Home » இதழ் 08 » நேர்காணல்-சாந்தி ரமேஸ்

 

நேர்காணல்-சாந்தி ரமேஸ்

 

 

 

 

சாந்தி ரமேஸ் யாழ்ப்பாணம் குப்பிளானி்ல் பிறந்து யேர்மனியில் வசிக்கின்ற ஈழப்பெண்.  இலக்கிய ஈடுபாட்டாளர்எழுத்தாளர்போராட்டப்பற்றாளர்களப்பணியாளர் என்று தன்னார்வத்தில் செயற்பட்டு வரும் சாந்திஎழுதத்தொடங்கியது 13வயதில்.


1) இன்னொருகாத்திருப்பு (கவிதைத்தொகுப்பு-2000) 
2) அழியாத ஞாபகங்கள் (கவிதைத்தொகுப்பு 2001)
3) 
கலையாத நினைவுகள் (சிறுகதைத்தொகுப்பு 2002)
4) 
உயிர்வாசம் ((கவிதைத்தொகுப்பு 2005)
5) 
கண்கள் எழுதிய கவிதையின் கடைசிச்சொட்டு (கவிதைத்தொகுப்பு 2012)என இதுவரை  ஐந்து புத்தகங்கள்  வெளியாகியுள்ளனபத்திரிகைகளிலும் இணையத்தளத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார்.  

போர் நடந்த இலங்கையின் வடக்குக் கிழக்குப்பகுதி மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டுநேசக்கரம் என்ற அமைப்பை உருவாக்கிவடக்குக் கிழக்குப்பகுதிகளில் உதவிப் பணிகளைச் செய்து வருகிறார்இந்தப் பணி என்பது ஒரு முதலுதவிச் சிகிச்சைக்கு நிகரானதுகல்விசுயதொழில் ஊக்குவிப்புவாழ்வாதாரமுயற்சிக்கான ஆதரவுஅனர்த்த உதவிகள் என இந்தப் பணிப் பரப்பை வடிவமைத்திருக்கிறார்

நெருக்கடிகள்விமர்சனங்கள்எதிர்ப்புகள்கேள்விகள் என்ற பல அழுத்த நிலையிலும் தணியாது தன்னுடைய பணிப் பரப்பை விரித்தபடியிருக்கும் சாந்தியின் இந்த நேர்காணல் மின்னஞ்சல் வழியாகச் செய்யப்பட்டது

 

00

இலக்கியத்திலும் அரசியலிலும் தொண்டுப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்ற உங்களைப் பற்றிய அறிமுகம்?
நான் பிறந்தது யாழ் மாவட்டம் வலிகாமம் வடக்கு குப்பிளான் என்ற சிறு கிராமம். எனது ஊர் பலாலியை அண்டிய ஊர்

என்பதால் துப்பாக்கிச்சத்தங்களோடு எறிகணைகள் விமானத்தாக்குதல்ஆமியின் சுற்றிவழைப்பு என எல்லாவற்றையும் எனது ஊரும் நாங்களும் அனுபவித்தே வளர்ந்தோம்.

எனது தந்தையார் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர், விசுவாசி. எங்கள் வீட்டு விறாந்தையில் சிறீமாவோ பண்டாரநாயக்கா , பண்டாரநாயக்கா , அனுரா , வினோதன் போன்றோரின் படங்களே கறுப்புவெள்ளையாக தொங்கியிருந்தது. இப்படியமைந்த எனது அப்பாவின் அரசியல் ஈடுபாடே என்னிலும் வந்ததென்றே சொல்வேன்.

1980 இன் பின்னர் இயக்கங்கள் ஊர்களில் வந்த காலம். எனது தந்தையாரின் ஈடுபாடு புலிகள் அமைப்பினரோடு தொடர்பாகியது. அப்பாவின் நண்பர்கள் பலர் புலிகளாக இருந்தார்கள். நான்சிறுமியாக என் ஞாபகங்களில் இன்றுவரை சேமித்து வைத்திருக்கிற உயர்ந்தவர்களாக புலிகளே என்னோடும் நிரந்தர உறவாகிப்போயினர். அப்போது எனக்கு மாமாக்களாக வந்தவர்கள் இன்றுபலர் உயிரோடில்லை. சிலர் மட்டும் அந்த ஞாபகங்களை மீளத்தருகிறவர்களாக உள்ளார்கள்.

அப்போது காசியானந்தன், புதுவை இரத்தினதுரை போன்றோரின் கவிதைகளை என்கூடப்பழகிய மாமாக்கள் வாசிப்பார்கள். தங்கள் கனவுகள் பற்றிச் சொல்வார்கள். அன்று அவர்களிடமிருந்துதொடங்கிய வாசிப்புப்பழக்கம் விடுதலையென்ற சொல்லை உணர்த்திய அவர்களது அன்புமே இன்று என்னையும் உங்களோடெல்லாம் பேசும் வலுவைத்தந்துள்ளது.

1987 இல் எங்கள் ஊரைவிட்டு இடம்பெயர்ந்தோம். முதல் இடப்பெயர்வின் போதே ஊரைப்பிரியும் அகதி வாழ்வு ஆரம்பமாகியது. 05.07.1987 கரும்புலி கப்டன் மில்லரின் நெல்லிடியத் தாக்குதல் முடிந்து இந்தியராணுவத்தின் வருகையில் ஊர் திரும்பினோம்.

தியாகி திலீபன் அவர்களின் மரணம் 13வயதுச் சிறுமியாயிருந்த எனக்குள்ளும் நெருப்புப்பொறியை வீசியது. நல்லூரில் போயிருந்து திலீபனண்ணாவைக் காக்குமாறு முருகனை நானும் இறைஞ்சினேன். ஆனால் யாராலும் காக்கப்படாமல் திலீபனண்ணா மடிந்து போன நாளில் எனது குழந்தையுணர்வுகளை கவிதையாக்கினேன்.

பின்னர் ஊர்களை உழுத இந்திய டாங்கிகளுக்குள்ளால் தப்பி எங்கள் ஊரில் அடைக்கலம் வந்த போராளிகளின் அன்பும் நட்பும் மீண்டும் துளிர்த்தது. அந்தக்காலத்து அவலங்களை குழந்தைக்கவிதைகளாய் படைத்தேன். அவற்றை கொப்பி உறைகளில் பாதுகாத்து அப்போது என்னோடு பழகிய போராளிகளுக்கு வாசிக்கக் கொடுப்பேன். அந்த நட்புகளின் தொடர் 1990இல்மீண்டும் இடம்பெயரத்தொடங்கிய போது விடுதலைப்புலிகளின் கலைபண்பாட்டுக்கழகத்துடனான தொடர்பு  என் குழந்தை எழுத்தை படி உயர்த்தியது. 1990இன் பின் நாடகம் சிறுகதையென மெல்ல மெல்ல எழுந்ததே எனது எழுத்தனுபவம்.

முற்றிலும் தாயக விடுதலைப்பாடல்களோடும் எழுத்துக்களோடும் வாழ்ந்து அவர்களோடு பழகிய அந்த உறவுகளைப் பிரிந்து புலம்பெயர்ந்து குடும்பம் குழந்தைகள் என காலம் மாறிப்போயும் சிறுமியாய் நானிருந்த காலம் என்னுள் உறவாகி என்னோடு வாழ்ந்து மடிந்தும் போனவர்களின் கனவுகளோடு அவர்களது சந்ததிகளுக்காகவும் அவர்கள் விதைத்த கனவு கலைந்த இக்காலத்தில்அவர்களுக்கான நன்றியாகவே தொண்டுப்பணியோடு இணைந்திருக்கிறேன்.

இப்போது யேர்மனியில் கணவர் ரமேஷ் வவுனியன், மகன் பார்த்திபன், மகள் வவுனீத்தா இந்த மூவரின் பலத்தோடே இன்றைய எனது எல்லாப்பணிகளும் நகர்கிறது.

உங்களுடைய தந்தையாரிடம் இப்படியான மாற்றம் எப்படி ஏற்பட்டதுபின்னாளில் அவர் என்னமாதிரியான மனநிலையில் இருந்தார்?

மானிப்பாய் வினோதன் குமாரசாமி அவர்கள் ஊடாகவே எனது தந்தையாரின் அரசியல் ஆரம்பமானது. இந்த இடத்தில் வினோதன் பற்றிக் குறிப்பிட வேண்டும். வினோதன் குமாரசாமி அவர்கள் எனது தந்தையாரின் நல்ல நண்பர். வினோதன் அவர்களுடனான நட்பு வினோதன் அவர்கள் நேசித்த இயங்கிய கட்சியான சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் விசுவாசியாக அப்பாவும் மாறக்காரணமாயிருந்தது. தனது நண்பரின் மீதான அன்பை எனது தங்கைக்கு வினோதினியென்று பெயர் சூட்டி மகிழ்ந்தார். அந்தளவுக்கு வினோதன் அவர்கள் அப்பாவோடு நெருங்கிய நட்பைக்கொண்டிருந்தார். நாங்களும் வினோதன்மாமா என்று உரிமையோடு அழைக்கும் அளவு வினோதன் அவர்கள் எங்கள் குடும்பத்தோடு நட்பாயிருந்தார்.

வினோதனின் தந்தையார் குமாரசாமி ,பண்டாரநாயக்கா குடும்பத்தின் அபிமானியும் சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினரும் நண்பரும் ஆவார். சாதியத்தால் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரை வினோதனும் அவரது தந்தையார் குமாரசாமியுமே சமமாக எல்லோரையும் மதிக்க வேண்டுமென்ற நிலமையை உருவாக்கியவர்கள். (நான் பிறக்க முதலே இந்த மாற்றத்தை கொண்டு வந்ததாக பல மூத்தவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன்) ஒடுக்கப்பட்டவர்களுக்கான வாக்குரிமையை வழங்கியதும் வினோதன் என்பது இப்போதுள்ளவர்கள் மறந்த விடயம்.

இயக்கங்களின் வருகையோடு அப்பாவுக்கும் வினோதன் அவர்களுக்கும் இடையில் இடைவெளி வந்துவிட்டிருந்தது. அதற்கான காரணங்களை அப்போது என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. ஆனால் வினோதன் அவர்களது பண்பைப்பற்றி சிறுவயதில் அப்பா நிறையவே பகிர்ந்திருக்கிறார்.

பின்னாட்களில் புலிகளின் பாதையையே அப்பா நேசித்தார். அவர்களது தேர்வே தமிழர்களுக்கான நிரந்தர விடிவைத்தருமெனவும் நம்பினார். 80களில் தலைவர் பிரபாகரனைக் காத்து வளர்த்ததிலும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை வளர்த்ததிலும் எனது ஊர் குப்பிளானும் அயல் ஊரான புன்னாலைக்கட்டுவனும் அதிக பங்கை ஆற்றியிருந்தது. அந்தக்காலங்களில் அப்பாவின் தொடர்புகள் புலிகள் இயக்கத்துடனான நெருக்கத்தை வளர்த்தது.

இரவுகளில் எங்கள் வீட்டிற்கு போராளிகள் வருவார்கள். அவர்கள் வரவுக்காக நாங்களும் காத்திருப்போம் புலிகளே எங்களது விடுதலையின் கனவாக இருந்தது அந்தக்காலம்.

2002 ரணிலுக்கும் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் எழுதப்பட்ட போது நான் தாயகம் சென்றிருந்த போது அன்றைய அரசியல் பற்றியொரு கதையில் அப்பாவின் நண்பர் வினோதன் பற்றியகதை வந்த போது வினோதனின் இழப்பை அவரால் ஏற்றுக் கொள்ள முடியாத துயரத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். 

 

இளவயதின் கனவுகளுக்கும் அவற்றை வடிவமைப்பதில் கொண்டுள்ள அக்கறைக்கும் இன்றைய யதார்த்த நிலைக்கும் இடையிலான அனுபவங்கள் என்ன?

இளவயதின் கனவுகள் என்பது அனுபவங்களால் வடிவமைக்கப்படாத கனவுகளால் எழுப்பப்படுகிற கோட்டையது. அதன் வடிவம் அழகானதும் இனிமையானதும் கூட. யதார்த்தம் என்பது அனுபவமும் வாழ்வியலும் அன்றாடப் போராட்டமும் நிரம்பியது. இன்றைய யதார்த்தம் சொல்லும் பாடங்களிலிருந்து கிடைக்கிற அனுபவங்கள் கனவுக்கும் யதார்த்தத்துக்குமானஇடைவெளியையும் உண்மைகளையும் உறைக்கச் செய்கிறது. 

18 இல் இருந்த ஓர்மமும் வேகமும் வீரமும் கனவின் அகலமும் 38இல் நிதானித்து நகர்கிறது. நிதானம் தருகிற அனுபவம் கனவுவெளியை உடைத்து காலத்தின் ஓட்டத்தைத்தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆக யதார்த்தமே காலத்தை வரைகிறது.

உங்களுடைய எழுத்துகளின் நோக்கை, இலக்கியத்தின் போக்கை எப்படி நீங்கள் முன்னெடுக்க விரும்புகிறீர்கள்?
எனது எழுத்துக்களின் நோக்கம் எனது இனம் சார்ந்து எனது இனத்தின் மீது நிகழ்த்தப்பட்ட அநியாயத்தையும் அநீதியையும் வெளிக்கொணர்தலே நோக்காக இருக்கிறது.

ஒருகாலம் எனது எழுத்துக்கள் வீரத்தையும் கனவுகளையுமே தாங்கியிருந்தது. இளவயதுக்கனவுகளுக்கும் யதார்த்தத்துக்கும் இடையிலான வேறுபாடுகளை நமது எல்லைக்குள் நின்று அதனையே நம்பிய எழுத்து. அன்றைய அனுபவங்களானது அன்றைய காலத்தை நம்பியதாக அமைந்திருந்தது.. இன்றைய அனுபவங்களும் அதனூடான பாடங்களும் சமகாலத்தையும் அதன்வலிகளையும் யதார்த்தம் இது தானென்ற உண்மையை உணர்த்தியிருக்கிறது. இந்த யதார்த்தம் மட்டுமே எதிர்காலத்தையும் தீர்மானிக்க வல்லது. இதன் வழியே இலக்கியமும் எடுத்துச்செல்லப்பட வேண்டும்.

ஆனால், இப்படி அனுபவத்தின் வழியாகப் புதிய நிலையை உணரும் எழுத்தை வேறு விதமாகப் பார்க்கும் சந்தேகம் கலந்த ஒரு பார்வை – இந்த அனுபவம் என்பது போராட்டத்தை சரணடைவுக்குத் தள்ளும் ஒரு போக்கென்று பார்க்கும் பார்வை தமிழ்ச் சூழலில் உள்ளதே!
யதார்த்தம் என்பது கடந்துவந்த பாதையின் உண்மைகளை அப்படியே வெளிப்படுத்துதல். அனுபவத்தின் வழி உணரப்படுகிற புதிய நிலையது. யேர்மனியின் வீழ்ச்சியை நாசிகளின் மனிதம் மீதான படுகொலைகளை , கிட்லரின் அயல் நாடுகளின் மீதான படையெடுப்புகளை இந்த அந்நிய நாடுகள் அனுபவத்தின் வழியே பதிவு செய்தது. அந்த அனுபவத்தின் 

ழியே மீளவும் எழுந்தது வரலாறு.
யேர்மனியின் ஒவ்வொரு பிரதேசத்திலும் கிட்லரினதும் யுத்தத்தில் ஈடுபட்ட படைகளினதும் அடையாளங்களைச் சொல்லுகிற எச்சங்கள் நிறையவே இருக்கின்றன. பாடசாலைகள் முதல் படிப்பகங்கள் வரையும் இந்த எச்சங்களை காண்கிற ஒவ்வொரு மனிதரும் குழந்தையும் அந்த அனுபவங்களை இலகுவாக தன்னுள் உள்வாங்கிக் கொள்கிறது. 

இந்த வரலாற்று அனுபவத்தை சரணடைவென்று யாருமே எண்ணிக் கொள்வதில்லை. இந்த அனுபவங்களை வருடாவருடம் நினைவு கூர்ந்து இனிமேலொரு அநீதி நடக்கக்கூடாதென்றஉண்மையை இந்த நாடுகள் வலியுறுத்திக் கொண்டே வருகிறது. இந்த அனுபவங்களே வீழ்ச்சியின் பின்னரான உயர்வைச் சொல்லும்படியான முன்னேற்றங்களை நாடிச்செல்கிறது. இந்தஅனுபவ வழியை சரணடைவு என்று இலகுவாய் தட்டிக்கழித்து பயணிக்க முடியாது.
வாழ்க்கையின் அனுபவங்களையும் யதார்த்தத்தையும் உண்மையையும் விட்டு விலகமுடியாததே உங்கள் எழுத்து நோக்கு என்கிறீர்கள்ஆனால் சனங்களின் துயரத்தைத் தீர்ப்பதற்கான மார்க்கம்தான் என்ன?
சனங்களின் துயரத்தை தீர்ப்பதற்கான வழியென்பது அவலங்களைச் சொல்வதோடும் எழுதுவதோடும் முற்றுப்பெற்றுவிடாது. சனங்களின் குரல்களாக அவர்களது துயரங்களை எழுதுகிற நாங்கள் ஒவ்வொருவரும் அவர்களுக்காக உழைக்க வேண்டும். அவர்களது வாழ்வை மேம்படுத்த எம்மை வளர்க்க வேண்டும். அரசியல் ரீதியாகவும் கூட. வெறும் உதவிகளால் மட்டுமே சனங்களின் துயரங்கள் தீர்க்கப்பட முடியாது. சொல்லுக்கு முன்னர் எங்கள் செயற்பாட்டால் சனங்களின் மனங்களை வென்று அவர்களை மேம்படுத்த வேண்டும்.
ஒடுக்கப்படும் இனமொன்றின் படைப்பாளி மற்றும் சமூகச் செயற்பாட்டாளர் என்ற வகையில் உங்களுடைய அக்கறைகள் எந்த எல்லைவரையில் உள்ளன?  
ஒடுக்கப்பட்ட இனமொன்றின் பிரதியான நான் இன்று என்னினம் என்று சொல்லிக் கொள்ளவும் எனது நிலம் என்று சொல்லிக் கொள்ளவும் ஏதுமற்ற நிலையில் வாழ்கிற ஒரு அகதி. முதல் நான் சார்ந்த சமூகத்துக்கும் என் சனத்துக்குமான வாழ்வொன்றை – அது இந்த உலகின் எல்லா நியதிகளோடு பொருந்திப்போகிற மாற்றமொன்றை நோக்கியதாகவும் அதனடிப்படையில் சமூகச்செயற்பாடுகளோடுமே இயங்கிக் கொண்டிருக்கிறேன். என் சமூகத்துச் சனங்களுக்கான வாழ்வியலை, அவர்களது இன்றைய வாழ்வாதார மேம்பாட்டை மேலுயர்த்த வேண்டிய எல்லா எல்லைகளையும் தே(நா)டியதாகவுமே இருக்கிறது.

ஈழப்போராட்டம் போரில் தோற்கடிக்கப்பட்டிருக்கும் சூழலில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள்தாக்கங்கள்விளைவுகளை எல்லாம் எப்படி விளங்கிக் கொள்கிறீங்கள்?
விடுதலைநோக்கிய கனவை நெஞ்சிலேந்திய ஈழப்போராளிகளின் குருதியாலும் உயிராலும் எழுதப்பட்ட  எங்கள் ஒவ்வொருவரின் உணர்வாலும் உழைப்பாலும் கட்டி எழுப்பப்பட்ட கோட்டையே ஈழம் என்பது. என்றோ ஒருநாள் விலங்குடையும். நாங்கள் வெல்வோம் என்று போராடிய எங்கள் தோழ தோழியரின் ஆன்மாக்கள் மீது நாங்கள் சத்தியம் செய்து புதுப்பித்துப் புதுப்பித்துச் செதுக்கிய அழகிய சித்திரம். நாங்கள் அழகாக்கி அழகாகச் செதுக்கிய சித்திரம் முள்ளிவாய்க்காலில் கரைந்து போனது ஒரு கனவின் விழிப்பாகவே இருக்கிறது. 

மனசால் இந்தத் தோல்வியை எங்கள் யாராலும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. நமக்கேது தோல்வியென்ற மமதையில் இருந்த எங்கள் இறுமாப்பின் மேல் விழுந்த பேரிடியிது.

இந்த முடிவு வரும்வரையும் களத்திலிருந்த போராளிகளும் பொதுமக்களும் பிணங்களாக விழவிழ நாங்கள் கனவுகளையே இறுகப்பற்றியிருந்தோம். யதார்த்தத்தை நம்பவேயில்லை. எல்லாம்தமிழால் தமிழர்களாலேயே சாத்தியமென்றிருந்தோம். உலக ஒழுங்கென்ற பெயரில் இந்தச்சிறு இனம் இதுவரை அழிந்த சிறுபான்மை போலவே அழிக்கப்பட்டுச் சிதைக்கப்பட்டு  முடியப்போகிறதென்றதையே நம்பாதவர்களாயிருந்தோம்.

களம் தனது பலத்தை இழந்து கொண்டிருக்க இறுதிக்கனவு வர்ணங்களால் தன்பாட்டில் வரையப்படுமென்று நம்பியிருந்தோம். எங்களது வெற்றியென்பது களத்தில் நின்றவர்களின்கைகளிலிருந்த ஆயுதங்களாலேயே கிடைக்குமென்று நம்பினோம்.  எங்களை நம்பி களத்தில் நின்றவர்களையும் அவர்களை நம்பியவர்களையும் வலுப்படுத்தும் செயற்பாடுகளை செயற்படுத்தமறந்து போனோம். அதன் தாக்கம் அவர்களில்லாத வெற்றிடம் எங்களால் நிரப்பப்படாத அரசியல் செயற்பாட்டின் வெற்றிடத்தையும் அவர்களில்லாது எங்களால் எதுவும் முடியாதென்ற உண்மையும் இன்று முகத்தில் அறைகிறது.

எங்கள் ஒட்டுமொத்த வீராப்பின் பெறுமதி வெறும் சொற்களாகவே முடிந்து போயிருக்கிறது. போரின் அழிவும் அதன் ரணமும் எத்தகையதென்பதனை இப்போது மனசால் அனுபவிக்கிறோம்.எமது வீழ்ச்சியின் மீதமாக வறுமையும் , உயிர்களின் இழப்புகளும் சொல்லில் அடங்காத வலிகளையும் தாங்குகிறவர்களின் பிரதிகளான நாங்களே எல்லாவற்றுக்குமான காரணிகளாகிப்போனோம். இன்று வீழ்ந்துகிடக்கிற என்சனத்தின் எல்லா அ(இ)ழிவிற்கும் நாமே பொறுப்பானவர்கள்.

இந்தப் பாதிப்புகளில் இருந்து பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் மிழ்ச் சமூகத்தின் எண்ணப்பாங்கு தொடர்பாக
உண்மையில் இந்தத் தாக்கங்களிலிருந்து எங்கள் சனத்தை  மீட்க வேண்டுமென்ற எண்ணம் கணிசமானவர்களிடம் இருந்தாலும் ஓர் அறுதியான அரசியல் மீட்சியாலேயே சாத்தியமாகுமென்ற எண்ணமே அதிகம் வலுத்து நிற்கிறது. ஆயினும் அறுதியான முடிவுவரை காத்திருக்க முடியாத பேரவலத்தையும் பேரிழப்பையும் சந்தித்தவர்களுக்கான அவசர நிவாரணியைச் செய்யவே பலர்ஆர்வமாக இருக்கிறார்கள்.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவித்திட்டங்கள் எப்படியுள்ளன
போர் முடிவுற்று இன்று மூன்றரை வருடங்களை எட்டிநிற்கிறோம். ஆயினும் உதவிகள் என்பது அவசர நிவாரணியாக அங்கொன்று இங்கொன்றென்ற வகையிலேயே இருக்கிறது. ஒருங்கிணைவற்ற சிறு குழுமங்களாக தனிநபர்களாக சிறு அமைப்புகளாகவே உதவிகள் சென்றடைகிறது. குறிப்பிட்டுச் சொல்லும் வகையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள்முழுமையாக இன்னும் கிடைக்கவில்லையென்பதும் உதவித்திட்டங்கள் செயற்படுத்தப்படாதுள்ளது என்பதும் உண்மை.
உதவி அமைப்புகள் எப்படிச் செயற்படுகின்றன
கிராமிய , தன்னார்வ , பழையமாணவர் அமைப்புகள் உட்பட உதவியமைப்புகள் தற்போது நிறையவே ஆரம்பமாகியுள்ளது.  எல்லோரிடமும் உதவிகளைப் பாதிப்புற்றவர்களுக்கு கொண்டுசெல்ல வேண்டுமென்ற அக்கறையும் உள்ளது. ஆனால் குழுவாத மனநிலை யையே அதிகம் பார்க்க முடிகிறது. இந்தக்குழுவாதமானது ஆளையாள் அரசியல் ரீதியாக துகிலுரித்தலும் பின்னணிமுன்னணி பேதம் பார்த்தலுமாகவும் கணிசமான அளவு  அமைப்புகளிடையே தொடர்பாடல் நட்புணர்வு இல்லாதும் இருக்கிறது. 

இந்நிலையானது பயனாளிகள் வரையும் பரந்துள்ளது வேதனைமிக்கது.  தொடர்பாடல் ஒருங்கிணைவற்ற உதவிகளை வழங்குதல் நிரந்தரமான முன்னேற்றத்தையோ மாற்றத்தையோகொண்டுவர முடியாது. இந்தக் குழுவாத நிலமையில் மாற்றம் வந்தாலே எம்மால் வேகமாக வெற்றியையும் போரால் பாதிப்புற்றவர்களின் வாழ்வையும் மாற்றியமைக்க முடியும்.

நேசக்கரம் அமைப்பின் தோற்றம், தனுடைய செயற்பாடுகள், சவால்கள், அது பெற்றிருக்கும் வெற்றி, அனுபவம் போன்றவை?

நேசக்கரம் 2007 யாழ் இணையத்தில் வித்திடப்பட்டது. குறித்த நட்பு வட்டத்தில் ஆரம்பித்தது. அப்போது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதிகளுக்குள் இயங்கிய பெண்கள்புனர்வாழ்வு நிறுவனம், தமிழர் புனர்வாழ்வுக்கழகம் என சேகரிக்கப்பட்ட பண உதவிகள் வழங்கப்பட்டது.

2009 வணங்காமண் திட்டத்திலும் நேசக்கரம் பங்களிப்பாளர்களின் உதவிகள் திரு.றெஜி(தமிழர் புனர்வாழ்வுக்கழகம்) அவர்களின் பணிப்பிற்கு அமைய அவரால் சொல்லப்பட்டவர்களிடம் அந்தநிதியினை வழங்கினோம். மே 2009 யுத்த முடிவோடு பங்களிப்பாளர்களாக இருந்த உறவுகள் ஒதுங்கிக் கொண்டனர். காரணம் தாயகமில்லை தாங்கிய புலிகளுமில்லை இனியென்ன என்கிற ஒருவகை சலிப்பும் கூட.

ஏற்கனவே தொடர்பில் இருந்த போராளி நட்புகளின் குடும்பங்கள் தொலைபேசிகளில் ஏற்படுத்திய தொடர்புகள் மூலம் அவர்களுக்கான கைதூக்கிவிட வேண்டிய பாரிய பொறுப்பு புலம்பெயர்தமிழர்களுக்கு உண்டென்பதனை அப்போது முகாம்களிலிருந்து வந்த பலரது குரல்களில் இருந்தும் அறிய முடிந்தது.

ஒதுங்கிய நட்புகளைத் தொடர்பு கொண்டு அவலத்தில் அந்தரிக்கிறவர்களுக்கு ஏதாவது செய்வோம் வாருங்கள் என்று கோரினேன். எனினும் வெற்றியில்லை. வேணுமானால் நீயே செய்து கொள் எங்களை விட்டுவிடு என்பது போன்ற பதில்களே வந்தது.

யாழ் கருத்துக்களம் நட்பு வட்டம் தாண்டி வெளி உறவுகளைத் தொடர்பு கொண்டு சிறிது சிறிதாய் உதவிகளைச் செய்ய ஆரம்பித்து எனது பங்களிப்பையும் இணைத்து 2009 வருடக்கடைசி வரைநேசக்கரத்தை இழுத்து வந்த போதுதான் எதிர்பாராத வகையில் உதவிகள் வேண்டிய அழைப்புகளும் கடிதங்களும் அதிகம் வரத்தொடங்கின.

நமது உதவிகள் எல்லாவற்றையும் இழந்து போயிருந்தவர்களுக்கு யானைப்பசிக்கு சோளப்பொரிபோலவே இருந்தது. நேசக்கரம் ஒரு உதவி அமைப்பாக பதிவு செய்து அதன்மூலம் உதவிகளை ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தை அப்போதுதான் உணர முடிந்தது.

யேர்மனியில் நான் வாழும் நகரில் உள்ள சமூகப்பணிகளில் இருக்கிற சில யேர்மனியர்களுடன் இவ்விடயம் பற்றி கலந்தாலோசித்த போது நேசக்கரத்தை பதிவு செய்வதற்கான வழிகளைஅவர்கள் காட்டினார்கள். அத்தோடு கிடைக்கிற உதவிகள் பயன் கணக்கறிக்கைகளை வெளிப்படையாக போட்டு நேசக்கரத்தை இயக்குவதென முடிவெடுத்து ஒரு நிர்வாக ஒழுங்கைக்கூட்டிநேசக்கரம் 2010 இல் பதிவு செய்தோம்.

மீண்டும் யாழ் இணையத்தில் நேசக்கரம் இயங்க வேண்டிய தேவையை செய்திகளாகவும் வந்து கொண்டிருந்த  உதவிகோரல்களை தகவல்களாகவும் குரல் வடிவாகவும் பதிவிடுவதும் தொடர்ந்து மின்னஞ்சல் அனுப்பும் பயனாக பல யாழ்  கள வாசகர்களும் புதிய உறுப்பினர்களும் தங்களால் இயன்ற உதவிகளை வழங்கத் தொடங்கினர்.

அப்போது முதலில் யாழில் நேசக்கரம் நட்பு வட்டத்தை ஆரம்பித்தவர்களில் ஒருவரான திரு.சிறீகௌரிபால் அவர்கள் தானும் நேசக்கரத்தோடு மீள இணைவதாக தனது ஆதரவினை வழங்கி பிரான்ஸ் நாட்டு இணைப்பாளராகினார். (2011 திரு.சிறீகௌரிபால் விலகிக்கொண்டார்) யார் விலகினாலும் நேசக்கரத்தை கட்டம் கட்டமாக முன்னேற்றும் முயற்சியை விடாது தொடர்ந்தேன்.

ஐரோப்பாவில் இயங்குகிற ‘தமிழ்ஒலி (பிரான்ஸ்) 2010 தை முதல் 2011 தைமாதம் வரை தினமும் அரைமணிநேரம் நேசக்கரம் நிகழ்ச்சிக்காக நேரம் தந்தது. ஐஎல்சி வானொலி (பிரித்தானியா) 2011ஓகஸ்ட் முதல் 2012 ஏப்றல் வரை வாரம் அரைமணிநேரம் நேரம் தந்தது. வானொலி மூலம் அவலப்படுகிற மக்களின் கதைகளை அவர்களது குரல்களில் வழங்கினேன்.

உதவிகள் தேவைப்படுகிறவர்களை சரியான முறையில் இனங்கண்டு உதவிகளை வழங்க வேண்டிய ஒருங்கிணைப்பினைச் செய்ய யாழ், வன்னி,கிழக்குமாகாணம் வரை முகவர்களைஉள்வாங்கி உதவிகள் சத்தமின்றி நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு படி ஏறும் போதும் பலமுறை விழுந்து தோற்று வெறுப்பு சோர்வு என எல்லா அழுத்தங்களையும் தாண்டி ஓடுவதில் என்கூட நிலத்தில் நின்று உழைக்கிற ஒவ்வொரு தோழனும்தோழியுமே நேசக்கரத்தின் தாங்கு சக்திகள்.

எதிர்பாராத வகையில் எமது உதவிகளை வேண்டிய விண்ணப்பங்கள் இலங்கைச் சிறைகளில் இருந்தெல்லாம் வரத்தொடங்கியது. சிறைகளிலிருந்து வந்த தொடர்புகள் பல தோழதோழியரின்குரல்களாகவும் வந்தது. குப்பிகளோடு நின்றவர்கள் சிறைகளில் அடைபட்ட துயரங்கள் வரை சொல்லியாறிய கதைகளை இங்கு விடுதலையின் பெயரால் எல்லா அசையும்அசையாதவற்றையெல்லாம் கையில் வைத்திருக்கும் அதிகாரங்களில் உள்ளவர்களுக்கு தெரிவிக்க வேண்டி வந்தது.

சோற்றைக்கொடுத்து சுதந்திர உணர்வை மழுங்கடிப்பாதாகவும் நிரந்தர அரசியல் தீர்வொன்று இல்லாது எப்படி அவர்களுக்கு உதவ முடியும் ? வெளிநாட்டரங்கில் அரசியலில் வெல்வதற்கானபணிகளைச் செய்யுமாறு கோரினார்கள். என்னையும் எம் எல்லோரையும் நம்பிக் கனவுகளோடு போனவர்களின் குடும்பங்களும் குழந்தைகளும் பசியில் வாடவும் படுத்துறங்கக் கூரையின்றி அவதியுற அரசியல் செய்ய ஒரு தாயாக என்னால் இயலவில்லை.

பசியில் இருக்கிறவனுக்கான உணவை அளித்தலே முதல் கடமை. பசியாறினாலே அவனால் அடுத்து யோசிக்க முடியும். ஆக ஒரு நேரக்கஞ்சியையேனும் கொடுக்க வேண்டுமென்ற முனைப்பில்இரவு பகல் என்ற பேதமில்லாது எல்லா நேரமும் செய்திகளைக் கொண்டு சென்று இயன்றளவு உதவிகளை அனுப்ப முடிந்தது.

ஓரளவுக்கு நேசக்கரம் என்ற பெயர் தாயகத்தில் உச்சரிக்கப்படுகிற பெயராக வரத்தொடங்க தருணம் பார்த்துக் காத்திருந்த அதிகார மையங்களும் அதன் பிரதிகளும் வழமையான பழிசுமத்தல் அரசசார்பாளர் , புலனாய்வாளரின் கையாள் , கே.பியின் சகா என பட்டியல்கள் நீண்டு அதிகாரிகளின் சொற்களை கீழ்நிலைப் பணியாளர்களின் வாய்கள் வரை பரப்பப்பட்ட பொய்களால் பலமுறை மனமுடைந்து உதவியும் வேண்டாம் ஊரும் வேண்டாம் துரோகிப்பட்டமும் வேண்டாமென ஒதுங்கி மனசு ஓய்ந்தது பல நூறுதடவைகள். 

ஒதுங்கிய மனசைக் கரைத்த கண்ணீர்க்குரல்கள் சிறைக்கம்பிகளின் பின்னிருந்து வந்த வருகிற அழைப்பின் குரல்கள் அம்மாஅக்கா , மகளே என்று வந்தலைக்கும் துயரங்கள் நிரம்பியபோராளிகளின் கதைகளும் அவர்கள் குரல்களும் எல்லாச் சலிப்பையும் வெறுப்பையும் மறந்து திரும்பவும் இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது. நேசக்கரம் ந(க)டந்து வந்த பாதைகளில்விதைந்து கிடந்தவை விதைகள் மட்டுமல்ல ஆயிரமாயிரம் வேதனைகளும் ஏமாற்றங்கள் சவால்கள் எதிர்ப்புகளுடனுமே நேசக்கரம் ஓடுகிறது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் ஒருவகையான உளவியலை அவதானித்திருக்கிறேன்சொந்தக் கால்களில் வாழ்ந்த நிலை மாறி, பிறரின் உதவிகளைப் பெற்று வாழவேண்டிய நிலை வந்திருப்பதையிட்ட வருத்தத்தோடிருக்கிறார்கள்இதற்கு அவர்கள்பொறுப்பாளிகள் இல்லைஆனால்  இப்படியான நிலை வந்திருப்பது அவர்களுக்கு ஒரு நெருக்கடியேஇந்த நிலையில், உதவி பெறுவோரைப் ட்டியலிட்டுப் பகிரங்கப்படுத்துவது அவர்களுக்கு மிகச் சங்கடமாக இருக்கிறதுஇது தொடர்பாக உங்கள் அனுபவங்கள்?


உதவி பெறுவோரைப் பட்டியலிட்டு பகிரங்கப்படுத்தி படங்களை வெளியிட்டு அவர்களைப் பிச்சையேந்துவோர் போலக்காட்டுவதில் எனக்கும் உடன்பாடில்லை. உண்மையிலேயே தங்கிவாழ்தல் நிலையென்பது எங்கள் மக்களைப் பொறுத்தவரை மிகவும் சங்கடம் மிக்க நிலமை.

இன்னொரு உண்மையை புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் அதிகம் உணர்ச்சியின் வசப்பட்டவர்கள். இரத்தத்தையும் சிதறிய தசைகளையும் பார்த்தால் தான் எங்களது மனிதம் உயிர்க்கும்.இத்தகைய எங்களது மனநிலையைத் தட்டியெழுப்ப பட்டியலிடுதல் சிலவேளைகளில் அவசியமாகவும் இருக்கிறது.

வானொலிகளில் நிகழ்ச்சிகள் செய்த ஆரம்பத்தில் அந்த மக்களின் துயர்களை நானே சொல்லுகிற போது யாருமே வானலைக்கு வரமாட்டார்கள். ஆனால் ஒருவர் கண்ணீருடன் தனது குரலில் தனது சோகத்தைச் சொல்வதை பதிவுசெய்து ஒலிபரப்பியதும் ஒருவருக்கே பலர் உதவ ஓடிவந்த சம்பவங்கள் நிறைய.

மற்றும் ஆரம்பத்தில் உதவி கோருகிற குடும்பங்களின் பாதுகாப்புப் பிரச்சனைகள் கருதியும் பட்டியலிடுவதை தவிர்த்தேயிருக்கிறேன். பொதுவான நிகழ்வாகச் செயற்படுத்தி வழங்கப்படுகிற மாணவர்கள் தொழில் திட்ட உதவிகள் பற்றிய விபரங்களை பொதுவாகவே வெளியிட்டுள்ளேன். ஆரம்பம் முதல் குடும்பங்களுடனான தொடர்புகளை நேரடியாக ஏற்படுத்திக் கொடுத்தும் இதுவரையில் நேசக்கரம் இவ்விடயத்தில் மிகவும் கவனமாகவே இருந்திருக்கிறது.

ஆனால் இதையே பயனாளர்கள் பலர் சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அனுபவம் நிறையவே நிகழ்ந்திருக்கிறது. நேசக்கரத்திடம் உதவிகோருகிற போது பாதுகாப்பு பயம் என்றெல்லாம் சொன்னவர்களில் சிலர் இன்னொரு அமைப்பு அல்லது தனிநபர் , அல்லது அரசியல்வாதியிடம் யாருமே எங்களுக்கு உதவவில்லையென்று சொல்வதும் தங்கள் படங்கள் சுயவிபரங்களைக்கொடுத்து அவற்றை வெளியிட வைப்பதும் அபத்தமானதல்லவா.

2010இல் மட்டும் 65பல்கலைக்கழகமாணவர்களுக்கான கல்வியுதவியை அதாவது போரால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு உதவியிருக்கிறோம். இந்த 65மாணவர்களிலும் பத்துப்பேர்வரையிலேயே கிடைத்த உதவிகள் பற்றி வெளிப்படுத்தியுள்ளனர்.

 

அண்மையில் கூட தாயகம் சென்றுவந்த ஒருநபரிடம் நம்மிடம் உதவிபெற்று தொழில் செய்கிறவர்கள் மாதாந்த உதவி பெற்றுக் கொண்டிருப்போரும் தமக்கு இதுவரையில் யாருமேஉதவவில்லையென்று கூறியதோடல்லாமல் தங்களது படங்களையும் கொடுத்து உதவியை வேண்டியிருந்தார்கள். இவர்களுக்கு உதவியவர்கள் பலர் இவ்விடயத்தில் மிகவும்ஆதங்கப்பட்டிருந்தார்கள். அத்தோடு பலருக்கான உதவிகளையும் சந்தேகித்து நிறுத்தியுள்ளார்கள். சிலரது இத்தகைய செயற்பாடானது பலருக்கான உதவிகளில் சந்தேகத்தையும் உதவுவோரை சலிப்படைய வைப்பதாகவும் அமைகிறது.

இதில் ஒருங்கிணைப்பாளராக இருக்கிற எங்கள் மீதும் வீணான விமர்சனங்களும் பகைகளுமல்லவா வருகிறது. புதிதாக உதவ நினைக்கிறவர்கள் கூட ஏற்கனவே உதவிக்கொண்டிருக்கிற அமைப்புகளிடம் பேசவோ தகவல்களை பகிரவோ பஞ்சிப்படுகிறார்கள். சில தனிப்பட்ட கௌரவங்களுக்காக பலர் மீதான சந்தேகத்தையும் உதவிகள் தொடர்பான தடைகளையும் ஏற்படுத்த இந்தமனநிலமை இட்டுச் செல்கிறது.

 

புரிகிறதுஆனால், நம்பிக்கையும் நிலைமையின் தாற்பரியத்தைப் ற்றிய அறிவும் ஏற்படும்போது தேவையற்ற கேள்விகளும் ஐயங்களும் ற்படாதுஅதேவேளை, மேலும் உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணமே ஏற்படும்ஆனால் அத்தகைய நிலை உருவாகவில்லையே

 

இந்த நிலமையை சீர்படுத்த வேண்டுமெனில் உதவிகள் செய்ய முன்வருகிற தனிநபர்களானாலும் சரி உதவியமைப்புகளானாலும் சரி நான் பெரிசு மற்றவர் சிறிதென்ற மனநிலையை விட்டுதொடர்பாடல்களை பேணிக்கொள்வதே இந்தச் சிக்கலுக்கு தீர்வைத்தரும். ஆனால் இதில் திறந்தமனதோடு தொடர்பாடலை பேணவோ பேசவோ கணிசமானவர்கள் தயாராயில்லை. சிலருடன்இவ்விடயம் தொடர்பாகப் பேசியுள்ளேன். ஆனால் ஏதோ அவர்களது உதவும் மனப்பாங்கை குழப்ப வருவதாகவே நினைத்து முரண்பட்டுள்ளார்கள். இந்தநிலமை இன்னும் சிலவருடம் நீடிக்குமானால் கணிசமான அளவு உதவிகள் தடைபடுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

சிறுபான்மை இனங்களுக்கிடையில் புரிந்துணர்வும் இணக்கமும் இல்லாமல் ஒரு முன்னேற்றத்தையும்உறுதிப்பாட்டையும் எட்டமுடியும் ன்று எதிர்பார்க்கிறீங்களா?
நிச்சயமாக இல்லை. முன்னேற்றத்தை யோசிப்பதற்கு முதலில் புரிதலும் ஒற்றுமையும் பேணப்பட வேண்டும். அதற்கான வழிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த முன்னேற்றத்தை ஒற்றுமையை சகல அரசியல் தலைமைகளும் அது த.தே.கூட்டமைப்பாகட்டும் முஸ்லீம் காங்கிரசாகட்டும் எல்லோருமே ஒரு இணக்கத்தின் அடிப்படையில் தங்கள் அரசியலை முன்னெடுக்கவேண்டும். இதுவே இன்றைய உலகை வென்று நாங்களும் வாழக்கூடிய வழியைத் தர வல்லது. இந்தக் காலத்தைப் புரியாத எந்த அரசியல்வாதியாலும் ஒரு சிறு துரும்பைக்கூட அசைக்கமுடியாது.
இந்த மக்களின் எதிர்காலத்துக்கா ஏற்பாடுகள் இந்த உதவித்தி்ட்டங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டவையல்லஅதற்கும் அப்பால்இ நிரந்தர வேலைத்திட்டங்களை நோக்கி நகர வேண்டியதுஅதற்கான ஏற்பாட்டுச் சூழல் எப்படியுள்ளது?
நிச்சயமாக இப்போதைய எங்களது அவசரகால உதவிகளோடு இந்த மக்களின் வாழ்வை மாற்றிவிட முடியாது. இவற்றைத் தாண்டி நிரந்தர வேலைவாய்ப்பு ,சுயபொருளாதார முன்னேற்றம் ,நிரந்தர கல்வி முன்னேற்றம் என நாங்கள் அடுத்த கட்டத்தை நோக்கி விரைவாக நகர வேண்டியிருக்கிறது. தனிநபர் தொழில் முயற்சிகளுக்காக உதவி பெற்றவர்களில் மதிப்பீட்டறிக்கைகளின்படி  பத்து சதவிகிதமும் நாம் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடையவில்லை. காரணம் சரியான வழிமுறைகள் தெரியாமலும் பயன்படுத்தாமலும் வீணடிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் புலம்பெயர்ந்த தமிழர்களால் பெரும் தொகை பணம் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வதாரத்தை மேம்படுத்தவென வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் பயனை நாம் இன்று திரும்பிப் பார்த்தால் ஒன்றுமேயில்லை.

தற்போது நிரந்தர தொழில் வாய்ப்புக்கான சுயதொழில் முன்னேற்றத்திலும் பயிற்சிகள் வழங்கி சிறு சிறு குழுக்களாக தொழில் பயிற்சிகளை வழங்கி கிடைக்கிற வளங்கள் மூலம் பயன்பெறக்கூடியமுயற்சிகளை முன்னெடுக்கும் திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.

இதன் முதற்கட்டம் ‘நேசம்’ என்றொரு உணவு உற்பத்தி நிறுவனத்தை நேசக்கரம் ஆரம்பித்து கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பிலும் அம்பாறையிலும் வேலைவாய்ப்பினை வழங்குவதோடு சுயமாக உற்பத்திகளை செய்து தருவோருக்கான விற்பனைச் சந்தையையும் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். இது ஆரம்ப முயற்சியே. அடுத்த கட்டம் 2013 மேலும் இவற்றை இதரமாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளோம்.

இத்தோடு பின்தங்கிய நிலையில் இருக்கிற பிரதேசங்களின் கல்விமேம்பாட்டை முன்னேற்றும் வகையில் நேசம் கல்வித்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். ஏற்கனவே கல்வியுதவி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிற போதிலும் முழுமையான கவனத்தையும் செயற்பாட்டையும் இவ்வருடமே ஆரம்பித்துள்ளோம்.

கற்க வசதியற்ற மாணவர்களுக்கான கற்கை உபகரணங்கள் முதல் அவர்களுக்கான இலகு கற்கைக்கான பாடநெறிகளையும் துறைசார்ந்த ஆசிரியர்கள் மூலம் தயாரித்து வழங்கி வருகிறோம்.குறிப்பாக புலமைப்பரிசில் , கல்விப்பொதுத்தராதர சாதாரண உயர்தர வகுப்புகள் கற்கும் மாணவர்களுக்கான முன்னோடித் தயார்படுத்தல்களைச் செய்து கொண்டிருக்கிறோம்.

இவ்வருடம் (2012) நாம் மேற்கொண்ட 5ம் வகுப்பு புலமைப்பரிசில் முன்னோடிப்பயிற்சி வகுப்புகளிலும் கருத்தரங்குகளிலும் மாலைநேர வகுப்புகளிலும் 2500மாணவர்கள் பங்குபற்றியிருந்தனர்.அத்தோடு டிசம்பர் நிகழவிருக்கிற கல்விப்பொதுத்தராதர சாதாரண தரத்தில் தோற்றும் 7500மாணவர்களுக்கான முன்னோடி பயிற்சிநெறிகளை கிழக்குமாகாணம் ,வடமராட்சி கிழக்கு ஆகிய பகுதிகளின் நடாத்தியிருக்கிறோம்.

சிறப்புச் சித்தியடைகிற மாணவர்களை தெரிவு செய்து அவர்களது துறைக்கேற்ப தொடர்ந்து கல்வியுதவியை வழங்கும் நோக்கில் திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளோம். 2013ம்ஆண்டிலிருந்து திறமையுள்ள கல்விகற்க வசதியற்ற தமிழ் மாணவர்களுக்கான கல்வியுதவியைப் பெற்றுக் கொள்ளக்கூடிய திட்டங்களையும் விரிவுபடுத்தவுள்ளோம்.

சிறந்த கல்வியே எங்கள் அடுத்த தலைமுறையை நிமிரவும் கௌரவிக்கவும் முடியுமென்பதனை நேசக்கரத்தோடு இணைந்திருக்கிற ஒவ்வொரு பயனாளிக்கும் பணியாளர்களுக்கும் பங்காளர்களுக்கும் சொல்லிக் கொண்டு வருகிறேன். இத்திட்டத்தில் ஆதரவுதர விரும்புகிற மனிதநேயர்களையும் இணையுமாறு வேண்டுகிறேன்.

2013 இலிருந்து கற்க வசதியற்று ஒரு தமிழ்ப்பிள்ளை பாடசாலை போக முடியவில்லையென்றால் அந்த மாணவரை குறித்த பாடசாலை நிருவாகம் நேசக்கரத்துடன் இணைத்துவிடுமாறு  கேட்கிறோம்.

போருக்குப் பிந்திய சூழலில் சிதைவடைந்த நிலைக்குள்ளாகியிருக்கும் தோற்கடிக்கப்பட்ட சமூகம்இப்படிச் சிதைவடைந்த நிலைக்குள்ளாகியிருக்கும் தமிழ்ச்சமூகத்தை மீள் நிலைக்குக் கொண்டு வருவதற்கான ஏதுநிலைகள் எப்படியாக ள்ளன


போருக்குப் பிந்திய இன்றைய காலம் பற்றியதும் அந்த மக்களின் நிலமை அவர்களுக்கான மறுவாழ்வு அல்லது ஆற்றுப்படுத்துகை பற்றிய அக்கறைகள் அதிகமாக எம்மிடையே காணப்பட்டாலும்அவற்றை நடைமுறைப்படுத்துவதில் நிறைய சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. ஏற்கனவே குறிப்பிட்டது போல குழுவாத மனிநிலமையிலிருந்து விடுபடாத செயற்பாடு எங்களை எதிலும் வெற்றிபெற விடாத முட்டுக்கட்டையாகவே இருக்கிறது. ஒற்றுமையாக நாங்களெல்லாம் இணைந்து சிதைவடைந்த தேசத்தையும் மக்களையும் காப்போம் என்பதும் இப்போதைக்குநடைமுறைக்கு ஒவ்வாதது. ஆனால் முயற்சிப்போம் ஒரு மாற்றத்தை நோக்கிய தளத்தை ஓரளவுக்கு உருவாக்கும் படிகளிலேயே நிற்கிறோம் என்பது நன்மைதான்.

000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment