Home » இதழ் 14 » *மு.கோபி சரபோஜி- கவிதைகள்

 
 

*மு.கோபி சரபோஜி- கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

அவஸ்தையிலிருந்து மீளல்

—————————

மகளோடிருந்த தினப்பொழுதொன்றில்

திருகல் படாமல் கிடந்த

கீறலற்ற வெள்ளை காகிதத்தை

நான்காய் மடித்து பந்தாக்கியும்

எட்டாய் மடித்து விமானமாக்கியும்

பத்தாய் மடித்து பறவையாக்கியும் காட்டினேன்.

சிதறாப் புன்னகையோடு

என் விரல்களுக்குள் இருந்து தன் விரல்களுக்குள்

காகிதத்தை மாற்றிய மகள்

மடிப்புகளை நீக்கி மென்மையாய் நீவி

தன் தம்பியிடம் தந்து

அப்புறமா எடுத்துக்கலாம்…….இப்ப வச்சுக்கோ என்றாள்.

அவஸ்தையினின்று மீண்ட காகிதம்

எந்த சலனமுமின்றி தயாரானது

இன்னொரு அறையப்படலுக்கும், அதன் வழி உயிர்த்தெழலுக்கும்!

00000000

 

நினைவுகள் கழைந்த தருணம்

——————————

பெற்றோர்

மனைவி

பிள்ளைகள்

நண்பர்கள் – என

எல்லோருக்கும் ஏதோ ஒரு

நினைவுகளை தருபவனாகவே

துயில் கொண்டிருந்தான்.

 

விபரமறிந்து வந்த உறவினர்கள்

s-1“பொனத்த எப்ப தூக்குறாங்க?” என

விசாரிக்கும் வரை!

00000

 

மெளன பரிமாற்றம்

——————–

 

வர்ணங்களை பார்க்கும்பொழுதெல்லாம்

அகம் புரளும் உன் உணர்வுகளை

நீ பகிர்ந்து கொண்ட

சந்தோச தினமொன்றில்

ஏழு வர்ணத்தில் உள்ளாடைகளை

பரிசு பொதியாக்கி

உன் கைக்குள் திணித்தேன்.

 

அணைந்த பின்

அவிழ்த்தெறியும் ஆடை

ஏழு வர்ணத்தில் எதற்கென?

செல்லச் சிணுங்கலோடு வாங்கிக் கொண்டாய்.

 

பின்னொரு நாளில்

நீயும்,நானும்

வார்த்தைகளற்றவர்களான போது

உன் உணர்வுகளை

எனக்கு பரிமாற தொடங்கியிருந்தாய்

 

காற்றில் அசைந்தவாறே

வர்ணமற்று உலர்ந்து கொண்டிருக்கும்

உனது உள்ளாடை வாயிலாக!

000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment