Home » அனார் » அனார் கவிதைகள்

 
 

அனார் கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

இசை எனும் திராட்சை

சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில்
வெண்ணிறத் தூண்கள்
குகை வடிவில் இருந்த நீள் அறைக்குள்
குறைந்த ஒளியில் அமர்ந்திருக்குறோம்

ஆழ்ந்த நோவில்
சிவக்கும் திராட்சை உன்குரல்
மழையில் நடுங்குகின்ற
தனிச்சிவப்பான மாதுளம் பூக்களின் துடிதுடிப்பு

சிறிது தூரம் நீந்திச்சென்று
பின் அமைதியாய் உடைகின்ற நீர்க்குமிழிகள்

நீ பாடிக்கொண்டிருந்தாய் காதலின் ரகசியத்தை

ஆடை பறந்து குடை விரிய……
வெள்ளைக்காளான்கள் காற்றில் வளையமிட
“சூஃபிகள்“ நடனத்தில் சுற்றுகின்றனர்

“கஃவ்வா“ கிண்ணங்களில் நிரம்பியுள்ளது

நீ பாடுவதை நிறுத்துவதில்லை……

வலியைத் துளைத்து வெளியேறும்
சிவப்புநிற நாகம்
நீ பாடி முடிக்கையில்
சூரியனில் இறங்கும்……

௦௦௦

போகும் ரயில்

எனக்குள் கேட்கின்ற ரயிலில்
காலங்களின் வெளியே
பயணித்துக் கொண்டிருந்தேன்

வெள்ளைப் பேய்களும்…….. கரும் பூதங்களும் உலவும்
ஆகாயம்…. பூமிக்கிடையேயான தண்டவாளத்தில்

நிலைகொள்ளாது ஆடும்
பொன் மிளிர்வுத் தூவல்களில்
ரயில் பட்டுப்புழுவைப்போல் நீளுகிறது

ரயிலின் பெட்டிகள் அனைத்திலும்
பருவங்களின் பன்மைகளாய்…..
பல்வேறு உருவகங்கள் கொண்ட
நான் அமர்ந்திருக்கிறேன்

எங்கோவோர் திசையில் வைத்து
மறைந்த சூரியன்
பெட்டியில் வந்தமர்ந்துள்ளது

உலகம் இருளிலும்
நான் மாத்திரம் பட்டப்பகலிலும் பயணத்திலிருந்தேன்

அருகாமையில் இருந்த அனைத்தும்
தூரத்துக்கே போய்விடுகின்றன

புகைக் கோடுகளில்
பழுப்பு நிறத்தில்
பிரகாசமும் மங்கலுமான தடங்கள்

உள் நரம்புகளில்
ரயில் போகும் தடக்…. தடக்…. ஓசை
குளிரும் பனியின் வசியமாகக் கவியும் மேகப்பஞ்சு…..
ரயிலின் நினைவை தழுவுகின்றது

அந்த ராட்சதப்பூரான்
வெறும் பெட்டிகளையா ?
நிரப்பி விடப்பட்டவைகளையா இழுத்துச் செல்கிறது ?

௦௦௦௦௦௦

 

32 Comments

  1. நெடுதுயிலோன் says:

    அருமை… மிக நுட்பமான வரிகள் எழுதுங்கள் இன்னும் …இன்னும் …எழுதுங்கள்… இத்தளம் உங்களுக்கும், எங்களுக்குமான (வாசகர்) இணைப்பை மேலும் மேலும் இறுக்கும்.

  2. நந்தினி says:

    அனார் கவிதைகள் எப்போதுமே அற்புதமான தனித்தன்மையுடன் தமிழ்க்கவிதையின் நிகழ் எல்லைகளை உடைத்து அடுத்த பரிமாணத்திற்கு அழைத்துச் செல்பவை இந்த கவைதைக்ளுக்குள் இறங்கி விட்டு வெளியே வர முடியவில்லை

Post a Comment