Home » இதழ் 17 » *கவிதை எழுதும் ஜிஹாதிகள் : போர்க்களத்தின் வரிகள்-தமிழ் வடிவம்: ஜிஃப்ரி ஹாஸன்

 

*கவிதை எழுதும் ஜிஹாதிகள் : போர்க்களத்தின் வரிகள்-தமிழ் வடிவம்: ஜிஃப்ரி ஹாஸன்

 

(newyorker.com இணையத் தளத்தில் Robyn Creswell and Bernard Haykel ஆகியோர் எழுதிய நீண்ட கட்டுரையின் சுருக்கப்பட்ட தமிழ் வடிவத்தின் முதல் பாகம்)

 

க்டோபர் 11 , 2014 அன்று , இஸ்லாமிய அரசு உடன் இணைந்த ஒரு ட்விட்டர் பதிவின் படி அஹ்லம் அல்- நஸ்ர்,எனும் ஒரு பெண் சிரியாவில் ரக்கா எனும் இடத்தில் நீதிமன்றத்தில் வைத்து வியன்னாவில் பிறந்த அந்த இஸ்லாமிய அமைப்பின் தலைமைத்துவத்துடன் நெருக்கமான உறவுடனிருந்த அபு உஸாமா அல் கரிப் எனும் ஜிஹாதியை திருமணம் செய்து கொண்டார். ISIS சமூக ஊடகம் மிக அரிதாகவே திருமண அறிவிப்புகளைச் செய்கின்றது. ஆனால் அல் நஸ்ர், அல்- கரிப் ஜோடி ஜிஹாதிய அதிகாரம் வாய்ந்த சோடியாகும்.

jifryஅல்-கரிப் , துவக்கத்தில் அல்கொய்தாவுக்கும் தற்போது ISIS க்கான மூத்த பிரச்சாரகராகவுள்ளார். அவரது மணமகள் ஒரு வளர்ந்து வரும் இலக்கிய பிரபலமாகவுள்ளார். ” இஸ்லாமிய அரசு கவிஞை” யாக நன்கு அறியப்படுகிறார். அவரது முதல் கவிதைப் புத்தகமான “உண்மையின் சுடரொளி” (The Blaze of Truth) கடந்த கோடையில் ஒன்லைனில் வெளியிடப்பட்டு போராளிகளின் வலையமைப்பு மத்தியில் மிக விரைவாக விநியோகிக்கப்பட்டது.

 

அவரது கவிதைகள் ISIS அமைப்பினரின் இசைக் கருவிகள் மீதான தடையைக் கவனத்திற் கொண்டு இசையில்லாமலே பாடப்பட்டது. அதனால் அதனை youtube ல் கண்டு பிடிப்பது மிகவும் இலகு.“உண்மையின் சுடரொளி” எனும் இப்புத்தகம் முஜாஹிதீன்களுக்கான இரங்கற்பாக்கள், சிறைக்கைதிகளுக்கான புலம்பல்கள், வெற்றிப்பாடல்கள் மற்றும் குறுங் கவிதைகள் என அரபு மொழியில் 107 கவிதைகளைக் கொண்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்துக் கவிதைகளும் ஒரே தாளத்திலேயே எழுதப்பட்டுள்ளன.

 

அஹ்லம் அல்- நஸ்ர் பற்றி சொற்பமாகவே அறியப்படுகிறது , அதன்படி அவர் டமஸ்கஸிலிருந்து வந்தவரென்றும் அவர் தற்போது தனது இருபதுகளின் ஆரம்பப் பகுதியில் இருக்கிறார் என்று தெரிகிறது. அவளது தாயார் ஒரு முன்னாள் சட்டப் பேராசிரியராவார். அல்- நஸ்ர் பற்றி அவர் “அவள் வாயில் ஒரு அகராதியுடன் பிறந்தாள். ” என்று எழுதியுள்ளார். அவள் தனது இளமைப் பருவத்திலேயே பலஸ்தீனத்துக்கு ஆதரவாக கவிதைகள் எழுதத் தொடங்கிவிட்டாள்.

2011 வசந்தத்தில் , சிரியாவில் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெடித்த போது , அல்- நஸ்ர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பக்கம் இணைந்திருந்தார்.அவரது பல கவிதைகள் அவரை ஆட்சியாளர்களின் தீவிர எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரில் கண்ட சாட்சியாக காண்பிக்கின்றன. பின்னர் அவர் கண்ணுற்ற விடயங்களால் அவர் தீவிரத் தன்மையுள்ளவராக மாற்றப்பட்டிருக்கலாம்.

 

 

“அவர்களுடைய குண்டுகள்
ஒரு பூகம்பம் போல
எங்களது மூளைகளைச் சிதைத்தன
உறுதியான எலும்புகள் கூட
பிளந்து பின் நொறுங்கின

அவர்கள் எங்கள் தொண்டைகளில்
துளையிட்டார்கள்
பின் கை கால்களை உடைத்து வீசினார்கள்
அது ஒரு உடற்கூற்றியல் பாடம் போல் இருந்தது!

அல்- நஸ்ர் வளைகுடா நாடொன்றுக்குத் தப்பிச் சென்றார். ஆயினும் கடந்த வருடம் சிரியாவுக்குத் திரும்பிய அவர் தாக்குதலில் ISIS இன் வசமான தலைநகர் ரக்காவை அடைந்தார். விரைவிலேயே அவர் ஒரு அரசவைக் கவிஞராகவும், இஸ்லாமிய அரசுக்கான உத்தியோகபுர்வக் கவிஞராகவும் மாறினார். அவர் ISIS இன் சுய பாணி ஆட்சியாளர்(கலீபா) அபு பக்கர் அல் பக்தாதியைப் புகழ்ந்து கவிதைகள் எழுதியுள்ளார். அத்துடன் பெப்ரவரியில், அவர் ஜோர்டானிய விமான ஓட்டி மோவஸ் அல்-கஸஸ்பேஹ்வை உயிருடன் எரிப்பதற்கு தலைமை வழங்கிய தீர்ப்பை ஆதரித்து முப்பது பக்க கட்டுரை எழுதினார். அவர் (அல்-நஸ்ர்) தனது குடிவரவு பற்றிய எழுதப்பட்ட குறிப்பொன்றில் இஸ்லாமிய ஆட்சியானது ஓர் இஸ்லாமிய சொர்க்கம், அதன் ஆட்சியாளர்கள் நேர்மையானவர்கள் என விபரிக்கிறார்.

அல்-நஸ்ர் ISIS ஜிஹாத் குழுவினரால் ஈராக்கின் சில பகுதிகள் வெற்றி கொள்ளப்பட்ட போது இப்படிக் கொண்டாடினார்.
“இஸ்லாமிய நகரம்
மௌசூலின் சிங்கங்களிடம் கேளுங்கள்jifry 1
தங்களது விடுதலைக்காக
அவர்கள் எத்துணை தீவிரமாகப் போரிட்டனர் என்று!

மகிமையின் நிலம் எவ்வாறு தனது
அவமானத்தையும், தோல்வியையும் தொலைத்து
கீர்த்தியின் ஆடையை அணிந்தது என்று!”

பொதுவாக கவிதைகள் கவர்ச்சிகரமானதாக இருந்தாலும் இறுதியில் அவை ஜிஹாதை உருவாக்குவதன் மூலம் அழிவினையே மேற்கொள்கின்றன என ஆய்வாளர்கள் இந்தப் பிரதிகளைப் புறக்கணிக்கின்றனர். ஆனால் அது தவறு. ஜிஹாதிஸத்தின் கலாசாரத்தை ஆராயாமல் ஜிஹாதிஸம் அதன் நோக்கங்கள், அதற்கான புதிய ஆட்சேர்ப்பு முறையீடுகளை விளங்கிக் கொள்வது சாத்தியமற்றது. இந்த கலாசாரம் கீதங்கள் மற்றும் ஆவணப்பட வீடியோக்கள் உள்ளடங்கலான பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகிறது. ஆயினும் கவிதைதான் அதன் இதயமாகவுள்ளது. பிற நாட்டவர்களின் பார்வைக்காக தயாரிக்கப்படுகின்ற கழுத்து வெட்டுதல், உயிருடன் எரித்தல் தொடர்பான வீடியோக்களைப் போலன்றி, கவிதையானது, அந்த அமைப்பு தன்னைப் பற்றிப் பேசுவதற்கான சாளரத்தை வழங்குகிறது.
2.
செவ்வியல் கால அரபுப் பண்பாடானது அதாவது 8 ம் நூற்றாண்டிலிருந்து 13ம் நூற்றாண்டு வரையான காலப்பகுதியில் டமஸ்கஸ், பக்தாத் மற்றும் கோர்டோபா அரசவையை மையப்படுத்தியதாக இருந்தது. அரபியில் எழுதும் சமகாலக் கவிஞர்கள் பிற நாட்டுப்படைப்புகளை மொழிபெயர்க்கவும் வாசிக்கவும் செய்கின்றனர். அவர்களில் பலருக்கு (இலக்கண வரம்புகளற்ற) சுதந்திரமான செய்யுள்களும் மற்றும் உரைநடைக் கவிதைகளுமே வாடிக்கையானதாகவுள்ளன. ஆனால் பழைய மாதிரிகள் தங்களது ஆக்கத் திறன்கள் சிலவற்றை இழந்தாலும் இன்றும் கவிதை வெளிப்பாட்டில் ஒரு குறிப்பிடத்தக்க தொடர்ச்சியை கொண்டிருப்பதைக் காணலாம். படித்த அரபு மொழி பேசுபவர்களைப் பொருத்தவரை, ஒப்பீட்டளவில் செவ்வியல் கால கட்ட அரபு அனுபவிக்க எளிதானது.
அத்துடன் பழைய கவிதை பிரபல பரப்புகளில் சிறப்புடனும், உயிர்ப்புடனும் உள்ளன. மத்திய கிழக்கில் பிரபலமிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் “Sha‘ir al-Milyoon” (‘Millionaire poet’) அல்லது (“poet of the people’) எனும் நிகழ்ச்சியும் பிரபலாமாகவுள்ளது. இதில் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அரபுலகிலிருந்து வந்த கலைஞர்கள் தங்களது சொந்தக் கவிதைகளை பெரும் எண்ணிக்கையிலான கலையகப் பார்வையாளர்கள் முன்னிலையில் வாசித்துக் காட்டுவர். இதில் வெற்றியாளர்கள் இலக்கியத்திற்கான நோபல் பரிசைவிடவும் அதிக தொகையான 1.3 மில்லியன் டொலர்களை பெற்றுக் கொள்கின்றனர்.

கடந்த வருடம் இந்நிகழ்ச்சி உலகளாவிய ரீதியில் 70 மில்லியன் பார்வையாளர்களைக் கொண்டிருந்தது. இந் நிகழ்ச்சியில் பாடப்பட்ட கவிதைகள் வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் மிகவும் மரபுரீதியானதாக இருந்தது. அவர்கள் நேசத்துக்குரியவைகளின் மற்றும் தாய் நிலத்தின் அழகுகளை ஞாபகிக்கின்றனர். உள்ளுர் தலைவர்களின் தாராளத் தன்மையை புகழுகின்றனர் அல்லது சமூகத் தீமைகள் பற்றி புலம்புகின்றனர்.
2010ல் இந்நிகழ்ச்சியில் கவிதை பாடிய சவுதி அரேபியாவைச் சேர்ந்த ஹிஸ்ஸா ஹிலால் எனும் பெண்மணி சவுதியின் மதகுருக்களைக் கடுமையாக விமர்சித்து கவிதை பாடியதையடுத்து பார்வையாளர்கள் மத்தியில் கடும் பிரபல்யத்தைப் பெற்றார். அரபு வசந்தத்தின் போது எகிப்தைச் சேர்ந்த ஹிஸாம் அல் ஹாக் என்பவர் இந்நிகழ்ச்சியில் தோன்றி, தஹ்ரீரின் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு ஆதரவாக பல கவிதைகள் பாடினார். அதனால் அவரொரு ஊடக நட்சத்திரமாக மாறியதோடு அவரது கவிதைகளும் பிரபலமாகப் படிக்கப்பட்டன.

jif-2

“Sha‘ir al-Milyoon” எனும் நிகழ்ச்சியில் ஜிஹாதியக் கவிதைகளில் வெளிப்படுத்தப்படும் பார்வைகள்/ நோக்குகள் இரத்தவெறி கொண்டவையாகவே உள்ளன. ஷீயாக்கள், யூதர்கள், மேற்கத்திய சக்திகள், மற்றும் போட்டி தரப்புகள் அனைத்தும் இந்த அழிவுப் பார்வையினால் தொடர்ச்சியாக அச்சுறுத்தப் படுகின்றனர். எனினும் பிரபலமான இந்தக் கலை வடிவத்தின் அடையாளந் தெரியக்கூடிய ஒரு துணைக்குழுவாக அது காணப்படுகிறது. அது சென்ட்டிமென்ட் உடையதாக காணப்படுகிற போதிலும் சில வேளைகளில் ஒரு சிறு கலைத்தன்மையை அவை பெற்றிருந்தாலும் இன ஒற்றுமையைக் காட்டிலும் இனவாதத்தை வெளிப்படுத்துவதாகவே உள்ளது.
3.
ஜிஹாதிய அரசியலின் மையமானது தேசிய-அரசு (Nation-states) என்பதை நிராகரிப்பதாகவே அமைந்துள்ளது. நவீன மத்திய கிழக்குக்கான வரைபடமானது முதலாம் உலக மகா யுத்தத்தின் முடிவில் பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளினால் நிறுவப்பட்டதாகும். ISIS இன் காணொளி ஒன்றில் 1916ல் மேற்கொள்ளப்பட்ட Sykes-Picot உடன்படிக்கைக்கு இணங்க வரையப்பட்ட ஈராக்-சிரியாவுக்கிடையிலான எல்லைக் கோட்டை ISIS இனர் அழிக்கும் காட்சி ஒன்று காண்பிக்கப்படுகிறது. ஏனைய சில காணொளிகளில் கடவுச்சீட்டு மற்றும் தேசிய அடையாள அட்டைகளை எரிக்கும் காட்சிகளும் காண்பிக்கப்படுகின்றன. இந்த “புனிதப் போராளிகள்” ஆப்கானிஸ்தான் போன்ற தோல்வியடைந்த அரசுகளையும் தற்போது கிழக்கு-சிரியா போன்ற இடங்களையும்தான் ஒரு இல்லமாக கண்டடைந்துள்ளனர். ஆக ஜிஹாதிகளின் கவிதைகள் ஒரு புதிய அரசியல்-நிலவியலை (political-geography) பிரச்சாரம் செய்கின்றன. இந்த அரசியல்-நிலவியலானது வெளிநாட்டு சக்திகளால் ஏற்படுத்தப்பட்ட எல்லைப் பிரிவினைகளைப் புறக்கணிக்கிறது. இத்தகைய எல்லைப் பிரிவினை பற்றி அஹ்லம் அல்-நஸ்ரின் கவிதை ஒன்று இப்படிப் பேசுகிறது.
எனது தாய் நிலம் உண்மையின்
நிலமாகும்.
இஸ்லாத்தின் மைந்தர்கள்
எனது சகோதரர்கள்!
வடக்கின் அரபுக்களைக் காட்டிலும்
அதிகமாக நான் தெற்கின்
அரபுக்களை நேசித்து விடவில்லை!
எனது சகோதரர்கள் இந்தியாவிலுள்ளனர்
பால்கன் பிரதேசத்திலுள்ளனர்
அஹ்வாஸ், அக்ஸா மற்றும்
செச்னியாவிலும் உள்ளனர்!
பலஸ்தீனம் அழும்போது…
ஆப்கானிஸ்தான் அழைக்கும் போது…
அஸாம், பட்டானி தீங்கிழைக்கும்போது…
என் இதயம் அவர்களை நோக்கி நீள்கிறது..!”

 

இதில் அஹ்வாஸ் என்பது ஈரானில் சுன்னி முஸ்லிம்கள் அதிகம் வாழும் தென் மாகாணத்துக்கு வழங்கப்படும் அரபுப் பெயராகும். பட்டானி தாய்லாந்தில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் மாகாணமாகும். அல்-நஸ்ரின் இலக்கிய எழுத்துக்களின் மையமாக இருப்பது பல்வேறு இடங்களிலுமுள்ள முஸ்லிம்களின் துயரங்களை, வலிகளை, உணர்ச்சிகளை விளங்கிக் கொள்ளும் ஆற்றல்தான்…….
(தொடரும்)

0000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment