Home » இதழ் 16 » *கோ.நாதன்-கவிதை

 

*கோ.நாதன்-கவிதை

 

n1

கீபிர் யுத்த விமானத்திலிருந்து தவறி
விழுந்த குண்டொன்று சிவனொளி பாதமலை உச்சி
சிவனின் பாதச்சுவட்டில் விழுந்து வெடித்துச் சிதறிற்று .
மலை பாளம் பாளமாய் பிளந்து கற்களாய்
கொட்டிக் கிடந்த அதீத கணத்தில்
பாதுகாப்பு வாகனங்களில் களவில் ஏற்றப்பட்ட கற்கள்
ஒவ்வொரு நகரங்களின் சிற்பிகளிடம் பதுக்கப்பட்டன.

கடவுளின் சிலையாய் திரும்பிருக்கின்ற கற்கள்
எனது நிலத்தின் ஆக்கிரமிப்பில்
சனங்களின் சாபத்தை அனுதினம் உள்வாங்கி
முப்பொழுதுகளையும் ஒளியில் மிளிர வைக்கிறது.

n-2தமிழ் முற்றமெங்கும் பூத்திருக்கின்ற நித்திய
கல்யாணி பூக்களை பூட்சு காலணி அணிந்திருந்த
இராணுவ வீரர்கள் விடியற் காலையில்
அதிகார தோரணையில் பறித்துக் கொள்கின்றனர்.
ஆடையின் துர்நெடி சகித்துக் கொள்ள முடியாத
தெரு நாய்களெல்லாம் குரைத்து குரைத்து
பின் தொடர்ந்து எல்லை வரை சென்றே திரும்புகிறது.mmm

பெரும் வீதி நெடுகிலுள்ள நகர்ச் சந்தியெல்லாம்
முளைத்திற்ற புத்தரின் சொரூபம் தாமரை,அல்லி
நீர்த் தாடகமாகி பூத்துக் காட்சியளிக்கின்றன.
போரற்ற நிலத்திலும் சிலைக்கான காவலில்
காலாட் படைகள் கண்காணிப்பில்
ஓர் பீதியை நகர் எங்கும் எழுதித் திரிகின்றனர்.
பாதங்களின் சுவடுகளில் ஒழுகுகின்ற
இரத்தக் கசிவுகள் வன்முறையை மீள் பதிக்கிறது.

அச்சம் வீசப்படுகின்ற பாளி மொழிபெயர்ப்பின்
தம்பதம் தவறும் சொற்களில் ”பிரித்” எனும்
சொற்பொழிவு அதிகாரத்தில் ஓதப்படுகின்றன
துவேசத்தின் வீச்சு வாளாய் தமிழ்க் கோவில்
பூஜை எழுப்பும் ஓசைகள் தடை செய்யப்படுகிறது.

இறுதி எச்சரிக்கையின் எதிரொலி கடவுளின்
வடிவங்களான கோபுரத்தின் சிதைப்பில் ஒவ்வொரு
கடவுள் முகத்தின் கற்களும் கழற்றப்படுகின்றன .
மற்றைய இனத்தின் கடவுள்
ஆயுத அணிவகுப்பில் கற்சிலையாய் நடக்கிறார்.

000000

20150125

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment