Home » இதழ் 15 » * ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

 
 

* ஜே.பிரோஸ்கான் –(கவிதை )

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

Feos Ghan Poem

பனி காலத்து தேநீர்
………………………………………………………….

அவர்கள் தூரமாக நின்று அழைத்தார்கள்
செவியுற்றேன்.
சிரிக்கவும், அழவும் சொன்னார்கள்
சிரித்துக் கொண்டே அழுதேன்
பின்
கண்களை திறந்து கொண்டு
உறங்கச் சொன்னார்கள்
உறங்கிக் கொண்டேன்.
தங்களது ஆறு கால்களைக் கொண்டு
என் கழுத்தில் மிதித்து விளையாட
ஆசையென்று மொழிந்து,
அழுத்தி அழுத்தி ஒருவொருக்கொருவர்
குழந்தையாகி மகிழ்வுற்றதையும்
நான் ரசித்துக் கொள்கிறேன்.
மீதம் வைக்க மனசு இல்லாத
பனிக்காலத்து த்ரீ ரோஷஸ் தேநீர் போல.

peroos

அநாதரவாய் பெய்த மழை.
……………………………………………………………………………

நம்பிக்கையூட்டும் மௌனத்தின் ஒலியை
சுமக்கும் ஒரு மழைக்கால இரவில்
அச்சமற்று துயிலே தயாராகிறேன்
பழகிப்போன தவளைகளின் கத்தலை மறந்தபடி.
இப்படியாய் பின் தொடரும் தூக்கத்தில்
கனவு காண்பதற்கான அறிகுறி தோன்றி மறைகிறது
மூடியே என் விழிகளுக்குள்.
இருளடைந்து தூசிபடிந்து கிடக்கும்
சிநேகங்களின் முரண் அவ்வப்போது
மின்னலாய், இடியாய் மழை இராக்கனவை வேகப்படுத்தியது.
ஆனால் நான் கனவை முறிக்கும் முயற்சியில்
துயில் களைந்தேன்.
அநாதரவாய் பெய்து கொண்டிருந்தது வெளியே மழை.

ஆலோசனை பண்ணும் மனசு
……………………………………………………………………………

இடை விடாது தொடரும்
மாரி மழை இரவுகளில் தான்
வெயிலை விரும்புவது பற்றி
ஆலோசித்துக் கொள்கிறது
தனியாக மனசு..

மொழி
…………………

குழந்தைகளின்
தனித்துவமான மொழியை
எந்த தாயும்
எங்கேயும் சென்று கற்றறிந்ததில்லை
அவர்களின் சிரிப்புட்பட.

00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment