Home » இதழ் 12 » * ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

 

* ஸ்ரீ லங்கா அரச சாசனத்தில் 13ம் சீர் திருத்தமும் அவை பற்றிய விளக்கங்களும்- ரவி சுந்தரலிங்கம்

 

 

ravi

A Discussion about above topics took place in London on 29th of June 2013. Meeting organised by Activity for Tamil Language Communities.

 

தமிழரது ‘உரிமைகளுக்கான’ போர், போராட்டங்களின் 30 வருடங்களுக்கு மேலாக இலங்கை அரசியலில் முன்னிடத்தை வகித்துள்ளது. 2009 நிகழ்வுகளின் பின்னர், வெளிநாடுகளில் வட்டுக்கோட்டைத் தமிழீழ பிரகடனத்தை மீண்டும் முன்நிறுத்த எடுக்கப்பட்ட முயற்சிகளையும் நாம் அவதானித்திருப்போம். இவற்றிடையே, புலிகளால் ஏற்படுத்தப்பட்ட “தனிநாடு” நடைமுறை, சர்வதேசிய அரசியல் (சட்ட) ரீதிகளில் 40 நாடுகளது ‘அங்கீகாரத்தை’ பெற்றிருந்த போதிலும் அதன்பால் தமிழர்கள் கவனம் இல்லாது உள்ளது. MoU, P-Tom, Oslo Accord ஆகிய பல அரசியல் நகர்வுகள் புலிகளது காலத்தில் இருந்த போதிலும், 13ம் சீர்திருத்தம் பற்றியே விவாதங்கள் இடம் பெறுவது பிராந்திய, சர்வதேசிய அரசியல் நிலைப்பாடுகளையும், இலங்கை வாழ் மக்களது உண்மையான நிலமையையும் எடுத்தியம்புகின்றது.

இவ்விடயங்களது விளக்கங்கள் எவ்வளவு ஆதாரம் கொண்டவை, இலங்கை மக்களது குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்பவர்களது உரிமைகள் உடமைகள் பற்றிய ஊர்ஜிதம் கொண்டவை என்பவை விசாரித்து அறிய வேண்டியவை.

இதனை ‘சட்டம்’, அல்லது ‘யதார்த்தம்’ என்ற அரசியல் அடித்தளமின்றி அணுகும் தற்போதைய அரசியற் கலாச்சாரம் ஒரு முழச்சுற்றினூடாக 1960 – 1970 காலகட்டத்தை அடைந்து விட்டதை சொல்லாமல் சொல்கிறது.

அரசியற்-பொருளாதார அடித்தளமற்ற அபிப்பிராயங்களை கருத்துகளாக, விளக்கங்களாக நாம் ஒருபோதும் ஏற்றுக் கொள்வது கிடையாது.

ஆகவே ‘தீர்வு’ என்றளவில் ஏதாவது கருத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகின், அவை

1.    அரசியற்-பொருளாதாரம்
2.    வெளிச்-சூழல்
3.    சிறுபான்மை மக்கள்
4.    பொதுசன-அரசியல் சூழல்

என்ற அடித்தளங்களைக் கொண்ட ஆய்வுகளாக புறம்பாகவும், பின்னர் ஒன்றிணைவாகவும் அவதானித்து கணிக்கப்பட வேண்டியவை என்பது கருத்து.

எனவே, 2008 ஆடி மாதம் எம்மால் தேசம் இணையத் தளத்தில் பிரசரிக்கப்பட்ட “அரசியல்-பொருளாதாரம்” என்ற கட்டுரை இன்றைய எமது தேவைக்கு அடித்தளம் தரும் என்பது எதிர்பார்ப்பு. மேலும், முன்னும் பின்னும் மாறுபட்ட முரணான கருத்துகளைச் கூறியவர்களாக இல்லாது, காலாகாலத்தில் நாம் கூறிய கருத்துகளுக்கிடையே என்றும் உள்ள சித்தாந்த புத்திஜீவித தொடர்புகளுக்கு சாட்சியம் தரவும் உதவும் என்பது எமது தாழ்மையான கருத்து.

எமது அணுகு முறைக்கான அடித்தளங்கள்isl

பாகம் 1
அரசியல்-பொருளாதாரம்
தேசம் இணையத்தளக் கட்டுரை

பாகம் 2
அக-புறச் சூழல்

1. அன்றைய வெளி-நெருக்கடி (இந்தியாவின்):
•    தமிழ் போராளிகளுக்கு பயிற்சி, ஆயுதங்கள் வழங்கியமை.
•    காலாகாலத்தில் கேந்திர-தாக்குதல்கள் இடம்பெற்றபின் “பேச்சு வார்த்தைகளை” நடத்தியமை.
◦    அநுராதபுர படுகொலைகள் – திம்புப் பேச்சுவார்த்தை
◦    பெற்றா குண்டுவெடிப்பு – பெங்களுர் பேச்சுவார்த்தை
◦    இந்திய விமானங்களது உணவுப் பொதிகள் வீச்சு – டெல்லிப் பேச்சு வார்த்தை
•    ஆனால், டெல்லி பேச்சு வார்த்தைகள் முன்னரே 13ம் சீர்திருத்தம் தயாராக இருந்ததா?

 

2. அன்றைய இந்தியாவின் பிராந்திய நிலைப்பாடுகள்
•    இந்து சமுத்திரம் வல்லரசுகள் அற்ற பிராந்தியம்.
•    அமெரிக்க – ரஷ்ய வல்லரசுப் போட்டியில் நடுநிலமை
•    இந்திய-அமெரிக்க உறவு சர்ச்சைக்குரியது.
•    சீனாவின் வடக்கு எல்லையிலும் பாகிஸ்தானூடாகவும் உள்ள பிரச்சனை.
•    சுற்றாடலிலுள்ள சகல நாடுகளுடனும் கேந்திரச் சர்ச்சையில் ஈடுபட்டு இருந்தது.
•    இஸ்லாமிய தீவிவாதம், பயங்கரவாதம் பாரிய அளவில் இல்லாதமை, ஏதாவது இருந்தால் அவை    பாகிஸ்தானை மையமாகக் கொண்டிருந்தமை.

3. அன்றைய இந்தியாவின் நிலை
•    பொருளாதாரத்தில் பலவீனமானது.
•    மத்திய-அரசு ஸ்திரமற்றிருந்தது.
•    பிரிவினைவாதங்கள் மேலோங்கி இருந்தமை.
•    தமிழ்நாட்டு டெல்லியிலிருந்து அந்நியப்பட்டதாக இருந்ததுடன் தமிழ்-வாதத்தினூடாகவே தனது கோரிக்கைகளை பூர்த்தி செய்ய முயன்றது.

4. இன்றைய இந்தியாவின் பிராந்திய நிலைப்பாடுகள்
•    இந்து சமுத்திரம் இந்தியாவின் மேற்பார்வையில் இருக்க வேண்டியது. அதற்காக பலவிதமான இரு-நாட்டு ஒப்பந்தங்கள், ஏற்பாடுகள் செய்வது.
•    அமெரிக்காவுடன் இக்கேந்திர நிலைப்பாட்டிற்கான உடன்பாடுகளை உருவாக்குவது.
•    சீன-அமெரிக்க போட்டி இன்னமும் வல்லரசுப் போட்டிகளாக உருவாக போதிலும், அது இந்து சமுத்திரப் பிரதேசத்தில் என்றும் உருவாகிட முடியாது தடுத்திடுவது.
•    இந்திய-அமெரிக்க உறவு சர்சைக்குரியதாக இருந்த காலம் போய், அவை இழுபறிக்குரிய பாகமிடும் பிரச்சனையாக மாறியுள்ளமை.
•    சீனாவுடன் உள்ள கேந்திர போட்டிகளுக்கான வாயில் அதன் வடக்கு எல்லையாக மட்டுமே உள்ளமை. பாகிஸ்தானூடாக அவை வெளிப்பாடு காணமாட்டா என்ற நிலை.
•    சுற்றாடலிலுள்ள சகல நாடுகளுடனும் கேந்திர ரீதியிலான சர்ச்சைகள் குறைந்து கொண்டு போவது.
•    இஸ்லாமிய தீவிரவாதம், பயங்கரவாதம் பாரிய அளவில் வளர்ந்துள்ளமை, அவை பாகிஸ்தானை மையமாக இல்லாது, கூடிய அளவில் மத்திய கிழக்கிலிருந்து எழுவதாக உள்ளமை.

ravi-015. இன்றைய இந்தியாவின் நிலை
•    பொருளாதாரத்தில் பலம் கொண்டது.
•    மத்திய-அரசு ஸ்திரம் கண்டுள்ளது.
•    பிரிவினைவாதங்கள் குறைந்து போய் அவை மக்களது அடிப்படைத் தேவைகள் உடமைகள் உரிமைகள் சம்பந்தமானவையாக உருவாகி வருவது.
•    தமிழ்நாடு டெல்லியின் அங்கமாக மாறியுள்ளதுடன், பிரிவினைவாதங்களுக்கான தமிழ்-வாதங்கள் அற்றுப் போயுள்ளமை. ஆயினும், பொருளாதார பிராந்திய நிலைப்பாடுகளுக்கு தமிழ்நாடு இன்னமும் தமிழ்-வாதங்களைப் பாவிக்கத் தயாராக உள்ளமை.

6. அன்றைய ஸ்ரீ லங்கா
•    பொருளாதாரத்தில் பின்தங்கியது, சர்வதேச-சந்தையிலிருந்து அந்நியப்பட்டது.
•    காலனித்துவ கால ஏற்றுமதிப்  பொருட்களிலேயே அந்நியச் செலவாணிகளுக்குத் தங்கி இருந்தமை.
•    சமூக-பொருளாதார பிரச்சனைகள் உள்நாட்டு போர்களாக வடிவம் கண்டு கொண்டிருந்தமை.
•    சிறுபான்மை மக்களது அரசுடனான உடமைப் போராட்டம், தமிழரது போராட்டமாகவும், இறுதியில் புலிகளது தமிழீழப் போராகவும் மாற்றி அமைக்கப்பட்டுக் கொண்டிருந்த நிலை.
•    அரச பாதுகாப்புப் படை பலவீனமானதாகவும், தலைமையோ திசையோ திராணியோ அற்றதாக இருந்த நிலை.
•    கேந்திர ரீதியில் பிராந்திய பலவானாக என்றுமே இருக்கும் இந்தியாவைத் தாண்டி அமெரிக்காவின் தாக்கத்தை பிராந்தியத்திற்கு கொண்டுவர முனைந்தமை.

7. இன்றைய ஸ்ரீ லங்கா
•    பொருளாதாரத்தில் பின்தங்கியது, ஆனால் சர்வதேச சந்தையுள் அடங்கியது.
•    காலனித்துவகால ஏற்றுமதிப்  பொருட்கள் கணிசமான பங்கினை வகித்தாலும், மனித உழைப்பின் ஏற்றுமதியிலேயே கூடிய அளவு அந்நியச் செலாவணியை தங்கி உள்ளமை.
•    சமூக-பொருளாதார பிரச்சனைகள் உள்நாட்டு போர்களாக வடிவம் கண்டு கொண்டிருந்தமை.
•    சிறுபான்மை மக்களது அரசுடனான உடமைப் போராட்டம் திக்குத் திசை அற்றதாகவும் வெளிநாடுகளது பாவைனைப் பொருளாகவும் மட்டுமே மாறியுள்ளமை.
•    புலிகளது அழிப்புடன் இலங்கை அரசு எதுவாகினும் அதற்கு சிறுபான்மை மக்களிடமிருந்து பாரிய சவால் இருக்க முடியாது என்ற நிலைப்பாடு உருவாகி உள்ளமை.
•    அரச பாதுகாப்புப் படை சகல விதங்களிலும் பலம் வாய்ந்ததாகவும், அரசியல், பொருளாதார அமைப்புகள் நிர்வாகங்களில் ஈடுபட்டுள்ளதாகவும் உள்ள நிலை.
•    கேந்திர ரீதியில் பிராந்திய பலவானாக என்றுமே இருக்கும் இந்தியாவைத் சர்வதேச பலவான்களை பாவித்த சமநிலைக்கு கொண்டுவரும் முயற்சியில் உள்ளமை.

8. இன்றைய நெருக்கடி
•    இந்திய, அமெரிக்க கேந்திர நிலைப்பாடுகள்
•    இந்திய-பல்தேசிய வியாபார அமைப்புகளது அபிலாசைகள்
•    அமெரிக்க- பல்தேசிய வியாபார அமைப்புகளது அபிலாசைகள்
•    பொருளாதார ரீதியிலான பின்தங்கல், பாரிய கடன்கள்
•    சிறுபான்மை மக்களது அரசுடனான சர்ச்சைகளுக்கு தீர்வில்லாமை
•    அரசினை சட்டம்-ஒழுங்கு என சர்வதேசிய சந்தைக்கு ஏற்ப நடைமுறைக் கட்டுக்கு கொண்டுவர வேண்டிய சவால்.
•    தமிழீழப் போரின் இறுதிக்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள்.

9. உள்நாட்டுப் போர்களால் ஏற்பட்ட மாற்றங்கள்

•    ஜேவிபியின் இருகட்ட கிளர்ச்சி
◦    இந்தியா தனது பாதுகாப்பின் நிமிர்த்தம் தீவில் தலையீடு செய்திடும் ‘உரிமை’ என்பதற்கான முதற்கட்டம்.
◦    இந்திய அரசு – ஸ்ரீ லங்கா அரசு, இருநாட்டு இராணுவங்கள் என்பவற்கிடையேயான கேந்திர உறவுக்கான அடித்தளங்கள். (அரசு வேறு அரசாங்கம் வேறு!)
◦    ‘பயங்கரவாதம் ஒழிப்பு’ என்பதற்கான அதிக அளவிலான படுகொலைகளை நடத்திட அரசுக்கான ‘அதிகார உரிமையின்’ ஏற்பாட்டு.
◦    கொழும்பை மையாமாக்கிடும் அதிகாரச் செறிவு.
•    தமிழரது போராட்டம், புலிகளது போர்
•    போராளிகளுக்கு இந்தியப் பயிற்சி, இராணுவ உதவி என்பவற்றினூடாக “தனது தீவில் தலையிடும் பிராந்திய உரிமையை” தனக்கேற்றவாறு மாற்றி அமைத்துக் கொள்ள முடியும் என்பதை ஏற்படுத்தியமை.
•    இலங்கை அரசியல் சாசனம் கூட தனது கேந்திர திட்டங்களுள் அடங்கியது என்பதை ஏற்படுத்திய திம்புப் பேச்சுவார்த்தை. தீவு அரசியல் ரீதியில் பிரிக்க முடியாதது என்பதை ஏற்படுத்துவதற்கான முதல் அடி.
•    மீறினால், நேரடி பிரவேசத்திற்கு தயக்கம் இல்லை என்பதை ஊர்ஜிதம் செய்த இந்திய ஆகாயப் படையின் உணவு சரைகளின் வீச்சு, டெல்லிப் பேச்சு வார்த்தை, …. புலிகளுடன் நடத்திய போர்.
•    இலங்கை-இந்திய ஒப்பந்தம். அதில் இணைவுக் குறிப்புகளாக தமிழர்களது சர்ச்சை இருநாட்டு ஒப்பந்தங்களுக்கு உரித்தானமை. 13ம் சீர் திருத்தம் என்ற சம்பவம்.
•    உட்போரை முடிவுக்கு கொண்டுவர சர்வதேசிய முயற்சிக்கும் தான் தயார் என்பதை காட்டும் வகையில் அமைந்த இந்திய ஆசீர்வாதத்துடன் நடத்திய நோர்வே தலையீடு-புலிகளுக்கு வழங்கிய இறுதி வாய்ப்பு.
•    புலிகள் – ஸ்ரீ லங்கா MOU: சர்வதேசிய அரசில் + சட்ட ரீதியில் தனித்துவம் பெற்ற பிரதேசம் என்ற அங்கீகாரம்.
•    புலிகளது போரை முடிவுக்கு கொண்டுவர, அமெரிக்க சீன தலையீடுகளை அனுமதித்ததுடன், தானும் முன்னின்று ஸ்ரீ லங்காவிற்கு கொடுத்துதவிய உதவிகளால், புதிய இந்திய-அமெரிக்க கேந்திர உடன்பாடுகளின் ஊர்ஜிதம்.
•    புலிகளது அழிவுடன் தமிழரது ‘வலுவையும்’ ஒழித்துவிட அனுமதித்ததால், தமிழ் நாட்டு தமிழ்-தேசிய வாதங்களை இந்திய எல்லைகளுக்குள் அடக்கியமை, மத்திய அரசுடனான உடன்பாடுகளாக மாற்றியமை, உலகளாவிய தமிழ் தேசியவாதத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தமை.

பாகம் 3

தலைப்புடன் சம்பந்தப்பட்ட கேள்விகள்

1. 13ம் அரசியலமைப்புச் சீர் திருத்தம், இந்தியாவினதா? ஸ்ரீ லங்காவினதா?

2. நெருக்கடிகளிடையே ஏற்பட்டது என ஸ்ரீ லங்கா அரசு கூறும்போது, அக்கூற்று நெருக்கடி என்பதை ஊர்ஜிதம் செய்கிறதா அல்லது நெருக்கடியை இனிமேல் ஒரு போதும் இல்லாது செய்யப்போகிறோம் என்று தெரிவிக்கிறதா?

3. போர் முடிந்ததன் பின்னர் ஸ்ரீ லங்கா அரசு, சிறுபான்மை மக்களைக் குறித்து எவ்வகையான அரசியல் நடவடிக்கைகள், முடிவுகளைக் கொண்டுள்ளது?

0000000000000
ஆனி 2013

13th Amendment and Present Situation of Sri Lanka | Sri Lankan & Indian Governments | Sinhalese, Tamils & Muslims Political Leaders A Discussion in London at 29th June 2013

13th Amendment and Present Situation of Sri Lanka – Part A

13th Amendment and Present Situation of Sri Lanka – Part B (Tamil)

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment