Home » இதழ் 01 » ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

 
 

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

 

திரவியம்

நேசத்தின் திளைப்பையும்
முடிவில் அதன் துரோகத்தையும்
அனுபவத்தில் கற்றறிந்து
சொந்த முகத்தின் விம்பம் இழந்தவளின் இசையிது

அநேகம் பேரின் கைகளில் நாணயமாய்
புழங்கிப் புகழடைந்தவள் அவள்
இரகசியக் குகைகளின் திறவுகோலாயும்
மந்திரச் சாவியாயும்
தன்னை உருமாற்றிக் கொண்டவள்

இனிமை முலாம் பூசிய நிலாக்கிண்ணங்களில்
அமாவாசைகளை நிரப்பி பருகுபவள்
முலைப்பால் போல வெளுத்ததும்
தீர்த்தம்போல குளிர்ந்ததுமான மனதையுடையாள்

துளசி இலைகளுக்குள் பத்திரப்படுத்தியுள்ள
தன் காதலை
கிண்ணங்களில் வார்த்து
மிகக் கவனமாகவே பகிர்ந்தளிக்கிறாள்
எத்தனை பங்கிட்டாலும் தீராமால் சுரக்கிறது
காதல் திரவியம்

பூட்டிப் பாதுகாக்க
காதல்
புராதன புதையலோ பொக்கிஷமோ
அல்லவென நம்புகிறாள்
திரி மாறித் திரி மாறி எரிந்தாலும்
அணையாத தீபத்துடன்
பிரகாசமாய் ஒளிர்கிறதவளின் காதல் சுடர்.

000

நான் மழை

காணாமல்போனோரின் பட்டியலில் என் பெயர் கிடையா
இனி சேர்க்கவும் இயலா
இனந்தெரியாதோர், வெள்ளை வான்
எல்லாம் ஒன்றே எனக்கு

அரசாங்கத்தின் உத்தரவுகளுக்கோ
எதிர்கட்சிகளின் அறிக்கைகளுக்கோ
அச்சமில்லை, அடங்கிப்போகவும் மாட்டேன்
கைது செய்தென்னைக் கட்டுப்படுத்தவோ
தேசதுரோக குற்றப்பெயரில் என்னை
நீதிமன்றில் நிறுத்தி தண்டனையளிக்கவோ முடியா

விசாரணைக்கழைத்தென்னை
பூட்சுகளால் மிதிப்பது, நகங்களைப் பிடிங்கி
நாடியுடைய அடிப்பதெலாம் என்னிடம் நடக்கா
தலைகீழாய் கட்டித் தொங்கவிட்டென்னை
இடித்தும் இடிக்காததுமான மிளகாய் சாக்கினுள்
முகத்தை புதைப்பது,
ஆண்குறியின் முன்தோலை சீவிப் பிதுக்கி சிரிப்பது
இது எதையும் நிகழ்த்த முடியாதென்னிடம்

பதின்மூன்றாம் திருத்தமாகட்டும்
நிறைவேற்று அதிகாரமும் ஆகட்டும்
என்னிடம் பிடுங்க முடியாதெதுவும்
நான் மழை
ஆட்டுத்தொழுவத்திலும் விழுவேன்
அரச மாளிகையிலும் விழுவேன்
என்னைக் கண்டு ஒதுங்கியே ஆகணும்.
ஆளுநர், அரசாங்க தலைவர் அனைவரும்
குடைபிடித்தாகணும் எனக்கு
நான் மழை
வேறுபாடின்றி நனைப்பேன்.

000

கடலின் காதலி

என் மென் பாதங்களை
ஈரக் கரங்கள் தளுவுகையில்
நானதை உணர்ந்தேன்
கடல் ஆண்

தீமூட்டலும் குளுமை மயக்கமும்
திருப்தியாய் நிகழ்ந்ததன்
அடையாள அணுக்களை
மோதிக் கொப்பளிக்கும் அதன்
நுரையில் கண்டேன்

தீராத காதலை குளிர் தென்றலிடம்
எனக்கு தூதனுப்பிற்று
என் காதுமடல்களை இதமாய் தடவி
கிளர்ந்து ஆசை மூட்டியது
கடலின் ஈர விரல்கள்

கரையில் எனைக் கண்டதுமே
வா வந்தென்னை அணை
எனக்கூவிற்று

உலர்வறிய இன்முகத்தோடும்
தாழிடமுடியா காதலோடும்
எனை தழுவி இறைந்து மகிழ்ந்தது
கூவிக் கூவி மீண்டும் மீண்டும்
அணைத்து என்னை ஆறுதலூட்டியது
என் தாகங்களின் சிற்றிடத்தையும்
ஈரத்தால் நிரப்பியது
என் தூய்மையில் அது தன்னை
கழுவி திருப்தி கண்டது

அலைக் கரங்களால் என்னையது
வாரியணைக்கும் ஒவ்வொரு கணமும்
எல்லையற்ற இன்பத்தைக் கொப்பளிக்கிறேன்
தொலைவறியா அண்டமொன்றை
எனக்குள் சுமந்துகொண்டு
பிரசவிக்கவோர் இடம்தேடிக் காத்திருக்கிறேன்.

000

 

77 Comments

 1. ஷர்மிளா செய்யத் -கவிதைகள் சிறப்புகுரியவையான பதிவு . உரையாடலுக்கான பொது வெளியில் “எதுவரை” – வீரியமிக்க பொது வெளியாக திகழ்கிறது. வாழ்த்துகள் .

  ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்
  கோவை, தமிழ் நாடு.

 2. நெடுதுயிலோன் says:

  சமூகம்,அரசு, ஏக்கம்,இயலாமை,கோபம்,கொதிப்பு,நான், நீ, அவன், இவன் எல்லா மட்பாண்டங்களையும் ஒரு சாக்கில் போட்டு கட்டி தரையுள் தூக்கியடித்ததுபோலுள்ளது இக்கவிதைகளின் பேசுபொருளும் மொழியும்…

  • Sharmila Seyyid says:

   இதுவரையில் என் கவிதைகள் குறித்து யாரும் சொல்லாத கருத்துக்களைக் கூறியிருக்கிறீர்கள். நன்றி.

 3. musthaffa izzath says:

  சிந்தனை சுற்றோட்டத்தின் செந்துணிக்கைகளை, உங்களின் சோதனைக்குழாயில் நீங்கள் பரிசோதிப்பதாய் நான் உணர்ந்து பெருமிதம் கொள்கிறேன்..வளர்க உங்கள் திறமை..வாழ்த்துக்கள்..

 4. Rauf Hazeer says:

  ஷர்மிளா ! மொழி உங்கள் வழியில் நிறையவே வளைந்து கொடுக்கிறது .உங்கள் வலி அதன் வழியாக நிறையவே வழிகிறது . தனிப்பட்ட உங்கள் வலியாக அல்லாமல் அது பொதுமைப்பட்டு வாசிப்போர் மனதில் எல்லாம் பதிகிற வலுவைக்கொண்டுள்ளது .காதல் ஆனால் என்ன அடக்குமுறையானால் என்ன நல்ல கவிதைக்கு எதுவும் கருவே என்பதற்கு இந்த மூன்று கவிதைகளும் நல்ல சான்று.

 5. உங்களது கவிதைகள் அனைத்தும் நன்றெனச் சொல்வேன். யதார்த்தங்களைக் கூறுவதில் நீங்கள் ஒரு நதிமூலமாகியுள்ளீர்கள்.

 6. ஸர்மிளா ஸெய்யித், உங்கள் கவிதைகள் யதார்த்தத்தை அச்சொட்டாய்க் கூறுகின்றன. தங்கள் அனைத்துக் கவிதைகளும் அபாரம்! தமிழுக்குப் பணிசெய்ய வாழ்த்துக்கள்!!

 7. அருமை தோழி
  பெண்ணினின் வலிமை மிகு உணர்வுகளின் வெளிபாடு உனக்கான அங்கீரத்தை நீயே கொடு என்று பெண்ணை நோக்கி ………கூறுவது போல மொழியின் லாவகம் வசபடுகிறது உங்களிடம் வாழ்த்து மட்டும் இல்லை வணங்குதலும் கூட

  • Sharmila Seyyid says:

   நன்றி தோழி, இதயத்தின் ஆழத்தில் இருந்து வந்த உனது வாழ்த்துக்கு

 8. உங்கள் கவிதைகளை இப்போதுதான் வாசிக்கக்கிடைத்தது அருமை, தொடர்ந்தும் வெகு காத்திரமான படைப்புக்களைத் தர பிரார்த்தனைகளுடன்கூடிய வாழ்த்துக்கள்
  அன்புடன்
  முஸ்டீன்

 9. கவிதை சிறப்பாக உள்ளது ஸர்மிளா ஸெய்யித், மழை துளிகளுக்குள் நிறைய வலிகளை உணர நேரிட்டது…….வாழ்த்துகள்

Post a Comment