Home » இதழ் 08 » இருள்நதி -திருமாவளவன்

 

இருள்நதி -திருமாவளவன்

 

 

 

 

இன்று முழுநிலா.

இல்லை

 

நல்ல பால்போல் வெள்ளிப்பனி

ஒளி

 

காற்று,கடும் குளிர்.

பற்றி எரிகிறது நிலம்

நிலம்.

 

இருகையிருந்தும்

முடம்போல விழித்திருக்கிறேன்

நிலத்துக்கு காவலாய்.

 

சன்னலினுடே

பெரும்கடலென விரிந்து கிடக்கிறது

அண்டம்

 

இப்போ நான் சிறு மீன்குஞ்சு

ஆழச்சுழியோடி நீந்திக் கடக்கிறேன்

காலத்தை

 

முடிந்தகாலம் ஈரம்,எதிர்காலம் கனவு

நடுவில்

கண்ணீர்

 

கனவுகளில்

நீந்தித் திளைக்கிகிறது மீன் குஞ்சு

 

திடுக்கிட்டு விழித்தபோது

 

பனித்துகில் போர்வைக் கதகதப்புள்

ஆழ்ந்து

உறங்கிக் கிடக்கிறது நிலம்

 

காலடியில்

பெருக்கெடுக்கும்

சொற்களின் பிரவாகத்தில் துடிக்கிறது

மீன்குஞ்சு

௦௦௦௦

ஜனவரி 05. 2013

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment