Home » அசோகா ஹந்தகம- » அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

 

அசோகா ஹந்தகம-சிங்கள திரைப்பட இயக்குநர்-சு.மகேந்திரன்

 

 

அவரின் படைப்புக்கள் விமர்சனங்களுக்கு உட்படுத்துவதிலேயே திரையுலகில் அவரை பிரதிபத்தப்படுத்துவது   ஆரம்பிக்கிறது. ஆனால் தனது அணுகுமுறையில் சமீபகாலமாக சிறிது வேறுபட்டிருக்கிறார். அவரது ஆறாவது படமாகிய ‘இனி-அவன்’  இல் தனது வெளிப்படுத்தும் தன்மையில் மாற்றங்களை செய்துள்ளார். எனினும் சில இடங்களில் விவாதத்திற்கு உட்படும் கோபம் காணப்படுகிறது.

 

 

‘எனது வழமையான பாணி நடையிலிருந்து நான் மாறுபடவில்லை. காலை சிறிது பின் நோக்கி வைத்துள்ளேன். ஆனால் இதனை, சரணாகதி அடைந்து விட்டேன் எனக் கூறமுடியாது’ இப்படி கூறுகிறார் “டெயிலி நியூஸ்” (2012.10.03) பத்திரிகையின் ‘ஆர்ட்ஸ்கோப்’ பகுதியில் இடம் பெற்றுள்ள திரைப்பட இயக்குனர் அசோகா ஹந்தகம.

இலங்கை சினிமாவின் மூன்றாம் தலைமுறையின் முதன்மையானவர்களில் முதன்மையானவராக கருதப்படும் இவர், சமூக அரசியல் நிதர்சனங்களை பிரதி  செய்தலில் புதிய விவரண வடிவங்களை ஏற்படுத்துபவராக கருதப்படுபவர்.  புரட்சிகரமான முன்னெடுப்புக்கள் அவரது படைப்புக்களில் செயற்படுத்தப்பட்டுள்ளன. மகே சண்டி, (இது எனது நிலா) cinefan2001 திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான விருதை பெற்றது. பியம்பானா (ஒரு இறகுடன் பறப்பு) 16 வது சிங்கப்பூர் சர்வதேச திரைப்பட விழாவில் மத்தியஸ்த்தர்கள் விசேட பரிசைத்தட்டிச் சென்றது. சமீபத்தில் நடந்த இலக்கிய விழாவில் அவரது  ‘மாகாத்தா’ சிறந்த நாடகப்பிரதிக்கான பெற்றுக் கொண்டது. கடைசியாக அவர் வெளியிட்ட படமான ‘இனி-அவன்’ (ini-avan) ஜெச்யி சர்வதேச விழாவில் (2012) தென் கொரியாவில் திரையிடப்பட்டது. கானாஸ், ரொரான்டோ பட விழாக்களில் திரையிடப்பட்டது அது. அது அடுத்த வருடம் பிரான்சின் திரைப்பட விழாவிலும், விரைவில் ரோக்கியோ திரைப்பட விழாவிலும் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

‘எனது எந்தப்படங்களும் வெறுமையான பொழுது போக்குக்காக எடுக்கப்பட்டவை அல்ல. சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சமூக அரசியல் பிரச்சினைகளை படமெடுத்து, அதன்மூலம் விழிப்பு ஏற்படுத்துவதே எனது முயற்சிகள். இவங்கையில் பொழுது போக்குக்காக படம் எடுப்பவர்கள் அதிகமாக உள்ளனர். சூனியமாக உள்ள கலைத்துவ சினிமாவை நான் தேர்ந்தெடுத்துள்ளேன்’ என்கிறார் ஹந்தகம.

கே:- நீங்கள் படத்தயாரிப்பில் ஈடுபட்ட ஆரம்பக்காலங்களில் பிரதிமைப்படுத்தும் (imagary) படத்தயாரிப்புக்கள் அதிகபட்சமாக இருந்ததில்லையே?

எங்களது சினிமா ஆரம்பத்தில் இந்திய சினிமாவின் பாதிப்பிலிருந்துதான் ஆரம்பித்தது. ஆனால் உலக அரங்கில் பிரதிமை என்பது ஒரு புதுமையானது அல்ல. டொக்டர் பீரீஸ் அவர்கள் மூலமாக இது எம்மை வந்தடைந்தது. டொக்ரர் ஜே.பீ ஆரம்பித்துவைத்த இதனை நானும் வேறுசிலரும் பின்பற்றி வருகிறோம். அவர்களில் தர்மசிறி பத்திராஜா, வசந்த ஒபயசேகரா, தர்மசிறீ பண்டாரநாயக ஆகியோர் முதன்மை பெறுகிறார்கள். இந்த முறையிலான செய்வகைளை, பாத்திரங்களின்வகை செய்வது எம்மை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. கவிதைகள் போல் மறைமுகமான செய்திகளை நாம் பாத்திரங்கள் மூலம் ஓரிரு செக்கன்களில், காண்தரினங்கள் மூலம் பாதிரங்களுக்கூடாக ஒரு செய்தியாகச் சொல்ல முனைகிறோம். கணநேரதரிசிப்பினூடாக ஒரு பெரிய வரலாற்றையே பாத்திரங்கள் சமூகத்தில் தாம் எங்கு நிற்கிறார்கள் என்பதைக் காட்டி விடுகிறார்கள். பார்வை விரிவு படுத்தப்பட்டால் சபையினரிடையே இலகுவாக பரிமாற்றம் நடைபெற முடியும்.

கே: உங்கள் படங்களின் எழுத்துப்பிரதிகளை நீங்களே எழுதுகிறீர்கள். இப்படி ஏன் நடைமுறைப்படுத்துகிறீர்கள்?

எனது முதன்மை வெளிப்பாடு சினிமாதான். சபையினருடனான எண்ணப்பரிமாற்றங்களை, எனது தயாரிப்புக்கள் நடைமுறைப்படுத்தும் வேளைகளில் பலதடவைகள் செய்வேன். நான் ஒரு படத்தை முடித்தவுடன் இன்னொன்றிற்குள் பாய்வதில்லை. முன்னைய படத்தின் மூலம் கொழுந்துவிட்ட எண்ணங்களை மனதுக்குள் ஒன்றாகப்படித்து,  அதன் மூலமான புரிந்துணர்வுகள் மூலம் அடுத்த தயாரிப்புக்குள் பிரவேசிப்பேன். நான் வேறு சிலரில் நல்ல எழுத்துருவாக்கங்களை பார்வையிட்டுள்ளேன். அவற்றில் எனது ஈடுபாடு பதிந்துள்ளது. ஆனால் வேறு ஒருவரின் எழுத்துருவாக்கத்தில், ஒரு திரைப்படத்தை இயக்கும் நேரம் இன்னும் கனியவில்லை.

கே: ஓர் திரைப்பட எழுத்துரு ஆக்குபவர் திரைப்பட இயக்குனரின் தன்iமையை கொண்டிருக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

நிச்சயமாக. என்னைப்பொறுத்த வரையில் படத்திற்கான பிரதியை எழுதிய உடனேயே படத்தயாரிப்பில் 75 வீதம் முடிந்துவிட்டது என்றே நினைக்கிறேன். படம் சம்பந்தமான எனது பார்வை, பிரதி செய்தவுடன் முடிவடைந்து விட்டது. எனது அடுத்தவேலை பாத்திரங்களுக்குரிய நடிகர்களை தேர்வுசெய்வதும், இடங்களை தேர்வும் செய்வதும்தான். பின்பு படம் பிடிக்கப்படும். உங்கள் தயாரிப்புக்கு இன்னும் ஒருவர் பிரதி தயாரித்தால் பிரதி செய்பவருக்கு நீங்கள் ஒரு பிரதிமையை அல்லது பாத்திரத்தை எந்த வகை செய் முறையை செய்வீர்கள் என தெரிந்திருக்கவேண்டும். நான் ஒரு ஒளிப்பதிவாளருடன் வேலை செய்யும் போது அவரருக்கு எனது வகைப்பிடிப்பு பற்றி அறிந்தவராக இருப்பார். இது அவர் என்னுடன் பணி செய்த முன் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டதாக இருக்கும். எனது தேவை எதுவென அவருக்குத் தெரியும் என்பதால் நான் புதிதாக எதனையும் சொல்ல வேண்டியிருக்காது. எடிட்டருக்கும் இது பொருந்தும். நான் எனது பணியாளர்களிடம் இவற்றைப் பகிர்ந்துகொள்வேன். பாடகர் எச்.ஆர் ஜோதிபாலா கூட, தான் எந்த நடிகருக்காக பாடுகிறேன் என்பதைக் கேட்டறிந்து கொள்வார். நடிகர்களுக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப்பாடுவார். பிரதி எழுதும் வெளியாள் இயக்குனரின் பார்வையையும் அவரது வகைப்பிடிப்பையும் நன்கு அறிந்தவராக இருக்க வேண்டும்.

கே:- உங்களின் படைப்புக்கள் எல்லாமே உண்மைச்சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டவையாகவே இருக்கின்றன. வேறு ஒருவரின் எழுத்தாக்கங்களை வைத்து செய்யப்படுவதில்லையே?

பதில்:- உண்மைதான் சமூகத்தில் பல்வகையான சம்பவங்கள் காணப்படுகின்றன. இவைகளை வைத்தே படங்களைத் தயாரிக்கிறேன். இனி படத்தைத் தயாரிப்பதற்கு முன் பலதரப்பட்டவர்களை சந்தித்த பின்புதான் படத் தயாரிப்பில் ஈடுபடுகிறேன். அந்தக் காலங்களில் படத்தின் பிரதி தயாராகியது. அவர்களின் பிரதிபலிப்பே ‘இனி-அவன்’ படம். ‘வீடு’ கூட வாழ்வின் பல சிதறல்களின் ஒருங்கிணைப்பே. இவை மனதில் தோன்றும் மிகையான கற்பனைகளின் வடிவங்கள் அல்ல.

கே:- நாடக ஆசிரியர்கள் சிறந்த ஒருகிணைப்பை நாவல் ஆசிரியர்களுடன் ஏற்படுத்த நாடகப்பிரதிகளை உருவாக்கி நாடக ஆசிரியர்களுக்கு வாசிப்பு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்கள். ஆனால் எமது இளையதலைமுறை சினிமா வசனக்கர்த்தாக்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையே?

பதில்:- உண்மைதான். ஆனால் இப்போதெல்லாம் பிரதிகளை அச்சிடுவது ஒன்றும் பெரிய காரியமல்ல. இப்போது அவை அதிக அளவில் அச்சிடப்பட்டு சந்தையில் உள்ளன. பிரசன்ன விதானகே இவற்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளார். எனது கடந்த காலப் படங்களின் பிரதிகளும் வெளிவந்துள்ளன. இவை படப்பிடிப்பின்போது உபயோகிக்கப்பட்ட கடைசியான பிரதிகள். அவற்றை படம் ஓடும்போது ஒப்பிட்டு ஒப்புவமை செய்யலாம்.

கே:-உங்களின் தமிழர் பற்றிய விரும்பும் பார்வையே ‘இனி -அவன்’படத்தை தயாரிப்பதற்கான காரணமாக அமைந்தது என்ற குற்றச்சாட்டு பற்றிய உங்கள் கருத்து?

பதில்:- இது ஏன் என்றால் நான் விரோதப் போக்குக்கு எதிராக இருப்பதுதான்.; நான் ஒரு பக்கம் சார்ந்து இல்லை. நான் மனிதநேயம் சார்ந்து இருக்கிறேன்.

‘மே மெகா சண்டி’ இல் கூட கிராமப்புறங்களில் எவ்வாறு மனித தொடர்புகள் மாறுகிறது என்பதையே படம் பிடித்துக் காட்டுகிறது. எவ்வாறு ஒரு தமிழ்ப்பெண், அடிபாடுகளுக்குள் அகப்பட்டுப் பின் எப்படி நடந்து கொள்கிறாள் என்பதே கதை. இதை தமிழர்களிற் சிலர், ஏற்றுக்கொள்ளவில்லை. சிங்களவர்களும் இதில் தெரிந்த நேர்ப்பாதையின் ஒளியை ஒத்துக் கொள்ளவில்லை. அவர்கள் பல விதமான குற்றச்சாட்டுகளை பரவ விடுவார்கள். ஆனால், யாராவது சமூகத்தை நல்ல பார்வையுடன் பார்த்து, படத்தை தப்பபிப்பிராயங்களிலிருந்து நீங்கிய பார்வையில் ரசித்து, படத்தின் நிகழ்வுகளை அவதானித்தால், உண்மை உலகைப் புரிந்து கொள்வார்கள்.

;இனி – அவன்’ னும் அந்தப் பாதையையே பின்பற்றியுள்ளது. அது சமூக அரசியல் விமர்சனங்களைக் கொண்டது. இப்படியானவற்றை சமூகம் தன்மையுடன் ஏற்றுக் கொள்வதில்லை. எங்கள் பார்வையாளர்களிடம் ஒளிவு மறைவற்ற தன்மையில்லை. அவர்கள் படத்தைப் பார்க்க திரையரங்குளிற்கு வரும்போதே, ஏதாவது ஒரு கணக்குப் பார்த்து, அது அவர்களுக்கு உகந்ததாக இருக்கவேண்டும் என்ற நோக்குடனே வருகிறார்கள். அவற்றின் வழியில் படம் நகரவில்லை என்றால் குழப்பமடைந்து விடுகிறார்கள். அப்படியான தருணங்களில் தமது எண்ணங்களையும் படம் சொல்வதையும் தமக்குள்ளேயே உரையாடிக்கொள்வதே சிறந்தது.

கே: நீங்கள் அதிகப்படியான நிர்வாணக்காட்சிகளையும் ஒழுக்கக் கேடுகளை உருவாக்கக்கூடிய காட்சிகளையும் படங்களில் தருகிறீர்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி?

ப: நிர்வாணம் என்பது நவீன சமூகத்தில் தடைசெய்ய வேண்டியதாக பார்க்கப்படுகிறது. இது பிழையான அர்த்தம் கொண்ட ஒழுக்க இயலுக்கு இட்டுச்செல்கிறது. எமது இலக்கியத்திலும் சித்திரங்களிலும் நிர்வாணம் உள்ளது. எனது படங்கள் பற்றிய நிர்வாணம் எதிர்ப்பலைகளை உருவாக்கியதற்கு காரணம், அவை வெறும் பொழுதுபோக்குகளுக்கென என உருவாக்கப்படவில்லை என்பதுதான். பொழுதுபோக்கைவிட அதிர்வுகளைக் கொடுப்பதால் வந்த உண்மையாலேயே அவர்கள் எதிர்ப்பலைகளை உண்டாக்குகிறார்கள்.

கே: உங்களின் எந்தப்படைப்பு உங்களை நிறைவுறச்செய்துள்ளது?

பதில்: எனது பல படங்களை சர்வதேச திரைப்பட விழாக்களில் இடம்பெறச்செய்துள்ளேன். எனினும் ‘இனி – அவன்’சிறந்த வகையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அது மிகச்சிறந்த வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது என்று சொன்னார்கள். நுட்பமாக வனையப்பட்டதாலும் உள்முகப்பார்வையைக் கொண்டதாகவும் இருப்பதால் இருக்கலாம். நான் படைத்தவைகளில் ஒன்றினை எடுத்துச்சொல்ல முடியாது. பல்வகையான பிரச்சனைகளையும் தலைப்புக்களையும் எடுத்துச்சொல்லியுள்ளேன். ஒவ்வொன்றும் வெவ்வேறு வகையான விவரண வகையைச் சார்ந்தவை.

கே: நீங்கள் ஏன் ஈரானிய சினிமாவை அதிகம் விரும்பி ரசிக்கிறீர்கள்?

பதில்: பலவித தடங்களுக்கும் இடைவெளி விட்டு ஈரானிய சினிமா நடந்து செல்கிறது. இன்னொருவகையில் ஈரானிய இயக்குனர்கள், மிகவும் கெட்டித்தனமாக தமது அபிப்பிராயங்களை பார்வையாளர்களிடம் இட்டுச் செல்கின்றனர். யாரையும் விரோதத்திற்கு உட்படுத்தாது ஈரானிய மக்கள் கூட்டத்தை பிரதிபலிக்கும் வகையில் படங்களை அமைக்கிறார்கள். ஊடறுத்துச் சென்று இது நடந்திருக்கிறது. வேறொரு அடுக்கில் இவை படம் பிடிக்கப்பட்டுள்ளன. பிரிவு என்பது இவற்றுக்கு உதாரணமான திரைப்படம். எவரையும் ஈர்க்கும் வகையில் ஈரானிய சமூக சித்திர பிரதிமையை அஸ்கார்பரகாடி படைத்துள்ளார்.

கே: நீங்கள் சமீபத்தில் இனி – அவனை கனாஸ், ரொரண்டே திரைப்படங்களுக்கு இட்டுச்சென்றீர்கள். வரவேற்பு எப்படி இருந்தது?

பதில்: ரொரண்டோ 40 000 தமிழர்களைக் கொண்ட நகரம். எனக்கு ‘இனி – அவனை’ திரையிடுவதில் சிறிது தயக்கம் இருந்தது. அவர்கள் எப்படி இதனை எதிர்கொள்வார்கள் என்ற எண்ணம் இருந்தது. படத்தின் பின்னான கேள்வி நேரத்தின் பின் அவர்கள் என்னுடன் உரையாடினார்கள். என்னுடன் இணைந்துகொண்டார்கள். அந்தப்படம் பற்றிய காத்திரமான விமர்சனம் அவர்களிடம் இருந்தது.

 

௦௦௦

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment