Home » இதழ் 01 » தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

 
 

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

.
-ஈழக்கவி

ஸ்ரீபாத மலையளவு
குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால்
மடுவளவு ஊதியம் பெறுகின்ற
உழைப்பாளிகள் வீதிக்கு வந்தனர்
போராடும் பயங்கரவாதிகளாய் அல்ல
பட்டினிச்சாவின் அவலத்தை
அரசுக்கு உணர்த்திக்காட்ட

முன்னிரவே தகவல் அறிந்த அமைச்சர்கள்;
தனித்தனியாய்
எச்சில் இலைகள் உண்ணும் தங்கள் தடியர்களுடன்
மதுவோடும் விறலிக் கூத்தோடும் கூடிப்பேசினர்

கொலை, கொள்ளை, ஏமாற்று,பச்சை பொய் என்று
ஆயிரத்தியெட்டு பாதகங்களின் சொந்தக்காரர்களுக்கு
தொழிலாளர்களின் போராட்டமென்பது
வெறும் கால் தூசு

ஆயினும் தங்கள் இயங்கல் மூலம்
ஆட்சிபீட பதிவேட்டில் புள்ளிகள் கூட வேண்டுமென்பதே
மூல நோக்கமாய் இருந்தமையினால்
இராணுவ பல்கலைக்கழக முதுநிலை விரிவுரையாளர்கள் போல
முறையான ஆய்வுத் திட்டங்களோடு
அமைச்சர்கள் செயலில் இறங்கினர்

“எங்களை வாழவிடு”
“பட்டிசினிச் சாவுகளின் கதவை மூட
உழைப்புக்கான ஊதியத்தை தா”
“தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்று”

எப்பவும் போல அப்பாவி மக்கள்
இப்படித்தான் கோஷமிட்டனர்

மக்கள் கூட்டத்தோடு கூட்டமாய் கலந்துவிட்ட
அமைச்சர்களின் அடியாட்கள்
அடாவடித்தனங்களை காட்டத் தொடங்கினர்

தூஷண மொழிகளும் கற்களும் மது போத்தல்களும்
பெற்றோல் குண்டுகளும் துப்பாக்கிச் சன்னங்களும்
தேர்தல் கால அரசியல் வாதிகளின் கைவரிசை போல
அரச காவல் இயந்திரங்களை அதிர வைத்தன

ஆத்திரமுற்ற அரச காவல் இயந்திரங்கள்
நமக்குத் தொழில் அடித்தல் உதைத்தல் கொல்லுதல் என்ற
தர்மத்திற்கு ஏற்ப இயங்கின

மண்டை உடைதல்,கால் கை சிதைதல்,
நெஞ்சு பிளந்து உயிர் பிரிதல்….
யுத்த சம்பிரதாயங்கள்
அத்தனையும் ஒருநொடிக்குள் நடந்து முடிந்தன

யுத்த வெற்றியின் மகிழ்வோடு
பட்டினிக்காரர்களின் சவ வீடுகளுக்கு
கூழைக் கும்பிடு செய்தவாறு படையெடுத்த
தொழுகள்ள அமைச்சர்கள் கதறி அழுதனர்
அந்த கண்ணீரில் அரச முதலைகளின்
வெண்கொற்றக் குடை ஓங்கிப் பிரகாசித்தது.

000

20120318 இரவு 9.10 மணி

 

 

236 Comments

  1. thass says:

    அருமை,ஆழ்ந்த கருத்து….
    எழுதுங்கள் இன்னும், இன்னும்…..

Post a Comment