Home » இதழ் 14 » *ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

 
 

*ஒன்றுகை – எஸ் நஸீறுதீன் (சிறுகதை)

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

 கலைஞர் லியாகத், (இந்தப் பெயரிலும் யாராவது எழுத்தாளர் இருந்தால், இது, எழுமாந்தமான தேர்ந்தெடுப்பு என்பதை ஏற்றுக் கொள்வீராக) சில நாட்களாக, ஒன்றுகை என்ற சொல்லின்மீது  மிரட்சியுறத் துவங்கியிருந்தார். ஒன்று – கை என்பதாக பிரித்து வைத்து, வேறேதும் தப்பர்த்தம் செய்துகொண்டு விடாதீர்கள். இது சேர்ந்தே வரும், அல்லது, போகும் அல்ல, போயே போய்விடும் ஒன்றுகைதான். நீங்கள்கூட எத்தனையோ கதை, கவிதைகளில் இந்த ஒன்றுகையைப் பார்த்ததாக நம்பிக் கொண்டிருப்பீர்கள். யாராவது விமர்சனப் பக்கமும் போயிருந்தால், ‘கதை, ஆமாம் இந்தக் கதை, அவர் அனுபவித்த சூழலுடன், நம்மையும் கைபிடித்துக் கூட்டிக் கொண்டுபோய், அந்த வாழ்விடத்தை விட்டும் அகலா வண்ணம், நம்மையும் ஒருத்தராக அங்கேயே, ,, ஒன்றுகை செய்துவிடுகிறது.என்பார்கள் அல்லவா?, ஆமாமாஅந்த ஒன்றுகை எனும் வார்த்தையின் மீதுதான் அவருக்குக் கோபம்  எழுந்திருந்தது. 

 

 

 
அவரிற்கு முன்னாக கரையில் உட்கார்ந்திருப்போர்க்கு தனது  காற்றில் தளும்பும் வாயில், வெள்ளைச் சிதறல் ஒற்றைப் பல்வரிசை மேலெழ, முன்வாசலின் வெள்ளைச் சேலை விரிப்பும், கால்கழுவிய மாப்பிள்ளை வரவேற்புமாக, யாருடைய உந்துதலுமின்றித் தானே எழுந்து, மடிந்து அலையலையாக, கரையுடன் ஒன்று சேரக் களிக்கும் பெருநீலக் கடல். எழும்பும் மேலலை, வாங்,, , சரிந்து மண் பணிதலின் போது,க. அவரின் அருகே மிகப் பக்கத்தில் அவன். அவனுக்கு , (பேரு? இன்னொரு கலைஞரின் பெயரா, அதைவிட அவனென்பதே போதுமானது,கதை நெடுக), அவரை எங்காவது சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்து விட்டால்வெறுமையை, கற்பனாதியை மெல்லும் வாய்க்குச், சீனி கிடைத்ததுபோல; அவரை  இலேசில் விட்டு விடுவதில்லை. கடைசியாக அவரை விட்டுப் பிரியும்போது, ‘நீங்கள் இதுவரை கேட்டுக்கொண்டிருந்தது, லியாகத்தினது தத்துவ முத்துக்கள்என்பான். இதை, அநேக கூட்டங்களின்போது, (வேறு வேறானதாயினும்,) பேச்சாளர்கள், ‘இத்துடன் விடை பெறுகிறேன்எனச் சொல்லி உட்காரமுதலே, அவரின் காதினுள் நபரின் பெயரைச் சொல்லிவிட்டுக்   கிசுகிசுத்திருக்கிறான். இன்றைக்கு அதையும் விட அபாரமாக அவரிடம் சூடு கிளப்பினான். அவனது ஆயுதம், இன்றைக்கு ஒன்றுகை. திடீரென அவரைக் கேட்டான்:  
உண்மையாகவே, உனக்கு ஒன்றுகை என்பது என்னவென்றாவது   தெரியுமா? ’.

 nas ima-02

 

 

அவர் அவனிடம், ஒன்றுகை என்றால், ஒன்றிப்பு என்பதுதானே?’ எனக் கேட்டார். அவன் அவரை ஒன்றும் பேசாமல் கொஞ்சநேரம் பார்த்திருந்தான். பிறகு ஆறுதலாக,‘ சரி அந்த ஒன்றிப்புக்கு ஏதாவது உதாரணம்?.’ ‘பிட்டின், தேங்காய்ப்பூவும், மாவும்போல.அவன், முகச் சுழிப்புடன் நெற்றி சுருக்க, அவசரமாக, ‘தேயிலையின்ர சாயமும் சீனியும்போலஎன்றார். இப்போது, சட்டென்று மெல்லிய புன்முறுவல் செய்தான். பின்னர்,   இஞ்ச  நீ காணும் அந்த ஒன்றிப்பு ஏதாவது சொல்லேன்என்றான். அவர் உடனேயேஅருகே பிளாஸ்டிக் பந்தில், எறிபந்து விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களைக் கைவிரலால் சுட்டியபடி,
அவர்கள் விளையாட்டில் ஒன்றித்துப் போய்விட்டார்கள்என்றார். அவன், இன்னும் தாங்க முடியாதவனாக , அடப் போப்பா, ஒன்றுகையென்பது அதில்லப்பா. அவங்களுக்குக் கடல் பயம் இருக்கு. நீ இப்ப யாரையாவது கூப்பிடு, அதுக்கும் பதில் சொல்வானுகள். இதுக்குள்ள வாயில ஐஸ்கிரீம் வேற. ஒரு குழந்தப்புள்ளட சந்தோசத்த, கோபத்த முழுக்கவாப் பார்த்திருக்கியா? மேலும் கீழும் குதிக்கிற கால்ல கோபம், கண்ணுல கோபம் ,மூக்குச் சிவந்து அதிலயும் கோபம், வாயில வார்த்தையும் குழறி, உடம்பு மொத்தமா துடிச்சிக் கோபமாவே அந்தப்பொழுதில இருப்பானி ல்லையா, அதுகள்ள சிரிப்பு ஒண்டே போதும்ண்டா ஒன்றுகைக்கு.
ஏதோ புதிசாச் சொல்ல வாறாய்ண்டு பார்த்தன்’. அப்படிண்டா ஒரு கதையல்ல நிஜம் சொல்றன் கேக்கிறியா?’ ‘என்னடாப்பா  அது?’
ஒராள். மெத்தப் பெரிய ஞானி. பேரே வாணாம், மனசில ஒவ்வாமையுடன் ஏன்தான் நடந்ததக் கேக்கணும். அவருட்ட இருந்த மாணவனின் தலையில், நீரால் முழுக்க நிரம்பிய குடம்வைத்து, ‘விழாவைச் சூழ்ந்திருக்கிற அத்தனை கடைகளையும் ஒரு சுற்றுச் சுற்றிவா. ஆனால், உள்ளிருக்கும் நீரில்  ஒருதுளி கூட  சிந்தக் கூடாதுஎனச் சொல்லியவர். அடுத்த மாணவரை அழைத்து, இவர் இங்கு வருமட்டும் இவரினை மேற்பார்வை செய்என அனுப்பின கதை உனக்குத் தெரியும்தானே?. வந்தவனிடம், கடைகள் எப்படி? என்று கேட்க, கடையெ எவன் பார்த்த, துளி நீர்கூடச் சிந்தாமப் பார்ப்பதில், கால் துவங்கி தலை மனசு கண்ணென்று அத்தனையும் இருந்தது, என்றானாம்.

 

 


அவரைப் பொறுத்தவரை ஊரையே மிதக்கவைத்த நீரெச்சத்தில் முளைத்த கரைந்தொதுங்கும் காளான்தான் இவன். கடலா, அப்படியாயின் கடல் ஜெல்லி. அகன்ற உடலின் வயிற்றின் ஓரமெங்கிலும் வாய்கள். அத்தனை வாயும் சேர்ந்து நட்ட நடுவே மிகப்பெரும் நீட்டமாக மேலெழும் தனித்த பெரும் ஜனநாயக வாய். யாரும், எதையும் பேசலாம் என நினைக்கும் துவாரம். அவனை விட்டுப் பிடிப்பதுதான் சரியானது. அவர், அவன், முதலில் கொட்டட்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார்.          அவர் முன்னரும் இதேபோல எழுது கையால் அல்லது பேசு வாயால் மரைக்காலளவு கொடுத்து, மீள சாக்களவில் வாங்கிக் கட்டிக் கொண்டவர்தான். ஆனால், யாரும் இந்த மாதிரி, அவன் சொல்லும் லியாகத்தினுடைய ஒன்றுகையில், கை வைத்ததில்லை. உணமையாகவே எழுதுபவன் சமூகத்தைச் சீர்தூக்கிப் பார்த்து, நேரிய நடையைச் சொல்பவனாகவும் இருக்க வேண்டுமென்று சொன்னதற்கு, இத்தனை ஆத்திரம் வந்திருக்க வேண்டாம்
எனக்கு, எழு, விழு  கிழமைக் கணக்கு, உனக்கு, நீ தெரிஞ்சதில இருந்து பார்த்தாலும், 52 தர 40 வாரங்கள் தாண்டி. உடலைக் கெட்டியாக்கி வைத்தபடி, காலின் கீழான நிலம், புல் பாராது, உயரே நீண்டு சிலிர்த்தாடும் பெருத்த மரம் தேடும், ஆதி யானைக்குணம் உங்களுடையது. உங்களுக்கெல்லாம் நிஜம் தரிசிக்க அவ்வளவு கூச்சம். உங்கள் எல்லாக் காவியங்களின் உச்சியில், கொஞ்சம் பேய்கள் அல்ல, சத்தியங்களையும், தத்துவங்களையும் உலாவ விட்டு, கண்ணை மூடிக்கொண்டு படிக்கச் சொல்கிறீர்கள். என்னமா அடம்பிடிச்சு, வானம் பார்த்துட்டே நடந்து அழிஞசு போயிடுறியள். நல்ல கூத்துத்தான் இது?’
    ‘
இப்ப என்னதான் சொல்றே நீ’. 

  ‘
கடலானானாலும், காடானாலும், முதலில் அந்தச் சூழலின் வெளியே நின்றுகொண்டு பார்த்ததைச் சொல்லாதே. அது எல்லாப் பயணிக்கும் வாய்ப்பது.  நீ அங்கு உன்னை உள்ளாக்கு, இழந்துபோ. மாறியபின் எழுத்திற்கு கொண்டு வா. அது எதுவோ, அது ஒன்றையே பார்.  புஷ்பாவானாலும் ஜெயிலிலுக்குப் போய்க் கேட்டுத்தான் எழுதினார். உன் எழுத்தில், எந்த ஒன்றுகையும்  இல்லையே. என்ன, வாசிப்பையே விட்டுட்டியா?. ’நான் இந்த மாதிரி ஒரு ஆளாக்கும்ன்ற  நினைப்பில உலாத்துற உனக்கு, தன்னைச் சுத்தி என்ன நடக்குது எனும் சொரணையே இல்லண்டா, எப்பிடி.?.’ என்று சொன்னதை, எந்தக்கஸ்டமும் படாதபடி, (விரலால் தலை தேய்ப்பும் இல்லாமலேயே)  நினைந்து நினைந்து மறுகினார். 

 


  
அவர் அடிக்கடி இந்த எழுத்தாளனாயிருப்பது, பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உளவியல் கற்பிக்கிற வேலைபோல என்பார். எப்போதும் புதிது புதிதாக இளவயதில் ஆட்கள் வந்துகொண்டே இருக்கும் களங்கள். அவர்களின்  வைரக்கற்கள், சேட்டைகள் அத்தனைக்கும்  காரணம் கண்டு பிடித்து, நியாய அநியாயம், செயலுக்குத் தக்கன தேடிக்கற்பிப்பவன், அவர்களுடன் ஆத்திரம் கொள்ளவே முடியாத நிலைமை. அதில் சில தீமைகளும் இருக்கத்தான் செய்யும். இவன் பொறாமையில் உளறுகிறான் எனவும் லியாகத்தால் எடுத்துக் கொள்ள முடியாமல் போனதற்கு, அவன், முத்தாய்ப்புச் சொல்லாகஇந்தா இதை வாசி. அப்பவாவது ஒன்றுகை  என்றால் என்னவென்றாவது பிடிபடுகிறதா என்றுபார்ப்போம்என்றதுதான் காரணம். 
 ‘
இருடா மகனே, அடுத்து வருவதைப் பார். அப்படியென்ன சித்துவிளையாட்டு அதில் வைத்திருக்கப் போகிறாய்?’
 
வார்த்தை வெளிவருமட்டும் நீதான் எஜமானன். வெளியானால், வார்த்தைக்கு அடிமையாகிவிடு.
சரி, நீங்களா, நானா ஒரு கை பார்த்து விடலாமா?’ என்றான். 
எப்படி?’
அடுத்த ஒருவருடத்துள், இருவரும் படைக்கிற முதல் படைப்பு, அப்படியாகப்பட்டதாகவே இருக்க வேண்டும். யாருடையது அதில் தேறுகிறது எனப் பார்ப்போம் 
 ‘
பார்ப்பமா?.சரி பார்த்துடுவம்
இதை மட்டிடுற ஆள் யாரு? இருவருக்கும் பரிச்சயமான அதி தீவிரப் பெரும் ஆளாயிருக்கட்டும், என்ன சரிதானே
அது நல்லதுதான். நீ, நாலுபேர எழுதிவா, நானும் நாலுபேர எழுதி வாறன். இரண்டுலயும் வாற ஆளாயிருக்கட்டும்’.
 ‘
டீல் 
டீல், ஓ கே 
அவனை விட்டுப் பிரிந்ததும், உட்கார்ந்து, உலாத்தி, படுத்து,சாய்ந்து, அவன் தந்த புத்தகத்துடன், ஒன்றிக்காமல் வாசிக்கத் துவங்கினார், துவங்கினார்; துவங்கிக்கொண்டே இருந்தார். ஏதோ சொல்வதாக, அல்லது எழுந்தமான வசனக்கோர்வையோ என்ற சந்தேகம் அவருக்கு வந்துவிட்டது. மீளவும், முதல் பக்கம் போனார். எழுத்துக்கூட்டி, நின்று, நிதானமாக, இப்போதும் ஒன்றாமல், வாசிக்கத் துவங்கினார். கொஞ்சம் துளியூண்டு பிடிபடுகிற மாதிரிப்பட, எப்பிடியும் இரு மாதங்கள் இந்த இருநூறு பக்கங்களுக்கும் தேவைப்படும் என்றுபட்டது. இதையெல்லாம் ரெயின்லையும் கொண்டுபோய் வாசிக்கிறவர்கள் மிகவும் விரைவானவர்களாகத்தான் இருக்க வேண்டும்?. அடுத்து வந்த கொஞ்ச நாள்கள், கறுப்புக்கு மேலாக வெள்ளையன்றி, இள நீலம் பூசிய ஒன்றுகையே  தஞ்சம் என சுற்றிய தலையையும் நேராக்கி வைத்துவாசித்து, வாசித்து,,,, ‘அப்பாடா, இதுக்கே நமக்கு இம்புட்டுத் தலையச் சுத்துதே, இதையே கட்டுக்கட்டா அலுமாரியில வைச்சிருக்கிறவங்களுக்கு எம்புட்டுச் சுத்தியிருக்கும்?’.

 

 


  
கடலுக்கு, அந்திப் பொழுதில் காற்றாடப் போன கணவன், நல்ல பெரிய பச்சைச் சூரை மீனுடன் ( நல்ல ருசிதான், ஆனால் படு கிரந்திச் சாமான். சூட்டைக் கிளப்பிட்றும்) வீட்டில் வந்திறங்கினால், மனைவி, திடீரென வந்து சேர்ந்த வேலையால், இரவைக்கு வைத்திருந்த பழைய மிஞ்சின கறியை என்ன செய்வது என நினைப்பெடுத்து குசினுக்குள் ஒரு நடை பழகுவாளே, (ஆம், அது ஒரு காலம்- இன்றைய சில வீடுகளில் ப்ரிட்ஜுக்கு மேலாக அதேமண் சட்டி வெச்சு, பூச்சாத்தியிருகிறார்கள். (மண்சட்டி, அன்ரிட அன்ரிக்ஸ், அடுத்தது பூவும் பிரெஷ்.)) அதுபோல அவரும், அவரின் அறையில், மனசளவில் வாடிய பூவாக பல மாத நாட்களாக அலைந்து பார்த்தார். நீயாகவே விரி, பற,,, பற,,. பரப்பை விளங்கிஎடு’. அல்லாஹ், பறக்கிற பறவைகளை நாமே தாங்குகிறோம் என்கிறான். சிறகே பறத்தலுக்குச் சுமைதான்.  சிறகில்லாத ஒன்றுகைப் பறப்பானால்,,, கடலும், நிலமும் தான் சரி. எனக்குத் தெரியும்: எனக்கும் தெரியும்’.  ‘இதையும் செய்தே பார்த்து விடுவது.உற்சாகமாக வெளியாகினார், இன்றைய கலப்பின லியாகத்.
    
இனிக் களம் அவசியம். நீரா, நிலமா? அவருக்குப் பிடித்துப்போன கிராமத்து நிலவன், கி. ரா. வழியில் சென்று பார்ப்பதுதான், தான் வாழ்ந்த சூழலுக்கு – (நீரில கண்டம்ண்டு நம்பிக், கடல் பக்கம் போகப் பயமோ பயம்) – சரிப்பட்டு வரும் என முடிவு செய்தார். மண்ணுடனான, அதிலும் சேறுடனான அவரின் பரம்பரை ஒன்றிப்பையும், கொஞ்சம் வயல்பாஷையையும்  (வேட்டிய,பாவாடைய இடுப்புல முடியாததை  ஞாபகப்படுத்தும் சொல்லாயிருந்தால் இன்னும் மவுசு)  கலந்தடிச்சி, வளர்த்தெடுத்து, வடிக்கிறேன் பார். இலக்கிய உலகமே, தனிமனித சுதந்திரமெனும் சிதைத்தலுக்கும் உள்ளால போய், அகமும் தாண்டிப் புனிதமான  உயிர்த்துவத்துடனான, நாம் யாபேரும்  உசத்திப் பிடித்திருக்கும், அந்த ஒன்றுகைக்கே உதாரணம் காட்டும் பின்,பின், பின்னால் வந்த  முக்கிய வரவு, இந்தச் சிறுகதைஎன்று சொல்லாமல் போய் விடுவாரோ?’.
   ‘
எடுக்கிறன், செய்வினைய!’.
சவால் விட்ட இளசை, ஆள் வைத்துக் கூப்பிட்டனுப்பினார்.

 

 


 ‘’
களம், இருவருக்கும் பொதுவானதாயிருக்கட்டும்’’. எதிரியைக்  கண்ணை விட்டும் தூரம் செல்ல விட்டு விடாதே.- என்னா அவதந்திரம்?.
   
இருவரும், சூழலுடன் அப்படியே முழுக்கக் கலந்து, ஒன்றித்துப்போய் வாழுகிற  வயல் வெளி மாந்தரின் பொழுதுகளை, (அவரின் நினைப்பை அவன் நம்பினான்) வயல் சார்ந்த கூலிகளுடன் கலந்து முழுக்கக் கண்டு பிடித்தபின், ஒன்றுகையைக் கண்டு பிடிப்பதாக முடிவு செய்தனர்.  
 
அவர்களின் ஊருக்கு அண்மித்த வயல்வெளியின் இப்பத்தைய பருவம், இளம் கன்றுகளாகி, காற்றில் இலைமுடியால் தலையசைத்து, கோலம் ஆடுகின்ற வயதுக் காலம். எல்லாக் கோலத்திலும் கண்ணனையே அழைத்துப், பால் நிறைத்த சரச ஒலி போலும், நாற்றுரசல் சுமந்த காற்று, முகம் நிறைக்கும். திமுறும் கதிர்கள், கவசமறுத்து, பால் பீச்சி, ஆடும்காற்றில் கலந்து விடுகிற தூதுவிடுதலும், வழங்கலைப் பெறவுமான அழகுசுமந்த குடலைப் பருவம். அரிசிக்கி, அரிசி வேறு சுவை. விளைநிலத்தின் சூழ் காற்றின் பால் வாசமும்தான். மலர்ந்தும் மலராத நடு இளரோஜா மொட்டுக்கள். அதனைப்  பிரியவொண்ணாமல், மலைக்கு மேலாக ஒளிபடிந்த கோடிவிரல்களை நீட்டி, ’போகட்டா, போய் வரவாஎனக் கண்ணீரில் முகம்தழும்பி, கையசைக்கும் சூரியனார் கண்டு, அந்திக் குளிரால் வயலுக்கு உடல் திமிறலெடுக்கும். மேகம் இந்தச் சேதிகேட்டு, வெட்கப்பட்டு, தன் செஞ்சாயம் பூசிய துப்பட்டாவைச் சற்றே விலத்திமறைத்திருந்த நிலவில், ஒளிரும் சூரியப்பூச்சின் பொன் சாயம் பூசிய மலர் முகம் காட்ட, பூமி, சூரியரை, ‘அப்ப சரி, போய் வாங்கோஎன அனுப்பி வைக்கும். சந்திரப் பார்வைக்குப், பசலை (சத்தியமாக ளை அல்ல) படியாப் பச்சை உடலை இருட்டுக்கு  நகர்த்தும் குமரிக் கன்றுகள். எங்கிருந்தோ வந்தேன்; வானுக்கும், பூமிக்குமான இடைச்சாதி நானென்பேன், அவரே போனப்புறம், நானென்ன கிழிக்கக் கிடக்கெனகூவியபடி  கூடடையக் கிளம்பி வருகிற பறவைக் கூட்டம். பார்க்க நல்ல அழகாத்தானிருக்கும். கல்லுக்குள் வாழும் தேரைக்கும் அவனே உணவூட்டுகிறான். ஆனாலும், சரியாக் காலுக்கடியில வளர்ந்து எழுகிற காளைகள் அல்ல,களைகள், காலை வாராது காக்க வேண்டிய டீன் ஏஜ் ஆக்கள். வல்லது, பிழைக்கும். மனிதன் ஒரே ஒருத்தனுக்கு அடிமையானாலும், மற்ற அத்தனையும் ஆளும் வல்லவன். அவனுக்காகவே அனைத்தும். ஆண்டவண்ட ஊரில, ஏண்டவன்ட சமர்த்து. அவனே எதிலும் தேர்ந்தேடுப்பவனாயிருக்கிறான். 
புடுங்குடா புல்ல’. ஆம், புல் புடுங்கு காலம் அது. 

 

 

 nas-ima

 


 ‘
முதலில் யாராவது வயல்காரனை சிநேகம் பண்ணிக்கொள்ள வேண்டும். அதிலும் நாலு எழுத்துத் தெரிந்தவனாயிருந்தால் வேலை சுளுவாயிருக்கும். 
யூனுவர்சிற்றி போனாலும், ஆர்வமா வயல் செய்றவன்- அதிலையும், பார்ட் டைம் இல்லாம, வயலையே முழு நேரத்தொழிலாச்  செய்பவனாயிருந்தால்  இன்னும் நல்லது..’.
அவர் தேடிக்கொண்டிருந்த மாதிரியே சேகு முகைதீன் வந்து வாய்த்தான். அவனால்தான், இன்னும் கிருமி நாசினி முகத்துக்குப் பூசாமல், புற்களைக் குனிந்து, நிமிர்ந்து புடுங்குகிற வேலையால்தான் நிலத்தை ஆண்டாண்டு காலங்கள் காவல் செய்ய முடியும் என நம்ப முடிகிறது. களையாயினும், கண்ணால் பார்த்த சாட்சி கொண்டு, தனியாக்கிக் களைந்து கொள்வதுதான், மிகப்பெரிய இருத்தல் என்கிறவன். மொத்தமாய கிருமிக் களையெடுப்பு, முதலாளிகளின்ர சுதந்திர உலகு மாதிரியாம். சாப்பிடுற சந்தோசத்தை இல்லாமல் ஆக்கி, சந்தேகப்ப்படும்படியுமா ஆக்கிட்டுதாம். அனைத்து நாற்றுக்களுக்கும் இப்ப மூணு இலைகள் கிளம்ப முன்னரே படா கிருமிவாசமாம்.அவர் அவனிடம், 
இதை வருடாந்திரக் கூட்டம் போட்டுச் சொல்லித் திரிவதுவே ஒரு பேஷன், அறிவு பூர்வமாப் பேசுறண்டு போச்சுஎன்றார்.

 

 


 
நகரத்தை விட்டும் தூரமாக வயல் வைத்திருந்த சேகுவிடம்தங்களிடையே ஏற்பட்டுப்போன சவாலை விபரித்துவிட்டு, திட்டத்தை முன் வைத்தனர். உதவி வேண்டுதல் எல்லாமில்லை. அதுதான் முதல்லயே  சொல்லிட்டம்ல, முக்கிய அதிதி. அதையும்விட அவரின் கூட்டாளி.
  ‘
எங்களையும் புல்லுப் புடுங்கிறாக்கள்ள, வாற மூணு நாளைக்கும் கலந்து விடணும. அதன் பிறகு நாங்கள் அவர்களுடன், என்ன அது, , ,, ஒன்றுகை  ஆயிடுவம்’.
 ‘
அட, அப்பறண்டிசுகள்எனச் சொல்லிவிட்டு கொஞ்சநேரம் விடாமல் சிரித்துக் கொண்டிருந்தான், சேகு முகைதீன். பின்னர் கூலிக்கார நாட்டாமையிடம், தொலைபேசியில், இருவரைத் தான் அழைத்து வருவதாகத் தெரியப்படுத்தினான்.
கூடவே வந்திருந்த காளை, அவனது துணிச்சலைப்(?) பாராட்டிவிட்டு, 
இது செலவு கூடிய விசயமில்லையா?. ஒரு போகத்துக்கு ஒரு மாதமாவது அதிகம் தேவைப்படுமேஎனக் கேட்டான்.
நட்டம் வராது, என்னதான் வளர்றதுக்கு, நோய்க்கு, களைக்கு என அசேதனம் போட்டு வளர்த்தாலும், அடுத்த போகம் ஸ்ரார்ட் பண்றப்ப, நாத்து நல்லதா இருந்தாகணும்ண்டு, மனிசண்ட புத்தில ஒட்டி வைச்சிருக்கு. நல்லாக் குட்டியடிச்சி, மணி மணியா, ஆதாயமாத்   தள்ளணும்ல’.இன்னும் அவன் சொன்னான்:
 ‘
அப்பயெல்லாம், இப்படியில்ல. வயலப் பார்த்துட்டு வாறன்டி எனப் போன புரிசன்மகரிபட சேப்ப்புலரிந்து காசை எடுத்து நீட்டிட்டே, ‘வயல் வெட்டியாச்சிஎனச் சொல்றகாலம், இது. நெல்லு வெட்ற மெசின் போட்டுல்லவா இப்ப வேலை நடக்குது. அதுல ஒண்டுக்கு, ரைம் பிரீயாம்ண்ட உடனேயே வெட்டிப் பச்சையாகவே (நிறை கூடும்ல) மில்லுல குடுத்துட்டு வந்துட்டன் எங்கானுகள். அது ஒரு காலம் இருந்திச்சி, ஒவ்வொரு வயல்காரனும், தனக்குத் தேவையான விதை நெல்லை எப்பவும் தன்ர  வயல்லையே வளர்த்தெடுத்தானுகள். இப்ப அது இல்லியா, நெத்துக்கு நம்மள்ட்டான், வருவாங்க. அப்ப, நான் வைக்கிறதுதாண்டி வில. அந்த நேரம் கடக்கதிரையில நான் உட்கார்ந்திருக்கிறத, நீ பார்க்கணுமே,,.’   
 
அவர், அவ்விடத்தை விட்டுக் காளை கழன்றபின்னும் சேகுவிடம் உட்கார்ந்திருந்தார். அவனைக் கேட்டார்:

 

 

 

 

புல்லுப் பிடுங்க வருபவர்களை ஏற்கெனவே தெரியுமா? அதில, கொஞ்சமாச்சும் இவனுகள் சொல்ற உச்சிலரிருந்து, தவறி விழுந்து வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடினாள் எனச் சொல்லும்படியாகயாரும் பெண்மணியிருக்குமா,?’
இருக்காள் மச்சான். அவள், ஊர்ப் பெரிய மரைக்கார்ற மகள்டா. எல்லாத்தையும் உதறிட்டு எவனை நம்பி வந்தாளோ, அவனே, அவளப் பிடிச்சி சவூதிக்கனுப்பினான். இங்க சொகுசா அவள் காசில வாழ்ந்தவன்ர மனைவி இருக்காள் மச்சான். சவூதி போய் அஞ்சு வருஷங்கள் கழிச்சு வந்து பார்த்தால், புருஷன் பெரும் சூதாடிக் குடிகாரன், வீட்டு உறுதி பேங்கில. அவனை அடியாம இன்னும் கூடவே வைச்சிருக்காள்ண்டா என்னா ஒன்றுகை என்று பாரேன். வங்கிக் கடனுக்காக அவள் இங்கு அவனோடச்  சேற்றில, நாளைக்கு சோடி போட்டு வருவாங்க, பாரன்,’. 
அவர், அடுத்த நாள் கண் ஞாடை மூலம் ஆட்களைக் காட்டும்படியும், ஊர்க்கார நாட்டாமை, சாரதி இருவரிடமும் ரகசியம் பேணும்படி (ஊருக்க யார்ட்டையும், முக்கிய அதிதி, புல்லுப் புடுங்குகிற சங்கதியை மூச்சு உட வேணாம்) சொல்லி வைஎனவும்  வேண்டிக் கொண்டு விடை பெற்றார். 
வீட்டுக்கு வந்ததும் அதற்குரிய உபகரணங்கள், உடுப்புக்கள் எல்லாம் தேடியெடுத்துவிட்டு, மனைவியிடம் மெல்ல விசயத்தைத் திறந்தார்.  
இல்ல, எது நமக்குத் தெரியுமோ அதப்பார்க்காம, இது எதுக்கு?’.

 

 

 

 


 
தமக்கு முன்னால் நேர்ந்துவிடப்பட்டிருக்கிற அந்த ஒரே ஒரு சொல்லுக்காய், மாதக்கணக்கில் பாடுபட்டு போட்டியென்று வெளிக்கிட்ட லியாகத்துக்கு, இவளிடம் முதலில் இருந்து துவங்கி, ஈரொண்டாண, அந்த   ஒன்றுகை பற்றி  புரியவைக்க முடியுமா என்ற சந்தேகமே(சரி, சரி, பழக்க தோசம் தான்), முதலில் எழுந்தது. அவரைப் பொறுத்தவரை, சுஜாதாவின் மனைவி பாவமோ இல்லையோ, சுஜாதா ரொம்பவும் பாவம். இவள் இந்த, ‘உற்சாப்புப் போட்டியைக் கேலி செய்யக்கூடும்என்ற எண்ணமே மிஞ்சியதால், ஒன்றும் பேசாமல் மௌனமானார். 
     
அவர்கள்இருவரும், அடுத்த நாள் அதிகாலையே ஊரில் இருந்து வெளிக்கிடுகிற மெசின் பெட்டியில் ஏறி உட்காராமல், நெடுந்தூரம் ஓட்டோவில் வந்துமெயின் வீதியை விட்டும் வயலுக்கு இறங்கும் மண் பாதையில் காத்திருந்தார்கள். அந்த ரி(T) வளைவு சந்தியில் ரீக்கடை ஒன்று இருந்தது. வாழைப்பழக் குலை முன்னால் தொங்கியது. அவருக்கு விருப்பமான ஞானக்கத்தாக்கள், மேசையில் இருந்த கண்ணாடிக் கதவிட்ட அலுமாரியில் இருந்தன. நிறையப் பாலப்பங்கள் அடுக்கப்பட்டிருந்தது. பசுமையான பாலின் கொதித்ததனால், காற்றில் அதன் வாசம் மேலெழுந்து, ஆசையூட்டியது. அவர், அவனுடன் கடைக்குள் நுழைந்ததும், தனது சிறுவாலுக்கு மேலாகப் போட்டிருந்த வார்ப்பட்டியிலிருந்து, சிறு நோட்டுப் புத்தகமெடுத்துக் குறிப்பெடுத்துக் கொண்டிருந்தார். அவன்,சோடி பாலப்பங்களை எடுத்து உண்டான். படுபாவி தூங்கப்போறானோ என்னமோஎன நினைத்தார். அவர் அவனுக்கும் சேர்த்து ரீ சொல்லிவிட்டு ஞானக்கத்தாவில் ஒன்றை ருசி பார்த்தார். ஆட்கள் மெல்ல மெல்ல வந்து சேர காலை ஆறரை ஆனது. நான்கு பெண்களும், ஐந்து ஆண்களும். அவர்களையும் சேர்த்து பதினொருபேர். கடைக்காரனின் அத்தனை பாலப்பங்களும் தீர்ந்து போயின. அவருக்கு, பாலப்பம் சக்தி வழங்கியாயிருக்குமோ என்று படத்துவங்கிற்று. கூலிக்கார நாட்டாமை, மோட்டார் சைக்கிளில் வந்து, கடைக்குப்பின்னால் அதனை வைத்துப் பூட்டியபின், கடைக் கணக்கை செட்டில் செய்தான். அவசரப்படுத்திக் கொண்டிருந்தான். எல்லோரும் மெசின் பெட்டிக்குள் ஏறி உட்கார்ந்தனர். 
  
அவரது வாழ்க்கையில் மெசின் பெட்டிக்குள் உட்கார்ந்தபடியான முதன் முதலான பயணம். மண் வீதியில் மேலும் கீழும் குலுக்கிப் போடப்போகிறதே எனப் பயந்து கொண்டே ஏறினார். டிரைவரின் இருப்பிடத்திற்குப் பின்னாக, பெட்டி துவங்குமிடத்தில் இரு மரச் சட்டங்களை சற்று மேலெழ அறைந்திருப்பார்கள். அதில் ஒன்றைச் சிக்கறையாகப் பிடித்தபடி, வெளிக்கு உட்காரும் தினுசில் உட்கார்ந்தார். அவர், டிரைவரிடம், ‘வாழ்க்கையின் ஓரத்துக்கே ஓடிய பெண்மணியைக் காட்டுமாறு சாடைசெய்து வேண்டினார். 
நீலச்சேலை கட்டிவந்திருந்தாள் அவரின் கதைநாயகி. அதுவும் அவருக்கு அருகாகவே உட்கார்ந்திருந்தாள். 

 

 

 


 
அவர், மெசின் ஒவ்வொரு முறையும் குலுங்கி எழும்பும் போதெல்லாம், உடல் சாய்ந்து போகாதபடி, கட்டையை இறுக்கிப் பிடிப்பதற்கு அரும்பாடு படவேண்டியிருந்தது. பெட்டி ஒருபுறம் சாய, அவர் தனது பிட்டத்தை  எதிர்த் திசைக்கு மாற்றித்  தள்ளிக்கொண்டே, காலால், பெட்டியுடன்  மரப்பட்டி சேருமிடத்திற்கு முட்டுக்கொடுத்து, கையால் சட்டத்தைச் சிக்கறையாக இறுக்கிப் பிடித்தபடி, வாயால், தம்பிடித்து,,. முதல் முறையே  அவர் பட்ட பாட்டைக் கண்டு மீதிப் பத்துப் பேரும் சிரிப்போ சிரிப்பென்று சிரித்தார்கள். அவர், மெசின் நேரானதும் மற்றவர்கள் எப்படி உட்கார்ந்திருக்கிறார்கள் என நோட்டமிட்டார். எல்லோரும் பெட்டியின் தட்டிக்கு முதுகை முட்டுக்கொடுத்து கால்களை நீள வாக்கில் நீட்டியிருந்தார்கள். பிட்டம் மட்டும் அகன்று பெட்டியின் அடியைப் பற்றியிருந்தது. ஒவ்வொரு குலுக்களுக்கும், வயிற்றிலிருந்து தலைவரையான பகுதியை, ‘ நீ எந்தப்பக்கம் வேணும்ன்றாயோ, அந்தப் பக்கமாகவே எடுத்துக்கோஎன ஒப்புக் கொடுத்து விட்டதுபோல ஒரு மடிந்தெழும்புகை. அதேநேரம், இருப்பிடத்தில் மட்டும் ஒரு வலிந்த  இறுக்கம். அவர்களுக்குப் பெரிய நாணற்கொடி நினைப்பு’.
  
அவர், அவர்கள் உட்காந்திருப்பது போலவே தன்னையும் உட்கார்த்திக் கொண்டார். அருகிலிருக்கும், நீலச்சேலையிடம் எப்படிப் பேச்சை ஆரம்பிப்பது என நீண்ட நேரமெடுத்து யோசித்துக் கொண்டிருக்கும்போது அவளே கேட்டாள்:
 ‘
நீங்க, புதிசா வேலைக்கு வாரீயளா?’    

 

 

 


 
சரியாப்போச்சு! இவளிடமே நமது ஜம்பம் எடுபடாதோ என்று சந்தேகப்பட்டார். தலையைப் பொதுவாக ஆட்டிவைத்தார். மெசின் தன்பாட்டில் ஓடிக்கொண்டிருந்தது. சகபாடியைத் தேடி கண்களைச் சுழட்டினார். தூக்கமும், விழிப்புமாக ஆடி அசைந்தபடி கதை கேட்டுக்கொண்டு வந்தான். வருடக்கணக்கான சிநேகிதம் தொடர்வது போல பேச்சும், சிரிப்பும், சிறு சிறு சச்சரவுமாக சந்தையொன்று நகர்ந்து போய்க்கொண்டிருப்பது போலிருந்தது. அவர் மட்டுமே அங்கு அந்நியமாயிருந்தார்.  திடீரென மெசின், வீதியின் ஓரமானது. ஒருத்தரும் இறங்கவில்லை.  நீலச் சேலைக்காரியின் கணவன், பாதி செருகிச் சிவந்த கண்ணும், தள்ளாட்டம் போடாத உடலுடனும் உள்ளே ஏறிவந்தான். அவன் சரியான இருப்பெடுத்து  உட்கார்ந்தானோ, இல்லையோ, மெசின் மீண்டும் ஓடத் துவங்கியது. அந்த சத்தத்தையும் மேவி, நீலச் சேலைக்காரி ஏறியவனை அறம்புறமாக வைய ஆரம்பித்து விட்டாள்.
 ‘
நீயெல்லாம் ஒரு மனிசனா? மனிசன உடு, ஒரு நல்ல தகப்பன் பாக்கிற வேலையா இது
உனக்கெல்லாம் பொஞ்சாதி, புள்ளையள் கேக்குதா?’
இரத்தம் உட்டுத் தேடின காசெல்லாம் இப்பிடிப் போட்டழிக்கியே,’
 
அவருக்கு, எழுத்து ஓடத் துவங்கப்பவே வில்லன், கதாநாயகனிடம்  அடிவாங்கி ஆரம்பிக்கிற சினிமாவைப் பார்க்கிற மாதிரி இருந்தது. அவருடன் வந்தவன், அவளை உசுப்பேற்றிக் கொண்டிருந்தான். 
 ‘
அதானே 
அவ, கேக்கிறது நியாயம் தானே.
அவவ வேலைக்குக் கூட்டி வந்ததே தப்பு, அதுக்குள்ள, உனக்கு இதுவும் கேக்குதா?’
அவர், அத்தனை ஆர்ப்பாட்டத்துக்கு இடையிலும், வண்டி குலுக்கி எடுத்ததையும் சமாளித்தபடி, இடுப்புப் பட்டியை அவிழ்த்து நோட் புக்கில், எழுதிக்கொண்ட வசனங்கள், இனிச் சில;
 
ஏச்சை வாங்கினவன் கண்கள் சிவந்து வளர்ந்ததே தவிர, வாயிலிருந்து ஒரு வார்த்தையும் கிளம்பவில்லை. மூச்சு மட்டும் புசு புசு வெனக் கிளம்ம்பி எழுந்தது. காற்றில் சாராயாவாடை  கலந்திருந்தது. எதிர்ப்பாட்டுப்பாட அவன் முனையாததால், அவள் மெல்ல மெல்ல ஓய்ந்து வந்தாள். எந்தப் படத்தின் கொலைகாரக்  கதாநாயகனும், கடைசிக் கட்டத்திலாவது அன்பு மயமானவன், கோபத்தை வென்றவன், ஏதாவது நமக்குத் தெரியாத விதி, பாதைகளையும் தந்து மன்னிப்பையும் அருளுபவன்எனப் பேர்வாங்குவது போலவே மன்னிப்புக் கொடுத்து விட்டுவிட்டாள்.  கொஞ்ச காலங்கள் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவன், அவளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அவனின் உள் தணலை அறியாத, அல்லது பொருட்படுத்தாத அவள்தன்னிடமிருந்த பார்சலை அவன் புறமாக நீட்டிக் கொண்டே சொன்னாள்:

 

 


 ‘
இந்தா, இதைத் தின்னு. வெறும் வயித்தோட வந்து, வயலோடச் சேர்ந்து நீயும் அங்க சாஞ்செழ வேணாம். இதைத் தின்னு, கொஞ்சமாச்சும் தெளியட்டும்.
(‘
ஆஹா, என்னா மாசாலம். உனக்கு கரிசனைப்பட்டெல்லாம் தரல்ல. உழைப்பக் கெடுத்துடாதஅழுத்தமா, அடிக்கோடிட்டுக் குறிக்கார், புக்குல.)
நாட்டாமை திடீரென அவளிடம்,
  ‘
ஆஹா, இந்தத் துரைக்குத்தானா, அங்க பார்சல் கணக்கு வந்தது. அதுசரி, கள்ளானாலும் கணவன், பு(f)ள்ளானாலும் புரிசன்லியாஎன்றான். உடனே அவளின் கணவன் வாந்தி எடுப்பதாக ஓங்களித்தான். வாந்திப் பாவனை ஒரே ஒரு முறைதான். நிறையப் பேர் சொல்லிக் கேட்டிருப்பானோ? பின்னர்எதுவும் பேசாதபடி, அவள் கொண்டு வந்திருந்த பாலப்பங்களையும், வாழைப்பழத்தையும் அனுபவித்து உண்டான். வாயினூடு எவுறை வெளியேறியது. (அவரு, அவளின் முகத்தில் நிம்மதியும் கண்டுக்கிட்டார்.)   

 

 


மெசின், வயல் பாதையினூடு மேலும் கீழுமாகத் தூக்கிப் போட்டு வந்து கடைசித் தரிப்பிடத்தை காலையை, வந்தடைந்தது. காலைக்கு, அழகிய தென்னை மரங்களும், மாமரங்களுமுமாகச் சூழ்ந்த வட்ட ஒழுங்கின் நடுவே இரண்டறை வீடும், தாழ்வாரமும், கிணறும், பெரும் படியும். கமுகு, வெற்றிலை, வெண்டி என்று அங்கும் பசுமை மயமான ஈரம் சுமந்த களம். என்ன இருந்தாலும், தேசிய சங்கமே வைத்து பொழுது போக்குவோர் எனச் சொல்ல ஒரு துணிச்சல் வேணும்தான். கொடுத்து வைத்த மீரான். எல்லோரும் அவசர அவசரமாக வேலைக்குரிய உடுப்புக்களை அணிந்தனர். அவரின் சகபாடி, வீட்டிற்குள் பாயுடன் போய்ப் பதுங்குவது தெரிந்தது. அமீரி (நாட்டாமையி) டம், பகல் சாப்பாட்டுக்கு மறக்காமல் எழுப்பி விடும்படி வேண்டிக் கொண்டான். 

 


   
அவர், வயலின் முதலாவது வரம்பில், ஒன்றித்துப் போய்ப் புல் புடுங்க துவங்கிய போதே, கையும் களவுமாகப் பிடிபட வேண்டியேற்பட்டுப் போயிற்று. அதற்கு, அவர் பற்றிய உண்மை தெரிந்த அமீர், அவருக்கு  வழங்கிய பெரும் மரியாதை (இதுவும், அவர்ரதான்; வாசிக்கிறவங்களே நாங்க விஷயமுள்ள ஆக்களாக்கும் எனத் தோரணையாகத் தெரிந்தால், வாசிக்கிறவங்களுக்கே எழுதுற ஆக்கள்ண்டா, எவ்ளோவ் பெரிய ஆக்களாயிருக்கணும்) ஒரு காரணம். 
  ‘
சேரு, அந்தத் துணியக் கால்ல சுத்திக்கட்டும்’.
 ‘
சேரு, அந்த மூலையிலிருந்து வரட்டும். அவர்ர புல்லையும் நான் கவர் பண்ணிக்கிறன்.
சேரே, சேரு நீங்க கேக்கப் போய்த்தான், இந்தக் கொடுமைய நான் பார்க்கவேண்டிக் கிடக்கு. காலைக்க கட்டில் இருக்கு, நான் கொண்டு வந்து போடுறன். தெம்பிலிக்கிக் கீழ பார்த்துட்டிருங்களன் சேர்’.
 ‘
பார்த்ததைச் சொல்லப்போய்த் தானேடா  இத்தனை பிரச்சினையும். முழுக்க ஒன்றிச்சுப் போகல்லியாம். தம்பிட ஒன்றுகைக்குண்டு  வந்த இடத்திலும் பார்த்திருக்கவா?’
இரெண்டாவது காரணம், அமீர் அவருக்குக் காட்டிய மரியாதையை விடப் பிரமாண்டமான பௌவியத்தை வயலுக்குக்  கொடுத்தது. வரம்புடன் சேர்ந்து நின்றவர்கள், புல்லைப் புடுங்கியபடி முன்னகர்ந்து கொண்டே செல்ல, அவர் ஆரம்பித்த இடத்திலேயே சில நிமிடங்கள் நின்றுகொண்டிருந்தார்.

 

 

 

 


   
வயலில் நாற்று நட முன்னர், கணுக்காளளவு நீரை வயலின் மேலாக நாலைந்து நாட்கள் பிடித்து வைப்பார்கள். மண் ஆழம்வரை இளகும். பிறகு, நன்கு ஆழ உழுவார்கள். நீரும், மண்ணும் சேர்ந்து தொம்பலாகி சேற்றுக் குணமெடுக்கும். விழுந்த நெல்மணிவித்துக்களை முழுங்கி, இடம் வழங்கி முளைக்கப் பண்ணும். சுரி மிகைத்த விளைநிலம்,  ‘இந்தா வயிற்றில இவன் முளைவேரால என்னமா உதைக்கான் பாருங்கஎன, யாரிடம் சொல்லியிருக்கும்?. முளைச்சது, பெரிய பிள்ளையாகி கதிரை வெளித் தெரியத் தள்ளுமட்டும், வளர் வாலிபப் பருவம். நிலத்தை ஏக ஈரலிப்பாகவே வைத்திருப்பார்கள். விட்டு விட்டு நீர் பாய்ச்சிக் கொண்டே இருப்பார்கள். என்ன செய்வது, எந்தவித ஆதாயமும் அப்போதைக்கு இல்லாத செலவுதான். கருக்கட்டத் தயார் நிலையாக, தங்கள் கதிர்களை நெஞ்சன்றி, தலைமேல் தாங்கியதைக் கண்ணால் கண்டவுடனேயே, நிலத்தைக் காயப் போட்டு, சூடு கிளப்பத் துவங்கி விடுவார்கள். இது, கொஞ்சம் சூடும், மிகை ஈரலிப்பும் சேர்ந்த ஆரம்ப பீரியட். மண்ணின் ஈரம், சாய்ந்தாடும் நாற்றின் இலைப்பரப்பால் காற்றுக்குக் கிடைக்காதுபோக, முத்தல் நாற்றின் மூச்சுக் காற்றில்,வெக்கை பறியும். எங்கள் பக்கம், கச்சான் காத்து, மச்சான் உரசிறாப் போலிருக்கு என்பார்கள். மேலே வெக்கை இருந்தாலும், அவருக்கு, எவ்வித அச்சமுமின்றி, சுரி நிலத்தில், அடுத்த எட்டை எடுத்து வைப்பது அச்சம் தருவதாயிருந்தது. மற்றயவர்கள் ஏற்கெனவே அவரை விட்டும் ஏழெட்டு எட்டுக்கள் கடந்திருந்தார்கள். அவர், அவர்கள் சென்ற வழியை, அவர்களின் கால்களின் பெயர்வை அவதானித்தார். அது ஒரு பாவோட்டம் என்று சொல்வது போன்ற வேகத்திலிருந்தது. ஒரு கால், நிலத்தில் மெதுவே ஊன்ற வருகிறபோதே, நெல்லைத் தடவுகிற மாதிரி, மறுகால், உரசிக் கொண்டே, மேலெழும்பி அடுத்த எட்டெடுக்கிறது. எந்த நாற்றும், காலால் அழுந்தப்பட்டு மிதிபட வாய்ப்பேயில்லை. அவருக்கு, இது தனக்குச் சரிப்பட்டு வருமா என்ற சந்தேகம் எழுந்தது. வயலின் அருகே வந்து நின்றதும், தாம் இப்போது எடுத்துவைக்கும் முதலாவது எட்டு, வலது காலால்தான் என்பதை நினைவுபடுத்தியவராக, ரொம்பவும் மரியாதையாக, ஒரு குத்து விளக்கு எரிந்து கொண்டு இருந்தால், சிறுவாலை தூக்கிக்கொண்டு எப்படிக் கடக்க முனைவாரோ அதுபோல, நாற்றுக்கும் மேலால் மெதுவாக, வலதுகாலைத்  தூக்கி வைக்க,,, முதலில் இருவர்தான் சிரித்தார்கள். அப்புறம்தான், மொத்த விளைநிலமே  கொல்லென்று சிரித்தது. ஊரெங்கும் பேர்பெற்ற திருடன் அம்புட்டான். அவரின் நல்ல காலம், அவன், காணவில்லை. காலைக்குள் தூங்கிக் கொண்டிருந்தான். 

 

 


நாட்டாமை, அவரைக் கூட்டிக்கொண்டு, வீட்டுக்குள் வந்தான். பின்னர், நீலச் சேலையை கூப்பிட்டெடுத்தான். சமையல், சிற்றுண்டிக்கு நியமனமானவளை புல்லுப் புடுங்க அனுப்பினான். நீலச் சேலையிடம், சமையல் வேலை இன்றைக்கு உன்னுடையது என்றான். அவன், அவளிடம் அவர் படும் பாட்டைத் தாங்க முடியாமல், ஏற்கெனவே சொல்லி வைத்திருக்க வேண்டும். அவள், அவரிடம் நேரடியாகவே வந்து, உங்களுக்கு, என்னப்பத்தி என்ன தெரிய வேணும்?’ என்றாள்.  
கிழிஞ்சிது ஒன்றுகை. இளசு குறட்டைவிட்டுத் தூங்க, குறிப்புப் புத்தகமும், நீலச்  சேலையுமாக அவரின் கதை விரிந்து எழுந்தது. சிறுகதைதான், ஆனால், கதையின் வளர்ச்சி,கடும் அசுர வேகம். நல்லகாலம், நெல்லுக்கும் வேகம், அதி சூடு வேண்டி, அவர் அதனை மூங்கில் காடுகளே எனக்குறிக்காமல்  விட்டது.
  
பகல் சாப்பாட்டுக்குள் இளசு எழுந்து விட்டான். அப்போது அவரால், கதையொன்று நோட்புக்கில் கிட்டத்தட்ட கோர்த்து முடித்தாயிற்று. அட கும்பகர்ணா? உங்கட, மாச்சல் ஊரறிந்ததுதான், அதுக்காகப் போட்டியென்று வந்த இடத்திலுமா?’ 

 

 


 
இரண்டு சகனையும் சூழ, ஆண்கள் வேறாகவும், பெண்கள் வேறாகவும் உண்டார்கள். அவன், இங்கால திண்டுக்கிட்டே, அவளுகள்ட்ட மேலதிகமா இறைச்சியும், பொரியலும், சுண்டலுமா வாங்கி வாங்கி  நல்லா அனுபவிச்சே உண்டான். உணவின், எந்தப்பகுதியில் பறக்கத் இருக்குதென்று நமக்குத் தெரியாது. கையை நல்லா வழிச்சி வழிச்சி நக்கியுண்டார்கள்.  
ரொம்பத் தேங்ஸ் ராத்தா, மூத்தப்பாமார் ஏன், முழங்கை உட்டுக் காலையில கரைச்சிருப்பாங்கண்டது இப்பான் விளங்குது. மச்சான் நீங்க உண்மையாகவே குடுத்து வெச்சாள் மச்சான். 
எவ்வளவு மச்சான் போட்டுப் பேசுகிறான். நல்ல கதைகாரன்தான் அவன். 
வேலண்டா வேல, அதுக்கேத்த சாப்பாடும், கடும் சாப்பாடு. கழிவே தங்கிடாதுல்ல. இப்ப எவன், பசிக்குச் சாப்பிடுறான், மணிக்கில்லியா நிரப்புறாணுகள்.
அமீர், உடலை ஒய்வுபடுத்திக் கொள்ள கொஞ்சநேரம்  வழங்கியிருந்தார். அவன் அவரைக் கேட்டான்: 
ஆமா, இதுல எது முந்தியது? பசி வைச்சி, அதற்கான உணவும் வைச்சி, அதத் தேடித் தட்டழிய மனுச ஆசையும் வைச்சி,,’     
        
அவன் அவரை ஓய்வெடுக்க விடமாட்டான் போலிருந்தது. தாழ்வாரத்தின் வெளியே நீலச் சேலை, சிக்கிலேட்டு(சிகரெற்) வாங்கக்  காசு கேட்ட அவளின் கணவனுக்கு மீளவும் ஏசிக் கொண்டிருந்தாள். அவனின் புது மச்சான்  இப்போதும் உம்மென்றுதான் இருந்தான். அவள், முந்தானையின் முடிச்சை அவிழ்த்தாள். இந்தா, இவ்வளவுதான் இந்த முடிச்சில உள்ள காசுஎன அவன் புறம் ஒரு சிவப்புத் தாளை வீசினாள். ஆனால், மீளவும் முடிச்சை இறுக்கிக் கட்டிக் கொண்டாள். அவனின் மச்சான் காலையிலிருந்த சைக்கிளை எடுத்துக்கொண்டு ஓடினான். (உடல்வழி இயங்கும் எந்த மாட்டுக்கும் கூச்ச நாச்சம் இராது. இல்லையென்றால், பிச்சையெடுக்கத் தயாரானவனாயிருக்கணும்.) அடைப்புக்கள், அதனுள் தத்துவங்கள் என்றெல்லாம் கோர்வை செய்தவருக்கு, ஒரே ஒரு கேள்வி மட்டுமே இன்னமும் தொக்கி நின்றது. 

 

 


 
அவள், வீட்ட பெயின்ற் அடிக்க வந்தவனோட ஓடிப்போனது, அவனுக்கும் சேர்த்து அரேபியாவுக்கு ஓடிப்போனது, அவளும் ஓட, ஓட, அதற்கேற்ப ஏமாற்றங்களை மட்டுமே இன்றுவரை பரிசளித்துக் கொண்டிருப்பவனை இன்னமும் எதற்குத்தான் அவளே சுமந்து கொள்கிறாள்?’ அவரின் மனதில் பாச்சா ரஜனி எழுந்து நின்று, ஏன், ஏன், ஏன்,,,எனக் கேட்டுக் கொண்டே இருந்தார். 
 
அவள், பின்னேரத்து தேயிலை தயாரிக்க தயாராகும்போது அவர் கேட்டார்:
 ‘
ஆமா, ஏன் இன்னமும் அவனைத் தாங்குகிறாய். உனது பாதுகாப்புக்காகவா?’
‘ 
நல்ல்ல கேள்வி, இது? இந்தச் சுற்று வட்டாரத்துக்கே தெரியும், நான், புரிசனில்லாம எத்தனையோ வருஷக்கணக்கான இரவுகளைக் கழித்தவண்டு. அவரெ நானென்ன தாங்குறது?. அவருக்கு வயசாயிட்ட மாதிரித் தெரியிறது உங்களுக்குத்தான். என்னில இண்டைக்கும், வீட்ட, சுவரில சாய்ஞ்சபடி, அந்த ஏணில பிரஷோட நிண்டவங்கதான், அவக. அந்த முகம்தான் படிஞ்சிபோச்சு. பொம்புளண்டாலெ, சொந்தப் பொண்டாட்டி, மகள்ள இருந்து, எல்லாரையுமே இளக்காரமாகவே பேசுற வீடு என்ர வீடு. முதன் முதல்ல, என்னை, என் வீட்டிலேயே நீங்க போட்ட ஆழு அவக’. அவர் கேட்க, குறித்துக் கொள்ள உற்சாகமானார்.

 

 


 ‘
அண்டைக்கு, முதலாளி வாப்பா, அவரை அதட்ராங்க. அடே,பெயின்ற் அடிக்கிற செரி, சூதனமா அடிக்கணும். கீழயல் கொட்டிடாதண்டு, அதுக்கு அவக, தயவு செஞ்சி இந்த மாதிரிப் பேசாதீங்க. நீங்க கொன்றேக்ட் குடுத்திட்டீங்கள். நாங்க, இன்னது செய்வது என்று, சம்பளத்திற்கு வேலைக்கு வந்திருப்பவர்கள்.வாப்பாவுக்கு, முகம் அப்படியே தொங்கிப் போச்சு.
அட, அப்புறம் என்னாச்சு?’ அவர் மேலும் தூண்டப்பட்டு, அவளை மேலும் உற்சாகப்படுத்தினார்.
எனக்கு, உலகத்தில இப்படியும் ஒரு மகிரம் நடக்குமாடாண்டாபோல இருந்திச்சி. அவகளுக்கு பெரிய நினைப்பு, சவால் எல்லாமே  இருந்திருக்கி. உழைச்சிட்டே  படிக்கிற வாலிபம், எவ்வளவு முன் யோசனையோட வேலைபார்க்கிறதாயிருக்கணும். வாழ்க்கையத் திட்டமிட்டுக்கிட்டே வாழ்ந்து முடிக்கப் போறன் என்பவர, எடுத்தேன், கவிழ்த்தேன் எனச் சட்டுண்டு  வா, வா வாழுவம்ண்டா,,, . அவரை  முழுக்கச் சிதைத்தது நானு,,’,விசும்பத் துவங்கியபடி மேலும் சொன்னாள்:
நல்லது கெட்டா, நாய்க்குதவாதுண்டு’ (இதைக் கவனமாக சேரிச் சொல்வழக்கின் பிரிப்பில் குறித்துக் கொண்டார்) சொல்லுவா. எப்படி அவகள  வெரட்டுவன். தெரியல்லியே. அவக எல்லாத்துக்கும் காரணம் வைச்சிருக்காக. நான், உட்டுப் போனதும் தாங்காமக் குடிச்சேன்டிண்டாங்க. அதான், நானு வந்துட்டனே என்றால், பழக்கத்தை உட முடியல்லடின்றாக’.
எல்லோரும் மீள மெசின் பெட்டியில் திரும்பிக்கொண்டிருந்தோம். வீதியை அண்மித்து ஓடிவரும் ஆற்றின் மடிப்பு விழும் இடத்தில்- அல்லது பிரதான வீதியை அண்மித்த குளியல் துறையில் நீலச் சேலையும், அவள் கணவனும் குளிக்க இறங்குகிறபோது, தானும் அவர்களுடன் குளித்துவிட்டு வீடு போவதாகச் சொல்லிவிட்டு அவன் இறங்க முற்பட, லியாகத், ‘அப்ப, நானும் வாறன்என்றபடி இறங்கினார்.

 

 

 

 


அவர் அவனிடம், ‘ இன்றைய நாளே எனக்குப் போதும். இனி நான் வரல்லஎன்றார். அதற்கு அவன், ‘ எனக்குத் தெரியும். அவ என்னிடமும் கதை வேணுமா எனக் கேட்டா. நான் மறுத்துட்டன்என்றான். அவர் எதுவும் பேசாமல் அவனையே பார்த்தார். அவன் மேலதிகமாக,
நாளைக்கு வந்தாலும் நான் இதைத்தான் செய்வன். உங்களுக்காகவே வந்தன்என்று சொன்னான். 
      
அவரும் அவனும் ஒரு புறமாகக் குளிக்க, கணவன் மனைவி இருவரும் சற்றே தூரமாக ஆளையாள் தண்ணீரால் அடித்தபடி முழுகிக் கொண்டிருந்தார்கள்.. ஆனால், அவர்கள் பேசுவதும், கெக்கிளம் கொட்டிச் சிரிப்பதுவும் இங்கேவரை கேட்டுக் கொண்டிருந்தது. அவன் அவரைவிட, அந்தப் பேச்சைக் கேட்பதிலேயே கவனம் செலுத்துவது போலிருந்தது. மெல்ல மெல்லக் கால்களால் உந்தி, உந்தி, திடீர் ராத்தாவுக்கு அருகாகி நின்றிருந்தான். அவர், ‘நல்ல ஒன்றுகைதான் தேடுகிறான் போலிருக்கிறதுஎன தனக்குள் சொல்லிக்கொண்டார்.  அவன், நீலச் சேலையின் கணவனிடம் வயலிலேயே நல்ல நெருக்கமாகி, மச்சினனாகவே ஆகி  விட்டிருந்தான். குளித்து முடிந்து ஆண்கள் கரையேறினார்கள். சேலையின் கணவன், அவனைப் பார்த்து,
மாலையில் முழுகும் பெண்களின் கணவர்கள் கொடுத்து வைத்தவர்கள். என்னவள் எத்தனை உற்சாகம் பூசி எழுகிறாள் என்று அங்கே பார்’. என்று, அவர்களின் பின்னாக, கூந்தல் பிழிந்து நீரிறக்கிய படி கரையேறிவரும்  அவளைக் காட்டினான். அவள், ‘உனக்கு,இருக்கு, இர்ரா வாறன்என அவனை விரசியபடி முன்னேறி வந்து கொண்டிருந்தாள். அவன் பயந்தவன் போல பாவனை செய்துகொண்டு, அவர்களைவிட்டும் முன்னே  ஓடிக்கொண்டிருந்தான். அவளும் அவர்களைக் கடந்து விரசினாள். இருவரும், லியாகத்துக்கும், அவனுக்கும் அப்பால் தூரத்தில் சேர்ந்தே போனார்கள். பஸ் பிடித்து ஊர் வந்தார்கள். 
                
அவரின் மனைவிக்கு ஒரே நாளில் புல்லுப்புடுங்கல் முடிந்து போனதில் ஏகப்பட்ட சந்தோசம். அதிதி, புல்லுப் புடுங்குகிறார்எனும் செய்தி ஊரில் கசியும் வாய்ப்பு, இதனால் குறைய வாய்ப்புண்டு, அவளின் மானம் மருவாதி கொஞ்சமேனும் காப்பாற்றப்படக் கூடும் என்று நம்பினாள்.
   
கதையை பத்து வாரங்களுக்குள் இருவரும் எழுதி முடித்தனர். நடுவர் இரு கதைகளும் கிடைக்கப் பெற்றதாக உறுதிப்படுத்திக் கடிதம் அனுப்பி வைத்தார். மேலும் இரு மாதங்கள் கடந்த நிலையில், ஒரு சனி பிற்பகல், இருவரையும் வீட்டுக்கு அழைத்திருந்தார். போனார்கள். 
அவர், முதலில் கதை பற்றிப் பேச்சு எதையும் ஆரம்பிக்கவில்லை. பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்று இரவு அவரின் வீட்டில் சாப்பிட்டு விட்டுச் செல்ல வற்புறுத்தினார். ஒப்புக் கொண்டார்கள். 
பகல் என்ன சாப்பாடு உங்க வீட்டில
முட்டையும் பருப்பும்
நல்லது, உங்கட வீட்ட
ஆடும், பாலாணமும்

 


ச்சா, நல்ல கனக்ஸன் அது. பிழையா நினைக்க வேண்டாம். என்ன சமைக்கலாம் என்பதற்காகத்தான்.
அதுவும் சரிதானே.
அது, சரிதான், ஆனால், கி. ரா., சுரியும் சேர்ந்ததுதான் காமம்ண்டு சொன்னண்டு, நீங்க ரெண்டுபேருமே கதை அடுக்கிகியிருக்கிங்களே,, எப்பிடி இரண்டு பேருக்கும் ஒரே மாதிரி,,,,’
இரண்டு பேருமே ஒன்றாக, ‘என்ன அவருமா?’ என்றார்கள்.
அவர், சிறுகதையை மாற்றிக் கொடுத்துவிட்டு, படித்துப் பாருங்கள் என்றார்.
 
அவன், கதையில் எத்தகைய புனைவு, திருத்தமுமில்லை. அவன் வயலில் முழிப்புடனிருந்த இரு சந்தர்ப்பங்களையும் (குடிகாரப் புருசனைக் காலையில் வைதது, அந்தியில் இருவரும் ஊடல் பண்ணி ஆத்தோரம் குளிச்சதையும் கோர்த்திருந்தான். (ஆற்றோரம், Tரி சந்தியின்ர மூலையில  இருந்த கடைக்காரன்தான் அவனின் கதை சொல்லி.)  எழுதிய விரல்கள், காலை ஏச்சு, அந்தியின் குளியல் சரசம் கலந்து பாலாணமே ஓடவிட்டிருந்தன. கையின் மொத்த விரல்களையும், வாயில் விட்டு சூப்பியிருப்பான் போலும். அவள், வயலின் சுரியைக் களைய உரசி உரசித் தேய்க்கிற போதெல்லாம், புருஷன் கத்துகிறானாம்:
 ‘
அடியே,இஞ்சபோறசுரியாடி அது?’.
அவரின் கதையினது, நீலச் சேலைக்காரி, விளைநிலமாகிதம்பால் நீர் சுமந்த சுரி போன்ற நிலையிலேயே, கண்ணீர் சுமந்தவளாகி நிற்பது காணீர் என்று, கரைந்துருகிச் சோகமயமாகக் காட்சிதந்தாள். நாஆங்கள் சேற்றிலே கால் வைக்காவிட்டால், நீங்கள் சோற்றிலே கைவைக்க முடியாதுஎன்பது போலவே, நீர் சுமந்த விளை நிலமே, மொத்தப் பூமியின், உயிரின் மகாத்மியம் என்று பெரும் கதை செய்திருந்தார்.   
 
சாப்பாட்டுக்கு அழைத்துப் போனார். அங்கு மேசையில் கறிகளாக, முட்டை சேர்ந்த பருப்பு, ஆட்டுக்கறிக் குழம்பு, இவையும் போதாமல் பாலாணமும்.அப்ப முந்திக் கேட்டதெல்லாம் எதுக்கு?.என்னடா இது, எனும் கேள்வியுடனேயே சாப்பிட்டார்கள். ஆனாலும் அருமையான சாப்பாடு. செம ருசி. சாப்பிட்டு முடித்ததும், அவரே அவர்களிடம்,
நீங்கள் பகலில் உண்ட அதே கறிகள்தான். ஆனால், ருசி வேறு. படையல யாராவது இன்னொருத்தருக்கு ருசியாயிருக்கணும் எனும் நினைப்பே இல்லாமையா செய்வாங்க. அதாலதான் சொல்றன், என் தீர்ப்பு எப்படி உங்களுக்குச் சரிவரும்.
 
அதுவும் சரிதான். தான், எல்லாக் காலங்களிலும் உண்மையான  நடுநிலையாளராகவே நின்று கொண்டிருக்கிறோம் என்ற திருப்தி அவருக்கும் முக்கியம். ஆமாம், இந்த ஒன்றுகை, எந்தக் காலத்திலும்   முடிந்து( ஏ,,,, எழுத்தத் திருத்து, முனாவல்ல மானா) போகப் போகிற ஒன்றில்லைதான்.

 

 

0000000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment