Home » இதழ் 17 » *தமிழ்ப் போராட்டத்தில் தவறுகள் எங்கே நேர்ந்தன? ( டாக்டர். சிவபாலன் ) தமிழில் வி. சிவலிங்கம்

 

*தமிழ்ப் போராட்டத்தில் தவறுகள் எங்கே நேர்ந்தன? ( டாக்டர். சிவபாலன் ) தமிழில் வி. சிவலிங்கம்

 

ராஜனின் நூலானது வரலாறு, அரசியல், சட்டம், மற்றும் பலவற்றின் பின்னணியிலான சிறப்பு மிக்க ஆக்கமாகும். எனது கருத்துக்களை இரண்டு அம்சங்களோடு மட்டுப்படுத்திக் rajaniகொள்கிறேன். முதலாவது, இந் நூலின் வெளித் தோற்றம் மற்றும் பிரச்சனையின் போது அதிகளவு காலங்கள் யாழ்ப்பாணத்தில்  வசித்தவன் என்ற காரணத்தாலும், இரண்டாவதாக போராட்டத்தில் என்ன தவறு நடந்தது? என்பது குறித்த கவலை உடையவன் என்ற வகையிலும் பேச விழைகிறேன். முதலாவது அம்சத்திலிருந்து தொடர்கிறேன்.

 

மொத்தத்தில் என்னிடம் இரு கேள்விகள் உள்ள. இங்கு ராஜனியின் பெயர் நூலின் ‘பனை மரம் விழுந்தது’ என்ற பெயரில் உள்ளது. ராஜனியிலிருந்து போர் முடியும் வரை உள்ளது. அவரது புகைப்படம் முதற் பக்கத்தில் காணப்படுகிறது. அது அவரது படுகொலையின் 25வது ஆண்டு நிறைவைக் குறிக்கிறது. அது ராஜனிக்கு சமர்ப்பணமாக்கப்படவில்லை. ஆனால் நூல் முழுவதும் அவரைப் பற்றியே பேசுகிறது. சில அத்தியாயங்கள் முற்றாக அவர் குறித்தே தெரிவிக்கிறது.முதலாவது வினாவாக எழுவது என்னவெனில், சமீபத்தைய வரலாற்றில் இவ்வளவு பக்கங்களை நிரப்புவதற்குரிய முக்கியமானவரா அவர்? இரண்டாவதாக, இந் நூலில் தரப்பட்டுள்ள வரலாற்றுத் தரவுகளும், சம்பவ விபரங்களும் அடிக்கடி தரப்பட்டுள்ளதே இதனால் என்ன பயன்? என்பவையாகும்.
முதலாவது கேள்விக்கு செல்வோம்.

 

ராஜனிக்கு இவ்வளவு முக்கியத்துவம் வழங்கியமைக்கான நியாயங்களை நூலாசிரியர் ராஜன் தந்துள்ளாரா? ராஜனியை நான் பல்கலைக் கழகத்தில்தான் அறிவேன். பல்வேறு துறைகளில் பணிபுரிவதைப் பார்த்துள்ளேன். அங்கொன்று இங்கொன்று என அவரது பணிகளை ஓரளவு அறிவேன். உண்மையைக் கூறுவதானால், இந் நூலைப் பலத்த சந்தேகத்துடனேயே படிக்கத் தொடங்கினேன். வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பிடிப்பதற்குரிய தகுதியான ஒருவராக ராஜனி உள்ளாரா என்கிற வினா எனக்குள்  இருந்ததால்..?

 

ராஜனி தனது மக்களுக்காக போராடினார். மற்றும் பலர் அவ்வாறு செயற்பட்டார்கள். அவர் தனது உயிரை வழங்கினார். அது போல மற்றும் பல மாவீரர்கள் உள்ளனர். ராஜனி மனித உரிமைக்காக உழைத்தார். பலர் அவ்வாறு செயற்படவில்லை. இருப்பினும் எமது நாட்டு மக்களில் சிலர் இவ் உரிமைக்காக பேராடியுள்ளார்கள். ராஜனி தன்னை வறுமையான மற்றும் வாய்ப்பற்ற மக்களோடு அடையாளப்படுத்தினார். சிறிய அல்லது பாரிய அளவில் இன்னும் பலர் செயற்பட்டார்கள். அவர் தன்னைப் பிரசித்தப்படுத்துவதற்காக அல்லாமல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு வழங்க மட்டுமல்லாமல் ,தத்தமது கால்களில் நிற்கும் வகையில் உதவிகள் புரிந்தார். சிலர் அவ்வாறு செயற்பட்டுள்ளார்கள்.
ராஜனி ‘ முறிந்த பனை’ என்ற நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.  ஆனால் எமது போராட்டம் பற்றி பலர் தமிழில் எழுதியுள்ளார்கள்.

 

அவ்வாறானால் ராஜனி எவ் விதத்தில் தனித்துவமானவர்?

 

தனது தொடர்புகளாலும், தகுதிகளாலும் அவர் வெளி நாட்டில் வாழ்ந்திருக்க முடியும். அவர் அவ்வாறு செய்யவில்லை. போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்தில் தனது இரு பிள்ளைகளையும் தனித்தே கவனித்தார். அவரால் பொது வாழ்வைத் தவிர்த்திருக்க முடியும். அவர் அவ்வாறு செயற்படவில்லை. தம்மை எதிரியாக கருதியவர்கள் மீதும் மற்றும் RajanKoolதனது பல்கலைக் கழக மாணவர்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்தினார். அதுவே அவரது தனித்துவமாகும். ராஜனின் நூலைப் படித்தபோது எமது சமூகத்திடமோ அல்லது ஏனையவர்களிடமோ காணப்படாத தனிப் பண்புகளை அவரிடம்  கண்டேன்.

 

ராஜனி மற்றவர்களின் வலியை உணர்பவராக இருந்தார். ஏனைய உயிர்கள் பறிக்கப்பட்ட ஒவ்வொரு தருணத்திலும் அவரும் அம் மரண அவஸ்தையை அனுபவித்தார். இவ் வேளையில் ஒருவர் கொலை செய்யப்படும்போது துரோகியாக, மாவீரனாக அல்லது எதிரியாகவே பார்த்தோம். ராஜனியைப் பொறுத்த வரையில் விலை மதிக்கப்படாத ஒன்றாகவே அவர் அவ் உயிர்களைக் கருதினார். எமக்கு எமது உயிர் பிரத்தியேகமானது, புனிதமானது, விலை மதிக்க முடியாதது. ஆனால் ராஜனிக்கு ஒவ்வொருவரது உயிரும் பிரத்தியேகமான, புனிதமான, விலை மதிக்க முடியாத ஒன்றாகவே இருந்தது. மனித சமூகத்தின் மீதான அன்பாக அது வியாபித்திருந்தது. அதுவே அவரது அடையாளம். ஓவ்வொரு மனிதர் மீதும் அது முழுமையாக சென்றடைந்தது. அந்த வகையில் அவர் தனித்துவமானவர். எமது மண்ணில் அருமையாக சஞ்சரிக்கும் உயிரினமாக அவர்  உள்ளார்.

 

book

ராஜனியில் இன்னொரு தனித்துவம் உண்டு. அவரிடம் சர்வதேச வெளிப் பார்வை காணப்பட்டதை ராஜன் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக எமது போராட்டத்தை பொருத்தமான கணிப்புகளோடு, தனக்குரிய விதத்தில் முன்வைத்து எதிர் விளைவுகள் குறித்துக் கவலைப்படாமல் கடமையாற்றினார். எமது சமூகத்தில் இப் பணி தனித்தன்மை வாய்ந்தது. எமது வரலாற்றில் இடம்பெறுவதற்கான அருகதை அவருக்கு உண்டு.

000000
எனது பார்வையில் வேறொரு வகையில் இன்னொரு மனிதர் தனித்துவமானவர். அவர் பணி அமைதியானது. அவர் தீவின் சகல rajani-2கோணத்திலும் பாதிக்கப்பட்டு வாழும் மக்களை நோக்கிச் செல்பவர். அவர் மிகவும் கவனமாகப் பாவிக்கும் சொற்களின் மூலம் கதைகளை எழுதி மலையையே புரட்டிப் போடக் கூடியவர். அவர் எப்போதும் நம்பிக்கைக்குரிய இனிய நண்பர். நீதியான சமூகத்தில் நாம் சகலரும் முன்னேறி வாழ வேண்டும் என்பதே அவரது தூர நோக்கு. நீங்கள் அவரை நன்கு அறிவீர்கள் என்பதை நான் அறிவேன். அவர்தான் ராஜன். இந்த நூலின் ஆசிரியர். விரிந்து செல்லும் உங்கள் பணியை மிகவும் மதிக்கிறேன். எனது அடுத்த வினா இந் நூலின் வெளித் தோற்றம் பற்றியதாகும். இத் தரவுகள் யாவும் அத்தியாவசியமானதா? பாதிக்கப்பட்ட மக்களின் இத்தனை விபரங்களையும் திரட்டுவதால் கிடைக்கும் பலன் என்ன? என்பவைகளாகும்.

 

ரஜனியின் குரல் மூலமாக 176வது பக்கத்தில் ராஜன் பதில் தருகிறார்.
/கொலைகளின் தொகையின் எண்ணிக்கையை புள்ளிவிபர அடிப்படையில் திரட்டுவது அதனை ஒப்பிட்டு நோக்குவதற்காக அல்ல. பதிலாக சகல தரப்பகளிலும் கொலை நடந்துள்ளது என்பதை நோக்கவும், அக் கொலைகளை மேற்கொண்டோரின் உள் நோக்கங்களையும், தன்மைகளையும் அப்போதிருந்த நிலமைகளோடு பொருத்திப் பார்ப்பதற்கே. இவ்வாறு செய்வதன் மூலம் சமூகம் எவ்வாறு உண்மைகளைத் திரிக்கும் பங்காளர்களாக செயற்பட்டமையையும், அவ்வாறான சூழலின் பின்னணியில் அக் கொலைகளுக்கான கோட்பாட்டு அடிப்படையிலான விளக்கங்களாக அப்போதைய அரசியல் கலாச்சாரம் இருந்தமையையும் அவை எடுத்துக் காட்டுகின்றன. அவை கொலைகாரர்கள் மத்தியில் காணப்பட்ட விழுமியங்கள் மீதிலான வறுமையையே அடையாளப்படுத்துகின்றன. இவை குறித்து சமூகம் தம்மையே கேள்விக்குட்படுத்த வேண்டும் எனக் கேட்கிறோம்.
எனது வினாக்களுக்கான தகுந்த பதில் இல்லாமல் இருக்கலாம். இவை அரசியல் மற்றும் ராணுவ உத்திகளை சாமான்ய மக்களை இலக்கு வைத்து நடத்தியவர்களுக்கும் பொருந்தும்/.
எமது போராட்டத்தில் எங்கே தவறு நேரிட்டது? என்ற எனது வினாவிற்குச் செல்லுமுன்னர் எனது சக நண்பர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியுள்ளது. சிலர் ராஜன் தமிழ்த் தேசியவாதத்திற்கு எதிரானவர் என்ற அவர்களின் முறைப்பாடு ஆகும். இதே போன்ற வினாக்கள் எம்மை நோக்கி எழுப்பப்பட்ட காலங்கள் நினைவுக்கு வருகின்றன. எமது தேசியத் தலைவரை நீ நேசிக்கிறாயா? இல்லை எனில் நீ ஒரு துரோகி.ஒரு மனிதரை அல்லது சில வாசகங்களை வழிபடுவதில் அர்த்தம் இல்லை. சாமான்ய, வறுமையில் உழலுகின்ற, ஓரங்கட்டப்பட்ட, வாய்ப்புகள் மறுக்கப்பட்ட மக்களின் நலன்களை நோக்கியே எமது சிந்தனைகள் செல்ல வேண்டும்.

 

158வது பக்கத்தில் ராஜன் இவ்வாறு கூறுகிறார்.
/தமது அன்றாட வாழ்வை நடத்துவதற்கு மக்களை அனுமதிக்காமல் ராணுவம், மற்றும் அரச ஆதரவுக் குழுக்களை நகைப்புக்குரியதாக்குவது திணிக்கப்படுகிறது. நிலமும், நாடும் தமக்கென அவசியம் என்பதை தமிழ் மக்கள் மேலும் மேலும் முன்னெப்போதையும் விட நம்பினார்கள். இதற்கான பதிலை இந் நூலைப் படிக்கும் போது ஒருவர் பெற முடியும்.
ஒரு நாடோ அல்லது நிலமோ எமக்கு எப்போது தேவை எனில் அந்த இடத்தில் எதிர்காலச் சந்ததியினர் மொழி காரணமாக அல்லது மதம் அல்லது கருத்து வேறுபாடுகளுக்காக தண்டனைக்குள்ளாக்கும் அச்சம் அற்று, துன்பங்கள் அற்று வாழக்கூடியதாக அமைய வேண்டும். அவை வெறும் கவர்ச்சியான சுலோகங்களுக்காக தேவைப்படுவன அல்ல/.

 

இனி எனது இறுதி வினாவிற்கு வருகிறேன்.
எமது போராட்டத்தில் எங்கே தவறு நேர்ந்தது? இந் நூல் அதற்கான பதிலை அல்லது சில ஊகங்களைத் தந்துள்ளதா?

 

பிரதமர் டி. எஸ். சேனநாயக்கா அவர்களால் கொண்டு வரப்பட்ட பிரஜா உரிமை மற்றம் வாக்குரிமைச் சட்டங்கள் குறித்து ராஜன் குறிப்பிடுகிறார். அத்துடன் சட்டம், ஒழுங்கு மற்றும் புரிந்துணர்வு அடிப்படையிலான அரசியல் என்பன சீர்குலைந்த தருணங்கள் தரப்பட்டுள்ளன. அவர் தோல்வியுற்ற இடதுசாரிகள் குறித்தும் பேசுகிறார்.
155வது பக்கத்தில் 1972ம் ஆண்டின் அரசியல் யாப்பு தயாரிப்பின் போதான நிகழ்வுகளைத் தருகிறார்.
/கம்யூனிஸ்ட் தலைவரும், அமைச்சருமான பீற்றர் கெனமன் புதிய அரசியல் அமைப்பு விவகாரங்கள் தொடர்பாக அரசாங்கத் தலைவர்களோடு தமிழ்க் கட்சி உறுப்பினர்களும் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறார். அப் பேச்சுவார்த்தைகளின் போது திருமதி. பண்டாரநாயக்கா, அமைச்சர் கொல்வின் ஆர். டீ. சில்வாவை விட பிரச்சனையில் அதிக அக்கறை கொண்டிருப்பதை அவதானிக்கின்றனர். இறுதியில் அமைச்சர் கெனமன் எமக்கு இவ்வாறு தகவல் தருகிறார்.தேசிய அரசுப் பேரவை எந்த வகையிலும் பயனில்லை என்பதால் தாம் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என செல்வநாயகம் அவர்கள் இறுதியாகத் தெரிவித்துள்ளதாகக் கூறினார்./இவ்வாறான சம்பவங்கள் எமது வரலாற்றில் மீளவும், மீளவும் இடம்பெற்றுள்ளது.

 

இதில் யாரைக் குற்றம் கூறுவது?
மூன்று நாடுகளில் வன்முறையற்ற வழிகளில் மக்கள் போராடி வெற்றி பெற்ற வரலாற்றினை நாம் எண்ணிப் பார்க்க முடியம். இந்தியா, தென் ஆபிரிக்கா, அமெரிக்க கறுப்பு இனத்தவர். இப் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அம் மக்களின் தலைவர்கள் இந்தியாவில் மகாத்மா காந்தி, தென் ஆபிரிக்காவில் நெல்சன் மண்டெலா, அமெரிக்க கறுப்பு இன மக்களுக்காக மார்ட்டின் லூதர் கிங் என்போர் அம் மக்களின் நியாயமான உரிமைகளை போராடி வென்றெடுத்தார்கள்.

RAJINI_THIRANAGAMA

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அதிகார வர்க்கத்தின் தலைவர்களால் அல்லது ஒடுக்கு முறைக்கு எதிராக முணுமுணுப்பவர்களால் தர முடியாது. ஒரே ஒரு விதி விலக்காக அமெரிக்க கறுப்பு இன மக்களை மோசமான அடிமை முறையிலிருந்து விடுவித்த ஆபிரகாம் லிங்கன் மட்டுமே எனது நினைவில் வருகிறார்.
முதலில் தமிழ்த் தலைவர்களின் செயற்பாடுகளைப் பார்க்கலாம். அமெரிக்க கறுப்பு இன மக்களின் போராட்டத்திற்கும், எமது போராட்டத்திற்குமிடையே சில பொது அம்சங்கள் உண்டு.மார்ட்டின் லூதர் கிங் தலைவர்கள் குறித்து இவ்வாறு கூறுகிறார்.
‘ உண்மையான தலைவர் நல்லிணக்கத்தை நோக்கித் தேடிச் செல்ல மாட்டார். அவர் நல்லிணக்கத்தை உருவாக்குபவராக இருப்பார்.’
160வது பக்கத்தில் தமிழ்த் தலைவர்களின் பங்கினைப் பற்றி ராஜனியின் அவதானிப்புகள் தரப்பட்டுள்ளன. சகல சிறுபான்மைக் கட்சிகளும் அரசியலில் சிரத்தையாக இருந்ததில்லை. பதிலாக வாக்குகளை நோக்கிய உறுதி மொழிகளும், அதற்காக ஆளும் சிங்களவர்களோடு பேரம் பேசுவதே செயற்பாடாக இருந்தது. சிங்களத் தலைவர்களோடு தாமும் சமமாக மதிக்கப்பட வேண்டும் என்பது அவர்களது கவலையே தவிர தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை அடையாளம் காண முயற்சிக்கவில்லை.
மார்ட்டின் லூதர் கிங் பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
/நாம் சிறந்த சமூகத்தை உருவாக்க உழைக்க வேண்டுமே தவிர, கறுப்பு இனத்தவர் உயர்ந்தவர் அல்லது இன்னொருத்தர் தாழ்ந்தவர் என்பதை நோக்கியதாக அல்ல. ஒரு சமூகமானது சகலரும் ஒற்றுமையாக சகோதரர்கள் போல் மதித்து, கௌரவித்து வாழவேண்டும். அது மனிதத்திற்குச் சிறந்தது.

 

2வது பக்கத்தில் விடுதலைப் புலிகள் குறித்து,
20150708_163758/தமிழ் மக்களின் உரிமை என்பது மனித உரிமை எனக் கருதி பரந்த மனிதத்துவ தோற்றத்தைத் தரும் வகையில் ஏனையோரையும் அப் போராட்டத்தில் இணைக்கும் வகையிலான செயற்பாட்டை விடுதலைப்புலிகளால் ஒருபோதும் எட்ட முடியாது. அதுவே விடுதலைப்புலிகளின் வெளித் தோற்றத்தில் காணப்படும் பின்னடைவாகும். மக்களின் மீது திணிக்கப்பட்ட ஒன்று என்பதால் விடுதலைப்புலிகளால் ஓர் வெறுமையையே, தியாகம் புரிந்த அம் மக்களுக்கு இறுதியாக தர முடிந்தது/.
வெள்ளை இன மக்கள் தொடர்பாக மார்ட்டின் லூதர் கிங் இவ்வாறாக கூறுகிறார்.
‘ அதிகாரத்திற்கும், அதனை நிறைவேற்றுவதற்குமான தனியான வெள்ளைப் பாதை அங்கு இல்லை. கறுப்பு இனத்தவரின் சுதந்திரத்திற்கும், மனித அந்தஸ்திற்குமான அதிகாரப் பங்களிப்பிற்கு இடமில்லையாயின் சமூக ஒழுங்கீனம் தொடர்ந்தும் காணப்படும்.’
தமிழ் உயர் மட்டம் சிங்கள சகோதரர்களுக்கு அவ்வாறான செய்தியைத்தான் கூறியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவர்கள் 175வது பக்கத்தில் குறிப்பிட்டவாறு தெரிவித்தார்கள்.
/அரசர் ஆடை இல்லாமல் அம்மணமாக இருக்கும் உண்மையைக் கூறாது, தமிழ்ச் சமூகத்தின் உள் நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள உயர் விளக்குகள் அரசர் புதிய ஆடையுடன் இருப்பதாக புகழ்ந்து கூறி உண்மையைக் கூறியவர்களை அழித்து மோசமான செயலை அம் மக்களுக்குப் புரிந்துள்ளார்கள். இந்த வர்க்கம் தமக்கு ஏற்றாற் போல் கூட்டுகளை ஏற்படுத்தினார்களே தவிர சமூகத்தின் பொறுப்பாளர்களாக நடந்து கொள்ளவில்லை/.
மார்ட்டின் லூதர் கிங் அவர்கள் எதிர்பார்த்த அவ்வாறான பண்புகளை எமது அரசியல் தலைவர்களோ அல்லது தீவிரவாதிகளோ, படித்தவர்களோ கொண்டிருக்கவில்லை. இவை அவர்களைத் தரம் தாழ்த்துவதற்காக அல்ல. அவர்களின் பெருமை மிக்க வரலாறுகள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே சங்கம் வளர்த்து, இலக்கியம் படைத்து சார்பற்ற பண்பாட்டு மக்கள் என்ற பின்னணியோடு பார்க்கவேண்டியுள்ளது.

0000
ஒரு நாள் தமிழ் மக்கள் காலத்தோடு ஒட்டிய கோரிக்கைகளோடு எழுவார்கள். தனியாக அல்ல, சிங்கள சகோதரர்களோடு பக்கம் பக்கமாக நிற்பார்கள். அத் தருணத்தில் முறிந்த பனை, விழுந்த பனை என்ற நூல் வரிசையில் மூன்றாவது நூல் வெளிவரும். அதுவே பனைமரம் துளிர்க்கும் காலம். வளரும் வடலிகள்.

000000000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment