Home » இதழ் 01 » அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!

 

அனைவரையும் உள்ளடக்கும் பன்மைத்துவ ஸ்ரீலங்கா அடையாளம்!

 

-ஷானி

ஓர் அநாமதேயத்தின் குறிப்புப் புத்தகம்

—————————————————

இம்பூமி சிறியது

அவஸ்தைக்கோ அளவில்லை

நொந்துபோனோர் அனந்தம்

சிந்திக்கிறேன் நான்

அதனால் என்ன?

எம்மால் சாகமுடியும்.

சிந்திக்கிறேன் நான்

அழிவை வெல்லக்கூடிய

ஆற்றல் எவரிடத்தும் இல்லை

சிந்திக்கிறேன் நான்

அதனால் என்ன?

சொர்க்கத்தில்

எல்லாம் இனிது

புதியதொரு சமன்பாடு கிடைக்கும்

அதனால் என்ன?

-எமலி டிக்கின்ஸன் (1830-1886)

ருபது ஆண்டுகளுக்கு முன்பு நீதியரசர் டி. விமலரத்ன தாம் கல்வி கற்ற கல்கிஸ்ஸ் அர்ச் தோமையர் கல்லூரியின் பரிசளிப்பு விழாவில் பிரதம விருத்தினராகக் கலந்துகொண்டு ஆற்றிய உரையை ஸ்ரீலங்காவில் நன்கு அறியப்பட்ட எழுத்தாளரும் மானுட செயற்பாட்டளருமாகிய றெஜி சிறிவர்த்தன அவர்கள் மேற்கோள் காட்டினார்.

1983ஆம் ஆண்டின் சங்காரம் நடந்து முடிந்தவேளை அது, தமது பாடசாலை நாள்களை நினைவு கூர்ந்த விமலரத்ந சொன்னார்: “ ஒருவர் மொலமுறே ஆக இருந்தாலென்ன, அபயசேகராவாக இருந்தாலென்ன, சரவணமுத்துவாக இருந்தாலென்ன, அப்துல்லாவாக இருந்தாலென்ன, முகாபே ஆனாலென்ன ஆரென்ற ஆனாலென்ன அனைவரும் சமம் – எவரும் மற்றவர்களைவிட உயர்ந்தவரல்ல, வகுப்பில் அல்லது விளையாட்டுத்திடலில் ஒரு பையன் தன்னை வல்லவனாக நிரூபித்தாலொழிய”

இன்று நாம் இலங்கையின்; தேசிய நாளைக் கொண்டாடுகின்றோம்.  கொலனித்துவ ஆட்சியிலிருந்து  நாம் விடுதலைபெற்றோம். 64 ஆண்டுகளுகளுக்கு முந்திய அர்ச். தோமையர் கல்லூரி பற்றி விமலரத்ந சொன்னது, பெரும்பாலான பாடசாலைகளுக்கு – அவை நகரப்பாடசாலைகள் ஆனாலென்ன, நாட்டுப்புறப்பாடசாலைகள் ஆனாலென்ன, ஒருமொழிப் பாடசாலை ஆனாலென்ன, இருமொழிப்பாடசாலைகள் ஆனாலென்ன, மாணவர்கள் எந்த சமூக மட்டத்திலிருந்து வந்திருந்தாலானலென்ன , பொருந்தும்.

அர்ச் தோமையர் போன்ற பாடசாலைகள் உருவாக்கிய சில அதிபர்களை உள்ளிட்டோர் தலைமை தாங்கிய தரமான பாடசாலைகள் மூலம் தரமான கல்வி வழங்கப்படுவதை கன்னங்கரா கொணர்ந்த சீர்த்திருத்தங்கள் உறுதி செய்தன.  பிலியந்தலையிலிருந்து இப்பகமுவ வரை, நெல்லியடியிலிருந்து வந்தாறு மூலைவரை, பஸ்ஸறையிலிருந்து தலாத்து ஓயா வரை, தோட்டங்கமுவிலிருந்து தெளிஜ்ஜவில வரை, ஐம்பது பாடசாலைகள் பரவலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டன.  கட்டாய, இலவசக் கல்வியோடு இணைந்து, உலகின் மிக முன்னேறிய நாடுகளுக்குச் சமதையாக, நாம் 100 சதவிகித எழுத்தறிவு மட்டத்தை எய்தியிருந்தோம்.  1931இல் நிறுவப்பட்ட பல்கலைக்கழகக் கல்லூரியும் 1942இல் நிறுவப்பட்ட தன்னாதிக்கமுள்ள இலங்கைப் பல்கலைக் கழகமும் உள்நாட்டிலேயே, எல்லா முக்கிய துறைகளிலும் பல்ல்கலைக் கழகக் கல்வி கிடைக்க வழிசெய்தன.

இதற்குப் பதினாறு வருடங்களுக்கு முன்பே டொனமூர் சீர்திருத்தங்கள் சர்வஜன வாக்குரிமையையும் மட்டுப் படுத்தப்பட்ட சுயாட்சியையும் அறிமுகப்படுத்திவிட்டன.  சர்வஜன வாக்குரிமை என்ற வாய்ப்பைப் பெற்ற முதலாவது ஆசிய நாட்டினர் நாமே.  இருபத்தொரு வயதுக்கு மேற்பட்ட எல்லா ஆண்களும் பெண்களும் வாக்களிக்கவும், புதிதாக நிறுவப்பட்ட சட்டசபைக்குத் தெரிவாவதற்காகத் தேர்தலுக்கு நிற்கவும் முடியும் என்பது இதன் பொருள்.

பிரித்தானிய கூட, எமக்கு மூன்று ஆண்டுகள் முன்னர்தான் சர்வஜன வாக்குரிமை பெற்றது.  முந்திய சட்ட நிரூபன சபையின் ஓர் அம்சமாக விளங்கிய இனப்பிரதிநிதித்துவ முறைமையை டொனமூர் ஆணையாளர்கள் நிராகரித்திருந்தனர்.  இனப்பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதன் மூலமே தேசிய ஒற்றுமையை முன்னெடுக்க முடியும் என அவர்கள் நம்பினர்.  சர்வஜன வாக்குரிமையை அறிமுகப்படுத்துகையில் ஆணையாளர்களும் கொலணித்துவ அரசும் இலங்கை மக்கள் மீது வைத்த நம்பிக்கைக்கு அடிப்படையாக இருந்தது என்பது நிரூபிக்கப்பட்டது.

சுதந்திர இலங்கையில் புதிய ஜனப்பிரதிநிதிகள் சபைக்கான முதலாவது பொதுத் தேர்தல் 1947இல் நடத்தப்பட்டபோது, ஏலவே டொனமூர் யாப்பின் கீழ் சட்டசபைக்கான இரு தேர்தல்களில் மக்கள் வாக்களித்திருந்தார்கள்.  முதலாவது பொதுத்தேர்தலில் எமது வாக்காளர்கள் குறிப்பிடத்தக்க முதிர்ச்சியைக் காட்டினர்.  தேர்தலையடுத்து ஒது வலுவான அரசாங்கமும் வலுவான எதிரணியும் உருவாயின.  அதிலும் மேலாக, இனத்துவக்காரணிகள் தெரிவுகளை நிர்ணயிக்கவில்லை. சொற்ப பறங்கியர்களைக் கொண்ட மத்திய டொனமூர் வாக்காளர் தமது பிரதிநிதியாக ஒரு பறங்கியரைத் தெரிவு செய்தனர்.   தமிழ்ப் பெரும்பான்மையினரைக் கொண்ட மட்டக்களப்பு ஒரு முஸ்லிமைத் தெரிவு செய்தது.  மிகப்பெருந்தொகையினரான சிங்களவர்களைக் கொண்ட பண்டாரவெல நேர்ப் போட்டியில் சிங்களவரை விட்டு தமிழர் ஒருவரைத் தேர்ந்தெடுத்தது.  தமிழ் வாக்காளர் பெரும்பான்மையினராக உள்ள ஹப்புத்தள ஒரு சிங்கப் பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்த்து.  தேர்தலில் இனம், சமயம், சாதி, மற்றும் சமூக அந்தஸ்து எந்தப் பங்கையும் வகிக்கவில்லை என்று சொல்வது வெகுளிததமனமாயிருக்கும்.  ஆனால் முதிர்ச்சியுள்ள தேர்தல் தொகுதிகள் இன மைய நோக்குகளை நிராகரித்த பல புறநடைகள் இருந்தன என்று சொல்லவருகின்றேன்.

சுதந்திர இலங்கையின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் வாண்மைமிக்க அரசாங்க சேவையொன்றால் வலுப்பெற்றிருந்தது.  இலங்கை நிர்வாக சேவை வினைத்திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாய் விளங்கியது.   கிராமப்புறத்து எளிய மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களை உணராத மேட்டுக்குடி நிர்வாகிகள் அல்ல அவர்கள்.  பொலிஸ் சேவை தனது கடமைகளைத் திறமையாக நிறைவேற்றியது.  அவர்கள் சட்டம், ஒழுங்கைக் காத்தனர்.  எந்தக் குற்றச் செயலும் சிறிதோ பெரிதோ கண்டுபிடிக்கப்படாமல் போனதில்லை.  நீதிபரிபாலனம் கண்ணியத்துக்கும் சுதந்திரத்துக்கும் நியாயத்துக்கும் பேர்போனதாய் விளங்கியது.;  அரசாங்க சேவைகளும் அவ்வாறே.  வினைத்திறனுக்கு அவை முன்மாதிரிகள் .கொழும்பில் தபாலில் உள்ள  முகவரிக்கு கடிதம் மறுநாளே  போய்சேரும்.  கொழும்பில் நாள் ஒன்றுக்கு மூன்று தடவை தபால் விநியோகம் நடைபெறும்.  நகர எல்லைககுள் இடப்பட்ட தபால் அதே நாளில் நகர எல்லைக்குள் விநியோகிக்கப்படும்.

எங்கே தவறு நடந்தது?

பொதுச்சேவையின் சகல துறைகளிலும், இந்த அறுபத்தாறு ஆண்டுகளில் நாம் முன்னேற்றம் கண்டிருக்கவேண்டும்.  ஆனால் ஒவ்வொரு துறையிலும் நாம் பின்னடைவு கண்டிருக்கிறோம் என்பதே உண்மை.  எங்கே தவறு நடந்தது?  நம் நாடு கிடந்துழலும் அவல நிலைக்கு அரசியல் வாதிகள்மீது பழியைப்போடுவது எளிது.  அஃது ஓரளவு உண்மையெனினும், எங்கள் தலைவர்கள் யாவரும் – சமய, சிவில் சமூக, கல்வி மற்றும் வாண்மையினர் யாவரும் – அப்பழியின் பெரும்பங்கை ஏற்கவேண்டும்.  இப்பொழுது நாங்கள் தெரிவு செய்யும் அரசியல்வாதிகளின் ஆற்றலைப் பொருத்தவரை பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.  தொலைநோக்குள்ள கனவான் அரசியல்வாதிகளின் காலம் பழங்கதையாய்ப்போய்விட்டது. இது ஊழல் மிக்க, சந்தர்ப்பவாத சுயநலமிகள் காலம்.  அவர்கள் ஒவ்வொரு பொதுத்துறையிலும் குறுக்கிட்டு அதை அழிவுக்கும் அனர்த்தத்துக்கும் இட்டுச்செல்கின்றனர்.   தேசிய நலனைவிட தம் தனிப்பட்ட அதிகாரத்தை வளர்ப்பதில் கண்ணாய் இருக்கும் ஆணவம் பிடித்த ஊழல் அரசியல்வாதிகளைப் பற்றி நிறையப் பேசலாம்.  ஆனால் இந்தச் சீரழிவைத் தடுத்து நிறுத்துவதில் தலைமை வகிக்கக் கூடிய வாண்மையாளர்களும், சிவில் சமூகமும் மததத்லைவர்களும் எங்கே போய்விட்டார்கள்?

அனைத்தையும் உள்ளடக்கும் இந்திய அடையாளத்தை உருவாக்கவேண்டிய அவசியம்பற்றி தாம் புதுதில்லியில் செய்த விரிவுரையில், நோபெல் பரிசு பெற்ற பொருளியலாளர் அமார்த்திய சென் குறிப்பிட்டார்.  அவர் குறிப்பிட்ட விசயம் 2012 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவுக்கு இன்னும் சிறப்பாகப் பொருந்தும்.  பேராசிரியர் சென் சொன்னார்.

“இந்திய அடையாளத்தின் இயல்பு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உறவுகுறித்த பிரச்சினைகளை எழுப்புகிறது.  வெளிவாரியான ஒதுக்கலை எதிர்க்க வேண்டிய தேவை இருக்கிறது.  இந்திய அடையாளத்தின் மேன்மைக்கு அண்மைக் காலங்களில் பாரிய சவாலாயிருப்பது இனங்கள் உள்ளகப் பிரிவினையை நோக்கி உந்தப்படுவதே.  சுந்திர இயக்க காலத்தில் வெளிக்கிளம்பிய இந்திய அடையாளம் என்ற பரந்த கருத்து நிலைக்கும் இந்திய தேசம் என்ற எண்ணக்கருவுக்கும் கடந்த ஒரிரு தசாப்பதங்களில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் வலுவான சபால் விட்டன.  பிதிரார்ஜிதத்தின் பெறுமதியில் எமக்கு நம்பிக்கை இருக்கமாயின் ஏன் அது பெறுமதிவாய்ந்தது என்பதை நாம் புரிந்துகொள்ளவும், அந்தப் புரிதலை எவ்வாறு வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிந்து கொள்ளவும் வேண்டும்.

அக்காலத்து இந்தியத் தலைவர்கள் இந்தியத் தன்மையைப் புரிந்துகொண்ட விதத்தில் வேறுபாடுகள் இருந்தன.  மகாத்மா காந்தியும் இரவீந்திரநாத் தாகூரும் பரந்த, அனைத்தையும் உள்வாக்கக் கூடிய  இந்திய அடையாளத்தில் நம்பிக்கை வைத்தனர்.  அவர்கள் அதற்குத் தந்த வியாக்கியானங்கள் வேறுபட்டன. இந்திய அடையாளத்தின் இயல்புபற்றி சுதந்திர இயக்க காலத்துக் கோட்பாட்டாளர்களும் பிற புலமையாளர்களும்  தெரிவித்த கருத்துக்களில் வேறுபாடுகள் இருந்தன.

சந்தர்ப்ப சூழ்நிலைகளுக்கேற்ப பண்டைய இந்தியாவிலும் வருங்கால இந்தியாவிலும் விஞ்ஞானம், அறிவியல், பகுப்பாய்வு நியாயித்தல் ஆகியவை வகிக்கவேண்டிய பங்குபற்றிய வியாக்கியானங்கள் வேறுபட்டவை.  ஆனால் இவ்வித்தியாசமான வியாக்கியானங்கள் சகிப்புத்தன்மை, ஒருமைப்பட்ட இந்தியாவில் பன்மைத்துவத்தைக் கொண்டாடுதல் ஆகிய பண்புகளில் ஒத்திருந்தன.  இந்தியாவின் கடந்தகாலத்தைப் பல்வேறு இனங்களும் இணைந்து செய்த கூட்டு நிர்மானமாக அவர்கள் புரிந்து கொண்டமை பிரதிபலிக்கப்பட்டது.  தத்தம் கலாசாரப் போக்குகளிலும்;, சமய நம்பிக்கைகளிலும், தனிப்பட்ட நடைமுறைகளிலும் தாகூருக்கும் காந்திக்குமிடயே கணிசமான வேறுபாடுகள் இருந்தன.  ஆனால் இந்திய அடையாளத்தை வியாக்கியானம் செய்கையில் எந்தக்குறுகிய பார்வையையும் – உதாரணத்துக்கு, இந்துமத நோக்கை – ஏற்க மறுப்பதில் ஒத்து நின்றார்கள்” என்கிறார் சென்.

பன்மைத்தன்மையும் ஏற்கும் பண்பு

ஸ்ரீலங்காவில் நாம் தேசிய தினத்தைக் கொண்டாடும் இவ்வேளையில், அனைத்தையும் உள்வாங்கும் சென்னுடைய கருத்துக்கள் எமக்குப் பொருத்தமானவை.   இன ஒதுக்கல் மற்றும் ஆக்கிரமிக்கும் குறுகிய நோக்கு ஒரு புறத்திலும், கலாசார அந்நியமாதல் மற்றம் தனிமைப்படும் தேசியம் மறுபுறத்திலும் ஆக, உள்ளக பன்மைத்துவத்துக்கும் வெளிவாரி  ஏற்புப் பண்புக்கும் சவால் விடுகின்றன.

இச்சவால்களை எதிர்கொள்வதில் எமது வாண்மையாளர்களும் சிவில் சமூகமும், சமயங்களும் முன்னணி வகிக்க வேண்டும்.  மோசடிப்பேர்வழிகள், குறுநோக்கர்கள், போலித்தேசியவாதிகள், மற்றும் ஊழல் அரசியல்வாதிகளை அவர்கள் எவ்வளவு அதிகாரமும் அந்தஸ்தும் படைத்தவர்களாயிருப்பினும் – தட்டிக்கேட்கும் துணிவு அவர்களுக்கிருக்கு வேண்டும்.

மீண்டும் அதே கேள்விக்கு வருவோம்.  ஒரு தேசம் என்ற அளவில் எங்கே தவறிழைத்தோம்? ஒரு தேசிய அடையாளத்தை, நாம் பன்மைத்துவத்தைக்கொண்டாடும் ‘இலங்கையர்’ என்ற உணர்வை, மற்றையோருடைய சம உரிமைகளை ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை பேசும் மொழியால் பின்பற்றும் சமயத்தால் மட்டுமல்ல,  அரசியல் பொருளாதார சமூக அந்தஸ்தாலும் வேறுபட்டோரையும் ஏற்க எம் தலைவர்கள் தவறிவிட்டனர்.

நாம் தொடர்ந்து, மாற்றக் கருத்துடையோரை ஏற்காது விலகிப்போய்க் கொண்டிருக்கிறோம்.  மாற்றுக்கொள்கை உடையோரை ஏற்க மறுப்போரைத் தட்டிக்கேட்காமல் இணங்கிப் போய்க்கொண்டிருக்கிறோம்.

நெடுங்காலத்துக்கு முன்பு றெஜி சிறிவர்த்தன சொன்னார். “தேசிய அடையாளத்துக்கு நாம் விசுவாசமாயிருக்க விரும்பின், நாம் கொண்டாட வேண்டியது தூய்மையையல்ல: கலப்பையே” ஒற்றை அடையாளத்தை ,மாறாத பாரம்பரியத்தை பற்றித் தொங்குவோருக்கு இது பிடிக்காத கருத்து.  ஆனால் யதார்த்த இலங்கையில் இவற்றை எங்கே காணமுடியும்?

தாராளப் போக்குடைய, திறந்த மனதுடைய ஒரு மக்கள் கூட்டமாக வாழ்வதே  இலங்கை

மக்களுக்குக் கிடைக்கும் அழியாப் புகழாகும்.

00

தமிழில்- சோ.பா

The Island 23 feb 2012

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment