Home » இதழ் 15 » * ஆன்மாவில் வழிந்தோடும் நதி -எம்.எல்.எம்.அன்ஸார்

 
 

* ஆன்மாவில் வழிந்தோடும் நதி -எம்.எல்.எம்.அன்ஸார்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

MAM Ansar

நடந்து செல்லும் மேகமாக இருக்கிறது
பச்சைப்புல் தரையை கழுவிவிட்ட
பனியின் கைகளாக
உயிரைத் தழுவிய போது
என்னை புதைத்துக் கொண்டாய்

போன சில மணித்தியாலங்களில்
உன் அனுபவங்களை சுவாசித்தே வாழ்ந்திருக்கிறேன்
பின்னரான என் நடுநிசி மனதில்
நீர்வளையங்களை வரைந்தன உன் வாசிப்பு

இரத்தம் தன்னைத்தனே கழுவி index
புதிதாகிக் கொண்டது
உணர்வுகளை நதியாக உயிரின் மீது
உற்பத்திசெய்து விடுகிறது உன்னோடு பழகக் கிடைத்தது

நூல் வளைவாய் செதுங்கி நிற்கும்
உருவத்தின் கோடுகள் வழியே
ஒழுகும் ஆன்மாவை
பருக்கிவிட்டு முன் நிற்கிறாய்

ஒருவனுடைய ஒருத்தியுடைய
ஆழ்மனதின் அறைக்குள்
இழுத்துச் சென்று அமர்த்தி விடுகின்றன
உன்னுடனான கதைபேசும் கணங்கள் என்னை

நிம்மதி தகர்ந்து
காயம் கவ்விக்கொள்ளும் இரவு பகல்களில்
அலுமாரித் தட்டுகளில் சாய்ந்து நிற்கும் உன்னை
விரல்களின் மெத்தைக்கு கூப்பிட்டு எடுக்கிறேன்
தடவி விடுகிறாய்
ஆறிக் குளிர்கிறது ஆத்மா

மலர்களின் குணம் கொண்ட இச்சாமம்
விழிகளுள் புகுந்து உனது பக்கங்கள்
உயிரில் மணக்கின்றன
பூக்களை காம்போடு நோண்டி வந்து
உள்ளத்தின் ரேகைகள் மீது
அடையாளம் பதித்துத் தடவுகிறாய் .

0000000000
11.02.2014

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment