Home » இதழ் 15 » * சி. மணிவண்ணன் கவிதைகள்

 
 

* சி. மணிவண்ணன் கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

“முகமத் ஹூஸைன் பஹ்னாஸ்”

—————————————–

அரசுகளே!
சொந்த இருப்பிடங்களை விட்டு
தொலைந்து போவதற்கு
மந்தைகள்கூட விரும்புவதில்லை.

விரட்டப்பட்டும், துரத்தப்பட்டும்
அகதிகளாய் மக்கள்
யுத்த பூமிகளைவிட்டு
கடல்,தரை ,ஆகாயம்…

இன்றும்
சூடான் நாட்டின் நட்சத்திரம்
தெருவில் உறங்கியும்……
பனியில் உறைந்தும்……..
கெய்ரோவில் அணைக்கப்பட்டதோ
எப்படி நதி வற்றிப் போக முடியும்?
“முகமத் ஹூஸைன் பஹ்னாஸ்”

——————————————————————————
fahnas
சூடான் நாட்டைச் சேர்ந்த கவிஞரும் ,எழுத்தாளரும்,ஓவியக் கலைஞரும், இசைக் கலைஞருமான “முகமத் ஹூஸைன் பஹ்னாஸ் ” கெய்ரோ தெருவோரமொன்றில் குளிரில் உறைந்து மரணமடைந்தார்.இரண்டு வருடங்களுக்கு முன் சூடான் நாட்டிலிருந்து அகதியாய் புலம்பெயர்ந்த அவருக்கு, கெய்ரோவில் தங்குவதற்குகூட ஒரு இடம் இருக்கவில்லை.தெருவோரமே அவரது இருப்பிடமாக இருந்துள்ளது.இறக்கும் போது அவரது வயது 43.

————————————————————————————————————————————————————–

cat

ஒரு பூனை தொலைந்து போயிற்று
நீங்கள் பார்த்தீர்களா?
அயல்வீட்டார் கேட்கின்றனர்.

பலர் செல்லப் பிராணிகளை வளர்க்கின்றனர்
பலர் செல்லப் பிராணிகளை வளர்ப்பதில்லை
பலர் செல்லப் பிராணிகளை துன்புறுத்துகின்றனர்
மனிதர்களும் மரக்கட்டைகளுமாக….
உலகம்
பூனையின் பிரிவிற் தொடங்கிற்று
அயல்வீட்டார் முகத்தில் சோகங்கள்…..

அவர்கள் ஒவ்வொரு கடையின்
முன் கண்ணாடிச் சுவரிலும்
ஒட்டிச் செல்கின்றனர்

அது ஒரு விளம்பரத் தாள்
கறுப்பு நிற பூனையின் படம்
பல வார்த்தைகள்
கைத்தொலைபேசி இலக்கம்
நன்றி
அவர்கள் தங்கள் பூனையைத் தேடுகின்றனர்.

இன்னுமோர் கருப்பு பூனையை
வேண்டி விடலாமே?
இல்லை.
தொலைந்த… பூனையை
இன்னமும் நேசிக்கின்றனர்.

பாருங்கள்…..பாருங்கள்…..

காணாமல் போன சொந்தங்களை
படுகொலை செய்யப்பட்ட உறவுகளை
அந்தப் பிரிவின் வலியை
நாங்கள் மறப்பதென்பது…..

000000000000000000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment