Home » இதழ் 11 » * நம்பி கவிதை

 
 

* நம்பி கவிதை

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

nambi-1

சுடு வெயில்

வெயில்
வெயில் வெளி
கொஞ்சம் கொஞ்சமாய்
நீள்வதால்
பெருங் மஞ்சல் நிற கூந்தலொன்று
உலகம் சுற்றுகிறது
நடுப்பகலில் கருப்படைகிறது கண்கள்
எப்படியும் தப்ப முடியாதபடிvcvc
யார் யாரோ செய்த
குற்றங்களுக்கான தீர்ப்புக்களாய்
என் மீதும்
என் தோழமைகள் மீதும்
முளைத்துவிடுகிறது வெயில்
வெயிலின் எல்லா வேர்களும்
வெறி கொண்டு
என்னைத் துழாவுகின்ற போது
இருள் அச்சமடைந்து விடுகிறது
எவர் எவரோ
மறுமுனையில்
நரியின் குணங்கள் கொண்டு
வாழ்வை ஒப்பிடு செய்வதும்
தடை செய்யப்பட்ட
மிருகத்தின் மொத்தத்தையும்
தண்ணில் இருத்திக் கொண்டு
புன்னகைக்கும் மலட்டு மனசுகள்
இருக்கையில்
இவன் மேல் குறி வைப்பது ஏனென
நிகழ்காலத்தின் மீது முரண்கள்
மெலிதாய் முன் வைக்கப்பட்டப் போது
வெயிலுக்கு வியர்த்து விட்டது.

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment