Home » இதழ் 09 » *மலர்ச்செல்வன்-சிறுகதை

 

*மலர்ச்செல்வன்-சிறுகதை

 


00
மா செ யை அழிப்பதற்கான திட்டங்களை அவர்கள் மிகக் கச்சிததமாகச் செய்திருந்தார்கள். இத்திட்டத்திற்கு அவனது மடத்தனங்களும் அவர்களுக்குக் கைகூடியிருந்தது. எப்படியிருந்தாலும் அவன் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டியதாயிற்று. இது அவனது முதல் அனுபவமாகியதால் பதட்டம் அவனை ஒவ்வொரு தீர்வுக்கும் தள்ளிக்கொண்டே இருந்தது. அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. இருந்தும் நம்பிக்கையும் துணிவும் அவனைக் காற்றில் பறக்க வைத்தது.
விசாரணைக்காக அழைக்கப்பட்டபோது மதியம் ஒரு மணியைத்தாண்டி விட்டது. வயிறு பத்தியெழுந்தாலும் பசியெடுக்கவில்லை. களைப்புக்கூடியிருந்ததால் சிறு நடுக்கம் உடல் முழுதும் எழுந்தது. “உட்காரு” என அந்த அதிபர் கூறினார். அப்போதுதான் அந்த அறையை ஏறெடுத்துப்பார்த்தான். நடுவில் அந்த அதிபர் அமர்ந்திருந்த வலப்பக்கம் முன்னாள் மாவட்ட நீதிபதியும், இடப்பக்கம் தொழில் அமைச்சின் செயலாளரும் அமர்ந்திருந்தனர். அவனால் வணக்கம் சொல்லக்கூட “நா” எழவில்லை. அமர்ந்து கொண்டான்.

 

“உனக்கெதிரான  கண்டன அறிக்கையையும் எதிர்வினையையும் படித்துப்பார்த்தாயா?” முன்னாள் மாவட்ட நீதிபதி கேட்டபோது அவன் இல்லையெனத் தலையை அசைத்தான். அந்த அதிபரும் செயலாளரும் வியப்பாகப் பார்த்தார்கள். அந்த அதிபர் தன்னுடைய அழைப்பு மணியை அடித்து “பியோனிடம்” இரு பேப்பரைக்கொடுத்து “போட்டோக்கொப்பி” எடுத்து அவனிடம் கொடுத்தார். அவன் ஆறுதலாக வாசித்தான். குளிரூட்டப்பட்ட அறையிலும் அவனுக்கு மெல்லத் துளிர்த்தன வியர்வைத்துளிகள்.
கடிதம் இரண்டும் வாசித்து முடிக்க அவனுக்கு ஒரு மணித்தியாலமும் 59 செக்கனும்  பிடித்தது.இரு கடிதங்களும் சலிப்பை ஊட்டின. “பி.செ”யின் கண்டன அறிக்கையின் அறியாமையையும், அனோமேதைய கடிதத்தின் பொறாமை உணர்வையும் அதே நேரமும் இரு கடிதமும் ஒரே நபரினால் தீட்டப்பட்டிருக்கும் புதிரும் அவனுக்கு புரியலாயிற்று. எல்லாம் அந்த கோகர்ணனின் வேலைதான் என்பது தெரிந்தது.

 

“பி.செ”யின் தலைமையில் இயங்கும் ஒரு கலாச்சார பேரவையினால் தேர்ந்;தெடுக்கப்பட்ட ஓவியரை எப்படி நீ நிராகரிக்கமுடியும்? அது மாத்திரமின்றி பகிரங்கமேடையில் இதுபற்றி நீர் எப்படிப் பேசலாம்? முன்னாள் நீதிபதி அவனைப்பார்த்துக் கோட்டார். விசனத்தை ஏற்படுத்தும் கேள்விகளால் எத்தனையோ சுற்றவாளிகளையெல்லாம் குற்றவாளிகளாகத் தண்டித்தாரோ தெரியவில்லை அவனுக்கு. ஆனால், அவன் சுற்றவாளி. குறுக்கு விசாரணை அவனைக் குற்றவாளியாக மாற்றவே அடியெடுத்து வைக்கிறது.
(P.T.O)

 

சிறிது நேரம் மௌனம் காத்தவன். அதிகாரங்கள் எப்பொழுதும் நேர்கோட்டில் இயங்குவதில்லை. தன்சுயத்திற்கும், சுயநலத்திற்கும் வளைந்து கொடுத்தே பயணிக்கிறது அல்லது பயணித்திருக்கிறது. எப்போதும் எந்த முடிவும் சரியானதாக இருக்கும் என நாம் கருத முடியாது. குழுவோ, தனிமனிதரோ எடுக்கும் எல்லாத் தீர்மானங்களும் எல்லாச்சந்தர்ப்பங்களிலும் நல்ல முடிவாக அமைந்திருக்கின்றனவா? எத்தனையோ உதாரணங்களை நாம் அடித்துக்கொண்டே போக முடியும். மா செயலகம் கொடுக்கும் விருது வழங்கலையும் வெறுத்தேன். இதில் எனது தனி முடிவு பிழையானதாக இருக்கலாம். ஆனால் அது எனக்குச் சரியாகப்பட்டது. ஏதோ பெயர் அடிபடாத, அவர்களுடைய புத்தகத்திற்குச் சின்னம் வரைந்தாராம் என்பதற்குப் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்தும் ஓவிய குழாமே இங்கிருக்கத் தனிப்பட்ட முறையில் ஒரு ஓவியக் கண்காட்சியை நடாத்தாத ஒரு மனிதரைப் பாராட்டுவதும் விருது வழங்குவதும் எத்தனை தகும் சொல்லுங்கள் ஐயா? தகுதியானவர் நிறைந்திருக்க, அவர்களை விடக் குறைவான தகுதியுடையவரைப் பாராட்டினால் இதைவிட அவமானமும், எதிர்ப்புப்போராட்டத்திற்கும், கண்டன அறிக்கைகளுக்கும் யார் முகம் கொடுப்பது?

 

“மா.செ” பேரவையில் பத்து வருடங்கள் செயலாளராகக் கடமையாற்றியதின் பேரில் பதாதை எழுதும் ஒருவரைக்கூட இந்தப் பலதும் பத்தும் கதைக்கும் போது இச்செய்திப்பற்றியும் கதைக்கப்பட்டது. அது பத்திரிகைச் செய்திக்காகவில்லை. இப்போது அவனுக்குப் படபடப்பு அடங்கிவிட்டது. எது நடந்தாலும், எப்படி நடந்தாலும் அது பற்றிக் கவலை இருக்கவில்லை. முன்னாள் நீதிபதியின் கேள்விகள் சிரிப்பைத்தந்தன. அவனுக்கு இவர்களுடைய உச்சத்தண்டனை அவனை இடமாற்றலாம் அல்லது ஊறுவிளைவிக்கலாம். இதைவிட என்னதான் செய்ய முடியும்? அதனால் அவன் பயத்தைத்துறந்தான். ”நீர் பேரவையின் முடிவைத் தவறு என்று கூறுகிறீரா?” தொழில் பெறு செயலாளர் வினவினார். “ஆம். அதில் இருப்பவரில் பலர் எழுத்தாளர்களில்லை, குட்டையைக் குழப்புவதற்காகவும், எனது தனிமனித செயற்பாட்டை பேரவையில் கூட்டுச்சேர்ந்து கூடிக்கலைந்து போபவர்கள் செய்ய முடியாததை நான் செய்வதனால் ஏற்பட்ட காழ்புணர்ச்சியும்தான் இது. இதைவிட நான் எதுவும் செய்யத் தயாரில்லை.
“பேரா பற்றிய குற்றச்சாட்டுக்கு என்ன சொல்லப் போகிறீர்கள்?” தொழில் அமைச்சின் செயலாளரின் விக்கல் கேள்வி என்னுள் ஆத்திரத்தை உண்டு பண்ணியது.

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாத அற்பங்களின் அனாமோதைய  பீ நாற்றத்தைக் கிளறுகிறீர்கள். நான் எவரையும் எச்சந்தர்ப்பத்திலும் தள்ளிவிடுபவனல்ல. களப்புச்சஞ்சிகையின் ஆசிரியர். ஆனால், அதில் வரும் எல்லாப்படைப்புகளுக்கும் பதில் சொல்லும் நிலையில் தற்போதில்லை. பேரவை மதிக்கும் மனிதர்களில் நானுமொருவன்.
ஆனால் அவர் விடும் தவறுகளையோ, பிழையான வழிநடத்தல்களையோ மற்றவர்கள் போல் பார்த்துக் கொண்டிருப்பவனும் அல்ல. அவர் முன்னே என் விமர்சனங்களை முன்வைத்திருக்கிறேன். இந்தக்களப்பில் வந்திருக்கும் எல்லாக்கட்டுரைகளும் பேராவிற்கு எதிரானதாக, வேண்டுமென்று செய்யப்பட்டதாக தெரிவிப்பது அவர்களின் வாசிப்பின் போதாமையையே சுட்டுகிறது. அண்ணாவியார் பாரம்பரியம் பற்றிய கட்டுரை கூத்தின் முக்கித்துவத்தையும் அண்ணாவிமார் பற்றியும் விவரிக்கிறது. கூத்தைச் சிதைப்பவர்கள் பற்றியும் அதில் விமர்சிக்கப்பட்டிருக்கிறது. பேராவின் “ப.பு” புத்தகத்தில் அவர் கூறும் முரண்பட்ட சில கருத்துக்களை இது சிலாகிக்கிறது. அதைநான் “எடிற்” செய்யவேண்டிய தேவைப்பாடிருக்கவில்லை.
“தனி மனிதனைத் தாக்கும் போது ‘எடிட்’ செய்யவேண்டியது ஆசிரியரின் கடமையல்லவா?” முன்னால் நீதிபதி குறுக்கிட்டார்.
“அப்படியல்ல. நீங்கள் பழைய பஞ்சாங்கத்தின் ஆசிரியர்களைக் குறிப்பிடுகிறீர்கள், இங்கு எச்சந்தர்ப்பத்திலும் பேராவைத் தாக்கவில்லை. அவர் எழுதிய எழுத்து விமர்சிக்கப்படுகிறது. அவ்வளவுதான். இதற்குப்போய் பேராவை விட, நான் உயர்ந்தவனாகக் காட்ட முயன்றிருப்பதாகக் கூறுவது முட்டாள் தனம். இவ்விடத்தில் நான் ஒன்றை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். சில நாட்களுக்கு முன் பேரா சம்மந்தப்பட்ட மிருச்சக நாடகம் பற்றி, நாடகம் முடிந்த அதே கணமே அந்த நாடகத்தின் பிழையாகக் கட்டமைப்பையும், சிங்கள ஊடுருவலையும், பெண்ணியத்தைத்  தகர்க்கின்ற முட்டாள்த்தனத்ததையும் சூடாக முன்வைத்தேன். அவர் வேறு நியாயத்தை சொன்னர். முருகனின் இரு திருமணத்தை நியாயப்பாட்டிற்கு கொண்டு வந்தார். சிறிது நேரம் சலசலப்பாக இருந்தது. எனினும் நாங்கள் எச்சந்தர்ப்பத்திலும் அடிபட்டுக்கொண்டதில்லை. பிரச்சினையின் கணத்திலே எதிர் எதிரே போர் செய்வோம். பின்னர் அதை அக்கணத்திலே மறந்து விடுவேன்.  அவர் எப்படியோ தெரியல்ல? ஆனால் என்னுடன் முகம் மலர்ந்து பழகுவார்”.
விசாரணை முடிந்தது. சூடுபரவியிருந்த அறையிலிருந்து ம.செ மிகச்சந்தோசத்துடன் வெளியேறி வந்தான்.

 

மா.செ யின் விசாரணையை முடிவிற்கு கொண்டுவந்த அ. அதிபர், முன்னாள் நீதிபதி, தொழில் செயலாளர் ஆகியோர் அறிக்கையையும் ஆலோசனையையும் முதலமைச்சருக்கு அனுப்புவதற்காக கலைஞர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பி.செயலாளர்கள்,  பத்திரிகையாளர்கள், பேராசிரியர்கள், கலாநிதிகளை அழைத்துக் கருத்துபரிமாற்றங்கள் செய்து தீர்க்கமான தீர்வினையும் ஆலோசனைகளையும் முதல் அமைச்சருக்கு முன்வைத்தார்.
01.    பிரதேச செயலகங்களில் இயங்குகின்ற கலாச்சார பேரவை வெறுமனே ஒரு வருடத்தில் ஒரு நாள் நடைபெறும் கலைவிழாவிற்கு மாத்திரம் இயங்காது. அது தொடர்ச்சியாக பிரதேச பண்பாட்டுத்தளத்தில் அழியும் விளிம்பிலிருக்கும் கலைகளை மேல்தளத்திற்கு கொண்டு வருவதற்கு பாடுபடவேண்டும். இணைப்பாளர்களாக அல்லது பேரவையின் செயலாளராக கடமையாற்றும் உத்தியோகத்தர்கள் தங்கள் பொறுப்புக்களையும் கடமைளையும் அர்ப்பணிப்புடன் செயற்படுத்த அவர்களை மேற்பார்வை செய்யும் உத்தியோகத்தர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செயற்படாமல் காலம் தள்ளுவார்களானால் மேற்படி உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யப்பட வேண்டும். அல்லது அவர்களுக்கு ஏற்ற உத்தியோகத்திற்கு இணைந்து விடவேண்டும். பேரவை உறுப்பினராக இணைக்கப்படுபவர்கள், கலை இலக்கிய நாட்டாரியல், தொல்லியல் போன்ற துறைகளில் விற்பனராக அல்லது அத்துறையோடு இயங்குபவர்களாக இருக்க வேண்டும். அத்தோடு அர்ப்பணிப்புச்சிந்தை, வேலைப்பழு அற்றவராக, சமூகம் சார்ந்த சிந்தனையாளராக, கலை இலக்கியத்தை காப்பவராக இருக்க வேண்டும். இதற்கு மறுதலையாக புகழுக்காக, பதவிக்காக கதிரைகளை சூடேற்றுபவர்களை எச்சந்தர்ப்பத்திலும் உறுப்பினர்களாக நியமிக்கக்கூடாது. உறுப்பினராக நியமிக்கப்படுபவர்கள் கூட்டத்திற்குச்  சமூகமளிக்கும் படி வழங்கப்பட வேண்டும்.

02.    மா.செயில் இயங்கும் பேரவை, பி.செயலகங்களில் இயங்கும் பேரவையிலிருந்து உறுப்பினர்களை உள்வாங்கிக் கொள்ளவேண்டும். இருபதிற்கும் இருபத்தியைந்திற்கும் உட்பட்டதாக உறுப்பினர்கள் அமைய வேண்டும். ஒவ்வொரு உறுப்பினர்களையும் தெரிவு செய்வதோடு மா.செயலகத்திற்கு அருகிலுள்ள பிரதேச செயலகங்களிலிருந்து மேலதிகமாக ஐந்துபேரையும், பல்கலைக்கழத்திலிருந்து குறிப்பாக தமிழ்த்துறை, நுண்கலைத்துறை, வரலாற்று அல்லது தொல்லியல்துறையிலிருந்து தலா ஒவ்வொரு பேராசிரியர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான் இப்பேரவை சிறப்பாக இயங்க வாய்ப்புள்ளது.

03.    பிரதேச செயலக மட்டத்தில், மா.செயலக மட்டத்தில் தகுதியில்லாதவர்களை விருதுக்கு பரிந்துரைக்கக்கூடாது. விழாவில் பாராட்டவேண்டுமென்று, கலைகளைச் சிதைப்பவர்களுக்கும், பொய்ப்பேர்வழிகளுக்கும் பாராட்டும் விருதும் வழங்கும் பட்சத்தில் உண்மையாகவும் கலைக்காகவும்  தங்களை அர்ப்பணிப்பவர்கள் உதாசினம் செய்யப்படுகிறார்கள். இது அவர்களை விரக்திக்கு இட்டுச்செல்லும். கடந்த காலங்களில் கலாபூசணம், முதலமைச்சர் விருதுகளில் இவ்வாறான கொடுமை நடந்துள்ளதாக எமது விசாரனை மூலம் அறியக்கிடக்கிறது. விருதுகளைச் சிபார்சு செய்து அனுப்பும் அதிகாரிகள், கரிசனையுடன் ஈடுபடவேண்டும். தெரிந்தவர், சொந்தக்காரர் என்ற பாகுபாட்டிற்குள் விழுந்து விடாது, பிரதேசத்தில் இருக்கும் தகுதி கூடியவரை இனம் காணப்பட்டு பலநிலை விவாதத்தின் பின் இறுதித்தேர்வுக்கு வரவேண்டும்.

04.    புத்தகங்கள், ஆண்டுமலர்கள் வெளியிடும் போது பொறுப்பு வாய்ந்த ஆசிரியரும் மலர்க்குழு ஒன்றும் தெரிவு செய்யப்பட்டு இயங்கவேண்டும். பேருக்கான மலர்க்குழுவாக இராது அவர்கள் அர்;ப்பணிப்புடன் கட்டுரை, படைப்புக்களின் மீதான தரநிர்ணயத்தை விவாதித்து பிரசுரத்திற்கு கொண்டுவர செயற்பட வேண்டும். இதுவரையும் பெயருக்கான மலர்க்குழுவே விசாரணை மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இது இனிவரும் காலங்களில் தவிர்க்கப்படவேண்டும். காத்திரமான மலர்க்குழுவாக இருந்தால் வீண்பிரச்சினைகளும், பழிவாங்கல் சம்பவங்களும் நடவாது.

05.    விருதிற்காகப் பரிந்துரைப்பவர் அவ் விருதுக்குத் தெரிவு செய்யப்படாவிட்டால் அதற்கான காரணம், நியாயப்பாடு ஆகியவற்றை உரிய நபருக்கு அனுப்புவதோடு உரிய ஆண்டில் விருதிற்கு தேர்வானவர்களின் புள்ளிகளையும் தேர்வு நடைபெற்ற நடைமுறைகளையும் பத்திரிகை வாயிலாக பகிரங்கப்படுத்த வேண்டும்.

06.    தேர்ச்சியான கலைஞன் (அண்ணாவி போன்றவர்) எழுத்தாளர்கள், கவிஞர்கள் தகுதியிருந்தும் அவர்களிடத்தில் சில நேரங்களில் ஆவணங்கள் இல்லாமலிருக்கலாம். கூத்துச்செயற்பாட்டில் ஈடுபட்ட அண்ணாவி துண்டுப் பிரசுரம், புகைப்படங்கள் போன்றவற்றை தொலைத்திருக்கலாம். அதுபோல் எழுத்தாளர்கள், கவிஞர்கள், பத்திரிகைகள் சஞ்சிகைகளில் எழுதுபவர்களாக இருக்கலாம். வறுமை காரணமாகப் புத்தகங்கள் போடமுடியாத சூழல் இருக்கலாம். அதனால் புத்தகங்கள் மட்டும் வெளியிட்டவர்களையோ சந்தர்ப்பவசத்தால் (அரசியல் செல்வாக்கு காரணமாக) கோவில்கள், கலைக்கழகங்கள், பாடசாலைகளில் பாராட்டப்பட்டவர்களை மாத்திரம் கவனத்தில் கொள்ளாது கலைஞனின், படைப்பாளின் திறனைக் கணிப்பிட்டு விருது வழங்க வேண்டும். கடதாசித் தகமைகளை மட்டும் கருத்தில் கொள்வது இலக்கியத் துரோகமாகிவிடும்.

07.    மாவட்டமட்ட, பிரதேசமட்ட விழாக்களுக்கும் கலைமேம்பாட்டிற்கும் ஆண்டிற்கான வரையறுக்கப்பட்ட பண ஒதுக்கீடு இடம்பெறவேண்டும். இதற்கான திட்டவாரியத்தை ஏற்படுத்தி நிதியத்தை உருவாக்குவதற்கான வழிமுறைகளை உரிய அதிகாரிகள் கண்டடைய வேண்டும்;;.

08.    அர்ப்பணிப்புடன் இயங்கும் உத்தியோகத்தர்மேல் அபாண்டமான குற்றச்சாட்டுக்களை முன்மொழியும் அல்லது பிட்டிசம் போடும் நபர்களைக் கண்டறிந்து உரிய தண்டனைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேற்கூறிய ஆலோசனைகளையும் தீர்வுகளையும் தங்கள் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

இப்படிக்கு
உண்மையுள்ள
01. அ.அதிபர்.
02. முன்னாள் மாவட்ட நீதிபதி.
03. தொழின் அமைச்சின் செயலாளர்.

குறிப்பு: கோகர்ணன் பற்றிய கதையின்தததததததததததததததததஅடுத்த சிறுகதையில் எழுதப்படவுள்ளதால் இக்கதையாடலில் கோகர்ணனின் பொய்த்தோற்றம் தவிர்க்கப்பட்டுள்ளது.
00

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment