.

“நூடிசின் பக்கமாகவும் செல்லவேண்டும் செல்லும்போது கலரிகளையும், கண்ணாடி யன்னல்களுடாகக் காட்சிப்பொருட்களையும் பார்த்துச்செல்லலாம்”.

“கட்டாயமாக நாங்கள் எங்கு வேண்டுமானாலும் நடந்து செல்லலாம். எமக்கு இங்கு யாரையும் தெரியாதென்பதால் ஏதாவதொரு ஹோட்டலில் ஒரு கிளாஸ் மது அருந்தலாம்”

“இல்லை, இரண்டு கிளாஸ் அளவுக்கு அருந்தவேண்டும். பின்பு ஏதாவது சாப்பிடலாம்”.

“இல்லை லைபிரறிக்கு பணம் கட்டவேண்டும். என்பதையும் மறந்துவிட வேண்டாம்”

“நாங்கள் வீட்டிற்கு வந்து சாப்பிடலாம். கோப்பிரட்டிசொப்பில் பியூனி வகை மது வாங்கிக் குடிக்கலாம். அவற்றின் விலையைக்கூட யன்னலில் போட்டிருக்கிறார்கள் என்றால் பாரேன். பின் ஏதாவது வாசிக்கலாம். பின் காதல் செய்வோம்”

“எம் இருவரையும் தவிர நாம் வேறு ஒருவரையும் விரும்புவதில்லை அப்படித்தானே”

“இல்லை, ஒருபோதும் இல்லை”

“எவ்வளவு அருமையான நண்பகலும், பின்னேரப்பொழுதும் வரப்போகின்றன. நாங்கள் இப்போது மதிய போசனம் அருந்துவோம்”

“எனக்கு சரியான பசி” என்றேன்.

“முன்பு நானொரு கபேயில் வேலை செய்தேன்” என ஆரம்பித்தேன்.

“அந்த அனுபவம் எப்படியாக இருந்தது?”

“நன்றாகவே, அப்படித்தான் என்றே எண்ணுகின்றேன்.”

“மதிய போசனத்திற்கு என்ன எல்லாம் இருக்கின்றன?”

“சிறிய ராடீசஸ், நல்ல பொயிட் டீவெயூ, மாஸ் உருணைக்கிழங்கு அத்துடன் அப்பிள்ரொட்”

“இப்போது உலகின் தலைசிறந்த புத்தகங்கள் எல்லாம் வாசிக்க கிடைக்கப்போகின்றன. நாம் அதிர்ஷ்டசாலிகள். நாம் பயணங்கள் போகும்போது அவற்றையெல்லாம் எடுத்துச்செல்லலாம்” என்றேன்.

“அப்படிச்செய்வது சரியானதா? நேர்மையானதுதானா?” என்றாள் மனைவி.

“நேர்மையாதுதான் அதில் சந்தேகமில்லை” என்றேன். மேலும் “அதில் சந்தேகம் இல்லை” என வாதிட்டேன்.

“அவளிடம் ஹென்றி யேம்ஸ்சின் நாவல்கள் உள்ளனவா?”

“சந்தேகமில்லை உள்ளது”  என்றாள் மனைவி.

“நீங்கள் இந்த இடத்தைக் கண்டுபிடித்ததால் நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்”.

மடையன் போல் “நாங்கள் எப்போதும் அதிர்ஷ்டசாலிகள்தான்!” என்றேன் நான். நல்ல வேளையாக அங்கிருந்த தளபாடங்கள் மேல் நான் தடுக்கி விழவில்லை”.

அந்த அறை முழுமையாக தளபாடங்களால் நிரம்பிவழிந்தது.

00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment