Home » இதழ் 11 » * கதீர் கவிதைகள்

 
 

* கதீர் கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

katheer kavithai

எனது கவிதையை தின்ற ஆடு

என் மேலே உருண்டு விளையாடுgoat
தலை மயிரை இழுத்துப் பார்
கை சூப்பு
தலையணையில் மூத்திரம் அடி
எனது பெருவைற்றில் காலால் உதை
ஆட்டுக்குட்டி – நீ
என் கவிதைக் கொத்துக்களை தின்றுவிட்டாய்
முளை விட நாளாகும்.
என் கவிதை பூக்க வருடமாகும்

நாளை தொழிலுக்கு போகிறேன்

அடியில் கிடந்த களைகளையும் அல்லவா தின்று விட்டாய்

களைகள்
கவிதை பூக்குமிடம் என்று புரவலரிடம்
பொய் சொல்ல இருந்தேன்.
ஆடே!! புரவலர் வந்தால் சொல்லு
ப்…பா  ல்லே…… போங்க என்று.

நாளை தொழிலுக்கு போக வேண்டும்

முகத்தை விறாண்டாதே
பக்கத்தில் கட்டிப்பிடித்து கண்ணயர்ந்து விடு.

Hello!! Please switch off the light.

000000000000000

பயணம்

மகனே இன்றாவது முடித்து தந்து விடு
மிகத்தொலைவுக்கு சென்றுவிட வேண்டும்
செவ்வாயில் தரையிறங்கும்
எண்ணம் எதுவுமேயில்லை
முடித்துத்தந்து விடு

திண்ம எரிபொருளை
மூன்றுகோடி காததூரம்
செல்லுமளவில் நிரப்பு

நான் செல்ல வேண்டும்
மலர்களிடம் வாழ வேண்டும்

இரு பொழுதுகள்
என்றுமே பிடிக்காது
ராப்பகல் அங்கு இருக்கிறது
நிலவு பிடிக்காது
சூரியனும் பிடிக்காது
பந்து போன்ற எதுவும் பிடிக்காது

செவ்வக தட்டில் வாழப்போகிறேன்

அம்மண உடல் அலாதியானது
பூமி அதிர்கிறது
இன்றே முடித்து தந்து விடு

000000000000000000

மண்புழு

மண் பருக்கைகளை
என்னமாய் அடுக்கி வைத்துள்ளாய்
ஈரலிப்பான என் மண் திட்டில்
என்னமாய் நீ நெளிந்து.

கடந்து போன இரவு நிலவு
தலை நிமிர்த்தி பார்த்த கணங்கள்
என்னமாய் நீ.
நிலம் பிளந்து நீ நெளிந்து வர
எறும்புகள் உறங்கியிருக்க வேண்டும்

வாசல் பெருக்கும் ஈர்க்குக்கட்டை
கோழிகூட்டின் தகரக் கூரையின் மேல்
எறிந்து விட்டேன்.
உனது பாதைத் தடம் மறைந்து விடக்கூடாது என்பதற்காக.
யன்னலோரம் வந்தவளை
தேனீர் போடச் சொல்லி திருப்பி விட்டேன்
சில வேளை கண்டெடுக்கக்கூடும்
என்னவள் தேடித்திரிகிறாள்.

மண்வெட்டி கொண்டு
மரம் நடும் எண்ணம் இனி எனக்கில்லை
என் வளவெல்லாம்
சிறு புற்கள் நடப் போகிறேன்
நீ வாழ வேண்டும்.
முகம் பார்த்து என்னுடன் ஒருநாள் கதைக்கவேண்டும்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment