Home » இதழ் 18 » * சந்துஷ் கவிதைகள்

 
 

* சந்துஷ் கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

வழித்துணை

உன் வீட்டை நெருங்கும் போதே
துமிக்கத் தொடங்கும் மழை…

வரும்போதே மழையையும்
நான் கூட்டி வருவதாகக் கூறிக்
20151020_092750கதவு திறக்கிறாய் …

வரும் வழியெலாம் என்னுடன் பயணித்த மேகம்
இசைத் துளிகளாகி விழுவதை
விழிகள் விரிய
ஜன்னல் வழியாகக் கண்டு
அந்தக்காலையில் மீண்டும் மலர்கிறாய் …

உன்னிடம் விடை பெற்றுத்
தனியாகத் திரும்பும் என்னுடன்
உன்னுடன் கேட்ட இசையின் நிறத்தை
அதன் மீது நான் தீட்ட
வழித்துணையாக வருமா இன்னுமொரு மேகம்…?

00000000000000000000000000000

பாத்திமா *

நீ அந்த மழை நாளில்
rainy_day_by_musicandphotographyடியுஷன் சென்று திரும்புகிறாய்…

இசையென இன்றுவரை நான் சிலிர்க்கும் மழை
அந்த வாய்க்காலை வெள்ளத்தோடு வெள்ளமாய் மூட
பாதையெனக் கால் வைத்த நீ தொலைந்து போகிறாய் மரணத்துள் …

வாழ்வின் நிறங்களில் மறையும் நிறங்களின்
உள்ளொளிரும்
இசையைத் தேடும் என் கவிதை
ஆற்றில் விழுந்து தொலைகிறது
உன்னுடன்
மரணத்தின் இருட்சுழியில்…

– 18.10.2015

*கண்டி நித்தவெல பகுதியில் அரச நிர்வாகத்தின் கவலையீனத்தால் பாதுகாப்பற்ற விதத்தில் இருந்த வாய்க்கால் வெள்ளத்தால் மூடப்பட்ட நிலையில் அதில் தவறி விழுந்து ஆற்றுக்கு அடித்துச் செல்லப்பட்டு பாத்திமா அஸ்ரா என்ற பதினேழு வயது பள்ளி மாணவி மரணமானார். ஒரு செய்தியாக கடந்து செல்ல முடியவில்லை இந்த மரணங்களை …

0000000000000000000000

இருப்பு

புழுதியின் அற்புதத்தில் தோய்ந்து
என் நினைவில் வளைந்து
என் மறதியில் புதைந்து
மறைகிறது மண்புழு…

வாழ்வு மண்வெட்டியாக அதை இரண்டாக்க
வலி ஒரு கனவாக
மீண்டுமுயிர்க்கும்
மண்புழு…

ஒவ்வொரு மண் துகளின் நிழலையும்
ஒவ்வொரு மழைத்துளியின் நினைவையும்
நேசிக்க வைத்த மண்புழு
என்னைக் கண்டு பிடித்தது
கணங்களினால்
கை விடப்பட்ட கணமொன்றில்…

00000000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment