Home » இதழ் 11 » கவிதை- திருக்கோவில் கவியுவன்

 
 

கவிதை- திருக்கோவில் கவியுவன்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

sorkkam

ஏகாந்தம் செறிந்திருந்த
ஓர் அத்துவானக் காட்டிலே
கையிலே
தூணியின் கடைசி அம்புடன்
என் வேட்டையின் தருணம்.

kavi..உயிர் வதை பற்றி
தீவிரமாய் நான் சிந்தித்துக்
கொண்டிருந்த கணத்திலே
எல்லா அம்புகளுமே தத்தம் போக்கில் தாமாகவே சிறகு பூட்டி
பறந்து போயிருந்தன.
போர்க்களத்திலே
தளபதியை கடைசிவரை விட்டுப்பிரியா
விசுவாசம் மிக்க மெய்ப்பாதுகாவலன் போல இந்த
ஒற்றை அம்பு மட்டும் என்னுடனே……..

வதை பற்றிய வாதப்பிரதிவாதம்
வலுவிழந்து போக
பற்றைகளிலிருந்தெழும் அரவங்களில்
மனம் மையமிடத் தொடங்கியது……

எங்கிருந்தும் நான் தாக்கப்படலாம்
எந்த நிமிடத்திலும்.
அலறிக் கொண்டு சடுதியான பாய்ச்சலாக
சத்தமிடாத முற்றுகையாக
மரங்களிலிருந்து நேரே என்
கழுத்து முறிய விழுவதாக
மரணத்தின் வடிவம் குறித்து கற்பனைக்குள் பாய்ந்தது மனது……

தூரமாய்க் கேட்கும்
இராக்குருவியின் சோகப்பாடலில்
உருகி கண்மூடிய ஒரு நொடிக்குள்
எதுவென்று தெரியவில்லை என் மீது பாய்ந்தது
இலக்கற்றுச் சென்ற என் கடைசி அம்பு
கடைசியில் இராக்குருவியில் குத்திட்டு நின்றது……

பறவைகளாய் மாறிப்போன அம்புகள்
என் உடலத்தைத் தூக்கிச் செல்ல
விழுதுகளுடன் வருகையிலே பேசிக் கொண்டதை
என் ஆன்மா கேட்டது…..
“ வேட்டையென்று வந்தபின் வதை பற்றி எதற்குச் சிந்தனை
நொந்துபோன ஆன்மாவை மிருதுவாய் தடவிக்கொண்டு
யாரோ அழைத்துச் சென்றதாய் உணர
நிமிர்ந்து பார்த்தேன்
தேவதூதர்களின் சிறகுகளோடு இராக்குருவி…..

0000

(2103.03.25. இரவு 10.28)

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment