Home » இதழ் 07 » இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 

இயந்திரத்தோடு வாழ்தல்-எஸ்.கிருஷ்ணமூர்த்தி

 

 

 

தொண்நூறுகளில் வெளிநாட்டுக்குப் புலம் பெயர்ந்த காலகட்டத்தில் பெற்றோர், ஊர், உறவினர் நண்பர்கள் பிரிவு என்பன வாட்டியதால் எப்போது தபால் வரும் என்ற ஏக்கத்துடன் இருப்பேன். கடிதங்கள் வெறும் ஒன்று, இரண்டு தாள்களில அல்ல. ஒரு புதினப் பத்திரிகை போல் கனதியும் இருக்கும், செய்திகளும் இருக்கும். காலம் செல்லச் செல்ல சுவையான கடிதங்கள் சுமையான கடிதங்களாக மாறத்தொடங்கியது. வேலையிடத்தில் மதிய போசன வேளைகனில் கடிதம் எழுதுவதிலும் வாசிப்பதிலும் நேரம் ஓடிவிடும். இதைப் பார்க்கும் என்னுடன் வேலை செய்யும் வேற்று நாட்டவர்கள்  நீயூஸ் பேப்பரா வாசிக்கிறாய் என சிலர் அப்பாவியாகவும் சிலர் கேலியாகவும் கேட்பார்கள்.
இது புலம்பெயர்ந்த பலரின் பழைய கதைகள். இப்படிப் பலர் கடிதம் எழுதிப் பயிற்சி பெற்றதனாலேயோ என்னவோ இப்போது, புலம்பெயர்ந்த பலர் எழுத்தாளராகிவிட்டனர்.

புருவத்தில் நீலக் கோடு போட்ட தபால் உறையைப் பார்த்து நீண்ட காலமாகிவிட்டது.  இப்போது தாபால் பெட்டியைத் திறக்கவே பயமாகஇருக்கிறது. தபாலுக்குள் குண்டு இருப்பது போல பதட்டத்துடன் திறக்கவேண்டியுள்ளது. மின்சாரக் கட்டணம், எரிவாயுக்கட்டணம், தொலைபேசிக் கட்டணம், தண்ணீர் கட்டணம் என்பனவும் கார்,வீடு ஆட்கள் என்பவற்றின் காப்புறுதிக் கட்டணமும், உள்ளுராட்சிவரி என்று பல கட்டணங்கள் தபால் பெட்டியை நிரப்புகின்றன. ஓவ்வெரு கட்டணமும் சாதாரண அவுஸ்திரேலியனின் ஒரு வார சம்பளத்தை விழுங்கிவிடுகிறது.

ஊரிலிருந்து வரும் கடிதங்கள்தான் காணாமல் போய்விட்டன. ஆனால் புதிய தொழில் நுட்பங்களால் தொலைபேசியாகவும், ஸ்கைப்பாகவும் மின்னஞ்சலாகவும், பேஸ்புக்காகவும் தொடர்புகள் தொடர்கின்றன. இந்த தொழில்நுட்ப வளர்ச்சி எமது வாழ்கையை இலகுவானதாக்கினாலும் எமக்குள்ளே ஒரு வெறுமையைத் தோற்றுவித்துள்ளது.

அவுஸ்திரேலியா வந்த காலகட்டத்pல் எனது சம்பளபணம் காசோலையாக கிடைக்கும். அந்த காசோலையை வங்கிக்கு எடுத்துச் செல்வேன். அங்கு கால் கடுக்க வரிசையில்  காத்திருந்து வங்கிப்புத்தகத்தைக் கொடுத்து கசோலையை கொடுக்க வேண்டும். மூன்றுநாள்கள் பொறுமையாக இருந்தால் தான் காசோலை காசாக மாறும். திரும்பவும் வங்ஙகிப்புத்தகத்தைக் காவிக் கொண்டு போய் அதே வரிசை, அதே பொறுமை அப்புறம் இந்தவாரம் என்ன கட்டணம் கட்ட வேண்டும், செலவுக்கு எவ்வளவு பணம் வேண்டும் எல்லாம் மனதிற்குள் கணக்கு போட்டுக் கொண்டு பணத்தை எடுத்துக் கொண்டு தபால் அலுவலகம் ஓடவேண்டும். அங்கும் வங்கியில் என்னவென்ன நடைமுறையோ அதே வரிசை,காத்திருத்தல் பிறகு கட்டணத்ததைச் செலுத்துதல், இப்படி பாதிநாள் கடந்து விடுகிறது. இப்போது இளம் தலைமுறையினருக்கு வங்கிப்புத்தகம், ஏன் காசோலை என்பன என்ன வென்று தெரியாது.

இன்று சம்பளப் பணம் எனது வங்கிக் கணக்கில் வர அடுத்த நொடியில் இணையத்தில் பார்த்து விட்டு நான் செலுத்த வேண்டிய கட்டணங்களை அதுக்கு அடுத்த நொடியில் செலுத்திவிட்டு அடுத்த சோலிபார்க்கப் போய்விடலாம். வாங்கிகளிலும் தபால் அலுவலகத்திலும் காத்திருக்கும் நேரத்தில் அங்கு வரும் மனிதர்களையும் அவர்களது செயல்களையும் பார்த்து ரசிக்கும் அந்த அனுபவங்களைத்தான் தொலைத்துவிடுகிறோம்.

மாற்றங்கள், வெகு வேகமாக மாறுகின்றது. நான் இங்கு இரயில்,பஸ்சில் பிரயாணம் செய்து கனநாட்கள். அண்மையில்  எனது கார் இடை வழியில் பிரச்சனை தந்தது. காரை ஒரு இடத்தில் விட்டு விட்டு, அருகில் இருந்த புகையிரத நிலையத்துக்குச் சென்றேன். அனுமதிச்சீட்டு எடுக்கலாம் என்றால் அங்கு ஒரு புகையிரத அதிகாரியும் இல்லை. ஆரம்ப காலங்களில் அனுமதிச்சீட்டு விற்றபதற்கு ஒருவர் இருப்பார்.அவர் சீட்டை விற்பனை செய்வார். அந்தக்காலத்தில் ரயில் பயணங்கள் எனக்கு அத்துப்படி. பிறகு, மெட்ற் காட் என்ற முறை வந்தது. அது இயந்திரத்துக் உள்ளை காசைப்போட்டு அனுமதி சீட்டை பெறலாம். இது ஒராளவுக்கு என்கு பழக்கமானது. இப்போது புதிய நடைமுறை அடியும் புரியவில்லை நுனியும் தெரியவில்லை.

 


இரண்டு,மூன்று தடவை மெசினை மேலும் கீழும் பார்த்தேன். அருகில் நின்றவர்களும்  மேலும் கீழும் பார்த்தார்கள்,  மெசினையல்ல என்னை. ஏதோ கப்பலாலை இறங்கி நேராக இங்குவந்தது போல இருந்தது அவர்களது பார்வைகள். அங்கு நின்றவர்களை அணுகி விளக்கம் கேட்கலாம் என்றால் இரயில் ஒன்று வந்து, எல்லோரையும் அள்ளிச் சென்றுவிட்டது. வேறு வழி, எனது மகளுடன் கைத் தொலைபேசில் தொடர்பு கொண்டு விசயத்தைச் சொன்னேன். மகள் தெலைபேசியில் சொல்லச் சொல்ல நான் மெசினை கையாள மைகீ என்ற அந்த அட்டை வெளியே வந்தது. நீண்டமூச்சும் கூடவே வந்தது. பிரசவத்தின் பின் கையில் தூக்கும் குழந்தையைப்போல கவனமாக அந்த அட்டையை நெஞ்சோடு அணைத்துக் கொண்டேன். பிறகு, இரயில்,பஸ் என வீடு வந்து சேர முக்கால் மணி நேரம் எடுத்தது. நான் காரில்  என்றால் பத்து நிமிடத்தில் வீடு வந்து சேர்ந்து விடுவேன். எல்லாத்தையும் விட கொடுமை என்னவென்றால் பத்துநிமிடத்துக்கெரு தடவை எனது மகள் என்னுடன் தொடர்பு கொண்டு ஆ யூ ஓகே (யசந லழர ழம ?)  எனக் கேட்டது. இது என் மீது என் மகள் வைத்திருக்கும் அன்பா அல்லது இவருக்கு ஒனறும் தெரியாது என்ற விசயத்தை மகளும் தெரிந்துவிட்டதாலேயோ

இப்போது சுப்பமாக்கற் பலவற்றில் எல்லாம் அவனே என்பது போல  வாடிக்கையாளரும் நாங்களே விற்பனை செய்பவரும் நாங்களே என்று இருக்கிறது. பொருட்களை நாங்கள் எடுத்து. நாங்களே கணணியில் பதிவு செய்து நாங்களே  காசையோ, வங்கி அட்டையையோ செலுத்தி  பொருட்களை வாங்க வேண்டும். எல்லாம் முடிய நன்றி மட்டும் கணணி சொல்லும். ஆனால் அங்கே அழகிய அந்த முகங்களும், அந்த புன்முறுகலையும் நாங்கள் தொலைத்து விடுகிறோம்.

எங்களுக்கு இப்போது ஆப்பொண்டு வைக்கிறாங்கள். இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மருத்துவத்திலும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது. இதனால் வயோதிபர்கள் நீண்ட ஆயுளைப் பெற்றுக் கௌ;கின்றனர். இதனால் என்ன பிரச்சனை என நீங்களும் நானும் எண்ணலாம்.  ஆனால் இந்த வயோதிபரை பராமதிக்க அவுஸ்திரேலிய அரசங்கமல்லவா பணம் கொடுக்க வேண்டும். அதனால், எங்களது ஓய்வூதிய வயதை அரசாங்கம் தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது.

எல்லாம் சரி,  பல எழுத்தாளர்களது மேசையியல்  இப்போது பேனையையே காணமுடியாமல் இருக்கிறது. கணணிதான் இருக்கும். ஆனால்,சில விடயங்களில் பழசையையே கையாள வேண்டியுள்ளது. இப்போதும், நான் கடிதம் ஒருவருக்கு எழுதுகிறேன். எனக்கும் ஒருவர் கடிதம் எழுதுகிறார். இது வாரத்தில் ஐந்து நாட்கள் நடைபெறுகிறது. ஆனால் அந்த ஐந்து நாட்களும். நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். ஏன் ஒரே படுக்கையில் நித்திரை கொள்கிறோம். ஆனால் நாங்கள் ஒருவரை ஒருவர் பார்ப்பதில்லை. அவர் வேறு யாருமல்ல, என் மனைவிதான். நான் வேலைக்குப் போகும் போது மனைவி ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பார். நான் வேலையாலை வரும் போது மனைவி வேலையில் இருப்பார்.   இந்த ஐந்து நாட்களும் சாப்பாட்டு மேசையில் ஒரு கடிதம் கிடக்கும். அதில் இன்ன இன்ன தேவையிருக்கு, இந்த இந்த வேலைகள் செய்ய வேண்டும் என்று எழுதியிருக்கும். இது கடிதம் அல்ல கட்டளை என நீங்கள் சொல்லலாம். ஆனால் எனக்கு இது கடிதம்தான்.

௦௦௦௦

 

15 Comments

 1. Vijey says:

  மாற்றங்களை – அதன் புதிய தோற்றங்கள் தொடர்பான அனுபவங்கள் திகைக்க வைக்கிறது. எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக இழந்து வருகிறோம்.

  நமது வாழ்வுக்கான அமைப்பினை- வட்டத்தினை நாம் உருவாக்க வேண்டும் போல் இருக்கிறது.
  Vijey

 2. chelvi says:

  மனதை தொட்டுவிட்டீர்.

 3. Nalliah Thayabharan says:

  அதிகளவில் சம்பாத்தியம் செய்வதால் மகிழ்ச்சி கிடைத்து விடும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு தவறானது. “வளமான” நாடுகளுக்கு குடியேறியவர்களில் பெரும்பாலோர் மனச்சோர்வுடன் தான் உள்ளனர். புலம் பெயர்ந்தோர் அதிகளவில் சம்பாதித்தாலும், தங்கள் உறவுகளை அவர்களால் முழுமையாகப் பேணிக் கொள்ள முடிவதில்லை. அதனால், சொந்த நாட்டுக்காரர்களை விட அந்த நாட்டில் குடியேறியவர்கள் மிகவும் குறைவான அளவிலேயே மகிழ்ச்சி அடைகின்றனர்.
  தற்போதைய நிலையை விட அதிகமாகச் சம்பாதித்தால் மகிழ்ச்சியாக வாழலாம் என்று நினைத்துத் தான் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர். ஆனால், அங்கு சென்றவுடன் மேலும் அதிகமாகச் சம்பாதித்தால் தான் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்ற நிலை உருவாவதும் இதற்கு ஒரு காரணம். சம்பாத்தியத்துக்கு ஏற்றாற்போல விருப்பங்களும் அதிகரித்து விடுகின்றன. நம்மில் பெரும்பாலோர், மகிழ்ச்சியை விட பணத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறோம
  மேற்கத்திய நாடுகளில் இருப்பவர்கள் தங்கள் வாழ்வை அவர்களே பேராசைக்காக அழித்து கொள்கிறார்கள். ஒரு அனாதையை போல ஒரு போலி கவுரவத்துடன் வாழுகிறோம்.. இது போலியான வாழ்கை என தெரிய வரும் போது பாதி கிழவனாகி என்ன செய்வது என தெரியாமல் குழம்பி போகிறோம்..
  இக்கரைக்கு அக்கரை பச்சை. மனித மனம் ஒரு குரங்கு என்பதற்கு வெளி நாட்டு வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு. வெளிநாட்டில் சம்பாதிக்க வந்த யாரும் மன நிம்மதியுடன் இல்லை அனைவரும் எதோ ஒரு வகையில் நிம்மதியின்றி தவிப்பது ஊரறிந்த ரகசியம்.
  எவ்வளவுதான் காசு பணம் இருந்தாலும் என் தாய் நாட்டுக்கு இணையாகுமா? வாழ்க்கை வாழ்வதற்கே..!! பணத்திற்காக அல்ல…!! அதிகம் சம்பாதிக்கிறோம் ஆனால் அதைவிட ரொம்ப சந்தோசங்களை இழக்கிறோம் ….
  விடிகாலை எழுந்து கடல்கரை மணலில் நடந்து அந்த இனிமையான காத்தை சுவாசித்து நடக்கும் அலகை தனி.சரியாக ஒன்பது மணிக்கு இட்லி சாம்பார் தோசை என்று சாபிட்டு விட்டு பத்து மணிக்கு வெளியல் சென்று நண்பர்களுடன் அரட்டை அடிக்கும் சுகமை தனி.மதியம் சரியாக ஒருமணிக்கு சுவையான மீன் குழம்பு இரண்டு கூட்டு பொறியல் ரசம் சரியாக மூன்று மணிக்கு ஒரு குட்டி தூக்கம் நான்கு மணியில் இருந்து ஆறுமணிவரை மைதானத்தில் கிரிகெட் விளையாட்டு ஏழு மணியில் இருந்து ஒன்பது மணிவரை மறுபடியும் நண்பர்களுடன் அரட்டை பத்து மணிக்கு நல்ல தூக்கம் இப்படிபோய் கொண்டிருந்த நமது வாழ்க்கை வெளி நாட்டின் வாழ்க்கை என்பது இயந்திர தனமானது என்பது மறுக்க முடியாத உண்மை.இந்த உலகத்தில் நாம் வாழ்வதே கொஞ்ச காலம் தான் அந்த வாழ்கையை நாம் விரும்பும் படி வாழ்ந்து விட்டு போக வேண்டியது தான். இப்படி ஒரு இயந்திர வாழ்க்கை தேவைதானா ஆசை துன்பத்திற்கு காரணம் என்பது உண்மை…
  வாழ்க்கை என்பது நம் கையில் இருக்கிறது. ஆனால், திரவியம் தேடி தொலைந்து போனவர்களாக நாம் இன்று எங்கோ நடைபிணமாய், போலியாய் சிரித்து, டெலிபோனில் நடித்து வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.
  நாம் எதற்காக சம்பாதிக்கிறோம் என்பதை மனிதன் ஒரு நிமிடம் நினைத்தால் அவன் இந்த நிலைக்கு வரமாட்டான். அன்பினால உண்டாகும் இன்ப நிலை. அது அணைந்திடாத தீபமாகும் பாச வலை. எத்தனை கோடி பணம் இருந்தாலும் நிம்மதி வேண்டும்
  திரைக் கடல் ஓடியும் திரவியம் தேடு; தேடுகிறோம்! வசதி வந்தாலும் மனம் என்னவோ “பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே” என்ற நினைப்பை அடிக்கடித் தூண்டுகிறது

 4. Ruban says:

  இனிமையான அனுபவங்கள் …….
  நன்றி

Post a Comment