Home » இதழ் 18 » *தேவ அபிரா கவிதைகள்

 
 

*தேவ அபிரா கவிதைகள்

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 

unnamed (3)

போருக்குத் தூரமான கிராமம்

—————————————-

கோவிலில் இருந்துவரும் நாதஸ்வர மேளதாள ஒலி
திருவிழா நாட்களை நிறைக்கின்றது.

இதிகாசங்களை ஆலாபனை செய்யும் பிரசங்கியின் குரல்
கோவில் வீதிகளையும்,
தொன்மங்களைக் கிளறி அணிகலம் தேடும் படைப்பாளிகளின்குரல்
பண்பாட்டு வீதிகளையும்,
போர்முனைகளில் இறந்தவர்களின் பெயர்களை அறிப்பவரின் குரல்
செம்பாட்டு வீதிகளையும் நிறைக்கின்றது.

காற்று எல்லா ஒலிகளையும்
வீதிகள் நடைப்பிணங்களையும்
EVDO01_IIAV002_IAV001000030காவிச்செல்லுகின்றன.

சமாதானப்படுத்த முடியாத துயரங்களுக்கு ஒலியும் இல்லை
அவை வீதிகளில் திரிவதுமில்லை.

உணரமுடியாதவற்றாற் பிரஞ்சத்தை நிரப்பியபின்
எங்களைக் குற்றம் சொல்லி என்ன பயன்.

1993.

00000000

விடுதலை.

———————-

சிக்கலான காலங்களிற்
கவிஞர்கள் ஆத்மாவை விற்பதில்லை
காலக்குகையுட் கவிதைகளை மறைத்துவிடுகிறார்கள்.

* சூரியக்கதிர்கள் தின்ற பூமியின் துயரம்
ஓர்மத்தின் கருவாகிச் சமுத்திர ஆழத்துள்புதைகிறது.
வாழ்க்கையின் ஆத்ம லயம்
கடலின் ஓயாத ஓலமாகிறது.
சமாதானத்துக்கானதும்
விடுதலைக்கானதும்,
கொலைகளின் குற்றமல்ல.
அரசியலினதும்
இரத்தத்தினதும்
வாசனைகளைப் பிரித்துப் புடமிடும் அரசியல் ஆலோசகர்கள்
மானுட கபாலத்தைக் குடைகிறார்கள்.

எங்கள் மமதையோ கூரான ஆயுதம்.
இறங்கிய இதயங்கள் விடுதலையை நொந்துகொள்கின்றன.

மக்கள் மரப்பொந்துகளில் ஒளிந்து கொள்கிறார்கள்.

சிறுவர்கள் தற்கொடைசெய்யும் இக்களமுனையில்
உனக்கும் எனக்கும் புரிவதற்கு
விடுதலை இலகுவான கவிதை அல்ல.
ஆழியின் மர்மங்களை அறியாதவர்கள் சுழியோடிகளாவதில்லை.
ஆண்டு முடிகிறது.
1995

* 1995 ம் ஆண்டு சூரியக்கதிர்கள் இராணுவ நடவடிக்கையைச் சந்திரிக்கா அரசாங்கம் நிகழ்த்தியது. நவாலித்தேவாலையப்படுகொலைகளும் இதன்போதே நிகழ்ந்தன.

0000000

அகதி முகாம் (நெதர்லாந்து)

——————–

சிறு கனவடிகள்- அறைகள்.
நிறையும் உடல்கள்.
நிறைந்தடங்கா உணர்வுகள்
விசும்பை அண்ணார்ந்து பார்க்கின்றன.
10382081_784495518252058_2358055671504014732_oகாற்றில் அலைப்புறுகின்றன.

பல மொழிகளில் வேண்டுதல்கள்
நிராதரவாகப்போகும் கோரிக்கை ஒன்றுதான்.

உணர்வுகளின் பெரும் சுழற்சியின் மீது
இலையுதிர்காலம் நிறங்களை உதிர்த்துச்
சிதைத்துச் செல்கிறது.

எறிபடும் கடைசி மதுப்புட்டி சிலீரிடுகிறது
சரிபவர்கள் வேரில்லா மரங்கள்.
விளக்குகள் அணைகின்றன
உறங்காத கனவுகள் சாளரங்களுள் எரிகின்றன.

காவற்காரனின் சப்பாத்தொலியில்
அகதி முகாம் உறங்கச் செல்கிறது.

00000

2001

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment