Home » இதழ் 11 » * ஜே.பிரோஸ்கான் கவிதை

 
 

* ஜே.பிரோஸ்கான் கவிதை

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

firoskhan

மாமிஷ தின்னி

முளைத்து விட்ட அல்லது
முளைக்க வைத்து விட்ட
பெருமை கொண்டு சீறும்
மிருகத்தைக் கொண்ட வனத்தின்
ராஜ்ஜிய அடக்குமுறையில்
அவிழ்த்து எறியப்படுகின்ற
மான்களின் மேலான வேட்டை அம்புகளின்
கூர் முனையின் கீழாக
சொட்டும் குருதியின் நிகழ்காலத்தில்
தடை செய்யப்பட்ட மாமிஷத்தின்
சதைப்பிண்டங்களை அள்ளி அள்ளி
பசீ தீர்க்கும் பெருத்த மிருகத்தின் பாய்ச்சல்
புனிதம் மனக்கும் கறித்துண்டுகளை
சுவைக்கும் அதனுடைய எண்ணம்
கலிஷரத் தனமானதுதான்.
நாய்கள் வெருக்கும் கோடை வெயில்
கோடை காலத்தின்
வெப்ப பிரளயத்தை ஜீரனிக்க
முடியாத நாய்கள்,
கிணற்றடி மணலின் ஈரத்தைத்தேடி
உறங்கி உடலை குளிரூட்டி
ஆறுதலாகும் போது,
வீட்டுக் குழந்தைகள் குறுக்கிற்று
தன் இளைப்பாறுகையை முறியடித்து
ஆத்திரத்தை ஊட்டும் தருணத்தில்
நாய்கள் முறைத்துப் பாயும்
குரைப்பு கடினமானதுதான்.
இருப்பினும்
நாய்கள் வெருக்கும் கோடை வெயிலின்
அகோர சூட்டை பொருக்க முடியாமல்
இப்படித்தான் வளர்த்தவன் வீட்டு
எச்சச் சோற்றுக்குக்கூட நன்றி
செலுத்தாதபடி நடந்து விடுகிறது
நாய்கள்.

 

feroவேக்கையன் பற்றிய கவிதை

நான் சில்லூரி
என் வார்த்தை கடுகு
யாரோ அவன் இப்படித்தான்
தூரமாக நின்று போதிக்கிறான்.
பிடிப்பற்ற முரன்பாட்டின் வார்த்தைகளை
ஊசித்துண்டுகளாக்கி தசை நரம்புகளுக்குள்
செலுத்தி சிரிக்கிறான்.
பூப்பெய்து கொள்ள காலம்
கனிய வில்லை.
காய்த்து பழுக்கும் ஆசையில்
முந்தி தலைகுணிகிறான்
தன் இயலாமையை மறைத்துக்கொண்டு.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment