Home » இதழ் 11 » *கோ- நாதன் கவிதைகள்

 

*கோ- நாதன் கவிதைகள்

 

zxbvn

பிணம் தின்ற காடு

நமது தேசத்து எல்லை
நீர்பெருக்கெடுப்பு கடைசி வடிநீர்
இன்னும் இன்னலாய் பிண்டத்தின்
அடையல்களை அடைப்பைகளாக்கி
நீரின் வெட்டு முகத்துள்
கிழக்கின் ஆற்றோடுதான் வடிகிறது.

செம்மணி குள அரவம்
உடும்பன் காட்டின் அடந்த
வெளிக்கு மேலாய் மௌனம் தரித்து
பறந்து திரிந்த பட்சிகள்
ஆபாயக் கூக்குரலாய் கூவிச்செல்லும் .

எரிந்து சுக்கு நூறான எச்சங்கள்
மரக்கொப்புகளில் ஊன் சதையால்
அறையபட்டிக்க….
சிதைந்து உக்கி போன பாதணிகள்
வனத்தின் இடுக்களில் சிதறிக் கிடக்கிறது.

மேய்ச்சலுக்கான போன மாடுகள்
செங்காமம் காட்டினிடையே
மறைந்தவைகளை தேடிப்போனவர்கள்
சாஸ்திரவெளி காவலரணைத் தாண்டிய
இரத்தல் குளத்தின் கரையை ஒட்டி
சேற்று சுரியுள் புதைந்திருந்த
முதுகெலும்பின் நீளம்
துர்மணத்துடன் விட்டுச்
சென்ற அவஸ்த்தைகளை மீள்படுத்தின.

ஆயுத விஸ்தீரண தோண்டல்
மரணத்தின் இரகசியங்களை
இப்பொழுதும் உரத்துக் கூவுகின்றன.

000000000000000

vcna

நிலம் மிதித்தவனின் வதை

எனதான   மார்பு பால் சுரந்து
மடியறங்கம் திரண்டிருக்க
மழலை முகம் புதைத்து மகிழ்ந்த
அதர சிறு புன்னகையினை பிடுங்கி
பெரும் நிலத்தினை மிதித்தவன்
தலை வெட்டி திருகித் தூக்கி வீசியிருந்தான்.

என் கால்களையும்,கைகளையும்
பல பூட்ஸ்க் கால்கள்
மண்ணிலழுத்தி மல்லாந்து கிடத்திய போது
எனதான வெள்ளைத் தோலின் மார்புகளை
கடைவாய்களும் கடித்து குதறி உமிழ..
இரத்தமும், காயமும் உடம்பெல்லாம்
வழிந்து உறைந்தது.காமப் பிசாசுகள்
முலையறுத்து  முலைக்
காம்பினை குழந்தையின் குதத்தில் திணித்து.

மொத்த இயக்கங்களுமற்ற
சின்ன யோனித் துவாரங்கள் வழியே
எண்ணிக்கையற்ற பெருத்த ஆண்குறிகள்
வக்கிரம் தீர்த்து கொண்டிருந்தது.
விந்துத்துளிகளின்
மகாவலி கங்கை பெருக்கம்
எனது தொடைகளிடைய வடிந்து ஓழுகும்.

சில தினங்கள் பதுங்கு குழிக்குள்
என் பிணத்தின் துர்நெடி  புணர்ந்த கணம்
சிதைவடைந்திருந்த உடலகத்திலிருந்து
இன்னுமின்னும் பாலியலின் வன்மம்.
புழுக்களின்  படையெடுப்பு…
வீச்சின் வாசம் மோப்பம் ஊர்ந்து பரவுகின்றது.

யசோதரவின்  பரம்பரையிலிருந்து
உதித்தவனின் கரங்களுள் வந்த துவக்கு
யோனியினை குடைந்து கருப்பைக்குள் நீண்டு .
யோனிக்குள்ளே குண்டழுத்தி வெடிக்க வைத்தான்.

போரின் உக்கிர வெற்றியின் அடையாளம்
சிகிரியா உளுத்த நிர்வாண ஓவியத்தின்
நிழலினை மிஞ்சியிருந்தது
தமிழிச்சிகளின் நிஜ நிர்வாணப் படங்களும்,
நிலம் கிழித்த ரத்த ஓவியங்களும்.

000000000000000

மண் மேடு..

மணல் மேட்டு நிலத்திலமர்ந்த
நிலவொளி திருநாளொன்றில் எனது
குழந்தைகளும் ஓர் அணிலை போலவே
ஓடித் துள்ளி மணலில் உருண்டு
மணல் வீடு கட்டி மண்ணை
உடம்பெல்லாம் அப்பி விளையாடி
மகிழ்ந்த நிலம் பறிபோயிற்று…..

இரவெல்லாம் நாய்கள் தெருவை
கடித்து கனத்த குரைப்பில் நக்கி துடைத்தது.
புதிதாக வந்திறங்கி குவிந்த படைகள்
கருப்பு பேய்களாய் தான் உலாவுகின்றனர்.
இயற்கை கோபத்துடன்
மழையையும்.மின்னலையும், இடியையும்,
உரத்த குரலில் ஊரை உலுக்கிக் கொண்டிருந்தது.

காலைப் பொழுதினில்
வாகனங்கள் ஓடவில்லை,
மனிதர்கள் நடமாடவில்லை,
சந்தைகளில் கருவாடும் காயவில்லை
பெருந்தெருக்கள் வெறிஞ் சோடி நீள…
பழங்காலத்து சிதைந்த
கல்லொன்று இருநூறடியுயரத்துக்கு
வானெழுந்து சிலையாகி முளைத்தது

அங்கு வாழ்திருந்த காகங்களை
சகாடித்து காகத்தின் இறகினை
கிலி கோதி துரத்தி
அதிவேகத்துடன் மண் மேடு மரத்தோடு
தங்கிய அதீத தங்கப் பறவைகள்
கூடு கட்டி புனித நிலத்தினை ஆக்கிரமித்து….

தெரு முனைச் சந்தியெல்லாம் மின்
விளக்குகள்வெளிச்சத்தில் பிரகாசித்தது.
மீசை மழித்த காவி நிறப் பூனைகளும்
ஒற்றைத்தூணில் தாங்கும் கிழட்டு
துறவியை பாடலாகி உரியானப் படுத்தும். .

மொழியினை விழுங்கி நறுக்கி கிழித்த
கிளி சொண்டிலிருந்த ஆயுதம் கடவுள்.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment