Home » இதழ் 14 » *மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

 
 

*மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியதன் பொறுப்பு! -மீராபாரதி

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

தேவை – புதிய சிந்தனை! புதிய கட்சி! புதிய செயல்!

   சில குறிப்புகள்!

 —————————————————————–

தமிழர்கள் இன்று இக்கட்டான ஒரு சூழ்நிலையில் வாழ்கின்றனர் என அனைவரும் கூறுகின்றனர். ஆனால் இதிலிருந்து எவ்வாறு வெளியேருவது என்பது தொடர்பாக வழி காட்டுபவர்கள் ஒருவரும் இல்லை. ஆகவே அவ்வாறான ஒரு வழியைக் கண்டுபிடிக்க வேண்டிய தேவை உள்ளது. இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கான பொறுப்பை ஏற்கவேண்டியது  தமிழர்களை ஒடுக்குகின்ற சிறிலங்கா அரசே. இருந்தபோதும் அவர்கள் மீது tamil ladyகுற்றம் சுமத்துவதால் மட்டும் இந்த சூழல் மாறிவிடப்போவதில்லை. ஒருபுறம் ஒடுக்கின்றவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும். மறுபுறம் இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கும் அதை மாற்றுவதற்குமான நமது பங்களிப்பு பொறுப்பு என்ன என்பதை நாம் உணர வேண்டும். அதாவது நாம் எங்கே, என்ன தவறு செய்தோம் என்பதைக் கண்டறியவேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாக உள்ளது. இதன் அடுத்த கட்டமாக, இனி என்ன செய்ய வேண்டும் என சிந்திக்கவும் திட்டமிடவும் வேண்டும். இதனை நாம் செய்யாமல் நமது விடுதலை நோக்கி ஒரு அடி கூட இனி முன்னேற முடியாது.

 

ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை இன்றைய சூழலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டியது தவிர்க்க முடியாத ஒரு செயற்பாடாகின்றது. இதனையே கடந்த மாகாண சபைத் தேர்தலில் வடபகுதி வாக்காளர்களும் கிழக்கு மாகாண தேர்தலில் குறிப்பிடத்தக்க வாக்களர்களும் செய்தனர். இவர்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குகள் இந்தக் கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ அல்லது குறிப்பிட்ட சில தலைவர்களுக்கோ அளிக்கப்பட்டதல்ல என ஆய்வாளர்கள் பலர் குறிப்பிடுகின்றனர். மாறாக இது ஈழத் தமிழர்கள் எடுத்த ஒரு அரசியல் முடிவு. அதுவும் குறிப்பான இன்றைய சூழலில் இவ்வாறு முடிவு எடுத்திருப்பது அவர்களது உறுதியையும் தெளிவான அரசியல் நிலைப்பாட்டையும் வெளிப்படுத்துகின்றது. இவ்வாறு தமது அரசியல் முடிவுகளையும் நிலைப்பாடுகளையும் இவர்கள் இன்று மட்டும் வெளிப்படுத்தவில்லை. கடந்த காலங்களிலும் வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். ஆனால் அரசியல் தலைவர்கள் அதனை சரியாக உள்வாங்கவில்லை. அல்லது அதற்கு உண்மையாக இருந்து செயற்படவில்லை. அதன் விளைவே கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட ஆயுத அரசியல் போராட்டமாகும்.

 tna

 ஆயுதம் தாங்கிய இளைஞர்கள் இயக்கங்களாக உருவாகியபோதும் மக்கள் தம் உயிரைப் பணயம் வைத்து பங்களித்திருக்கின்றார்கள். ஆனால் ஆயுதம் தூக்கிய தலைவர்களும் மக்களை சரியாக வழிநடாத்தவில்லை. இதன் விளைவுகளே இன்றைய சூழல் என்பதையும் நாம் முதலில் புரிந்து கொள்வது அவசியமானது. இவ்வாறு மக்களைப் புரியாமல் இருந்தமைக்கும் போராட்டத்தை மக்கள் மயப்படுத்தாமல் தவறாக வழிநடாத்தியமைக்கும் பல காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. இந்தக் காரணங்கள் சரியா தவறா என்பதற்கு அப்பால் முக்கியமானவை. ஆராயப்படவேண்டியவை. இந்த ஆய்வை ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களின் அடிப்படையிலிருந்து முன்னெடுப்பதே இன்றைய சூழல் எவ்வாறு உருவானது என்பதையும் இதனை எவ்வாறு மாற்றலாம் என்பதையும் புரிந்து கொள்ள வழிவகுக்கலாம்.

 

ஈழத் தமிழ் தேசத்தில் ஒடுக்கப்படுகின்ற ஒவ்வொருவருக்கும் தமது விடுதலைக்கான போராட்டத்தை முன்னெடுப்பதற்கு வேறு வேறு காரணங்கள், நலன்கள், அரசியல் அபிலாசைகள் இருக்கின்றன. அதேவேளை இவர்கள் அனைவருக்கும் சிறிலங்கா அரசாங்கத்தின் ஒடுக்குமுறையிலிருந்து விடுபட வேண்டும் என்கின்ற பொது நோக்கம் ஒன்றும் காணப்படுகின்றது. ஆகவே ஈழத் தமிழ் தேசத்தில் (அக ஒடுக்குகின்ற மற்றும் ஒடுக்கப்படுகின்ற) ஒவ்வொருவரும் தமது குறிப்பிட்ட நலன்களில் அக்கறையாக இருக்கின்ற அதேவேளை பொது நலன் நோக்கி கூட்டாக செயற்பட வேண்டியது அவசியமானதாகும். இது இன்றைய சூழலில் இன்றியமையாத ஒரு செயற்பாடாகும். ஆனால் ஒவ்வொரு கட்சிகளுக்கும் இயக்கங்களுக்கும் அவரவர்களுக்கான வர்க்க, சாதிய, தேசிய, பால் நலன்களுக்கு அமையவே செயற்படுகின்றன. இந்த முரண்பாடுகள் நட்பு முரண்பாடுகளாக இல்லாமல் பகை முரண்பாடுகளாக இருப்பதாலையே அனைவரும் ஒன்றினைந்து செயற்படுவதற்கு பாரிய தடைகளாக இருக்கின்றன. இவர்கள் அனைவரும் தமது நலன்களைப் பின்தள்ளி ஈழத் தேசத்தின் நலனை முன்னிறுத்தி செயற்பட்ட காலம் ஒன்றிருந்தது. அது குறிப்பிட்ட சூழலினாலும் பின்பு ஆயுத அதிகாரத்தின் முன்னால் மட்டுமே நடைபெற்றது. புரிந்துணர்வின் அடிப்படையில் நடைபெற்றதா என்றால் அது கேள்விக்குறியே.

 

ஈழத்  தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் பல இலங்கையில் செயற்பட்டன. இன்றும் செயற்படுகின்றன. இக் கட்சிகள் ஒவ்வொன்றுக்கும் கடந்த கால வரலாறு ஒன்று உண்டு. இவற்றுக்கு சமூக, வர்க்க, சாதிய, பால் அடித்தளமும் அதற்கமைவான கருத்தியல்களும் இருக்கின்றன. அதேவேளை இவர்களுக்கு முற்போக்கான கட்சிக் கொள்கைகளும் உண்டு. இக் கொள்கைகளுக்கும் இவர்கள் வெளிப்படுத்தும் நாளாந்த செயற்பாடுகளுக்கும் கருத்துக்களுக்கும் இடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இந்த வேறுபாடுகளே இவர்களது உண்மையான கருத்துக்கள், நிலைப்பாடுகள் என்ன என்பதை வெளிப்படுத்துகின்றன. இவற்றை சமூக அரசியல் ஆய்வாளர் ஒருவர் ஆய்வு செய்வதனுடாக அனைவரும் புரிந்து கொள்ள உதவி செய்யலாம். இதன் மூலம் இக் கட்சிகளின் கருத்தியல் அடித்தளம் என்ன என்பதை உறுதி செய்து கொள்ளலாம். இது ஒரு சுய/விமர்சன செயற்பாடாக கூட அமையலாம்.

 

தமிழ் காங்கிரஸ் கட்சியின் ஆரம்பகாலம் வெளிப்படையாகவே யாழ் மேலாதிக்க உயர் வர்க்க சாதிய நிலையைப் பிரதிநிதித்துவப்படுத்தியவர்கள் என்றால் மிகையல்ல. இதனுடன் தமிழ் தேசிய கோரிக்கைகளையும் முன்வைத்தவர்கள். பிற்காலங்களில் தமிழ் தேசிய அரசியலை பிரதானமாக முன்னெடுத்து கடந்த கால கறைகளைக் கழுவிக்கொள்ள முயற்சித்தார்கள். அதில் ஒரளவு வெற்றியும் பெற்றார்கள். ஆனால் இவர்களிடம் தமிழ் தேசிய விடுதலை மற்றும் சமூக மாற்றம் தொடர்பான தெளிவான நிலைப்பாடுகள் இருக்கின்றதா என்றால் அது கேள்விக்குறியே. ஆரம்ப கால தமிழ் காங்கிரசின் சிறிலங்கா அரசுடனான சமரச செயற்பாடுகளில் நம்பிக்கை இழந்து ஆரம்பமானதே தமிழரசுக் கட்சி.

 

தமிரசுக் கட்சி ஆரம்பங்களில் தமிழ் தேசிய விடுதலையைப் பிரதானமாக முன்னெடுத்தது. ஆனால் பிற்காலங்களில் அதுவும் சமரசங்களினுடாக தவறுகள் இழைத்தன என்பது கடந்த கால வரலாறு. அதிகார சக்திகளுடன் சமரசங்களுக்கு செல்வது அல்லது அவர்கள் முன் வாய் மூடி மெளனியாக அமைதியாக இருப்பது என்பது இவர்களது வழமையான போக்காக இருந்து வந்துள்ளது. மேலும் இவர்கள் தமது கருத்தியலில் உறுதியானவர்கள் இல்லை என்பதை போர் ஆரம்பிப்பதற்கு முதலிருந்து இறுதியாக போர் முடிவுற்றதாக கூறியபின் நடைபெற்ற பல நிகழ்வுகள் வரை சான்று பகர்கின்றன. உதாரணமாக இறுதியாக  சிறிலங்கா கொடியை தூக்கிய நிகழ்வும் மற்றும் போரை முன்னின்று நடாத்திய சிறிலங்காவின் தளபதி சரத் பொன்சேகாவை ஆதரித்தமையுமாகும். இவ்வாறன உறுதியற்ற நிலைப்பாடுடைய இவர்களது தலைமையில் ஈழத் தமிழ் தேசம் விடுதலை பெறுமா என்பது கேள்விக்குறியே.

 

மிதவாத தலைமைகள் ஒரு கட்டத்தில் தாம் ஒன்றினைவதன் மூலமே தமது அரசியல் அபிலாசைகளை அடையலாம் என்பதைப் புரிந்து கொண்டனர். இதன் விளைவே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஆனால் இக் கூட்டணியும் ஏற்கனவே கட்சிகளிலிருந்த  போக்கையே தமது செயற்பாடுகளில் வெளிப்படுத்தின. இவ்வாறான இக் கட்சிகளின் ஆரம்பகால தவறுகள் உறுதியற்றதன்மை piraba,சமரசங்கள் என்பனவே பிற்காலங்களில் ஆயுதம் தாங்கிய இளைஞர்களின் எழுச்சிக்கு காரணமாக அமைந்தன. ஆனால் இந்த மிதவாதக் கட்சிகள் தமது கடந்த கால செயற்பாடுகளை கருத்தியல்களை சுயவிமர்சனம் செய்யாது இன்றைய நிலைக்கு ஆயுத இயக்கங்களை மட்டும் குறை கூறுவதும் விமர்சிப்பதும் சந்தர்ப்பவாத பிழைப்புவாத அரசியலாகும். மற்றவர்களை விமர்சிப்பதற்கு முதல் நாம் என்ன தவறு செய்தோம் என்பதைக் கூறுவதே ஆரோக்கியமான ஆரம்பத்திற்கு முதல்படியாக இருக்கும்.

 

மிதவாத தலைமைகளிடம் நம்பிக்கையிழந்து பல ஆயுதம் தாங்கிய இயக்கங்கள் உருவாகின. பிரதானமாக விடுதலைப் புலிகள், புளொட், டெலோ, ஈபிஆர்எல்எவ், மற்றும் ஈரோஸ். இவர்கள் அனைவரும் ஆரம்பக் காலங்களில் அர்ப்பணிப்புடன் இயங்கினர். ஆனால் இவர்கள் அனைவரும் இந்திய அரசின் வலைக்குள் சிக்கியிருந்தனர். இந்திய அரசு தமது நலன்களை முதன்மைப்படுத்தி அனைத்து இயக்கங்களையும் தவறாக வழிநடாத்தினர். இதற்குப் பல உதாரணங்கள் வரலாற்றில் உள்ளன. விடுதலைப் புலிகள் இந்திய வலைக்குள் இருந்தபோதும் பின் பல காரணங்களால் விலகிக் கொண்டனர். அல்லது அவ்வாறான ஒரு நிலை உருவானது. அதேநேரம் விடுதலைப் புலிகள் மற்றும் ஈரோஸ் தவிர்ந்த பிற இயக்கங்கள் இந்திய இராணுவ வருகைக்குப் பின்னர் அவர்களுடன் இணைந்தும் அதன் பின் இலங்கை அரசாங்கங்கள் மற்றும் இராணுவத்துடன் இணைந்தும் புலி எதிர்ப்பின் அடிப்படையில் தமிழ் மக்களுக்கு எதிரான மிக மோசமான செயற்பாடுகளை மேற்கொண்டனர். இதுவே இந்த இயக்கங்களின் கடந்த கால அரப்பணிப்பான செயற்பாடுகளையும் மக்கள் மனங்களில் இருந்து மறக்க செய்தன என்பது தூர்ப்பாக்கியமானது. இந்த இயக்கங்களில் ஈபிஆர்எல்எவ் ,டெலோ, புளொட் மற்றும் ஈரோஸ் உட்பட அனைத்து இயக்கங்களும் பிற்காலங்களின் ஐனநாயக வழிக்குத் திரும்பியதாக அறிவித்துக் கொண்டன. ஆனால் இந்த ஜனநாயக வழி என்ன என்பது இவர்களுக்கு மட்டுமே வெளிச்சமானது.

 

விடுதலைப் புலிகளும் 70களின் இறுதிகளில் ஆரம்பித்தபோதும் 90களின் ஆரம்பங்களிலிருந்து ஈழத் தமிழ் தேசத்தை தனித்துப் பிரதிநிதித்துவம் செய்தவர்கள். இராணுவ வழிமுறைகளுக்கு ஊடாக அரசியலை நகர்த்தியவர்கள். இவர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து பிற இயக்கங்களுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டன. ஆனால் இவை தந்திரோபாய அடிப்படையில் மட்டுமே இருந்தன. சக இயக்கங்கள்  போல சோரம் போகவில்லை. ஆகவேதான் இவர்களால் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் தொடர்ந்து நிற்க முடிந்தது. ஆனால் இறுதியில் தலைமை உட்பட பல அங்கத்தவர்கள் போராடி மரணித்தார்கள். பலர் சரணடைந்து சித்திரவதைக்குள்ளாகி கொல்லப்பட்டார்கள். சிலர் அரசுடன் இணைந்துவிட்டார்கள். இவர்கள் போராட்டத்தை தொடர்ந்தும் தவறான வழிகளில் முன்னெடுத்தமையானது இவர்களையும் இறுதியில் மக்களுக்கு எதிராக செயற்பட வைத்தது. இது இவர்கள் கடந்து வந்த பாதை தவறானது என்பதையே உறுதிசெய்கின்றது. இவர்கள் தமது ஆயுதங்களிலும் கொள்கைகளிலும் உறுதியாக இருந்தளவிற்கு மக்களின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. இதன் விளைவுதான் போரின்போது இவர்கள் முன்னெடுத்த மக்கள் விரோத செயற்பாடுகளும் அதேநேரம் மக்கள் இவர்களை விட்டுவிட்டு வெளியேறியதும் நடைபெற்றன. உண்மையிலையே தலைமையானது தம்மை நம்பி வந்த அக்கத்தவர்களையும் மக்களையும் காப்பாற்றியிருக்க வேண்டும். அதற்கான முனைப்பைக் காட்டியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை என்பதையே போரின் பின்னான பதிவுகள் கூறுகின்றன. இவற்றின் விளைவே இன்றைய சூழல்.

 

இந்த இடத்தில் இன்னுமொன்றை ஆராய வேண்டிய தேவையும் உள்ளது. ஊக்கிரமான போர் ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்தபோது புலம் பெயர்ந்தdiaspora தமிழர்கள் தாம் பாதுகாப்பாக இருந்தபோதும் கடும் குளிரிலும் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள். ஆனால் ஈழத்திலுள்ளவர்கள் குறிப்பாக யாழ், திருமலை, மட்டக்களப்பு போன்ற நகரங்களில் இருந்த மக்கள் தமது மகன்களும் மகள்மாரும் கொல்லப்படுவதை அமைதியாக இருந்து பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த அமைதி எவ்வாறு சாத்தியமானது. மக்கள் இந்தப் படுகொலைகளுக்கு எதிராக வீறுகொண்டு எழாமைக்கு என்ன காரணம்? இதேநேரம் போருக்குள் அகப்பட்டிருந்த மக்கள் போராளிகளையும் அதன் தலைமையையும் விட்டு விட்டு வெளியேறியது ஏன்? மக்களின் இந்த முடிவுக்கான காரணங்களும் இதன் பின்னாலுள்ள உளவியலும் ஆராயப்படவேண்டியவை.

 

இன்று ஈழத் தமிழர்களைப் பிரதிநிதித்துப்படுத்துகின்ற பிரதான கட்சியாக இருப்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு. இது பல கட்சிகளின் கூட்டமைப்பாக இருந்தபோதும் ஆரம்பத்தில் விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திற்குள் இருந்தது. இந்த கூட்டமைப்பின் முக்கிய அம்சம் புலி எதிர்ப்பு இயக்கங்களாக இருந்தவர்களையும் உள்வாங்கியதாகும். புலிகளின் ஆதிக்கம் இருந்தபோது தமிழரசுக் கட்சியின் தலைமையானது பல காரணங்களால் அமைதியாக இருந்தனர். இன்று புலிகளின் ஆதிக்கம் இல்லாத நிலையில் கூட்டமைப்புக்குள் இவர்களின் ஆதிக்கமே அதிகமாகக் காணப்படுகின்றது என்ற குற்றச் சாட்டு வெளிப்படையாக முன்வைக்கப்படுகின்றது. மேலும் இக் கூட்டமைப்பு யாரால் உருவாக்கப்பட்டதோ அதாவது விடுதலைப் புலிகளையும் மற்றும் சக ஆயதம் தாங்கிய இயக்கங்களையும் விமர்சிப்பதாகவே இன்று தமிழரசுக் கட்சியின் தலைமை இருக்கின்றது. மறுபுறம் இந்த விமர்சனங்களை எதிர்கொண்டு சக முன்னால் ஆயுத இயக்கங்கள்  இக் கூட்டமைப்பிலிருந்து வெளிவர முடியாத நிலை. ஏனெனில் இந்த கூட்டமைப்பிலிருந்து இவர்கள் ஒவ்வொருவரும் பிரிகின்ற சந்தர்ப்பத்தில் இவர்களது பலமும் பிரதிநிதித்துவமும் கேள்விக்குட்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதற்கு காரணம் இந்த இயக்கங்களின் கடந்த கால நிலைப்பாடுகளும் செயற்பாடுகளாகும் என்றால் மிகையல்ல.

 

போரின் பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்புடன் முரண்பட்டு அல்லது திட்டமிட்டு வெளியேற்றப்பட்டவர்கள் உருவாக்கிய கட்சியே தமிழ் தேசிய மக்கள் முன்னணி. இதன் பிரதான செயற்பாட்டாளர்கள் அன்று புலிகளின் தலைமையினால் தெரிவு செய்யப்பட்டு தமிழ் தேசிய கூட்டமைப்பில் இணைக்கப்பட்டவர்கள். இவர்கள் புலிகளின் தலைமை அழிக்கப்பட்டபின் கூட்டமைப்பானது தமிழ் தேசிய கோரிக்கைகளை முன்னெடுக்கவில்லை என்றும் அதில் உறுதியாக இல்லை என்றும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வெளியேறியவர்கள். இவர்கள் பெரும்பாலும் புலிகளின் அரசியலை முன்னெடுப்பவர்கள் என்றால் மிகையல்ல. இன்று இவர்களுடன் இணைந்து இருப்பவர்கள்  தமிழ் காங்கிரஸ் கட்சியினர். இது முரண்நகையா? அல்லது சந்தர்ப்பவாத அல்லது சூழ்நிலைக் கூட்டணியா என்பது காலம் சொல்ல வேண்டிய பதில்.

 ltte with tna

இந்தக் கட்சிகள் இயக்கங்கள் ஒருவரிடத்திலும் தமிழ் தேசிய அரசியல் தொடர்பான உறுதியாக கருத்து நிலைகளோ, திட்டங்களோ, செயற்பாடுகளோ என்றும் இருந்ததில்லை. (புலிகள் இயக்கத்திடம் மேம்போக்காக இவை இருந்தபோதும் அவை ஆரோக்கியமானவையாகவோ அல்லது விடுதலைக்கு வழிவகுப்பவையாகயோ இருக்கவில்லை. மாறாக இராணுவக் குறுங் குழுவாதமாக இருந்தது என்பதையே இன்றைய சூழல் நிறுபிக்கின்றது). ஏனெனில் இவை குறிப்பிட்ட சூழல் சார்ந்ததாகவும் எதிர்வினை செயற்பாடுகளாகவும் ஆயுத வழி செயற்பாடுகளாகவும் மட்டுமே இருந்தன. மேலும் இவர்கள் சமூக மாற்றம் தொடர்பான வர்க்க சாதிய பால் சூழல் கருத்துக்களை உள்வாங்கியவர்கள் அல்ல. தனிநபர்கள் இருக்கின்றார்கள். இருக்கலாம். ஆனால் இயக்கம் அல்லது கட்சி அடிப்படையில் இல்லை. மேலும் இவர்கள் இயக்கத்திக்குள் எவ்வாறான ஜனநாயகப் பண்புகளைப் பேணுகின்றார்கள் என்பதும் கேள்விக்குறியானது. இவ்வாறான நிலைப்பாடுகளும் செயற்பாடுகளும் பண்புகளுமே இன்று இவ்வாறான ஒரு சூழல் உருவாவதற்கு காரணமாகும். ஆகவே இவர்கள் அனைவரும் இதற்குப் பொறுப்பு எடுக்க வேண்டும். ஆனால் தமது கடந்த கால தவறான போக்குகளை, நிலைப்பாடுகளை, செயற்பாடுகளை இதுவரை இவர்கள் யாரும் சுயவிமர்சனம் செய்ததாகத் தெரியவில்லை.

 

இவ்வாறு ஒவ்வொரு கட்சியையும் இயக்கத்தையும் விமர்சிப்பது இவர்களை குற்றவாளிக் கூண்டில் நிறுத்துவதற்கல்ல. இவர்கள் ஒவ்வொருவரும் செயற்பட்ட காலங்களில் இவர்களுக்கான முக்கியத்துவம் உள்ளது. அவற்றைப் புறக்கணிக்கவோ குறைத்து மதிப்பிடவோ முடியாது. ஆனால் இன்றுவரை தேசமானது சிறிலங்கா பேரினவாத அரசின் அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிக்குள்ளுமே உள்ளது. மேலும் சமூக வர்க்க பொருளாதார பால் பிரச்சனைகளும் அவ்வாறே தொடர்கின்றன. ஏதுவுமே தீர்ந்தபாடில்லை. ஆகவேதான் கடந்து வந்த பாதை தொடர்பான சுயவிமர்சனம் அவசியமாகின்றது. இவ்வாறான சுயவிமர்சனம் எந்தவகையிலும் ஆளும் வர்க்கங்களுக்கும் ஆதிக்க சக்திகளுக்கும் சாதகமாக அமையாது. மாறாக விடுதலைப் போராட்டத்திற்கு புதிய வெளியை திறப்பதாகவும் சக்தியை பாச்சுவதாகவுமே இருக்கும்.

 

முதலாவது இந்தக் கட்சிகள் மற்றும் முன்னால் இயக்கங்கள் அல்லது ஜனநாயக வழிக்குத் திரும்பிய இயக்க கட்சிகள் ஒவ்வொருவரும் தமிழ் தேசத்தின் சமூக தேசிய வர்க்க சாதிய பால் விடுதலை தொடர்பான தமது நிலைப்பாடுகள் என்ன என்பதை தெளிவாகவும் வெளிப்படையாகவும் முன்வைக்க வேண்டும். தமது கட்சி அல்லது இயக்கத்தினுள் எவ்வாறான ஜனநாயக முறைமை பின்பற்றப்படுகின்றது என்பதை தெளிவுபடுத்த வேண்டும். இவர்கள் ஒவ்வொருவரும் இன்றைய நிலைக்குப் பொறுப்பு எடுப்பதுடன் தம் கைகளிலும் இரத்தக் கறை உள்ளது என்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும். இவ்வாறான நிலைப்பாடுகள் செயற்பாடுகள்  இல்லாது சிறு குழுக்களாக மட்டும் இருந்து கட்சி அல்லது இயக்கம் போன்ற தோற்றத்தை வெளிப்படுத்துகின்றவர்கள் அதனைக் களைத்துவிட்டு வெளிவரவேண்டும். பொதுவான ஓட்டத்தில் யாருடன் இணையலாமோ அவர்களுடன் இணைய வேண்டும். இதுவே அனைவரும் இணைந்து ஒரு ஆரோக்கியமான செயற்பாட்டை முன்னெடுப்பதற்கு வழிவகுக்கும்.

 

உதாரணமாக போர் முடிவுற்றதாக கூறியபின் நடைபெற்ற தேர்தலில் கூட்டமைப்பானது பொன்சேகா அவர்களுக்கு ஆதரவளித்தது. இந்த நிலைப்பாடானது தந்திரோபாய அடிப்படையில் கூட தவறான ஒரு நிலைப்பாடாகும். இதற்கு காரணம் சமூக வர்க்க தேச.. விடுதலைகள் தொடர்பான தெளிவான நிலைப்பாடு இன்மையாகும். இரண்டாவது வட மாகாணசபைக்கான தேர்தலில் விக்கினேஸ்வரன் அவர்களை நியமித்தமையாகும். கட்சியின் ஆரம்ப காலங்களிலிருந்து ஆரம்ப உறுப்பினராக இணைந்து படிப்படியாக தன்னை வளர்த்துக் கொண்டு தலமைப் பதவிக்கு வந்த சேனாதிராசா அவர்களை முதலமைச்சர் வேட்பாளராக தெரிவு செய்யாது புறக்கணித்தமை. கட்சி உறுப்பினர் ஒருவரையே புறக்கணிக்கின்ற கட்சி மக்கள் நலன்களுக்காக செயற்படுமா என்பது கேள்விக்குறியே. இது எந்தவகையிலும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மீதான தனிப்பட்ட விமர்சனமோ அல்லது மாவை சேனாதிராசா சிறந்த தெரிவு என நியாயப்படுத்துவதோ அல்ல. மாறாக கட்சி ஒன்று எவ்வாறு செயற்படுகின்றது என்பதன் அடிப்படையிலான விமர்சனமே. அதேவேளை மீண்டும் தனிமனிதர்கள் மீது நம்பிக்கை கொண்டு ஈழத் தமிழ் தேசிய அரசியலை முன்னெடுப்பது ஆரோக்கியமான ஒரு போக்கல்ல என்பதையும் இங்கு நாம் குறித்துக் கொள்ளவேண்டும். இது நம் விடுதலைக்கான அரசியலையே காவு கொடுப்பதாகவே முடியும். ஏற்கனவே பல உயிர்களை காவு கொடுத்தும் பயனில்லை. ஆகவே மீண்டும் தவறிழைக்காது செயற்பட வேண்டியது இவர்களின் பொறுப்பு.


kajewthiranஈழத் தமிழ் கட்சிகளும் இயக்கங்களும் குறிப்பிட்ட சூழலின் விளைவாக தன்னியல்பாக உருவானவை. தன்னியல்பான செயற்பாடுகளையும் எதிர்வினை செயற்பாடுகளையும் அல்லது குறுகிய நோக்கம் கொண்ட செயற்பாடுகளையுமே முன்னெடுத்தன. இதனால்தான் நெருக்கடியான காலகட்டங்களில் தவறான அரசியல் நிலைப்பாடுகளையும் செயற்பாடுகளையும் மக்கள் விரோத செயற்பாடுகளையும் முன்னெடுத்தனர். கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் இன்றுள்ள கட்சிகளாலும் இயக்கங்களாலும் நீண்ட தூரம் பயணம் செய்யமுடியாது. ஏனெனில் இவர்களிடம் குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான தெளிவான நிலைப்பாடுகள் இல்லை. எவ்வாறு விடுதலைப் புலிகளின் தலைமைகளால் போராட்டதை தொடர முடியாது இடையில் விட்டுச் சென்றார்களோ அதேபோல் இவர்களும் ஒரு நாள் செல்வார்கள். அல்லது செல்லலாம். அதற்குள் ஈழத் தமிழ் தேசத்தின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும். இந்த ஆக்கிரமிப்புக் காலங்களில் பல்வேறு கலாச்சார மாற்றங்களை சிறிலங்கா அரசானது (திட்டமிட்டு) உருவாக்கியிருப்பார்கள். இது பிரச்சனைகளை மேலும் சிக்கலாக்கும். ஈழத் தமிழ் தேசம் தொடர்ந்தும் அடக்குமுறைக்குள்ளும் ஆக்கிரமிப்புக்குள்ளுமே இருக்க வழிவகுக்கும். நம் முன் இருக்கின்ற நல்ல உதாரணம் பாலஸ்தீனம். ஈழத் தமிழ் தேசத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கட்சிகள் இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்படுகின்றபோது அந்த வெற்றிடத்தை நிரப்பக்கூடிய ஒரு கட்சி தேவைப்படுகின்றது. அவ்வாறன ஒரு கட்சியை உருவாக்குகின்ற பணிகளை முன்னெடுக்கின்ற திட்டங்களை ஆரம்பிக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கின்றோம்.

 

புதிய கட்சியானது பின்வரும் நிலைப்பாடுகளை கொண்டிருக்கலாம். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை பிரதான அடக்குமுறையாளர்களும் ஆக்கிரமிப்பாளர்களும் சிறிலங்கா அரசும் அதன் ஆளும் குழுமமும் ஆகும். சிங்கள தேசத்தின் பெரும்பான்மையானது சிறிலங்கா அரசுக்கும் அதன் ஆளும் குழுமத்திற்கும் ஆதரவளித்தபோதும் இவர்களுடனான முரண்பாட்டை ஈழத் தமிழ் தேசமானது பகை முரண்பாடாக அணுகக் கூடாது. ஏனெனில் சிங்கள தேசத்திற்கும் சிறிலங்கா அரசுக்கும் அதன் ஆளும் குழுமத்திற்கும் இருக்கின்ற முரண்பாட்டை பயன்படுத்தவும் பெரிதுபடுத்தவும் கூடியவகையில் ஈழத் தமிழ் தேசத்தின் கட்சியானது செயற்படவேண்டும். இவ்வாறுதான் சிறிலாங்கா அரசையும் அதன் ஆளும் குழுமத்தையும் அதன் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தலாம்.

 

இதேபோல் இந்திய அரசும் ஆளும் குழுமமும் எப்பொழுதும் ஈழத் தமிழ் தேசத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை. மாறாக தனது நலன்களுக்காக யாரோ ஒருவரை மாறி மாறி பயன்படுத்திக் கொண்டே இருக்கப் போகின்றது. ஈழத் தமிழ் தேசத்தைப் பொறுத்தவரை இந்திய தேசங்களில் வாழ்கின்ற பல் வேறு ஒடுக்குமுறைகளுக்கு முகம் கொடுக்கின்ற மக்களே நட்பு சக்திகள். இவர்களுடனான உறவையே வலுப்படுத்த வேண்டும். அரசுடனும் ஆளும் குழுமத்துடனும் ஈழத் தேசிய விடுதலையைப் பொறுத்தவரை தந்திதேராபாய உறவையே பேணலாம். ஆனால் சமூக மாற்றம் அல்லது இந்திய தேசங்களின் ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை என வருகின்ற போது தந்திரோபாய உறவும் சாத்தியமற்றது மட்டுமல்ல பொறுத்தமற்றதுமாகும். இவ்வாறான ஒரு நிலைப்பாடுடைய கட்சிதான் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் நிலைத்து நிற்பது சாத்தியமாகும். இது சகல ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைப் போராட்டங்களும் முன்னோக்கி செல்வதற்கும் வழிசமைக்கலாம்.


மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தவிர புகலிட தமிழர்களிடமிருந்து ஈழத்தில் இன்று செயற்படுகின்ற சில கட்சிகளின் தனிப்பட்ட நபர்களுக்கே நிதிகள் வருகின்றன. இவை எந்தளவு தேவையானவர்களுக்குப் போகின்றது என்பது தொடர்பான கேள்விகள் எழுப்பப்படுகின்றன. ஏனெனில் நிதி தேவைக்குரியவர்கள் இன்னும் பலர் இருக்கின்றனர். அதேநேரம் இந்த நிதிகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்பது தொடர்பாக புலத்திலோ புலம் பெயர்ந்த இடத்திலோ ஒருவரும் பொறுப்போ பதிலோ கூறுவதில்லை. ஆகவே இவ்வாறன நிதிகள் பொது அமைப்பினுடாக செல்வதும் பயன்படுத்தப்படுவதுமே ஆரோக்கியமானதும் பயன்மிக்கதுமாகும். ஆனால் அவ்வாறன ஒரு செயற்திட்டம் செயற்படுகின்ற கட்சிகளிடம் இல்லை. அதில் இவர்களுக்கு அக்கறையும் இல்லை. புதிய கட்சியானது இது தொடர்பான ஒரு பொறிமுறையை உருவாக்கி வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புணர்வுடனும் செயற்படலாம்.

 

இந்தடிப்படைகளிலையே இன்று ஒரு கட்சியின் தேவை அதிகமாக இருக்கின்றது. இந்தக் கட்சியானது மேற்குறிப்பிட்ட விடயங்கள் ஒவ்வொன்று தொடர்பாகவும் தெளிவான உறுதியான நிலைப்பாடுகளை எடுக்க வேண்டும். ஈழத் தமிழ் தேசம் முகம் கொடுக்கின்ற ஒவ்வொரு (அக புற) ஒடுக்குமுறைகள் தொடர்பான நிலைப்பாடுகளையும் அந்த ஒடுக்குமுறைகளிலிருந்து எவ்வாறு விடுதலை பெறுவதற்கான வேலைத்திட்டங்கள் என்ன என்பதையும் முன்வைக்க வேண்டும்.  இது இன்றைய சூழலுக்கு ஏற்ப உடனடியாக செயற்படக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றையும் நீண்ட கால அடிப்படையில் செயற்படக்கூடிய வேலைத்திட்டம் ஒன்றையும் உருவாக்கி செயற்படுவது ஆரோக்கியமானது. அவசியமானது . அவசரமானது.

 

karunaஇவ்வாறன ஒரு புதிய கட்சியின் ஆரம்பமானது எந்தவகையிலும் இருக்கின்ற கட்சிகள் மற்றும் இயக்கங்களுக்கு எதிரானதல்ல. புதிய கட்சிக்கு யாரும் துரோகிகள் எதிரிகள் இல்லை. வேறு வேறு நிலைப்பாடு உடையவர்கள் என்ற புரிதல் மட்டுமே இருக்க வேண்டும். ஏனெனில் ஒருவரை காலம் வெவ்வேறு நிலைப்பாடு எடுப்பதற்கு தள்ளலாம். உதாரணமாக சுரேஸ் பிரமேசந்திரன் முன்னால் போராளி. பின்பு துரோகியாக தடைசெய்யப்பட்டவர். அதேநேரம் அவரும் இந்திய இராணுவத்துடன் இணைந்து புலி எதிர்ப்பு மக்கள் விரோத செயற்பாடுகளை முன்னெடுத்தார். பின்பு இலங்கை அரசுடன் இணைந்திருந்தபோதும் காலோட்டத்தில் மீண்டும் ஈழத் தமிழ் தேசிய நீரோட்டத்தில் கலந்து இன்று முக்கியமான ஒரு செயற்பாட்டாளராக இருக்கின்றார். அதேநேரம் விடுதலைப் புலிகளின் இரண்டாம் மட்ட தலைவராக dougஇருந்த கருணா (அம்மான்) இன்று அரசுடன் இணைந்து ஒடுக்குமுறையாளர்களுக்கு உதவுகின்றார். இவரைப்போல டக்கிளஸ் தேவானந்தாவும் செயற்படுகின்றார். இன்று இவர்களின் நிலைப்பாடு ஈழத் தமிழ் தேசத்திற்கு எதிரானது. ஆனால் நாளை இவர்களின் நிலைப்பாடும் மாறலாம். ஆகவே இவர்களை துரோகிகளாக அடையாளப்படுத்தி புறந்தள்ள வேண்டிய அவசியமில்லை.  முக்கியமானது ஒவ்வொரு காலகட்டத்திலும் கட்சியானது  என்ன நிலைப்பாடு எடுக்கின்றது அதன் அடிப்படையில் செயற்படுகின்றது என்பதுதான்.

 

மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு கட்சியுடனான உறவும் நட்பு முரண்பாட்டின் அடிப்படையில் இருக்கவேண்டும். இவர்களுடன் கூட்டுறவு அடிப்படையில் செயற்படுவதற்கு தயாராகவும் இவர்கள் செயற்படாத சந்தர்ப்பங்களில் போராட்டங்களையும் செயற்பாடுகளையும் முன்னெடுக்க தயாராகவும் புதிய கட்சியானது இருக்கவேண்டும். இக் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் தம்மால் முடியாது ஓதுங்கி செல்கின்ற போது அல்லது ஆளும் கட்சிகளுடன் சமரசங்களுக்கு செல்கின்ற போது சமூக மாற்றத்திற்கு விடுதலைக்குமான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்கின்றதாக இப் புதிய கட்சி இருக்க வேண்டும்.

 

இதுவரை காலமும் (ஆயுதப் போராட்ட காலத்தை தவிர) கட்சித் தலைமைகள் பகுதி நேர அரசியலே செய்தார்கள். இவர்களுக்கு வருமானத்திற்கு ஒரு தொழில் இருந்தது. அதேநேரம் அரசியல் என்பது பகுதி நேர ஓய்வு நேர சமூக சேவை. இவ்வாறு செயற்படுவதில் மாற்றம் தேவை. நாம் செய்கின்ற ஒரு செயற்பாட்டில் முழுமையாக ஈடுபட்டால் மட்டுமே அதன் பன்முக தன்மைகளையும் காணவும் விரிவாகப் பார்க்கவும் ஆழங்களை தொடவும் முடியும். பல்வேறு தொழில்துறை மற்றும் புலமைசார் துறைகளில் பலர் சிறந்து விளங்குவது இதனால்தான். இவர்களைவிட அரசியலில் ஈடுபடுகின்றவர்களுக்கு அதிக அக்கறையும் பொறுப்புணர்வும் பங்களிப்பும் ஈடுபாடும் அவசியமானது. ஏனெனில் இது மக்களின் வாழ்வு தொடர்பான முடிவுகள் எடுக்கின்ற செயற்பாடாகும். இதை நாம் புரியாதவரை அரசியல் செயற்பாடுகளிலும் கோட்பாடுகளிலும்  நுனிப்புல் மேய்பவர்களாகவே இருப்போம்.

 

புதிய கட்சியில் தம்மை முழுமையாக அர்ப்பணித்து பங்களிக்க முன்வருபவர்களது நோக்கம் நல்லது. ஆனால் இவர்கள் தம்மை மீள் உருவாக்கம் செய்யவேண்டிய தேவையுமுள்ளது. தமக்குள் இருக்கின்ற ஆதிக்க கருத்துக்களையும் பழக்கவழக்கங்களையும் மாற்றுவதற்கான வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும். ஆரோக்கியமான நேர்மறையான செயற்பாடுகளை ஒருவர் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்பது தொடர்பான அறிவைப் பெறுவதும் அதனுடாக தமக்குள் மாற்றங்களை செய்வதும் அவசியமானதாகும். வெறுமனே சேகுவேரா போன்ற புகழ் பெற்ற புரட்சியாளர்களையும் நெல்சன் மன்டேலா போன்ற தலைவர்களையும் புகழ்வது மட்டும் போதாது. அவர்கள் நாம் வாழும் சூழ்நிலையில் இருந்திருந்தால் என்ன செய்திருப்பார்கள் என சிந்திப்பதே சிறந்தது. அதுவே அவர்களுக்கு செய்யும் உண்மையான மரியாதையாகும். அவ்வாறான உண்மையான மரியாதையை அவர்களுக்கு செய்ய நாம் செயற்படத் தயாராவோமா?

 

0000

————————————————————————-

உங்கள் கருத்துக்களை உடன் பதிவிடுங்கள்…

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment