* நபீல் – கவிதை
மானா மண்
———————
கூடையோடு மலர்களும் மனிதர்களும் இருந்தார்கள்
எல்லா மழைக்காலங்களிலும்
குடைகளோடு ஊசலாடியவர்கள்
பழக்கத்துக்கு மாறாகக்
குடைகளை வீசி எறிந்து விட்டு
மழை நீரில் மிதந்து விளையாடினார்கள்
உருண்ட வளையல்களும்
ஒரு கொத்துத் தாவணிகளும்
நீரின் மேலே
அலைந்து திரிந்தன
நுாரு மைல்களுக்கும்
அப்பாலிருந்து
வாழ்த்து மடல்கள்
நொண்டி நொண்டி வந்து
விரிந்து கொண்டிருந்தன
துள்ளு என்றால்
துள்ளின மீன்கள்
வெள்ளமும் நுரையுமாய்
சுருள் சுருளாய்
அலைகளுக்கடியில்
சூட்சும வார்த்தைகள்
கனிந்து கொட்டின
பதிலற்ற அற்ப வார்த்தைகளென்று
விழிகளை இறுக மூடினர்
கனவைப் பெரிய வலையாய் எண்ணி
முடித்தனர்
சூளையில் மண் சுட்டுச் சத்தமின்றி
வெளியேறும் கல்லை
கல்லில்லை என்றனர்
மழை பாறை ஓரமுள்ள
கருங்கல்லில் ஏறியது
அவர்களும் வாசனையோடு வாடியுதிரும்
மலர்களுமாக ஒரு ஓரத்தில்
விம்மும் முலைகள்போல் அசைந்தனர்
வெட்ட வெளியில் கடுகடுக்கும்
குத்துக் கல்லை நடுவானில்
பொடிசெய்து வீசும் பேய்க் காற்றில்
குடைந்து குடைந்து தாளமிடும் மழை நீரில்
பசை கழுவப்பட்ட மண்ணில்
பிடிமானம் இல்லாமல் போனதுபோல்
மரப்பலகைகளில் மானா மண் கொண்டு
எழுதப்பட்ட அவர்களும்
கழுவப்பட்டுப் போனார்கள்.
00000
18 Comments
oru pilai thiruththam- nuuru anpathu nooru anru vara vendum.
anathu kavithaiel oru pilai thiruththam- nuuru anpathu nooru anru vara vendum.