Home » இதழ் 14 » *வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

 

*வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்??

 

 

வண. சோபித தேரர் அவர்கள் கடந்த வாரம் தினக்குரல் பத்திரிகைக்கு ஒரு விரிவான நேர்காணல் வழங்கி இருந்தார். அந்த நேர்காணல் தொடர்பான விடயங்கள்   colombotelegraph.com உட்பட பல இணையத்தளங்களிலும் , சிங்கள , ஆங்கில ஊடகங்களிலும்  வருவதுடன் பல்வேறு வாதப்பிரதிவாதங்களையும் , எதிர்பார்ப்பினையும் ,அரசியல் வட்டாரங்களில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவை தொடர்பான கருத்துக்களை இங்கு தொகுத்துள்ளதுடன், வண. சோபித தேரர் அவர்களின் முழு நேர்காணலும் , தமிழ்சூழலின் கருத்துக்களை அறிந்து கொள்வதற்காக இங்கு பதிவேற்றப்படுகிறது.  உங்கள் கருத்துக்களை தெரிவியுங்கள் (ஆசிரியர் குழு)

 

முன்வைக்கப்படும் கருத்துக்கள்/ விமர்சனங்கள்

———————————————–

இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகப் பெரும் திருப்புமுனை என வர்ணிக்கப்படும் அரசியல் வரலாறு தற்போது ஆரம்பித்துள்ளது.

 ஆளும் மகிந்த அரசு நாட்டின் எதிர்காலத்தை மிகவும் மோசமான நிலைக்கு எடுத்துச் செல்வதை தடுக்க வேண்டும் என்ற உணர்வு ஒரு பிரிவு மக்களிடையே தற்போது வெகுவாக வேர்விட்டு வருகிறது..

CIMG3256நாட்டில் ஜனநாயகம் கேள்விக்குறியாக்கப்பட்டு அரச கட்டுமானம் ராணுவ மயமாக்கலுக்குள் தள்ளப்பட்டு வருகின்ற பின்னணியில் ஆளும் அரசாங்கம் ஓர் குழுவின் கட்டுப்பாட்டிற்குள் சென்று குடும்ப ஆட்சி என்ற வரையறைக்குள் சென்றுள்ளது.இதனை தடுத்து நிறுத்த வேண்டும்.

 இதற்கான பிரதான காரணம் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையே என்பது தெளிவாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதி ஆட்சியை முற்றாக ஒழிப்பது பிரதான தேவையாக உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தை யார் மேற்கொள்வது? அதற்கு ஒருவர் பகிரங்கமாக முன்வந்தால் நாம் ஆதரவு வழங்குதல் வேண்டும்.

 ஐ தே கட்சிக்குள் காணப்படும் உள் முரண்பாடுகளும்அதன் தலைவர் ரணில் விக்ரமசிங்கா அவர்களின் ஆளுமை தொடர்பாக எழுப்பப்படும் சந்தேகங்களும் ஐ தே கட்சி சார்பில் ஜனாதிபதி அபேட்சகரை நியமிப்பதும் அவர் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகளும் மிகக் குறைவாக இருப்பதாக பலராலும் நம்பப்படுகிறது.

 

 மகிந்த ராஜபக்ஸ அவர்களைத் தோற்கடிக்க வேண்டுமெனில் இலங்கையின் அனைத்து சமூகங்களின் முழுமையான நம்பிக்கையை பெற்ற ஒருவர் போட்டியில் இறங்கினால் மட்டுமே அது சாத்திமாகும். யார் அவர்? வண. சோபித தேரர்இதற்குப் பொருத்தமானவாரா?

 

கடந்த கால தேர்தல்களில் ஐ தே கட்சிக்கு கிடைத்த வாக்குகளை அவதானிக்கும்போது சுமார் 30 சதவீத வாக்குகள் தொடர்ச்சியாக அக் கட்சிக்கு கிடைத்துள்ளது அவதானிக்கப்பட்டுள்ளது. அவ்வாக்கு வங்கியும் நாளுக்கு நாள் சிதைவடைகிறது . சிறுபான்மை சமூகங்களின் அமோக ஆதரவுடன்ஐ தே கட்சியின் 30 சதவீத ஆதரவையம் கூட்டி சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் கணிசமான வாக்ககளைப் பிரித்தால் பலமான வெற்றியை ஒருவர் பெற்றுக்கொள்ள முடியும். இவற்றைச் சாதிக்கக்கூடிய ஒருவராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயகா அவர்களே உள்ளதாக பலரும் அபிப்பிராயப்படுகின்றனர்.

ஆனால் சந்திரிகா அவர்கள் தான் அரசியலிற்கு வரப்போவதில்லை என தொடர்ந்து தெரிவித்து வருவது பலருக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் காத்திரமான பிளவினை அவரால் மட்டுமே ஏற்படுத்த முடியும் என்பது பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று. ஆனால் அவர் அரசியலிலிருந்து விலகி இருக்கப்போவதாக தொடர்ந்து தெரிவிப்பதால் மாற்று ஒருவரை தேடுவது அவசியமாகி உள்ளது.

 தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஓர் அமைப்பை நிறுவி தொடர்ந்து செயற்பட்டு வரும் கோட்டே நாக விகாரையின் பிரதம விகாராதிபதி வண. சோபித தேரர் அவர்களே பொருத்தமானவர் என்ற அபிப்பிராயம் பலரின் மத்தியிலே எழுந்துள்ளது.

வண. சோபித தேரர் அவர்களை ஜனாதிபதி தேர்தலில் ஓர் குறிப்பிட்ட நோக்கத்தினை நிறைவேற்றுவதற்காக நிறுத்துவதற்கு யோசனை தெரிவிக்கப்படுகிறது. அதாவது அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றதும் ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு கையளிக்க வேண்டும். ஜனாதிபதி தற்போதுள்ள பாராளுமன்றத்தைக் கலைத்து புதிய தேர்தலுக்கு உத்தரவிடவேண்டும். புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய அரசியல் அமைப்பு ஒன்றினை வரைந்து அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற வேண்டும். இவ் அரசியல் அமைப்பு ஜனாதிபதி பதவியை நீக்கிய ஒன்றாகவும், பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்கள் வழங்கும் ஒன்றாகவும் அமையும். இதற்கான மாதிரி அரசியல் அமைப்பு ஏற்கெனவே அரசியல் அமைப்பு நிபுணர்களால் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

 வண. சோபித தேரர் அவர்கள் தெரிவு செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குள் புதிய அரசியல் அமைப்பு செயலுக்கு வரும் வகையில் செயற்படுவார். புதிய பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டு அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவி ஒழிக்கப்பட்டதும் அவர் பதவியிலிருந்து தாமாக விலகுவார். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வண. சோபித தேரர் அவர்கள் ஓர் குறிப்பிட்ட நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே போட்டியிடுவார். அதாவது ஒற்றைப் பரிமாணமுள்ள நோக்கில் அவரது போட்டி அமையும்.நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சியை ஒழித்து பாராளுமன்றத்திற்கு அதிக அதிகாரங்களை வழங்கும் புதிய அரசியல் அமைப்பை செயற்படுத்துவதோடு அவரது பதவிக் காலம் முடிவுபெறும். இது  முக்கிய விடயம்.

exacutive

 முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அவர்கள் இத் தேர்தலில் போட்டியிட்டால் பல மாற்றங்கள் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் தொடர்ந்து நிராகரித்து வருவதால் வண. சோபித தேரர் அவர்கள்  தாமாக முன் வந்து மிகப் பகிரங்கமாகவே இச் சவாலை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.இவ்வாறான சூழலில்எதிர்காலத்தில் இத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி அல்லது முன்னாள் நீதியரசர் போட்டியிட முன்வருவார்கள் எனில் தாம் அப் போட்டியிலிருந்து மகிழ்ச்சியோடு விலகுவதாக தெரிவித்துள்ளார். ஒரு சரியான மாற்று இல்லாதால்தான் அவர் இந்த பொறுப்பினை எடுக்க முன் வந்துள்ளார்.

மகிந்த அரசுக்குள் மிக அதிக அளவிலான உள் முரண்பாடுகளும்பிரதமரே ஜனாதிபதிக்கு எதிராக செயற்படுவதாகவும்கருத்துக்கள் வந்து கொண்டிருக்கின்றன.சிரேஷ்ட அமைச்சர்கள் பலர் அதிருப்தி  நிலையில்  இருப்பது அடிக்கடி வெளிப்படுகிறது./

சர்வதேச சமூகத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் போர்க்குற்றம் தொடர்பாக வண. சோபித தேரர் அவர்கள்  கருத்துக்கள் பலரை ஆச்சரியத்திற்குள் தள்ளியுள்ளன. நாட்டின் எதிர்காலம் எவ்வாறு இருக்கப் போகிறது?

 ஜனாதிபதி தேர்தலில் தாம் போட்டியிடப் போகும் அறிவித்தலை மேற்கொள்ள தமிழ் பத்திரிகையை தேர்ந்தெடுத்தமை குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால் இந்த விபரங்கள் ஏற்கெனவே பல மாதங்களுக்கு முன்னர் வந்த போதிலும் வண. சோபித தேரர் போட்டியிட வேண்டும் என்ற வேண்டுகோள்களே கடந்த காலங்களில் காணப்பட்டன. ஆனால் முதல் தடவையாக தமிழ்ப் பத்திரிகை வாயிலாக அவரது விருப்பம் வெளியிடப்பட்டது.இது அரசியல் நோக்கம் கொண்டதுஎன சொல்லப்படிகிறது. அத்துடன் புலிகள் இதற்குப் பின்னால் இருக்கலாம் எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது. ஒரு பகுதியினர் இப் பௌத்த பிக்குவை புலிகளின் ஆதரவாளர் எனப் பட்டங்கட்டி அவரது நோக்கங்களை கிண்டலடிக்கிறார்கள் .

இவரும் அடுத்த சரத் பொன்சேகா எனவும், இவர் பலமான அடி வாங்குவது உறுதி எனவும் கருத்துகள் வைக்கப்படுவதுடன், மகிந்த ராஜபக்சவின் அரசை இன்றைய நிலையில் யாராலும் அசைக்க முடியாது எனவும் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகிறது.

போரை நடத்திய சரத் பொன்சேகா அவர்களை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரித்த தமிழ் மக்கள் பௌத்த துறவியை மகிந்த ஆட்சியை அகற்றவதற்காக ஆதரிப்பது சாத்தியமே என்ற கருத்துக்கள் எழுந்துள்ளன.

 வண. சோபித தேரர் அவர்களின் இந்த அறிவித்தல் பல தரப்பினருக்கு சவாலாக மாறியுள்ளதாக கருதப்படுகிறது. குறிப்பாக மகிந்த ஆட்சியை அகற்றவேண்டுமெனக் கூறி வரும் ஐ தே கட்சிஜே வி பி  தமிழர் தேசிய கூட்டமைப்பு போன்ற கட்சிகள் இந்த ஒற்றை நோக்கத்தில் போட்டியிடவுள்ள அபேட்சகர் குறித்து தமது கருத்துகளை வெளியிடவேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளார்கள். இனிமேல் பேசிப் பயனில்லை. செயலில் இறங்க வேண்டும். இதோ நான் போட்டியிடத் தயாராக உள்ளேன். எனது நிலைப்பாடு இதுதான். ஆதரிக்கத் தயாரா? அதுமட்டுமல்ல அரசாங்கத்தின் அங்கமாக உள்ள இடதுசாரிக் கட்சிகள் நிலையும் சிக்கலாகியுள்ளது. மகிந்த ராஜபக்ஸ அவர்கள் ஜனாதிபதி தேர்தலை அறிவிப்பதற்கு முன்பதாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறையை அவரே கலைக்க வேண்டும். இல்லையேல் அதனை அகற்றும் நிகழ்ச்சி நிரலுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என ஏற்கெனவே எச்சரிக்கைகள் விடப்பட்டிருந்தன.

 இந்த நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து சந்திரிகா அவர்கள் இவ்வாறான வாக்குறுதிகளைக் கொடுத்து ஏமாற்றினார். தற்போது காவி உடையை நம்ப வேண்டுமா? எனவும்சிங்கள வாக்காளர்களுக்கு தனது எண்ணங்களை மறைக்கவும் தமிழர்களை ஏமாற்றவும் தமிழ்ப் பத்திரிகையை தேர்ந்தெடுத்துள்ளார் எனவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. புத்த மதத்திற்கு எதிரானவர்கள் பௌத்த பிக்குவை ஆதரிப்பதன் மூலம் தமது பழிவாங்கலை மேற்கொள்ள இது ஒரு சந்தர்ப்பம் எனவும் இந்த அறிவிப்பு மகிந்த ஆதரவாளர்களுக்கு மட்டுமல்ல புலி ஆதரவாளர்களுக்கும் திகிலை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஏனெனில் சிங்கள மக்கள் தமது பிரச்சனைகளை மிகவும் நாகரீகமான முறையில் தீர்த்துக் கொள்ள முயற்சிப்பதை இவை எடுத்துக் காட்டுவதாகவும்சொல்லப்படுகிறது.  

தேசிய இனப் பிரச்சனை குறித்தும்நாட்டின் பொருளாதாரக் கட்டுமானம் குறித்தும்சர்வதேச அரசுகளால் முன்னெடுக்கப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்த விசாரணைகள் குறித்தும் மிகவும் தெளிவான நிலைப்பாடுகளைக் வண. சோபித தேரர்  கொண்டுள்ளார் என்றும் சிங்கள பௌத்த சமூகத்திலிருந்தே அவர்இவற்றை முன்வைப்பது சிங்கள பௌத்த தேசியவாத சக்திகளிடையே பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளதுஎனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

  நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என்பதனை உடன் பதிவிடுங்கள்………

—————————————————————————————————————

நேர்காணல் வண. சோபித தேரர்

நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார்
6 மாதங்களே ஜனாதிபதியாக இருக்க முடியும்

நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.
இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.
ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.  சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். என கோட்டை நாகவிகாரையின் விகாராதிபதி  ஓமல்பே சோபித தேரர் தினக்குரலுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்த கருத்துக்கள் கீழ்வருமாறு தொகுக்கப்பட்டுள்ளது.

கேள்வி: இன்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை மாற்ற வேண்டும் என  கூறிவருகின்றீர்களா?

பதில்: 1978 ஆம் ஆண்டு ஜே.ஆர்.ஜெயவர்தனவினால்  முன்வைக்கப்பட்ட அரசியல் அமைப்புத்தான் இதுவரை நடைமுறையில் இருக்கின்றது. அன்று ஆறுக்கு ஐந்து என்ற பெரும்பான்மை அதிகாரம் ஜே.ஆர்.ஜெயவர்தனவிற்கு இருந்தது.  இந்த அதிகாரத்தைப் பயன்படுத்திதான் அவர் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை அறிமுகப்படுத்தினார். அன்று ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையால்  சர்வாதிகாரப் போக்கு  உண்டாகும் என  தெரிவித்தார். எனவே இதனை நீக்க வேண்டும் எனவும் அவர் குரல் எழுப்பினார்.  அதேபோல பேராசிரியர் என்.எம்.பெரேரா, கொல்வின் ஆர் த சில்வா, சி.விக்கிரமசிங்க போன்ற இடதுசாரித் தலைவர்கள் ஹைபாக் மைதானத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டமொன்றையும் பேரணி ஒன்றையும் நிறைவேற்று ஜனாதிபதி முறைக்கு எதிராக  நடத்தினர்.  அன்றிலிருந்து இன்றுவரை  தொடர்ந்து எதிர்ப்புக்கள்  வந்துக்கொண்டே இருக்கின்றன.

அதேபோல, சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்கு வந்த போது  ஜனாதிபதியுடைய அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு வழங்குவதாகக் கூறி  நாள் ஒன்றையும் குறிப்பிட்டிருந்தார். ஆனால், அவர் அதை செய்யவில்லை.  எனவே  தான் ஜே.வி.பி.யும் கூட்டணியில் இருந்து விலகியது. சந்திரிக்காவிற்கு  நிறைவேற்று முறைமையை மாற்றக்கூடிய அதிகாரம் இருக்கவில்லை.

அடுத்தபடியாக மகிந்த ராஜபக்ஷ அந்தக் காலம் முதலேயே  ஜனாதிபதி முறைமையை மாற்றவேண்டும் என கதிர்காமத்திற்கு நடைபவணி சென்றார். இந்த நடைபவணியின் நோக்கத்தில்  நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்க வேண்டும் என்பதே இருந்தது.  மகிந்த ராஜபக்ஷ, அணுரபண்டாரநாயக்க போன்றவர்களை உள்ளடக்கிய ஒரு குழுவொன்றும் இருந்தது.  அடுத்தபடியாக மகிந்த சிந்தனையில் நான்  ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின்  அதிகாரங்களை  பாராளுமன்றத்திற்கு வழங்கி  பிரதமர் ஒருவரை நியமிப்பேன் என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், அதை செய்யவில்லை. ஆனால், அவருக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையிருக்கிறது.

ஜே.ஆர்.ஜெயவர்தன நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி  நீதித்துறையில் தலையிட்டார்.  அதனால்  நீதியரசர் நெவில் சமரகோன் பதவி விலகினார்.  இன்று  நீதி, நிர்வாகம், நிதி போன்ற எல்லா துறைகளிலும் ஜனாதிபதியின் தலையீடு இருக்கிறது. அதன் காரணமாகவே 1978ஆம் ஆண்டு அரசியல் யாப்பிற்கு எதிராக வாதம் எழுந்துள்ளது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை அறிமுகப்படுத்திய ஐக்கிய தேசியக் கட்சி கூட அதை எதிர்க்கிறது.  நிறைவேற்று அதிகாரமுறைமையை நீக்குகின்ற காலம், தேவை  ஏற்பட்டுள்ளது.  இன்று எந்த கட்சி இந்த முறைமையை ஆதரிக்கின்றது என்பதை நான் கேட்டுகொள்ள விரும்புகின்றேன். அதற்காக பல கட்சிகளுடன்  கலந்துரையாடியுள்ளேன். கூடிய விரைவில் இதற்கான முடிவு எடுக்கப்படும்.

கேள்வி : நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்க வேண்டும் என்று கூறும் நீங்கள் அதற்காக எத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளீர்கள்?
பதில்:  நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு முதல் தேர்தல் முறையை மாற்ற வேண்டும். ஆரம்பத்தில் எங்களுக்கு என பிரதி நிதி மாவட்ட அடிப்படையில் இருந்தார். ஆனால், இன்று  மாகாண மட்டத்திலேயே ஒரு பிரதிநிதி இருக்கின்றார். மாவட்ட பிரதிநிதி எனும் போது அதிகளவு பொறுப்புக்கூறவேண்டியவராக இருப்பார். ஆனால், மாகாணம் எனும் போது  பெரிய நிலப்பரப்பில்  அதிக மக்களை உள்ளடக்கி இருப்பதால் பொறுப்புக்கூறுவது கடினம். தலைவர் என்ற  பெயர் மட்டுமே இருக்கும்.  கோடிக்கணக்கில் மாகாணத்திற்கு செலவு செய்வார். அதில் குறித்த மாகாணத்திற்கு எவ்வளவு செலவு செய்கிறார் என்பதை கூறமுடியாது. சாதாரண குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு பாராளுமன்றம் செல்ல முடியாது. மாகாண சபைக்கு கூட தெரிவு செய்ய மாட்டார்கள்.

எனவே,  லஞ்சம் ஊழல் அதிகரிக்கின்றது. தேர்தலுக்காக செலவு செய்த பணத்தை மீளப்பெற்றுக்கொள்ளும் நோக்கிலேயே பதவிக்கு வந்த பின்னர்  மாறுகின்றனர். தேர்தல் முறைமையை மாற்ற வேண்டும் என அமைச்சர் குணவர்தன  தலைமையிலான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவினது அறிக்கையும் வெளியிடப்பட்டது. இருந்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அந்த அரசாங்க அறிக்கையின் படி சிறுபான்மை சமூகத்தினரும்  தேர்தலில் வெற்றி பெறலாம் என்பதை குறிப்பிட்டிருந்தார்கள்.

அடுத்ததாக மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் மக்களை கேட்காமல் கட்சி மாறுகின்றனர்.  மக்கள் வழங்கிய வரப்பிரசாதத்தை முறைகேடாக பயன்படுத்துகின்றனர்.  இன்று  பாராளுமன்ற உறுப்பினர் பதவி என்பது விலைபேசி விற்கக் கூடிய ஒரு பொருளாகிவிட்டது. இது விலைபோகும் பதவி என்று அனைவருக்கும் தெரியும். இந்த முறை மாற்றப்பட வேண்டும். கட்சி மாறுவதாக இருந்தால் கட்சியில் இருந்தது விலகி ராஜினாமா செய்ய வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர்களுடைய எண்ணிக்கையை வரையறைபடுத்த வேண்டும். லலித் எத்துலத் முதலி காலத்தில் பாராளுமன்றத்திற்கு 25 CIMG3264உறுப்பினர்கள்  போதும் என குறிப்பிட்டார்.  ஆனால், இன்று குடும்ப உறுப்பினர்களுக்கு பதவி வழங்கி  பாராளுமன்றத்தை நிரப்பி விட்டிருக்கின்றார்கள்.
தேர்தல் ஆணையாளருக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும்.  கடந்த  கால தேர்தல்களில் தேர்தல் வன்முறைகளில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டார்கள். ஆனால், இன்று  தேர்தலில் குற்றவாளி யார் என்று தெரிந்திருந்தும் அவர்களை கைதுசெய்ய முடியாதளவிற்கு  அதிகாரமில்லாதவராக தேர்தல் ஆணையாளர் இருக்கிறார். அடுத்தது நீதித்துறையில் தலையிடுகின்ற அதிகாரத்தை குறைக்க வேண்டும்.  நீதியான சுதந்திரமான ஆணைக்குழுவொன்று உருவாக்கப்படவேண்டும். தேர்தல் ஒன்றை நடத்துவதாக இருந்தால் ஊடகவியலாளர்கள், மக்கள், குற்றவாளிகள், நீதித்துறை, பொலிஸ் போன்ற அனைவரையும் தன்வசப்படுத்தி  நடத்துகின்றனர்.  இதனால் நேர்மை என்ற வார்த்தைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும்.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவொன்று  அதிகாரத்துடன் உருவாக்கப்படவேண்டும்.  சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு எவ்வளவு ஊழல் இடம்பெற்றிருக்கிறது என்பதை  இந்த ஆணைக்குழு நிரூபிக்க வேண்டும். இன்று ஒரு அமைச்சருக்கான செலவு 4000 கோடி என்று கூறப்படுகிறது. சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவருக்கு இத்தகைய செலவுகள் எப்படி அதிகரித்தது. அடுத்ததாக தகவல் அறியும் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும். செலவு செய்கின்றார்கள் என்று சொல்லும் போது எவ்வளவு செலவு செய்கின்றார்கள் என்பதை நான் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு தகவல் அறியும் சட்டம் அவசியம்.

குற்றம் செய்தவர் கேள்வி கேட்கின்ற நிலைமையை பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில்  பார்க்க முடிந்தது. சுதந்திரமான நீதித்துறை இங்கு இல்லை. இன்றுள்ள பிரதம நீதியரசர் ஜனாதிபதியுடைய ஆலோசகர். அவர் எவ்வாறு ஜனாதிக்கு எதிரான தீர்ப்பொன்றை வழங்குவார். மாவட்ட நீதிவான், உயர் நீதிமன்ற நீதிபதிகள், மேல்முறையீட்டு நீதிபதிகள் போன்ற  அனைத்து நீதித்துறை நியமனங்களையும் ஜனாதிபதியே வழங்குகின்றார். அவரால் நியமனம்  பெறும் போது  இலங்கை அரசுக்கு கட்டுப்பட்டவர் என்ற நிலைமையை அந்த  நியமனம் உறுதிப்படுத்துகின்றது. சட்டமா அதிபர் திணைக்களமும்  ஜனாதிபதியின் கட்டுப்பாட்டுக்கு கீழே இருக்கிறது.

இது தொடர்பாக இன,மத, மொழி கடந்து மூவின மக்களும் ஒன்று சேர்ந்து வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம். அதில் ஜனாதிபதியாக  தெரிவு செய்யப்படக்கூடியவர் பொதுவேட்பாளரில் இருந்து  தெரிவு செய்யப்படுவார். அவர் 6 மாதங்கள் மட்டுமே ஜனாதிபதியாக இருக்க முடியும். அதன் பிறகு அவர் வேறொருவருக்கு அச்சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும். நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கிவிட்டு  பாராளுமன்றத்திற்கு அதிகாரம் வழங்கி பிரதமர்  ஒருவரை நியமிக்க வேண்டும்.

சுயாதீன ஆணைக்குழுவொன்றை உருவாக்கி 18¬ ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.  ஒருவர் எத்தனை முறைவேண்டுமானாலும் ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படலாம் என்ற நிலைமை மாற வேண்டும். அதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.

கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார குமாரதுங்கவை  பொதுவேட்பாளராக  நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: யார் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டாலும் எமக்கு கவலை இல்லை. ஆனால், அவர் 6 மாதங்களே பதவி வகிக்க வேண்டும்.  முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நாடி  பொதுவேட்பாளராக நிறுத்துவதற்கு முயற்சி செய்து வருவதாக நானும் அறிந்தேன். அதற்கு அவர் தெளிவான ஒரு பதிலை இன்னும் அளிக்கவில்லை.  எங்களுடைய கொள்கைக்கு இணங்கி ஒருவர்  போட்டியிடுவதற்கு முன்வருவாராக இருந்தால் அவரை நாங்கள் பொதுவேட்பாளராக முன்நிறுத்துவோம். பொதுவேட்பாளர் என்பது இங்கு முக்கியம் அல்ல. அவர் என்ன செய்ய வேண்டும் என்பதே முக்கியம். சந்திரிக்கா விருப்பப்பட்டால் பொதுவேட்பாளராக நிறுத்த   நாங்கள் தயார்.

கேள்வி :  ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளராக நீங்கள் நிற்பதாகவும் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்:  நான் பொது வேட்பாளராக நிற்பதற்கு தயார். நாங்கள்  குறிப்பிட்டுள்ள  நியதிகளின்படி  மக்கள்  வாக்களிக்க வேண்டும்.  பொதுவேட்பாளராக யார் வேண்டுமானாலும் நிற்கலாம். அதற்கு எந்த தடையுமில்லை. முன்னாள் பிரதம நீதியரசராக இருக்கலாம், முன்னாள் ஜனாதிபதியாக இருக்கலாம்.

கேள்வி : வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட முடியவில்லை என வடமாகாண முதலமைச்சர் கூறுகின்றாரே இது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில்: சுயாதீனமாக செயற்படமுடியாமைக்கு சுயாதீன ஆணைக்குழுக்கள் இல்லாமையே காரணம்.  பொலிஸ், காணி ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இருக்குமாக இருந்தால் மாகாண சபையும் சுயாதீனமாக செயற்பட முடியும்.  மாவட்ட  ஆட்சிமுறை இருந்தால் மாகாணசபை  இல்லாமல் செய்யப்படும். மாகாண சபையை பெரியதொரு நிலப்பரப்பாக அரசாங்கம் பார்க்கின்றதோ தெரியவில்லை.  எனினும் மாகாண ஆட்சி முறைமை  சீராக நடைபெறுவதற்கு அரசியல் யாப்பு நடைமுறையை பின்பற்றினாலேயே போதுமானதாகும்.

கேள்வி :  தென்,மேல், மாகாண  சபைத் தேர்தல்களில்  நடிகர் நடிகைகள் வேட்பாளராக நிறுத்தப்படுவது தொடர்பாக உங்களது கருத்து என்ன?
பதில் : எந்தவொரு தொழிலுக்கும் அனுபவம், தொழில் தகைமை என்று இருக்கின்றது. இந்தத் தொழிலை இவர்கள் தான் செய்யவேண்டும் என்று இல்லை. தகுதி இருந்தால் செய்யலாம். ஆனால, அரசியல் என்பது தொழில் அல்ல. அது ஒரு சேவை.  பொதுமக்கள் நலன்கருதிய ஒரு சேவை. முழு நாட்டையும் நிர்வகிக்க வேண்டும்.  அந்த செயற்பாட்டில்  எல்லோராலும் ரூடவ்டுபட முடியாது. இது மக்களை திசைதிருப்பி வாக்குகளை சிதறடிக்கும் ஒரு முறையாகும்.நடிகை,நடிகர்கள்,பாடகர்கள் முகத்தைப் பார்த்து புள்ளடியிட வேண்டாம். எந்தவொரு கட்சியிலும் வேட்பாளராக இருந்தாலும் உங்களுக்கு இவரால் ஏதேனும் பயன் இருக்கின்றதா என்று சிந்தித்து வாக்களிக்க வேண்டும்.

கேள்வி : ஆட்சி கவிழ்ப்பதற்கான சந்தர்ப்பம் இருக்கிறதா?
பதில் : ஆட்சியைக் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. இன்று அரசாங்கத்திற்குள்ளேயே குழப்பங்கள் தோன்றியுள்ளன.   இந்த குழப்பங்களே ஆட்சி கவிழ்வதற்கான சந்தர்ப்பங்கள். சிறந்த முறையில்  நடவடிக்கை எடுத்தால் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில்  இந்த ஆட்சியை மாற்றியமைக்க முடியும். பிரதமருக்கு எதிராக  அரசாங்கத்திற்குள்ளேயே  பிரச்சினை எழுந்துள்ளது. இன்று பிரதமர் நாளை ஜனாதிபதி என்ற  நிலை உருவாகலாம்.  வேறொரு நாட்டில்  ஒரு ஜனாதிபதியுடைய ஆட்சியில்  பெருந்தொகையிலான போதைவஸ்து  இறக்குமதி செய்யப்பட்டிருந்தால் ஜனாதிபதியே ஆட்சியிலிருந்து  பதவிவிலகுவார். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை.  எனவே இந்த நிலை மாறுவதற்கு மக்களே சிந்திக்கவேண்டும்.

கேள்வி : ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக  மார்ச் மாதம் தீர்மானம் கொண்டுவரப்போவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சவாலை அரசாங்கம் எவ்வாறு எதிர்கொள்ளப்போகிறது? அதற்கு உங்களுடைய பங்கு எவ்வாறு அமையும்?
பதில் : நாங்களே செய்து கொண்ட பிழை தான் ஜெனீவா.  இலங்கை அரசாங்கம் முன்வைத்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை நிறைவேற்ற வேண்டுமென்பதே சர்வதேச நாடுகளின் வேண்டுகோளாக இருக்கிறது.  இலங்கைக்கு வருகை தந்த சர்வதேச பிரதிநிதிகளிடம் பல வாக்குறுதிகளை அளித்துள்ளார். அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக தெரியவில்லை.18ஆவது திருத்தச் சட்டத்தை  நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஒரு பரிந்துரையாகும்.  இலங்கை அரசாங்கம்  ஐ.நா.பிரதிநிதிகளை வரவழைப்பதற்காகவே கதவுகளை திறந்துவிட்டுள்ளது.

அரசாங்கம் எத்தகைய நடைமுறைகளை பின்பற்றினாலும் நான் நியாயத்தின் பக்கமே நிற்பேன். அரசாங்கம் நியமித்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வேண்டும். சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை  நிறைவேற்ற வேண்டுமென்பது நியாயமான கோரிக்கை.  இலங்கைக்கு எதிராக  சர்வதேச சுயாதீன விசாரணையை நான் ஏற்றுக்கொள்கின்றேன்.  குற்றங்கள் செய்யவில்லை என்றால் சாட்சியங்களின் மூலம் அதனை உறுதிப்படுத்த வேண்டுமென்பதே என்னுடைய நிலைப்பாடு. இலங்கை என்பது சர்வதேசத்திற்குள் தான் இருக்கிறது.  சர்வதேசம் இலங்கைக்குள் அல்ல என்பதை அரசாங்கம் புரிந்து நடக்க வேண்டும்.

கேள்வி: வடமாகாண சபை சுயாதீனமாக செயற்பட நீங்கள் கூறும் ஆலோசனை என்ன?
பதில்:  ஆளுநரை வெளியேற்ற வேண்டும். காணி, பொலிஸ் அதிகாரங்கள் வேண்டுமென்பதே வடமாகாண சபையின் கோரிக்கை. உண்மையில் ஆளுநரை தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும். கிறீஸ் போன்ற நாடுகளில் ஆளுநர் ஒருவரை தெரிவு செய்வதில் பல நடைமுறைகள் இருப்பதை நான் அவதானித்தேன். நிர்வாக சேவையில் 15 வருடங்கள் அனுபவமும்  பரீட்சைகளில் சித்தியடைந்த பின்னருமே ஒருவரை ஆளுநராக அங்கு தெரிவுசெய்வார்கள். ஆனால், இங்கு அவ்வாறு இல்லை. இதனால் சிவில்  சமூகத்திற்கு  பிரச்சினை எழுகின்றது. அதேபோல வடமாகாண சபை கூறும் காணி, பொலிஸ் அதிகாரங்கள் 13 ஆவது திருத்தச்சட்டத்தின்படி வழங்கினாலும் மாவட்ட ஆட்சிமுறைமை உருவாக்கப்பட வேண்டும்.
00000000

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்  என்பதனை உடன் பதிவிடுங்கள்………

 

300 Comments

  1. v.sivalingam says:

    இலங்கைத் தேசியத்தின் அரசியல் வரைபடத்தினை மாற்றுவதற்கான சரியான சந்தர்ப்பம் இதுவென நம்புகிறேன். நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சிமுறை தேசத்தின் எதிர்காலத்திற்கு பாரிய விளைவுகளைத் தரும் என தேசப்பற்றுள்ள எந்தப் பிரஜையும் சிந்திப்பாராயின் இவ்வாறான ஒரு வாய்ப்பை பயன்படுத்த தவறக்கூடாது. பௌத்த பிக்கு எனவும், சிங்கள தேசியவாதி எனவும் முத்திரை குத்தி போலி நியாயங்களை முன்வைக்காது அவர் முன் வைத்துள்ள நியாயங்களையும், மாற்று முன்மொழிவுகளையும் சீர்தூக்கிக் பார்த்து அதன் வழி செயற்படுவதே காலத்தின் தேவையாகும்.

  2. அருள் says:

    இலங்கைக்கு புதிய அரசியல் சாசனம் ஒன்று அவசியமானது. அதுவே இனப்பிரச்சினைக்கான தீர்வாகவும் அனைத்து மக்களுக்குமான தீர்வாக அமையும் என்பதில் எனக்கு கருத்து முரண்பாடு இல்லை. இன்றைய மகிந்த ரெஜிமை வீட்டுக்கு அல்லது ஜெயிலுக்கு அனுப்புவது என்பதும் வெகு சுலபமில்லை. எல்லோரும் கூடியே இந்த தேரை இழுக்க வேண்டும் . சுவாமி அவர்களின் பல கருத்துக்கள் ஏற்கத்தக்கவையே. ஆனால் சுவாமியால் இதற்கு தலமை கொடுக்க முடியுமா என்பது எமக்கு முன்னுள்ள அரசியல் கேள்வியாகும்.

  3. ஓம்.. சிவா.. says:

    புலிகள் ஜனனாயக தேர்தலில் தமிழ் மக்கள் பங்கெடுப்பதை தடுத்து, தமது அரசியல் தூர நோக்கால் அதிகாரத்திற்கு கொண்டுவந்த ராஜபக்சவை – அதிகாரத்தில் இருந்து அகற்றுவதற்கு இலங்கையின் அனைத்து மக்கள் மட்டுமல்ல ,இலங்கையின் பாராளுமன்ற ஆட்சிமுறையின் வரலாறும் அதிக விலையக் கொடுக்க வேண்டியிருக்கிறது. புலிகள் ஆயுத வழியில் தமிழ் மக்களை மட்டும் அழிக்கவில்லை. அனைத்து மக்களின் அடிபடை உரிமையிலும் மண் அள்ளிப்போட்டுள்ளார்கள்…

  4. கஜன் says:

    ஓம்.. சிவா.. புலி பசித்தாலும் புல்லை தின்னாது.. இப்ப இந்த இடதுசாரிகள் ,,, சம்பந்தன் கூட்டணி … தமிழ் மக்கள் , மலைய மக்கள் , முஸ்லிம் மக்கள் ,,அமெரிக்கா , யூ என் பி எல்லோரும் சேர்ந்து இந்த வேலையை செய்யலாம். கூடவே மகிந்தவை அன்று ஜனாதிபதி ஆக்கியதில் நீங்கள் மறந்த ஜேவிபியையும் கூட சேர்த்து கொள்ளுங்கள்

  5. சிராஜ் says:

    முஸ்லிம்களின் முக்கிய அரசியல் தலைமைகள், மலையக தொண்டமான், சந்திரசெகர் கட்சி ஒன்றுமே இதற்கு ஆதரவு வழங்கமாட்டாது. இவர்கள் அனைவரும் மகிந்தவின் அடிமைகளாக இருக்கிறார்கள்.. ஊழலில் மிதந்து வசமாக மாட்டி உள்ளனர்.. முஸ்லிம் காங்கிரஸ் வாய்க்கு வந்தபடி மக்களை எமாற்றி வருகிறது. தேர்தல் வந்தால் தனிய கேட்பது , தேர்தலுக்குப்பின் மகிந்த அரசாங்கத்திற்கு ஆதரவு இதுதான் ஹக்கிமின் அரசியல் சூதாட்டவிதி. பாவம் மலையக மக்கள் இன்றும் குரலற்றவர்களாக உள்ளனர். இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும் போது மக்கள் கட்சித்தலைமைகளுக்கு மாற்றமாக வாக்களிக்க வேண்டும். அப்போதுதான் இந்த எமாற்று தலைவர்களின் அரசியல் சூதாட்டம் முற்றுப் பெறும்.

  6. விசு says:

    ஹாமி துருவாக இருப்பது உதைக்கிறது…. நான் தவறாக சொல்லவில்லை.. பரவலாக ஆதரவைத் தேட இது தடையாக இருக்கும். ஒரு பூசாரியை , பாதரை, மொலவியை நிறுத்தினால் .. அந்த சமுகத்தை சேர்ந்த மக்களும் வாக்குப் போடமாட்டார்கள். ஏனைய சமூக மக்களும் பெருமளவில் ஆதரிக்கமாட்டார்கள்.சிங்கள மக்கள் மத்தியில் ஒரு புலியாக, அமெரிக்காவின் எஜெண்டாக ஹாமிதுரு காட்டப்படுவார். அதனை விமல் வீரவன்ச மட்டுமல்ல, அரசாங்கத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் வாசு, திஸ்ஸ , குணசேகர மட்டுமல்ல மகிந்தவை நியாப்படுத்தும் உள்ளுரீலும் வெளி நாடுகளில் வாழும் மகிந்த ஆதரவு, எகாதிபத்திய எதிப்ர்பு? தமிழ் இடதுசாரிகளும் வழங்குவார்கள்…

  7. குணம் says:

    விசு சொல்வது போல் எல்லா இடசாரிகளும் கண்ணை மூடிக் கொண்டு அரசாங்கத்தினை ஆதரிக்கவில்லை. இந்த அரசாங்கத்திற்கு எதிராக மக்களை திரட்டி வீதியில் இறங்கி நாளாந்தம் போராடி வருபவர்கள் இடதுசாரிகளே. நீங்கள் மேலே பட்டியல் போட்டவர்கள் காலவதியாகிய இடதுசாரிகள். அவர்களை தொடர்ந்தும் தாக்கி.. உண்மையான இடசாரிகளை தொடர்ந்தும் கொச்சைப்படுத்துவது.. தமிழ்த் தேசியவாதிகளின் தாரக மந்திரம்.. சிவாவின் குறிப்பை பாருங்கள் .. இந்த நிலமைக்கு யார் காரணம்?பதில் சொல்ல முடியுமா?

  8. சொனாலி says:

    அதிக அதிகாரமிக்க ஜனாதிபதி பதவியை ஒழிக்கப் போவதாக பதவிக்கு வரும் போது அப்போதுசந்திரிக்காவும் சொன்னார்,, மகிந்தவும் அப்படியே சொன்னார்.. அவர்களால் அதிகாரத்திற்கு வந்ததன்பின் அதனை ஒழிக்க முடியவில்லை. மகிந்த இரண்டு முறை இருந்த பதவிக் காலத்தினை எண்ணிக்கயற்ற காலமாக்கினார்.. அதில் அவ்வளவு ரூசி… இப்போது இவர் சொல்கிறார் .. இவர் அதிகாரத்திற்கு வந்தால் செய்வார் என்று என்ன உத்தரவாதம்.. இந்தப் பழம் புளிக்குமா அல்லது இனிக்குமா…..

  9. ravi says:

    பேரழிவுகள் பாடங்களை கற்றுத்தரத் தவறுவதில்லை. சோபித தேரர் அவர்களின் குரல் அந்த வெளியின் ஒரு ஆரம்ப சாட்சி. தேசியவாதத்தால் அதை புரிந்துகொள்ள முடியாது. நம்புவது, ஏமாறுவது என்ற சொற்றொடர்களால் இடறுப்படுவதை விட்டு ஒரு மாற்றத்தின் குறியீடாக இந்தக் குரலை நாம் எடுத்துக்கொள்ளலாம். பௌத்த பேரினவாதம் கட்டியெழுப்பிய திசையில் பயணித்து ஆட்சியதிகாரத்தை கைப்பற்றும் தொடர்நிகழ்வின் கடைசி கதாநாயகன்தான் ராஜபக்ச. சென்றுவா போர்க்களத்துக்கு என விடைகொடுத்து அனுப்புவதுவரை பௌத்த பேரினவாதம் “புனிதநீர்“ தெளித்த பூமி இது. அவளவு சுலபத்தில் இதை அசைக்கமுடியுமா தெரியாது, ஆனால் சோபித தேரர் அவர்களின் குரல் அதில் மோதி எதிரொலிக்கத்தான் செய்யும். சாதாரண சிங்கள மக்களின் குரலும் அதனுடன் ஒத்திசையுமெனில் மாற்றம் விரைவில் நிச்சயம்தான். இல்லையெனில் அது தள்ளிப்போடப்படுமே யொழிய தவிர்க்கப்பட முடியாது. அவ்வளவுதான்.

  10. Abdu Akp (facebook) says:

    சிறு பாண்மை இனத்துக்கு எவர் ஒருவர் தீங்குவிளைவிக்காமல் இருப்பாரோ அவர்தான் அடுத்த ஜனாதிபதி..

  11. Thiagarajah Wijayendran (facebook) says:

    பகிர்வுக்கு மிக நன்றி!! நியாயம் பேசும் தமிழர்களைச் சிங்களவர்கள் அறிவதில்லை, நியாயம் பேசும் சிங்களவர்களைத் தமிழர்கள் அறிவதில்லை!!

  12. வண. சோபித தேரர் -விரிவான நேர்காணலும் எழுந்துள்ள ஆதரவு/ எதிர் கருத்துகளும்……நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?? என “எதுவரை?…” இணையவலைஞ்சிகை கேட்டிருக்க ,நானும் கீழ்காணும் எதிர்வினையொன்றை அதற்கு எழுதியுன்ளேன்.

    கருத்துக்களை வரவேற்று ,ஆரோக்கியமானவொரு உரையாடலை நோக்காகக்கொண்டதென்ற தொனியைப் பரவலாக்கும் இந்த வட்டத்திலிருந்து எனது எதிர்வினை இன்னும் வெளி வரவில்லை.

    இருந்தும் ,பரவலாகக் கருத்துக்களை முன்வைப்பதும் அதையொட்டிய சிந்தனைக்கு ஊக்கப்படுத்துவதும் எமது நோக்கில் ஒன்று.இன்றைய கட்சி அரசியலையும் ,அதுசார்ந்த ஆதிக்கத்தையும் மதிப்பீடு செய்வது-வரையறுத்துக்கொள்வது அவசியமே!

    ஆளுங் கட்சியாக வருபவை மட்டுமல்ல இன்றைக்கு அனைத்துத் தரப்புமே நிதிமோசடி -வரி ஏய்ப்பு;வளத்திருட்டெனக் கொண்டே நிதியைத் திரட்டும் சட்டத்தை இயற்றுகின்றன.இங்கு ,கட்சித் தலைவர்கள் -அரச தலைவர்களென வரும் பதவிகளனைத்தும் குவிக்கப்பட்ட நிதிகளுக்குச் சட்ட அங்கீகாரத்தை வளங்குவதில் பெரும் பகுதி மக்களது அனைத்து உரிமைகளையும் காலிற் போட்டு மிதிக்கும் சந்தர்ப்பமே தமது நிதயைப் பாதுகாக்க இன்னொரு அடியாளாக வரையறுக்கப்படும் பாதுகாப்புப் படைகள் ,அரச அதிகாரத்துள்ளும் ;அதன் வன்முறை யந்திரத்துள்ளுங் கூடவொரு வியாபார வளங்கொண்ட தலைமையை உருவாக்கியுள்ளது.

    இது, அனைத்துச் ” சிவில் சந்தைப் பொருளாதாரத்தையுங் ” கூட இராணுவப் பொருளாதார போக்குள் அமுக்கி, இலங்கையில் பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரமே கையகப்படுத்தியுள்ளது.இதைப் பழைய பாணி அரச முதலாளித்துவமாகப் புரியப்படாது.சுய முரண்பாட்டாலெழாத முதலாளியத்துள் அரச முதலாளியமாகவிருந்த இலங்கை , சமீபகாலத்துப் பல்தேசிய மற்றும் நவ தாரளவாதப்போக்குகளால் [Response to Neoliberalism and Globalization ]சில குடும்பங்களது கையில் அந்த அரச முதலாளியத்தை வீழ்த்தியுள்ளதென்பதைப் புரியந் தருணங்களையே நாம் விவாதிக்க வேண்டும் என்கிறேன்.

    இதுவேதாம் ,கட்சித் தலைவர்கள்;மந்திரிகள்;இராணுவத்தளபதிகள் என ஒவ்வொருவரையும் சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகச் சட்டவாத அரசுக்குள் நேரடியான அதிகாரத்தையும்; ஒடுக்குமுறையையும் உழைப்பவர்கள்மீது திணிக்கின்றனர்.இந்த முரண்பாட்டைக் குறித்து விவாதித்தாகவேண்டும்.

    இதைவிட்ட அனைத்தும், அதாவது “நிறைவேற்று அதிகாரங்கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் இலங்கையைப் பிடித்த சனியன் விடுபட முடியுமென்பது சுத்த மோசடியான விவாதம்.இது, புதிய பொருளாதார வியூகத்தையும் அதன் பன்முக ஆதிக்கத்தையும் ஓரங்கட்டிவிடுவதோடு மட்டுமல்ல அது சட்டவாத அரசுள் வகிக்குப் பாத்திரத்தையும் மறைத்து, இலங்கையை மேற்குலகத்துக்கு விசுவாசமாக்கும் சந்தர்ப்பங்களைபப் பற்பல புதிய முகமூடிகயோடு கருத்துக்களாக நம்மை அண்மிக்கச் செய்கிறது.இங்கு இதைச் சொல்பவர்கள் மக்களது நலனோடு பின்னப்பட்டவராகவோ அன்றித் தேசத்தின் ஒரு பிரமுகராகவோ அல்லது மதிக் கலாச்சாரத் தலைவர்களாகவோதாம் இருக்கின்றனர்.இது தற்செயலானது அல்ல.

    UNP கட்சியோடு மக்களை இணைக்கும் கயமை மேற்குலகத்தின் விருப்புக்குட்பட்டது.அது தனது இழந்த ஆதிக்கத்தை ஆசியாவில் மீளக் கட்டியமைக்கும் தருணமே ஆசிய முலதனத்தைப் பழிவாங்கத் துடிக்கும் வியூகமாக நம் எழுந்துள்ளது.

    இந்தப் பாதாகமான பக்கமானது கட்சி நிதியோடு போட்டியிடும்போது இரு தரப்புப் பிளவாக கட்சியும் ,இலங்கை வன் முறை யந்திரமும் போட்யெிட்டுக்கொண்டே தமக்குள் சமரசஞ் செய்வதில் ஆசிய -மேற்குலக மூலதனங்களோடு ஒட்டுறைவை வக்கின்றனரென்பதைக் குறித்து நாம் அவசியம் புரிதல்களைக் கொண்டிருக்க வேண்டும்.

    இலங்கை மக்களின் உயிர்வாழும் உரிமைக்கு-உயிர்வாழும் வலையம் அமைதியாக இருப்பதும் அந்த வலையம் மக்களின் நலன்களைக் கண்ணாக மதிக்கும் மக்கள் கட்சிகளால் நிர்வாகிக்கப்பட்டால் ஓரளவேனும் முதலாளித்துவ ஜனநாயகத்தன்மையின் பெறுமானத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இன்றெமது மண்ணில் தொடரும் கட்சி-இயக்க ஆதிக்கமானது மிகவும் கடுமையான விளைவுகளைச் செய்துவிடுகிறது.கட்சிகளின் அராஜக ஆதிக்கத்தையும்,அவர்களது விருப்புறுதியின் விளைவாக நிகழும் பாரிய அரசியல் வன்முறைக்கும் அது சார்ந்த ஆதிக்கத்துக்கும் கட்சியனது பின்பக்கம் ஒழிந்திருக்கும் வர்க்க நலனையும் மீறிய கட்சித் தலைவர்களின் குடும்ப மேலாண்மை-குடும்பச் சொத்தாக மாறிய கட்சி நிதி,ஆயுட்காலத் தலைமை,வாரீசு அரசியலே காரணமாக அமைகிறது.இங்கு, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதற்கு மேலாகக் கண்டடையவேண்டிய இன்றைய இலங்கைபோன்ற தேசங்களது நிதி திரட்சி மற்றும் அத்தகைய நிதியைக்கொண்டியக்கும் சக்தி எவைகள் என்பதைக்குறித்த புரிதல் மிக அவசியமாகிறது!

    தமக்குள் ஒன்றுபட முடியாத இனக் குழுக்களோடும், சிதிறிய தலைமைகளோடும் முட்டிமோதும் மூன்றாம்மண்டலத் தேசங்களுக்கேகுரிய பண்போடு திரண்ட நிதிகள் கட்சித்தலைவர்கள் – மந்திரிகளது குடும்பச் சொத்தாக மாறுவதற்கான சட்ட நியாயங்களைக் குறித்து நோக்குவது அவசியமானதாகும்.நவதாரளவாதப் பொருளாதார நகர்வுக்கும் இலங்கை அரசுக்கும் 1948 ஆம் ஆண்டிலிருந்தே பாரிய தொடர்புகள் இருக்கிறது.யூ.என்.பீ. கட்சிக்கும் அதன் தலைவர்களுக்கும் நிரந்தரமானவொரு மென்பர் சீட்டை மெளன் பெலாரின் சொசைட்டி [Mont Pelerin Society ]வழங்கிவருவதை இன்றும் நாம் காணமுடியும்.இங்கு,வகைமாதிரியாக வளர்ந்துவிட்ட பொருதார ஆதிக்கமானது முழுக்க முழுக்க மக்களது வரிப்பணத்தையும் ,தேசத்தின் வளங்களை அந்நியத் தேசங்களோடு கொள்ளையடிப்பதையுமே ஆளும் கட்சிக்கும் அதன் தலைமைக்குமான பாத்தியமாகச் சட்டவரம்புகள் வளைக்கப்பட்டுள்ளன.இதுவேதாம் இலங்கைக்குமட்டுமல்ல இந்தியாவை எடுத்துக்கொண்டாலும் உண்மையாக இருக்கிறது.தமிழ் நாட்டையே எடுங்கள் அங்கு என்ன வாழ்கிறது?எதேச்சதிகாரமும் கட்சித் தலைவரையும் கண்முன் நிறுத்துங்கள்.ஜெயலதிதாவின் அதிகார -ஆவணவுச்சம் மகிந்தா குழுவையே விஞ்சும் அளவுக்கு இல்லையா?

    ஆக, குறிப்பிட்ட கட்சித் தலைவர்களின் சொத்துக்கள் காலப் போக்கில் பெரும் நிதிமூலதனமாக மாற்றப்பட்டபின் அவர்களே ஆளும் வர்க்கத்தின் தவிர்க்கமுடியாதவொரு அங்கமாக மாறும்போதும், பூர்ச்சுவா வர்க்கமே மிக நேரடியாக மக்கள் சுதந்திரத்தில்,சமூகவுரிமையில்,அடிப்படை மனிதவுரிமையில் இன்னபிற ஜனநாயகத்தின் அனைத்துப் பரிணாமங்களையும் குறுக்கி மனிதவிரோதக் காட்டாட்சிக்குள் தேசத்தை தள்ளும்போது அதுவே இராணுவச் சர்வதிகாரமாக மாறுகிறது.இதுள் முக்கியமாகக் காணவேண்டியவொரு உண்மை என்னவென்றால் ஆளும் வர்க்கமென்பது கட்சியின் பின்னின்று இயக்கும் சூழல் இப்போது மாற்றப்பட்டு,கட்சியே பூர்ச்சுவாக்களால்-அதிகார-ஆளும் வர்கத்தால் நிறைந்து மக்களையும்,ஜனநாயகத்தையும் தமது நேரடியான ஆதிக்கத்துக்குள் கொண்டுவந்துள்ளார்கள்.

    பெயரளவுக்கான மேற்குலகத்தின் குறை ஜனநாயகப் பண்புகூட நமது தேசங்களின் கட்சி ஆதிக்கத்துள் நிலவுவதில்லை.இத்தகைய கட்சிகள் மிக இலுகுவாகக் கல்வியாளர்களையும்,செய்தியூடகங்களையும் தமது கருத்துகளுக்கு வலுச் சேர்க்கவும்,பரப்புரை செய்யவும் தயார்ப்படுத்திக் கொள்கிறார்கள்.இன்றைய செய்தி ஊடகங்களின் தனியுடமையில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவமான செய்தி ஊடகங்கள் இருக்கின்றன.இவை மக்களின்மீது விரித்துவைத்திருக்கும் ஆதிக்கமானது மிகக் கொடுமையானது.ஜனநாயகத்துக்கு எதிரானது.மக்களின் அனைத்து ஜீவாதாரவுரிமைகளையும் தமக்கு ஏற்றபடி மாற்றியமைக்கும் கயமைவாதிகள்தாம் இன்று ஆட்சியை அலங்கரிக்கிறார்கள்.இவர்களின் தயவில் செய்தி ஊடகங்கள் மட்டுமல்ல அனைத்து ஊடகங்களும் உயிர்வாழும் நிலையை கட்சி ஆதிக்கம் ஏற்படுத்தியதென்றால் ஓட்டுக்கட்சிகளின் மிகப்பெரும் வலு அறியப்பட்டாகவேண்டும்.ஜேர்மனியை எடுத்தோமானால் இரு பெருங்கட்சசிகளே மாறிமாறிச் சிறிய கட்சிகளோடிணைந்து ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள்.இதற்கு ஊடகங்களின் பங்கு மிகப் பெரிதாகும்.இத்தகைய ஊடகங்கள் யாவும் இரண்டு பெருங்கட்சிகளுக்குப் பின்னாலும் உள்ளன.சீ.டி.யூ-எஸ்.பீ.டி [CDU/SPD]என்ற இருகட்சிகளும் ஜேர்மனிய ஆளும் வர்க்கத்தின் இருபெரும் பிரிவுகளையும் பிரதிநிதிப்படுத்துகின்றன.அவ்வண்ணமே இரண்டு கட்சிகளும் சக்தி(எரிபொருள்-மின்சாரம்)வர்த்தகத்தில் பெரும் முதலீடுகளைச் செய்திருக்கின்றன.இக் கட்சிகளின் மிகப் பெரும் தலைவர்கள்,கட்சியின் மாநிலத் தலைவர்கள் எல்லோருமே பெரும் தொழில் நிறுவனங்களை நிர்வாகிக்கின்றவர்களாகவும் இருக்கிறார்கள்.

    இங்கே ஊடகங்களின் தனியுடையானது ஓட்டுக்கட்சிகளின் நலனை முன்னிறுத்தும் ஊக்கத்துக்கு மிக அண்மையில் இருக்கின்றன.ஜேர்மனிய அரச தொலைக்காட்சிகள் என்று சொல்லுப் படும் ஏ.ஆர்.டி.[ARD] மற்றும் சற்.டி.எப் [ZDF]ஆகிய இரு பெரும் தொலைக்காட்சிகளும் கட்சிகளின் தனியுடமையாகவே செயற்படுகிறது.ஏ.ஆர்.டி.தொலைக்காட்சி எஸ்.பீ.டி.[SPD]யையும் மற்றது சி.டி.யூ.[ CDU]வையும் ஆதரிப்பவை.இத்தகைய ஊடகங்கள் வளர்ச்சியடைந்த முதலாளிய நாட்டில் கட்சிகளின் ஆதிகத்தை குடிசார் உரிமைகளுக்குள் போட்டிறுக்கும்போது நமது நாட்டில் இவை இன்னும் அராஜகமாகவே நம்மை அண்மிக்கின்றன.இது உலக மட்டத்தில் பல்வேறு முனைகளில் திட்டமிடப்பட்டுச் செயற்படுகிறது.எனவே, ஜனாதிபதி ஆட்சிமுறையென்பதும்,நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முநைதாம் இவற்றுக்குக் காரணமென்பதும் ;ழுமையான புரிதலில்லை.பிரஞ்சு தேசத்தை எடுங்கள் ,அத் தேசத்தின் அதிபருக்கு உலகிலுள்ள எந்தத் தலைவருக்குமற்ற நிறைவேற்று அதிகாரமுண்டு.இன்றைய நிலவரப்படி,ஆசிய-ஐரோப்பிய மூலதன முரண்பாடுகள் ஆட்சி மாற்றத்தைக்கோரும் உலகத் தேச நடப்புள் இலங்கையும் அதன் தர்க்கத்துள்,வியூகத்துள் உள் நுழைந்திருப்பதை நாம் இந்த மதத் தலைவரது கருத்துக்களிலிருந்து கவனிக்கமுடியும்.இன்றுள்ள உலக நிலவரங்களைத் தொடர்ந்து கவனித்தால் இத்தகைய நிலவரத்துள் இலங்கையில் மேற்குலகத்துக்கேற்பவொரு அரசியல்வரை படம் அவசியமாகவிருக்கிறது!

    மேற்குலக – ஆசிய மூலதனமும் அதன் பங்காளிகளுமாக இலங்கைக்குள் தொடரும் அதே மேற்குலகத் தாரளவாதப் பொருளாதாரப் போக்குள் முற்றுமுழுதுமாக இலங்கைக்குள் ஆதிகப்பரீட்சார்த்தமாகக் கட்சிகளது பின்னாள் மக்களைத் திரட்டுமொரு வியூகத்தைக் கொண்டிருக்கிறது.அங்கே,இத்தகைய உரையாடல்கள் ஏதோவொரு தர்கத்துள் சிக்குப்பட்டு மக்கள் நலனாக வெளிப்படுத்தும் அரசியலானது அரைவேக்காட்டுத்தனமாகும்.
    அன்புடன்,
    ப.வி.ஸ்ரீரங்கன்
    09.02.14

  13. Regi says:

    தேசிய இனப்பிரச்சினையின் தோற்றுவாய் பெளத்த சிங்களப் பேரினவாதம். இலங்கையர் பரம்பரையாக அனுபவிக்கும் எல்லா வகை பின்னடைவுகளும் அதனூடாகவே அடையாளப் படுத்தப்படுகின்றன. புதிய நூற்றாண்டில் அது தன்னை நிலை நிறுத்துவதற்கான ஒரு நேர்மறை உத்தியாக இதை ஏன் நோக்கக் கூடாது?

    தாம் வெறும் பகடைக் காய்களாக, உதிரிகளாக, ஈனப் பிறவிகளாக மாற்றப்பட்டிருப்பதாக வேறுபாடுகளின்றி எல்லா இன அடித்தட்டு மக்களும் தீவிரமாக உணரும் ஒரு காலம் இது. தேரர் முன்வைப்பவை நன்றாகத்தான் இருக்கின்றது. அவரை இயக்கப் போவது யார் என்பதே இங்கு மையமான பிரச்சினை ஆகிறது. எழுபத்தெட்டில் ஜே.ஆரின் அராஜக ” நிறைவேற்றதிகாரக் கிரீடத்துக்கு” மெளன ஒப்புதல் அளித்த ஏகாதிபத்தியங்கள் தான் தேரரையும் இயக்குமாயின் வெறும் ‘படம் பார்க்கும் சமூகமாகவே’ வேறுபடுகளின்றி இலங்கையர் மீண்டும் இருத்தி வைக்கப்படுவர்.

    மறைவில் அவரை இயக்கிய ஏகாதிபத்திய சக்திகள் வழங்கிய அளவுக்கு மீறிய உற்சாகத்தின் வெளிப்பாடு தான் தமிழர் மீதான எண்பத்து மூன்று அராஜகமும், தெற்கின் முற்போக்கு சக்திகள் மீதான வரைமுறை அற்ற அடக்கு முறையும். அதில் வெளிப்பட்ட கொக்கரிப்பு தான் “ஆணைப் பெண்ணாகவும் பெண்ணை ஆணாகவும் மாற்றுவதைத் தவிர அத்தனையும் இந்த நிறவேற்று அதிகார மந்திரக் கோல் மூலம் சாத்தியம்”

    நாம் வசதியாகப் பழையதை மறந்து விடுவோம். தலைவலிக்கு இன்னும் ஒரு புதிய தலையணையை மாற்றுவோம்!

  14. முத்துலிங்கம் says:

    இலங்கையில் இன்று பலமான எதிர்கட்சிகள் இல்லையென்பது பெரும்குறைபாடு. மகிந்த அரசாங்கம் இந்தளவு அராஜாகத்திற்குள் ஆள இதுவும் ஒரு காரணம். ஒரு பலமான எதிக்கட்சிகளின் கூட்டமைப்பு காலத்தின் தேவை . எதிர்வரும் ஜனாதிபதித்தேர்தல் மிக முக்கியமானது. அத்தேர்தலில் மகிந்த மீளவும் வெற்றி பெற்றால் இலங்கையில் மிக மோசமான ஜன நாயக உரிமைகளுக்கு நலமடிக்கும் அரசாக அது மாரும். ஆகவே இத்தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பலமான கூட்டமைப்பும் மிகப்பொருத்தமான வேட்பாளரும் அவசியம்.சிங்கள மக்கள் மத்தியில் படிப்படியாக ஒரளவு விழிப்புணர்வு வந்து கொண்ருக்கிறது.பிரபாகரனை அழித்த கதையை சொல்வதும், அதற்காக தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்போகிறார்கள் என்பதுமே மக்கள் மத்தியில் மகிந்தவின் பிரச்சாரமாக இருக்கும். ஆணாலும் நாட்டின் பொருளாதார நிலையும் வாழ்க்கை செலவு அதிகரிப்பும் அரசியல் தலமைகளின் ஊழலும் ஒரு குடும்பத்தின் சர்வதிகாரப்போக்கும் மக்கள் மத்தியில் பல கெள்விகளை எழுப்பி வருகிறது.ரவியின் கருத்தினைப் பார்த்தால் சிங்கள மக்கள் மட்டுமல்ல , தமிழ் மக்களும் புதுவை ரத்தினத்துரையின் கவிதையால் , அப்பாவி சிங்கள மக்களை கொன்றதை நியாப்படுத்தி போய் வா என (தங்கட புள்ளைகளை பத்திரமாக வைத்துக் கொண்டு) உணர்ச்சி பொங்க நின்றவர்கள்தான். இத்ல் சிங்களவர் மட்டும் இனவாதிகள்அல்ல

  15. அப்துல் says:

    சந்திரிக்கா வருவதற்கு ஒரு முன்னூட்டமே இது. களம் வாய்ப்பாக இருந்தால் சந்திரிக்கா பின் நிற்கப்போவதில்லை. முஸ்லிம் காங்கிரஸ் ஆப்பிழந்த குரங்கின் கதைதான். ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் மக்களில் பெரும்பகுதியினர் மகிந்தவுக்கு வாக்களிக்கப் போவதில்லை. ஹக்கீமுக்கு இதுவும் ஒரு சோதனைக்களம்தான். எனேனில் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மகிந்தவை ஆதரிக்கவில்லை. முஸ்லிம் காங்கிரசும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரித்து நின்றது. ஆனால் இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் இவர்களால் மகிந்தவை விட்டு வர முடியாது … முஸ்லிம் காங்கிரசின் ஆதரவுத் தளம் மோசமாக சரியும் அரசியல் நிலையை இது உருவாக்கும்.தமிழ் மக்களில் கணிசமானோர் மகிந்தவுக்கு வாக்களிப்பதற்கு வாய்ப்பில்லை. மலையக மக்கள் என்ன செய்வார்கள் என என்னால் சொல்ல முடியவில்லை. சிங்கள மக்கள் மத்தியிலும் , சுதந்திரக் கட்சி ஆதரவாளர் மத்தியிலும் தாக்கத்தினை ஏற்படுத்துகின்ற ஒரு பொது வேட்பாளரால்தான் நிலமையில் மாற்றத்தினை கொண்டு வரலாம்.

  16. ஹரன் says:

    சோபித தேரர் அவர்கள் எதிர்க்கட்சிகளின் சார்பில் குதித்தால் வேறு ஒருவகையில் நெருக்கடி வர வாய்ப்பிருக்கிறது. பலமான சிங்கள பவுத்த இனவாத ஆதரவுத் தளத்தை ஆட்டம் காணப்பண்ணும் ஒரு பலமான போட்டியாளராக அவர் இருப்பார். இதில் மட்டுமே சோபித தேரர் பலமானவர்.. இப்படியான ஒருவரும் வேண்டும் ஆனால் இது மட்டும் காணுமா? மற்ற கட்சிகளும் இது தொடர்பாக யோசிக்கும் என்றே நினைக்கிறேன்

  17. Inamullah says:

    (These are changes all Sri Lankans need ) After JR and RP successive candidates proposed almost all these constitutional changes..not only the common opposition candidate..unless the present MR regime goes for those changes the country would become a center of regional and global tension similar to Palestine in Middle East, But People won’t trust the ruling coalition unless they introduce proposed constitutional changes before the next Presidential election is declared – Inamullah

  18. இலங்கைச் சிறுபான்மை அரசியல் ஒழுங்கும் செயற்பாடும் – பன்மைத்துவ அரசியலுக்கான ஊக்கியா? தடைக்கல்லா? – ஒரு கருத்து

    பாதிக்கப்பட்ட மனோநிலையில் (victim mentality) இருந்துகொண்டு பெரும்பான்மை சமூகத்திலிருந்து வரும் முற்போக்கான முயற்சிகளையும் சந்தேகக் கண்கொண்டு மாத்திரம் நோக்கும் நிலை ஆரோக்கியமாக இல்லை.

    இலங்கையில் அரசியல் ஒழுங்கில் மாற்றம் வர வேண்டும் எனின் அதற்கு பெரும்பான்மைச் சமூகத்தினது பெருவாரியான ஆதரவும், பெரும்பான்மைச் சமூகத்திலிருந்தே அதற்கான முன்னெடுப்பும் தவிர்க்க முடியாதவை. இதனை எதிர்மறையாகக் குறிப்பிடுவதாயின், வெறும் உரிமை அரசியலில் ஈடுபாடு கொண்டுள்ள சிறுபான்மை அரசியல் முன்னெடுப்புகள் மூலம் இலங்கையில் பெருபான்மை சமூகங்களின் மனதையும் வாக்கையும் வென்றுகொள்வதற்கு எடுக்கும் பிரயத்தனத்தை விடவும், பெரும்பான்மை சமூகத்தினுள் இருந்து வரும் மாற்றத்தை நோக்கிய முஸ்தீபுகளுக்கான அங்கீகாரம் பெரும்பான்மை சமூகத்தில் அதிகமாகும்.

    இந்நிலையில், சிறுபான்மை சமூகங்கள் குறித்த முயற்சிகளுக்கான பூரண ஆதரவுடன் கூடிய கருத்துருவாகக்ச் செயற்பாடுகளை முன்னெடுப்பதே ஆரோக்கியமானது.

    எனினும், சிறுபான்மை அரசியலும் இனத்துவேச அரசியலையே அடிப்படையாகக் கொண்டுள்ள இலங்கையில், பெரும்பான்மை சமூகத்தில் இருந்து வரும் நியாயமான குரல்களும் புறக்கணிக்கப் படலாம். நமது இப்பாதிக்கப்பட்ட மனோநிலை சுபீட்சமான எதிர்காலத்திற்கு வழிவகுப்பதில்லை என்பதுடன் நாம் விரும்பாத கடந்த 66 வருட கால சர்வாதிகார ஆட்சிக்கு உறுதுணையாகவே இருக்கப் போகின்றது. இதனை எதிர்மறையாகக் குறிப்பிடுவதாயின் இன்று நிறைவேற்று அதிகார முறையை நீக்குவதற்கு அவசியமான மாற்று அரசியல் முன்னெடுப்புக்கு அழுத்தம் கொடுக்காத நமது கருத்துருவாக்கச் செயற்பாடுகள் நடைமுறையில் உள்ள சர்வாதிகார அரசுக்கான எமது மறைமுக ஆதரவாகவே தோன்றும்.

    இலங்கையில் பன்மைத்துவ சிந்தனைப் போக்கு பௌத்த மதகுருக்களால் முன்னெடுக்கப்படும் எனின், நிச்சயம் அது பௌத்த மக்களது மனதை வெல்வதற்கான நடைமுறை சாத்தியமான ஒரு வழிமுறையாக அமையலாம்.

    இன்றைய இலங்கையின் சிறுபான்மை அரசியல் முன்னெடுப்பு, பேரினவாத அரசியல் முன்னெடுப்புக்கு எதிரானது மற்றொரு இனத்துவேச அரசியல் முன்னெடுப்பு போன்றே பன்மைத்துவ அரசியல் முன்னெடுப்புக்கும் எதிரானது என்பது மிகக் கசப்பான ஒரு உண்மையாகும்.

  19. ஆழ்ந்து யோசித்தால், இலங்கையில் கட்சிகள்,தலைவர்கள்,மடாதிபதிகள்தம் வரலாறு பரந்துபட்ட மக்களுக்கு எதிரானதாகவே இதுவரை இருக்கிறது!பொதுவாகத் தமிழ்த் தலைமைகள் உடமை வர்க்கத்தோடு பிணைந்தே இருந்தவர்கள்.நிலவுகின்ற அமைப்புக்குச் சார்பாகவே இயங்கியவர்கள்.அது,செல்வாவாக இருந்தாலென்ன இல்லை பொன்னம்பலமாக இருந்தாலென்ன எல்லோருமே ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளாகவே இருந்து வந்துள்ளார்கள் என்ற முடிவே சரியானது.ஓட்டு வங்கிக்காக வெறும் இன-மத உணர்வுகளைத் தூண்டி “அடங்காத் தமிழன்” சுந்தரலிங்கம்-மங்கையற்கரசி வகை அரசியல் செய்தவர்கள்,நமது கட்சியரசியல் தலைவர்கள்.இவர்களுக்கு அரசியலை விஞ்ஞான ப+ர்வமாக விளங்கிக்கொள்ளும் திறன் முக்கியமாகப்படவில்லை.ஆனால், இந்தியா-இலங்கை மற்றும் அமெரிக்க உளவுத்துறை இந்த வெகுளித்தனமான தமிழ்த் தலைமைகளைத் தமது இலாபங்களுக்காகப் பயன்படுத்திய வரலாறுதாம் முள்ளிவாய்க்காலுக்குப் பின்னானவின்றுங்கூட நம்மை நடுத்தெருவில் விட்டுள்ளது- மூன்று இலட்சம் மக்களின் உயிர்களைக் காவுகொண்டு,நம்மை அகதிகளாக்கி அலையவிட்ட இத்தொடர் நிகழ்வில், தொடர்ந்தபடி அரசியல் செய்யும் தமிழ்த் தலைமைகளை யார் என்ன செய்துவிட முடியும்?எனினும்,இன்றைய வணக்கத்துக்குரிய சோபித தேரர்தம் அரசியல் நகர்வு-கோரிக்கைகளை வெறுமனவேயொரு “பெரும்பான்மை இனத்துள் இருந்து ஒரு முற்போக்குக் குரல்” என்றும்,தனிப்பட்ட நல்ல மனிதரது கோரிக்கையென்றும் ,அரசியல் ஜனநாயகச் செயற்பாடகக் குறுக்விட முடியுமா?

    அவரது கோரிக்கையில் எது முற்போக்கானது?அனைத்து அதிகாரமுடைய ஜனாதிபதிப்பதவியை ஒழித்தலா அன்றி மகிந்தாவுக்குச் சர்வேதச சட்ட எல்லையில் வைத்துத் தண்டித்தலா?தமிழ்பேசும் மக்களது -இலங்கைச் சிறுபான்மை இனங்களது மட்டுமல்ல பெரும்பான்மைச் சிங்கள மக்களது பொருளாதார மற்றும் நல்வாழ்வுக்கான அடிபடைகள் குறித்த நோக்கானதா? எது முற்போக்கானது?தீடீர் திடீரெனவெழும் தனிப்பட்டவர்களதும்,கட்சித் தலைவர்களதும்”நல்ல மனது”க் கோரிக்களை வெறுமனவே நம்பிக்கொள்ளும் பற்பல சந்தர்ப்பத்தைத்தாம் இந்தப் பொருளாதாரவாழ்வில் உலகம் பூராகவுமுள்ள மக்கள் நம்பிக்கொள்கின்றனர்.

    “பாதிக்கப்பட்ட மன நிலையிலிருந்து” தமிழர்கள், பெரும்பான்மை இனத்துக்குள்ளிருக்கும் முற்போக்குக் குரல்களைச் சந்தேகக் கண்ணோடு பார்ப்பதென்பதைக் குறித்து நாம் வரலாற்று ரீதியாகப் புரிந்திருக்கிறோமோ?

    இலங்கையின் ஆளும் வர்க்கமானது தனது எஜமானர்களான காலனித்துவக் கொடுங்கோன்மை அரசுகள்-ஏகாதிபத்தியங்கள்-பிராந்திய வல்லரசுகளோடிணைந்து பாதிப்புக்குள்ளாக்கிய இலங்கைச் சிறுபான்மை இனங்களது அரசியல் வாழ்வைக் குறித்து என்ன வகையான மதிப்பீடுகளோடு நாம் பெரும் பான்மை இனத்தின் முற்போக்குக் குரல்களை அணுகும்படி-அரவணைக்கும்படி கோருகிறோம்?

    இலங்கையில் அனைத்து ஓட்டுக்கட்சிகளது -இயக்கங்களதும் அரசியல் வரலாறானது இலங்கையைத் தத்தமது பொருளாதார மற்றும் பூகோள அரசியல் வியூகங்களுக்கமைய வழி நடாத்த முனையும் அந்நியச் சக்திகளால் ஊக்கப்படுத்தப்பட்டு,ஒருவகைக் கோணங்கித்தனமான அரசியலாகவே இன்றும் நகர்கிறது.முள்ளிவாய்க்காலுக்குப் பின்புங்கூட இனத்துவ அரசியலின் அடையாளப்படுத்தப்பட்ட இனவொடுக்கு முறையானது சாரம்சத்தில் இலங்கையின் ஒற்றைத் துருவ இனத்துவ அடையாளத்துக்கான நிபந்தனைகளைத் தாங்கியுள்ளது.இது பாராளுமன்றக் கட்சி அரசியலுக்குத் தேவையானது.இதை மிகத் தறுவாகக் கடைப்பிடிக்கும் இலங்கையை மாறி,மாறி ஆளும் கட்சிகளானவை இதுவரை இலங்கையின் இனப் பிரச்சனைக்கான எந்த முடிவுக்கும் வர முடியாதிருப்பதன் பின்னணி என்ன?வளர்த்தெடுக்கப்பட்ட சிங்களப் பெரும்பான்மை மனவியல்புக்கேற்ப அரசியல் -கட்சி நகர்வுகள் பெரும்பாலும் இலங்கை ஆளும் வர்க்க நலனின் பொருட்டென்பதற்கப்பால் நம்மை அண்டிய தேசத்தினதும் அரசியல் ஸ்த்திரத்தன்மை மற்றும் பூகோள அரசியல் நலன்களைப் பின்னி வைத்திருப்பதென்பதில் இன்றைய வண.சோபித தேரர்தம் கருத்திலிருந்து புரிவது கடினமானதா?

    இலங்கைத் தரகு முதலாளியத்தின் வளர்ச்சியானது பல் தேசியக் கம்பனிகளின் தேசங்கடந்த வர்த்தகத் தொடர் சங்கிலியால் பின்னப்பட்டபின் இலங்கையின் உள்நாட்டுப் போரில் அதன்பங்கு பெரிதும் யுத்தத்துக்கான முனைப்பைச் செய்வதில் தூண்டுதலாக இருந்தது.அதன் விளைவு முள்ளிவாய்க்காலில் எந்த அரசியலறமுமற்ற கொடும் யுத்தத்துள் தமிழ் மக்களைச் சிக்கவைத்த சிங்கள அரசு முற்றும் பாசிசப் புலிகளது அரசியலானது எவர்களது நலன்சார்ந்திருந்தது-இப்போது அதன் மிச்சசொச்சங்களதும் அரசியலது தெரிவு எது?அந்நிய நலன்களது தெரிவாக இது இருக்கவில்லையா?பிளவுண்ட உலக நிதி மூலதனங்களது பிடியுள் சிக்குப்பட்ட இலங்கையினது வரலாறாக இவை இருக்கும்போது வண.பிதா சோபித தேரர்தம் கருத்துக்களைப் பரந்துபட்ட மக்களது தெரிவுகளாக வரையறுக்கும் அவசரம் அரசியற் தற்கொலைக்கொப்பானது.இத்தகைய தற்கொலையைத் தமிழ்பேசுபவர்கள் ஏலவே புலிகளை ஆதரித்தபடி செய்துவிட்டனர்.

    இன்றைய பிளவுண்ட உலக நிதி மூலதனத்துக்கு இலங்கை வேட்டைக்காடாகப் பலப் பரிட்சார்த்த களமாக இருக்கிறது.நேட்டோ[NATO -wirtschaftliche und strategische Interessen ] தலைமையில் தம்மை முன் நிறுத்தும் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நலனானது இருஷ்சிய மற்றும் சீனா ,இந்திய மற்றும் பிறிக்ஸ் கூட்டமைகளும்[BRICS ] கூடவேயான சங்காய் கூட்டமைப்பு மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்குள் [The Shanghai Cooperation Organisation ]முட்டிமோதும் தருணங்கள் இலங்கையின் இனப் பிரச்சனையுள் புலிகளை அழித்துபோது கூடவே பல்லாயிரம் அப்பாவி மக்களையும் அழித்தே மோதியது.இது, ஒருபோதும் இலங்கையில் அரசியல் ரீதியானவொரு தீர்வுக்கு இலங்கையிலுள்ள பெரும்பான்மை மற்றும் சிறுபான்மை இனங்களை இணங்க விடுவதாகவில்லை.எந்தவொரு சமயத்திலும் ஒவ்வொரு இனங்களையும் எதிரெதிர் நிலைக்குத் தள்ளிவிடுவதற்கான சிறு-பெருங் கட்சிகளைத் தயார்ப்படுத்தி, இயக்கி வருகிறது.அநேகமாக இலங்கையிலுள்ள அனைத்துக் கட்சிகளும்-இயக்கங்களும் இந்தக் கயிற்றில்கட்டப்பட்டு பொம்மலாட்டஞ் செய்யப்படுபவை.இந்தப் பொம்மைகளின் பின்னே பிணைக்கப்பட்ட கயிற்றைப் பிடித்திருப்பவர்களின் அரசியலுக்கு விசுவாசத்தைத் தெரிவிப்பதில்”பெரும்பான்மை இனத்துக்குள் இருக்கும் முற்போக்குக் குரல்”முகமூடி அவசியமென்றால் அதையும் செய்யுங்கோ சாமிகளா!.ஆனால், இந்த முற்போக்குக் குரல் நமக்குப் புதில்லை!இவைகளைவிட மிக நேர்த்தியாக லங்கா சமசமாயக் கட்சி மற்றும் கொல்வின் ஆர்.டி.சில்வா போன்ற பெருந்தலைவர்களிடமிருந்தும் இன்றைய வாசு தேவ நாணயக்காரா வரையுமாக நாம் பார்த்தும் -கேட்டும் ஆச்சு!நடந்தது என்ன?

    தனிப்பட்டவர்களதோ அன்றி ஒரு கட்சியினதோ, தலைவரினதோ விருப்புக்குத் தெரிவுக்கு வெளியிலேதாம் இனப்பிரச்சனைக்கான காரணிகளுண்டு.அது, பாராளுமன்றத்துக்கு வெளியிலேதாம் உண்டு.அதை, அணுகுவதில்தாம் மேற்காணும் நலன்களைக் குறித்து பேச்சு வருகிறது.இலங்கையில் ஆளும் வர்க்கத்தின் இருப்புக்கு -நலனுக்குத் தெரிவாகும் அரசியல் என்ன?அது கட்சிகளது புதிய நிதியூகத்துள் மாறிவிட்ட வர்க்க அரசியலது தெரிவுக்குள் இணைவுறும் தருணங்களென்ன?மகிந்தா குடும்பமோ அன்றிப் பட்டார நாயக்க குடும்பமோ இல்லை ரணில் குடும்பமோ வெறும் அரசியல் தலைவர்களில்லை.அவர்களின்று பல்லாயிரம்கோடிச் சொத்துக்களுக்குச் சொந்தக்காரர்களென்பதில் நாம் காணும் அரசியலென்ன-தெரிவென்ன?இவர்களுக்கும்,ஆசிய-ஐரோப்பிய நிதி மூலதனத்துக்குமிடையிலான வர்த்தகவுறுவுகள் எத்தகையானவை?இவற்றைப் புரிந்துகொள்வதிலிருந்துதாம் நாம் காணும் இலங்கையின் சட்டவாத அரசின் சாரம்சத்தைப் புரிந்துகொள்ள முடியும்.இங்கிருந்துதாம் புதிய அணிகளது கூட்டு,அவைகளால் முன் வைக்கப்படும் கோரிக்கைகள்,அவர்கள் மக்களைச் சொல்லி, அணி திரளச் சொல்லும் கட்சிகளுக்குப் பின்னால் தள்ளும் அரசியல் அமுக்கக் குழு மனப்பாண்மையானது இத்தகைய பின்புலத்தைத் தள்ளி வைத்துவிட்டு அகவிருப்புக்குட்பட்ட தெரிவுகளால் இவைகளை நாம் ஆதரிப்பதில்லை.இந்த விவாதம் நீள்கிறது.நான்தொடரும் விவாத்தில் மேலும் தொடர்வேன்.

    ப.வி.ஸ்ரீரங்கன்
    09.02.2014

  20. v.sivalingam says:

    ப.வி.ஸ்ரீரங்கன் -பின்வரும் வாதங்கள் குறித்து

    – அனைத்து தரப்புமே நிதி மோசடி, வரி ஏய்ப்பு, வளத்திருட்டு மூலம் நிதியைத் திரட்ட முயற்சிக்கின்றன.
    – கட்சித் தலைவர்கள், அரச தலைவர்கள் என பதவிக்கு வருபவர்கள் குவிக்கப்பட்ட நிதிக்கு அங்கீகாரம் வழங்குகின்றனர்.
    – திரட்டிய நிதியைப் பாதுகாக்க அரச அதிகாரத்துள்ளும், அதன் வன்முறை யந்திரத்திற்குள்ளும் வியாபார வளமுள்ள தலைமை உருவாகிறது.
    – சிவில் சந்தைப் பொருளாதாரத்தையும், ராணுவ பொரளாதாரத்திற்குள் அமுக்கி பாரிய வர்த்தகத்தை இலங்கை அரச யந்திரம் கையகப்படுத்தியுள்ளது.
    – அரச முதலாளியமாகவிருந்த இலங்கை நவ தாராளவாதப் போக்குகளால் சில குடும்பங்களில் அரச முதலாளித்துவத்தை வீழ்த்தியுள்ளது.

    – கட்சித் தலைவர்கள், மந்திரிகள், ராணுவத் தளபதிகள் என்போரை சொத்துடமைவாதிகளாக்கிய பின் அவர்களே ஆளும் வர்க்கமாகின்றனர்.
    இதனை மறுத்து நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதி அதிகாரத்தைப் பறித்துவிட்டால் சனியன் விடுபட்டுவிடுமென வாதிப்பது சுத்த மோசடி.

    மேலே தரப்பட்ட வாதங்கள் எவ்வாறான ஆட்சி தேவை? என்பதை வலியுறுத்துகின்றன. ஆனால் அதை அடைவதற்கான வழிமுறை என்ன? இன்றுள்ள நிலமைகளிலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை நோக்கிய அடுத்த கட்டத்திற்குச் செல்வதற்கு என்ன வழி? மக்கள் திரட்டப்படவேண்டும். இப் பிரச்சனைகளின் தார்ப்பரியங்கள் உணர்த்தப்பட வேண்டும். அவ்வாறானால் தற்போதைய சூழலில் மக்களின் அரசியல் சார்ந்த உளவியல் என்ன? அடிப்படை மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தொழிலாள வர்க்கம் எவ்வாறான நிலையில் உள்ளது. தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் புரட்சியை நோக்கியதாக உள்ளதா? அல்லது தற்போதைய ஒடுக்குமுறையிலிருந்து சற்று மாறுதலை நோக்கிச் செல்ல விழைகிறதா? ஒடுக்கப்படும் மக்களின் பலம் எவ்வாறாக உள்ளது? ஒன்றிணைத்துச் செல்லும் அமைப்புகளின் பலம் என்ன? இவற்றின் கோரிக்கைகள் அம் மக்களுக்கு மாற்றம் மீதான நம்பிக்கையை ஊட்ட வேண்டுமெனில் அவர்கள் அன்றாடம் எதிர்நோக்கும் பிரச்சனைகளிலிருந்து தொடங்குவதா? அல்லது எட்டாத தூரத்தில் உள்ள தீர்வுகளை திணிப்பதா?

    விவாதம் செயல்முறை சார்ந்ததாக இருத்தல் அவசியமாகிறது. மக்கள் சார்ந்ததாக அமைதல் தேவையாகிறது. மக்கள் இன்றைய நெருக்கடிகளிலிருந்து நாளை தப்புவதற்கான வாய்ப்புகள் சாத்தியமாகும் என நம்பும் பட்சத்தில் அவை படிப்படியாக பலப்பட வாய்ப்பு உண்டு. நாட்டில் புரட்சிக்கான வாய்ப்புகள் அல்லது அதற்கான இயக்கு சக்திகள் போதுமானதாக இல்லை. அவை இந் நெருக்கடிகளிலிருந்து படிப்படியாக விடுவிக்கப்பட்டு ஒழுங்கமைக்க வேண்டியுள்ளன. அவற்றிற்கான விவாதம் தேவைப்படுகிறது. ஜனாதிபதி ஆட்சி பாரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடுமென யாரும் வாதிக்க முன்வரவில்லை. அவ்வாறான முட்டாள்தனமான கற்பனை யாரிடமும் இல்லை. ராணுவ மேலாதிக்கம், நிதி மோசடி, மனித உரிமை மீறல், குடும்ப ஆதிக்கம் போன்றவற்றின் கொடுமைகளிலிருந்த அம் மக்களை ஓரளவு விடுவிப்பதற்கான முயற்சியே இது. அவ்வாறான விடுதலை மூலம் கிடைக்கும் சுதந்திரம் நிலமைகளை மேலும் முன்னோக்கி தள்ளும். இதுவே இயங்கியல் விதி. ஜனாதிபதி ஆட்சியை ஒழிப்பது என்பது அவ்வாறான தேவையின் அடிப்படையிலிருந்து எழுகிறது.

    அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்லவேண்டியுள்ளது. முதலாளித்துவ ஜனநாயக கட்டமைப்பில் அதற்கான வாய்ப்புகள் உண்டு என்பதை வரலாறுகள் உணர்த்தியுள்ளன. இவ் விவாதங்கள் தத்துவார்த்த விமர்சனங்கள் என்பதை விட நடைமுறை அரசியலை வரித்துக்கொண்ட இலக்கை நோக்கி எவ்வாறு நிலமைகளை நகர்த்துவது? என்பதாகும். நடைமுறை சாராத விவாதங்கள் ஒருபோதும் மக்களை அடைவதில்லை. இன்றைய வாழ்விலிருந்து நாளைய வாழ்வு சற்று நம்பிக்கை அளிக்குமாயின் அதனூடாகவே பயணிக்க வேண்டும். நீண்ட இலக்குகள் குறித்து தற்போது விவாதம் நடத்துவதில் அர்த்தமில்லை. நிலமைகள் தினமும் மோசமாகிச் செல்கிறது. தலையீடு அவசியமாகிறது.

    அடுத்த கட்ட நகர்வு என்ன? வண. சோபித தேரோவின் முயற்சி அடுத்த கட்டத்தை நோக்கிய பயணத்தில் எவ்வாறான விளைவுகளைத் தரப்போகிறது? அவர் வெற்றி பெற்றால் நிலமைகள் எவ்வாறான மாற்றங்களை நோக்கித் திரும்பலாம்? ராணுவம் அரசைக் கைப்பற்றுமா? அல்லது அரசியல் அமைப்பினை மதிக்குமா? அவரது திட்டங்கள் என்ன? தமிழ் அரசியல் தலைமை இப் பிரச்சனை குறித்து எவ்வாறான தீர்மானத்தை நோக்கித் திரும்பப் போகிறது? புகலிடங்களில் எமது பணி என்ன? தத்துவ விளக்கங்களுக்குள் தலையைப் புதைக்கப் போகிறோமா? அல்லது அடுத்த கட்ட நகர்த்ல் குறித்து விவாதிக்கப் போகிறோமா?

  21. திரு.சிவலிங்கம் அவர்கள் எனது எதிர்வினைக்கான குறிப்பொன்றைத் தந்திருக்கிறார்.நடைமுறைசார்ந்து செயற்படுவதற்கான சூழல் -இலங்கையில் நிலவும் நிலவரங்கள் குறித்த அவரது கேள்விகள் ;மக்களது அன்றாட வாழ்வில் நிகழும் பிரச்சனைகள் குறித்து அதிலிருந்தொரு அரசியற் தலையீடு மற்றும் செயல் முறைசார்ந்து அதிகாரங்களை மக்களுக்கு அண்மையில் எடுத்துச் செல்வதற்கான தேவையை உறுதிப்படுத்துகிறார்.அது முதலாளித்துவ சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியம் என்கிறார்.இந்த நோக்கில் தலையீடு அவசியமென்கிறார்.

    இது சரியானதே.இதை மறுப்பதல்ல எனது நோக்கம்.முதலாளித்துவச் சனநாயகக் கட்டமைப்பில் சாத்தியாமாகும் “இந்த” அதிகாரத்தை மக்களை அண்மித்தெடுத்துச் செல்வதென்பது ஒரு கட்டத்தில் இது Regime change என்றளவில் உலகெல்லாம் நாம் காணும் “மக்கள்”போராட்டங்கள் -எழுச்சிகளுக்குள் மேற்சொன்ன சாத்தியத்தை முதலாளித்துவம் அநுமதித்திருக்கிறது.அதை க் கிழக்கு ஐரோப்பியத் தேசங்களிலும் ;அரேபிய வசந்தத்திலும் ஏனிப்போது உக்கரமாக நடைபெறும் ஊக்கிரைன் “எழுச்சி”யிலும் பார்க்கத் தக்கதே.இதன் அடி நாதமாக The Center for Applied Nonviolent Action and Strategies (CANVAS) தலைவர் திரு. Srdja Popovic (Otpor!) தகவமைக்கும் “மக்கள் திரள்”போராட்டங்கள் ஏலவே பல ஆட்சி மாற்றங்களைச் செய்திருக்கிறது. திபேத்தின் தலைலாமாவுக்கும் [Dalai Lama) இந்தக் CANVAS நிகழ்ச்சி நிரலுக்குங்கூட வலு வக்கணையான தொடர்புகளும்-வழிகாட்டல்களும் [ Deutschen Buddhistischen Union (DBU), ]தொடர்கிறது.திபேத்துக்கொரு Dalai Lama இலங்கைக்கொரு சோபித தேரர் எனத் தொடரும் சந்தர்ப்பங்களைக் குறித்து கேள்விகள் -சந்தேகங்கள் தவிர்க்க முடியாதவை.

    நடைமுறைசார்ந்து இயங்குவதும்;நாம் புலத்தில் உதிரிகளாகத் தத்துவத்துக்குள்க தலை புதைத்து மேலெழுவதும் அவசியமானதுதாம்.நமது நிபந்தனையற்ற ஆதரவு- ஒத்துழைப்புக்கள் -இணைந்த போராட்டங்கள் -மக்களை அணிதிரட்டல்கள் என்பதெல்லாம் தவறாகும் தருணங்களைக் குறித்தும் நாம் தறுவாகப் புரிந்தே ஆகவேண்டும். இதை மாக்ஸ் கோர்க்கைமரது மொழியில் சொன்னால் : ” எவர் இந்த முதலாளிய வியூகத்தைக்குறித்தும்,அதன் எதிர்ப் புரட்சிகரப் பாத்திரத்தையும் உரையாட விரும்பவில்லையோ அவர் பாசிசம் குறித்து உரையாடாது மௌனித்திருக்கலாம் [Wer vom Kapitalismus nicht reden will, soll über den Faschismus schweigen. By Max Horkheimer ] என்றும் சுட்டிக் காட்டுவேன்.
    வணக்கத்துக்குரிய சோபித தேரர் தம் நகர்வு ஒரு அரசியல் திருப்பு முனையாக மேலெழுவதென்பது பரந்தபட்ட மக்களது திரட்சியின் வாயிலாகவே சாத்தியமாகலாம்.அது ருனேசிய -எகிப்திய “எழுச்சிகளை”நமக்கு அறிமுகப்படுத்துமொரு சூழல் இலங்கையிலுண்டு. Professor Sudarshan Seneviratne[University
    of Peredeniya ] தலைமையில் 2011 ஆம் நடைபெற்ற உரையாடலில் (Peace and Conflict Studies ) “Participating Faculty Members ” கள் கீழ்வருபவர்கள்: Srdja Popovic[ CANVAS], Todd Armstrong, Victoria Brown, Krista Bywater, Lesley Delmenico, Brigittine French, Chris Hunter, Peter Jacobson, Suchi Kapila, Leslie Lyons, Elaine Marzluff, Jenny Michaels, Wayne Moyer, Elizabeth Prevost, Sarah Purcell, Monty Roper, Craig Upright, Timothy Werner, Eliza Willis, Shawn Womack, Mervat Youssef. இதுள் கலந்துகொண்டவர்கள் -பங்காளர்களில் பலர் ஓட்போரது[Otpor!] ஒத்துழைப்புக்குள் இயங்குபவர்கள்.இன்றைய இலங்கையினது ஆட்சி மாற்றம் குறித்து இலங்கை மக்கள் ஆர்வப்படுகிறார்களோ இல்லையோ மேற்குலகமும் அவர்களது அடியாட் படையான Otpor! உம் இலங்கையில் களத்திலுள்ளன.இது மிகக் கயமையான காலம்.தவறான அரசியலை நம்மைச் சொல்லி முன்னெடுக்கும் ஒடுக்குமுறையாளரது கை ஓங்கிவிட்டது!இதை அம்பலப்படுத்தி அரசியலைச் சரியாக முன்னெடுக்கும் புரட்சிகரக் கட்சியின் இல்லாமையானது ஓட்டுக் கட்சிகள்-போலிப் புரட்சிகரக் கட்சிகளின் பின்னே மக்களைத் தள்ளிச் செல்வதில் முடியப்போகிறது.இதை நிச்சியம் ஒட்போர் (Otpor!) செய்தே காட்டும்.இந்தச் சூத்திரத்தைப் புரிவதில் உங்களுக்கு என்ன சிக்கல் ?

    இது,சதி நிரம்பிய காலம்.

    இந்த நிலையில் இலங்கையின் அரசியலை எப்படி மதிப்பிடுவது?

    தொடருமிந்த அதிகார-ஆதிக்கத்துக்கான தெரிவுகள்,ஒரு அரசிலிருந்து அண்ணளவாகப்பேசப்படும் அராஜம் மட்டுமல்ல.அந்த அரசுக்குக்கீழ் சேவையாற்ற முனையும் கட்சி-குழுக்களது இனஞ்சார்-பிரதேசஞ்சார் அரசியல் முன்னெடுப்பும் அந்த வகையானவொரு அரசைக்குறித்தே இயக்குமுறம் தெரிவுகளோடு அந்நிய எடுபிடிகளாக வலம்வருகின்றன.இது இலங்கையின் முழுமொத்த மக்களுக்கும் எதிரானவொரு அரசியலாகும்.இந்த அரசியல் அமுக்க வியூகத்தத்தாம் சேர்ட்யா போப்போவிச்சும் அவரது எசமானர்களான அமெரிக்காவும் -ஐரோப்பாவும் “The Center for Applied Nonviolent Action and Strategies ” என்கிறார்கள்.இதைக் காந்தியின் பெயரால் மொழி பெயர்த்தும் வைக்கின்றனர்.நான் நினைக்கிறேன் அன்று காலனியவாதிகளுக்கு முன் இந்தியப் புரட்சிகரச் சக்திகளைக் காந்தியடிகளார் காட்டிக்கொடுத்ததுபோலவேதாம் இதையும் நாம் புரிந்தாக வேண்டுமென.

    மக்களதும்,தேசத்தினதும் சுயாதிபத்தியத்தைக் கருவறுக்கும் இந்தப் போக்குகள் ஒரு கட்டத்தில் மிகக்கெடுதியான பணியவைத்தலெனுந்தெரிவில் ஆயுதங்களால் மக்களைப் பணிய வைத்துக்கொள்ள முனையும்போது[ ருனெசியா மற்றும் எகிப்தைப் இப்போது பாருங்கள்] சட்டவாத அரசு என்பது இத்தகைய தேசங்களில் முழுமையாக அழிக்கப்படுகிறது.இதனால் நியாய அரசப் பண்பான மக்களைச்சார்ந்த அரசின் சட்டங்கள் பூர்ச்சுவாப் பண்புக்கமைய அதன் போக்கிலிந்து தெரிவாகும் நிலைமைகள் தொலையக் கட்சி-குழு நலன்வகைக்குட்பட்ட நலன்களது இருப்புக்கானவொரு “சட்டம்-ஒழுங்கு” ஜனநாயத் தெரிவிலிருந்தும் முழு மக்களதும் பெயராகத் தேசத்தில் முகிழ்த்துக்கொண்டேயிருக்கிறது.இதைத்தாம் வண.சோபித தேரரது வெற்றி அல்லது வரவு தரமுனையும்[இதற்கு அப்பாலானவொரு தெரிவை அவருக்குப் பின்னிருக்கும் உந்து சக்திகள் அனுமதிக்குமென எவரும் நம்பிக்கொள்வது அவரவர் அறிவுக்கும் -புரிந்தலுக்கும் உட்பட்டதே!].

    இது இலங்கைக்கு மிக அவசியமான தெரிவாகவும் மாறிக்கொண்டிருக்கும் இன்றைய சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களது எதிர்கால வாழ்வும்,துய்ப்பும் மிக மோசமான இராணுவ-ஆயுதக்குழுக்களது நலன்கட்கு மாறாக முரண்பட வாய்ப்பின்றிப்போகிறது.மக்களது சுயாண்மையானது தேசத்தின் சுயாதீனமானவொரு அரசின் ஆதிக்கத்தோடவே அரும்பமுடியும்.இலங்கையின் சுயாதிபத்தியத்தைக் குலைப்பதில் மேற்குலகம் மிக வேகமாகவே காரியமாற்றுகிறது.அதற்கேற்பவே மகிந்தா குடும்பத்து கோணங்கித்தனமான அரசியலும் அவர்களுக்கிசைவாகவே [மேற்குலகத்துக்கு]இருக்கிறது!

    இலங்கையானது மேற்குலக லொபிகளது சதி அரசியலுக்குள் வீழ்ந்துவிடும் அபாயமானது நெருங்கிக்கொண்டிருக்கிறது. அது,இலங்கைச் சிறுபான்மையினங்களைத் தமது அரசியல் நலன்களுக்கமையப் பயன்படுத்திவரும் இந்தச் சூழலில் தமிழ்த் தேசியவாத வியாபாரிகள் தமக்கான இலாபவேட்கையோடு இந்தச் சதி அரசியலுக்குள் மிக நேர்த்தியாகவே நுழைகின்றனர்.இந்த நுழைவென்பது பண்டுதொட்டுத் தொடரப்படும் தமிழ்தேசிய வலதுசாரிய அரசியலாகவே இருக்கிறது.இதை முறியடிப்பதில் இலங்கை தன்னை முழுமையாக [ Social space, political field and political position ]இலங்கைத் தேசத்தின் சுயாதீனத்தோடு அரசியலைச் செய்தாகவேண்டும்.இங்கு வண.சோபித தேரது பாத்திரம் என்ன?

    இலங்கையானது இதுவரை மேற்குலகத் தேசங்களது நலனுக்காகத் தனது சுயாதிபத்தியத்தையும்,இலங்கை மக்களது அமைதியான வாழ்வையும் பலியிட்டு வந்திருக்கிறது.இதை உய்துணரும் இலங்கையின் இன்றைய அரசானது இலங்கைத் தேசத்தின் அனைத்து மக்களுக்குமான இலங்கைத் தேசத்தின் இறையாண்மை-சுயாதீனஞ்சார்ந்த ஜனநாயக விழுமியங்கட்கு முகம்கொடுத்து அரசியல் செய்தாகவேண்டும்.இதை வலியுறுத்தியவொரு போராட்டங்கூட மக்களை அண்மித்த அடிப்படையுரிமைகள் சார்ந்த சனநாயகக் கோரிக்கையை முன் தள்ளியே தீரும்.

    ஒரு தேசமானது தனது அனைத்து மக்களுக்குமான சுயாதீன-சுயாதிபத்திய அரசைக்கொண்டிருப்பது அவசியமாகிறது.இந்தச் சுயாதீனமான அரசானது எப்பவும் தேசத்தினது அனைத்து மக்களுக்குமானவொரு பொருண்மியத் தகவமைப்போடும் அதன் உள்ளார்ந்த தொழிலாளர்களது நலனோடும்-உறவோடும்இசைந்த ஜனநாயகத்தால் வழிநடாத்தப்பட்டிருக்கவேண்டும்.இன்றைய மேற்குலகச் சிந்தனை இதற்கமையத்தாம் மக்களது நலன்களைப் பிணைத்துக்கொண்ட அரசியலமைப்பை வலியுறுத்திக்கொண்டு வருகிறது ,தத்தமது தேசங்களுக்குள்.

    இலங்கைத் தேசமானது முழுமொத்த மக்களுக்கானவொரு அரசியல்-சமூகப் பயன்சார்ந்த அரசாகப் பயணிக்கவேண்டியவொரு இக்காட்டான சூழ் நிலைக்குள்ளிருக்கும் போதே[G.H. Peiris, Sri Lanka: Challenges of the New Millennium (Colombo: Kandy Books, 2006) ] அதைத் துவசம் செய்த அந்நிய சக்திகள் நவலிபரல் லொபிக் கட்சியான யூ.என்.பி மற்றுந் தமிழ் தேசியவாதக் கள்வர் மூலம் அந்தத் தேசத்தை நாசமறுத்தனர்.

    அதன் இன்றைய பொருளாதாரக் கூட்டணியானது அதன் எல்லைக்கப்பாலான அரச அதிகாரத்தையும்,ஆதிக்கத்தையும் கோரிக்கொண்டிருக்கும்போது அங்கே, காலத்துக்கு முந்திய அதிகாரப் போட்டியானது குறிப்பிட்ட இலங்கை மக்கட் கூட்டத்தைப் பணிய வைத்தலெனும் பெருத்த ,பொருந்தாத வினைக்குள் மீளப் பயணிக்கவேண்டிய துர்பாக்கிய நிலைக்குள் கட்சிசார் அரசியல் முட்டிமோதுகிறது.இந்தப் புள்ளியற்றாம் நிறைவேற்று அதிகாரமுள்ள சனாதிபதி முறைமைகுறித்த கேள்விகள் -முரண்பாடுகள் செயற்கையாக முன் தள்ளப்படுகிறது.இதைப் பலமான கோரிக்கையாக -அரசியல் முரண்பாடாக மாற்றுவதில் வணக்கத்துக்குரிய சோபித தேரரது அரசியற் பிரவேசம் ஒத்துழைக்கின்றது.முள்ளிவாய்க்காலில் மக்களைக் கொத்துக் கொத்தாக அழித்த மகிந்தாவை அம்பலப்படுத்திப் பாசிசப் புலிகளை மக்களிடம் இருந்த அந்நியப்படுத்தும் எந்தப்போராட்டம் அல்லது கருத்தைக்கூட இவர்களால் 2009 இல் தெரிவிக்க முடியவில்லை!எனினும்,இன்றைய சூழ்நிலையில் மக்களது அடிப்படைப் பிரச்சனைகள் >அரசுக்கும் மக்களுக்குமுள்ள பாரிய முரண்பாடுகள் < சனநாயகத்தை மறுத்தொதுக்கும் மாபியாப் பொருளாதார நகர்வுகளது தெரிவின் வழியென்பதால் இத்தகையப் பொருளாதார நெறியைகக் குறித்து என்ன புரிதலை வண.சோபித தேரர் கொண்டிருக்கிறார்? ; இது ஒட்போரது காலம்[Non-violent Actions and Strategies -S. Popovic) ]அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது.தேசத்தின் சுயாதிபத்தியம் என்பது மகிந்தாவுக்கு வக்காலத்து வாங்குவதல்ல! விவாதம் தொடரும்…

    ப.வி.ஶ்ரீரங்கன்
    10.02.2014

  22. vaithi says:

    நண்பர் சிறி ரங்கனுக்கு … சரி இவ்வளவும் சொல்கிறீர்களே மாற்றத்திற்கு என்ன செய்ய வேண்டும், அத நடைமுறை சாத்தியமென்ன என்பது தொடர்பாய் சொன்னால்தான் நீங்கள் சொல்வது பற்றி நாங்கள் விவாதிக்கலாம். மாற்றத்திற்கான நடைமுறைசார்ந்த வெலைத்திட்டமோ, முன்வைப்புகளோ இல்லாது போனால் , ஏட்டு சுரக்காய் கறிக்குதவாது என்கிற கதையைத்தான் மீளவும் சொல்ல வேண்டி வருகிறது. உங்களிடமிருக்கும் அரசியல் வேலைத்திட்டமென்ன? இலக்கை அடைவதற்கான இன்றைய உலக ஒழுங்கை கவனத்தில் கொண்ட முன் மொழிவென்ன? நீங்கள் முன்வைத்தால் இது தொடர்பாக நாம் உரையாட முடியும். சிவலிங்கமும் அதனைத்தான் கேட்கிறார் என நம்புகிறேன் சுத்தி சுத்தி சுப்பர கொல்லைக்குள் நிற்க வேண்டாம்./அமெரிக்க,மேற்குலகினது கை இலங்கையில் ஒங்கி வருகிறது./ இதெல்லாம் இப்ப அரசியலில் அறிவுள்ள சிறுபிள்ளைக்கும் தெரிந்த விடயங்கள். என்ன உங்கள் வேலைத்திட்டம் அதனை சொன்னால் கோடிப் புண்ணியம் கிடைக்கும்.

  23. Ummu Hana says:

    “பேரினவாதத்தின் கைக்கூலி” என்று சொல்லிவிடுவது இலகு.

    இலங்கை அரசியல் களத்தை உன்னிப்பாக அவதானித்தால், பல்லின சமூக மக்கள் வாழும் ஒரு நாட்டில் இனத்துவ அடிப்படையில் காணப்படும் அரசியல் கட்சியமைப்பு சிறுபான்மையினரை அரசியல் ரீதியாகத் தொடர்ந்தும் சிறுபான்மைப்படுத்தியே வைக்கும் என்ற பொதுவிதிக்கு இலங்கை அரசியல் ஒன்று விதிவிலக்கல்ல என்றை உண்மையைப் புரிந்து கொள்ளலாம்.

    இலங்கை வளப்பற்றாக்குறை நிலவும் ஒரு நாடு என்பதும் வளப்பற்றாக்குறைக்கான தீர்வு முன்வைப்புக்கள் அற்ற நிலையில், இனத்துவ ரீதியான அரசியல் கட்சிகளின் அரசியல் தந்திரோபாயம் வாக்கு வங்கியை இலக்காகக் கொண்ட வளப்பகிர்வுத் திட்டமாக இருக்கும் நிலையில் பேரினவாத அலைகளுக்குள் அநாதரவான பேரினச் சமூக மக்களும் இருக்கின்றனர் என்பதனை நாம் இலகுவாக மறந்து விடுகின்றோம்.

    இங்கு மாற்றத்தின் அடிப்படை, சிறுபான்மை சமூகத்திடம் பெரும்பான்மை சமூகத்தினுள் பன்மைத்துவ அரசியல் கட்டமைப்புக்கு ஆதரவாகக் கருத்துருவாக்கம் செய்வதும் வளப்பற்றாக்குறை நிவர்த்திப்புக்கான தேசிய மட்டத்தில் திட்டமுன்வைப்புகள் மூலம் தாம் இந்த நாட்டுக்கு ஒரு சொத்து என்பதனை நிரூபிப்பதுவும் தான் என்று குறிப்பிடலாம்.

    பற்றாக்குறை நிலவும் சமூகத்தில் இனரீதியான அரசியல் கட்டமைப்பு சிறுபான்மைக்கு ஒரு போதும் நீதியைப் பெற்றுக்கொடுக்காது. அது மாத்திரமன்றி வளப்பாற்றாக்குறையை நிவரத்திப்பதன் மூலம் அனைத்து மக்களதும் தேவைகள் நிறைவு செய்யப்பட வேண்டியமை குறித்த கருத்துருவாக்கத்திற்கு சிறுபான்மையினரின் இனத்துவேச அரசியல் தடையாக இருப்பது போன்றே சிறுபான்மை அரசியல் களத்தை “பேரினவாதிகளின் கைக்கூலி” என்ற மொட்டையான

    விமர்சனமும் மையப் பிரச்சினை குறித்த கவனத்தை வேறு திசைக்குத் திருப்பி விடுகின்றது.

    இத்தகைய மொட்டையான விமர்சனங்களைத் தவிர்த்து ஆரோக்கியமாக கருத்து முன்வைப்புக்களை நோக்கி நகர்வது காலத்தின் இன்றியமையாத தேவையாகும்.

  24. முஸ்லிம் காங்கிரஸ் தலைமைகள் கூறுவது போல இதற்குப் பின்பும் முஸ்லிம்களின் வாக்குப் பலம் இப்படித்தான் இருக்கும் என்று உறுதிப்பட கூறி தப்புக்கணக்குப் போடும் தலைமைத்துவங்கள் வாக்களிப்பது முஸ்லிம் மக்கள் என்பதனை மறந்தே சொல்கின்றனர். அதற்கு காரணம் மு.கா மகிந்த வழிகாட்டுதலில் முஸ்லிம் மக்களின் முதுகிலேறி பயணிப்பதாகும். இதற்கான சரியான பதிலை வடமாகாண தேர்தலில் அரசு தமிழர்களிடமிருந்து அடிவாங்கியதைப் போல மு.காவும் பின்வரும் காலங்களிலுள்ள தேர்தல்களில் அடிவாங்கிய பின்புதான் தன் நாவையும் அடக்கி முஸ்லிம்கள் பக்கம் யோசிக்கத்தொடங்கும். அப்போது “கண்கெட்டபின்னே சூரிய நமஸ்காரம்”என்றாகி அழுகிய குப்பைத்தொட்டியில் புதிதாகப் போட்ட குப்பையாக கிடக்கும்.ஆட்சி மாற்றம் வந்தபின்பு குறிப்பிட்ட சில பொதுத் தேர்தல்களின் பின்பு அன்று இலங்கை தமிழருசுக் கட்சியாகவிருந்து இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பாக உருமாறியிருக்கின்ற கட்சியானது எதிர்காலத்தில் தமிழ் பேசும் மக்களின் கட்சியாக மாற்றம் பெற்று இலங்கையில் முக்கியமான எதிர்கட்சியாகவும் வரும் நிலையும் காணப் படுகின்றது.அதுபோல புதிய அரசியல் கலாச்சாரமாக பல்லின பாராழுமன்ற நிறைவேற்று கூட்டரசாங்கமாகவும் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

Post a Comment