Home » இதழ் 16 » *சி.ஜெயசங்கர் -கவிதை

 

*சி.ஜெயசங்கர் -கவிதை

 

 

 

0000000000000000

இறுதியாக அவர்
அல்லது
சகிக்க முடியாது அவர்j
அல்லது
தாங்கொணாது அவர்
துடித்தெழுந்தார்

சொற்களை உருவி
சுழற்றி எறிந்தார்

வெளவாலின் இறக்கைகள் கட்டி
அறிக்கையில் பறந்தன செய்திகள்

குருதி கசிய
செவிப்பறைகளில் அதிர்ந்தன அவை

(மாறு)
அச்சமில்லை அச்சமில்லைtumblr_kxjbwx77Iw1qzcmglo1_500
அச்சமென்பதில்லையே
நிலத்து நீரில் கழிவு எண்ணெய்
வந்துவிட்ட போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே

(வேறு)
நிலத்து நீரில் கழிவு எண்ணெய்
பரவி எங்கும் வருகினும்
ஆபத்தென்று கூறுவோர்
அடக்கி அடங்கி இருக்கவும்!

அறிந்த மனிதர் அமைப்புக்கட்டி
ஆபத்தெதுவும் இல்லையென்று
அறிக்கை கொண்டு வருகிறோம்
தண்ணித்தொட்டி எங்கும் வைத்து
தீர்வும் கண்டு வருகிறோம்

(தாறு அல்லது மாறு)
அச்சமற்று பீதியற்று
வீறுகொண்டு வாழுவோம்
எண்ணையென்ன எதுவுமென்ன
எதிர்கொண்டு மீளுவோம்
(இதனை கீழ் கண்டவாறும் படிக்கலாம்)
எதிர்கொண்டு வீழுவோம்

(எகிறு)
கூடங்குளத்து உலை உடைந்து
அணுகசிந்து வருகினும்
அச்சமில்லை அச்சமில்லை
அச்சமென்பதில்லையே
(கீழ்வருவதை விரும்பிய தடவைகள் படித்துத் திரியலாம்)
உய்ய லாலா உய்ய லாலா
உய்ய லால லாலலா

 

000000000000000000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment