Home » அஞ்சலி » சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!

 
 

சண்முகம் சிவலிங்கம்: நெஞ்சம் கிளர்ந்து நினைவு தளிர்க்குமே!

 

மே 2012 | இதழ் – 01 »

பூர்வோத்திரம்

பூர்வோத்திரம்

  – சண்முகம் சிவலிங்கம். ‘அகிலி, அகிலி’ என்ற பார்த்தீயின் கிச்சிலி...

 
ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள்

  திரவியம் நேசத்தின் திளைப்பையும் முடிவில் அதன் துரோகத்தையும் அனுபவத்தில்...

 
நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

நீள வாய் சுருங்கிய மஞ்சள் கொக்குகள்

-மாலினோஸ்க்னா மதர்த்த குளத்தின் கரையில் குந்துவதும் எழுவதுமாய் காலம்...

 
அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

அரை நூற்றாண்டுக்கும் மேலான இலங்கைத் தமிழ் ஊடகங்களின் சமூகப் பெறுமானம்?

-கரன் 1977, 1983 காலப்பகுதியில் தென்னிலங்கையிலிருந்து இனவன்முறைகள்...

 
– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

– வ.ஐ.ச.ஜெயபாலன் கவிதைகள்

பாலைப் பாட்டு வேட்டையாடும் பின்பனி இரவு அகல புலரும் காலையில் உன்னையே...

 
அனார் கவிதைகள்

அனார் கவிதைகள்

இசை எனும் திராட்சை சிவப்புவண்ணப் படிக்கட்டுகளின் வளைவில் வெண்ணிறத்...

 
பெருநிலன் கவிதை

பெருநிலன் கவிதை

காலம் கரைத்த சாபமா? சாபங்களின் தீர்ப்பாகியது காலம் கரைந்து...

 
சோ. பத்மநாதன் கவிதைகள்!

சோ. பத்மநாதன் கவிதைகள்!

பெரியப்பு சொன்ன அடல்ற்ஸ் ஓன்லி! இந்தக்கதையை பெரியப்பு சுருட்டுக்கொட்டிலிலை சொல்லக்கேட்டு அறுபது...

 
யோகி கவிதைகள்

யோகி கவிதைகள்

பின்னோக்கிப் பாயும் நதி பாதை ஒன்று ஓராயிரம் பயணங்கள் பாதையிடம் காலடிகளை...

 
தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

தொழுகள்ளர்களின் முதலைக் கண்ணீர்…

. -ஈழக்கவி ஸ்ரீபாத மலையளவு குசினிப் பொருட்களின் விலை உயர்ந்ததால் மடுவளவு...

 
 


என். ஆத்மாவின் சொற்கள்

……..

01
சண்முகம் சிவலிங்கம் என்ற பெயரை நான் முதன்முதலாகக் கேள்விப்பட்டது எச். எம். பாறூக்கிடமிருந்துதான். 1988 என்று நினைக்கிறேன். கல்முனை ஸாஹிறாக் கல்லூரி வெளிக்கேற்றடியில் நான் அவருடன் உரையாடிய முதல்நாள் அவர் என்னை வாசிக்கும்படி சொன்னது ‘நீர் வளையங்கள்’ தொகுப்பைத்தான். அந்த நாட்களில் மிகக்கடுமையான இலக்கிய விமர்சனங்களை முன்வைப்பவராகவும் பரிசோதனைக் கவிதைகளை எழுதுபவராகவும்எச். எம். பாறூக்  பிரபலமாகியிருந்தார். அப்போது வெளிவந்த ‘இருப்பு’ சஞ்சிகையின் ஆசிரியர்களுள் ஒருவர் அவர். ஸாஹிறாவில் கற்பித்துக் கொண்டிருந்தார்.

அதற்கடுத்த வாரம் கவிஞர் சோலைக்கிளியுடன் அறிமுகமேற்பட்டது. சோலைக்கிளி எனக்கு இரண்டு நூல்களை நட்புடன் அன்பளிப்பாகத் தந்தார். அதில் ஒன்று சண்முகம் சிவலிங்கத்தின் ‘நீர் வளையங்கள்’ தொகுப்பு. நவீன கவிதைபற்றியும் சிவலிங்கத்தின் கவிதைகள் பற்றியும் எச்.எம் பாறூக் சொன்னவற்றில் கிறுகிறுத்துப் போயிருந்த எனக்கு அந்தக் கவிதைத் தொகுப்பு கையில் கிடைத்ததில் நிலத்தில் கால் தாவவில்லை. கல்லூரி விடுதிக்கு எப்படிப் போனேனென்றே தெரியாது. அந்த நாளோடு எனது கவிதை, எனது கலை, இலக்கியப் பார்வை, எனது சாயலும் கூட அடியோடு மாறிப்போகுமென்று நான் நினைத்திருக்கவில்லை.
‘………………….

Chromosomes Good bye

Mutations Farewell

எங்கள் சாயலை நாங்களே இணக்கினோம்
புருவப் பிறைமேல் கூர்ங்கோண நெற்றி
நெற்றியில் நீவிய தலைமயிர்க்கற்றைகள்
கற்றைகள் தொங்கும் கழுத்தும் பிடரியும்
நாங்களே எங்கள் சாயலை நடத்தினோம்,

Chromosomes Good bye

Mutations Farewell
…………………’  (நீர் வளையங்கள்: பக்-106)
என்ற ச.சியின் ‘சுயவார்ப்புகள்’ கவிதை வரிகள் எனக்காகவே எழுதப்பட்டவை போன்றிருந்தன.

2.

1990. யுத்தம் அதன் இன்னொரு அகோர முகத்தை வெளிக்காட்டிக்கொண்டிருந்த காலம். நான் மாலை நேர வகுப்புக்களுக்கு சாய்ந்தமருதிலிருந்து கல்முனை நகருக்கு சைக்கிளில் சென்று திரும்புவேன். வருகின்ற போது நெடுஞ்சாலையின் வலது பக்கமாக முடிவற்றுப் பரந்திருக்கும் வயல்வெளிகளில் சூரியன் விழுந்து கொண்டிருப்பதையும் நடுவால் போகும் மின் கம்பிகளையும் கீழே மேயும் மாடுகளையும் பார்த்து உயிரை விட்டுக்கொண்டு போவேன். இதைத்தான் சண்முகம் சிவலிங்கம் தன் நண்பரோடு ஊர்சுற்றி வரும்போது
‘…………..
கண்படுவரை நீள்கரவாகு வட்டை என்றேன்
அங்கே அடிவானம் அண்டுதுபார் என்று சொன்னாய்

………………………’ (நீர் வளையங்கள்: பக்-84)
என எழுதியிருப்பார் என நினைப்பேன். பரவளைவக்கோடு, நாங்கள் இரு தும்பிகள் கவிதைகளெல்லாம் இப்படி சைக்கிள் சவாரிகளில் மனத்திரையில் ஓடிக்கொண்டிருக்கும். ச.சியுடன் சைக்கிளோடிய நண்பர் நுஃமான் சேரோ என்று நினைப்பேன். பரவளைவுக்கோட்டில் அநசசல-பழ-சழரனெ அருகே சிவத்தக் கமிசணிந்து தோள் தெரிய நெஞ்சைச் சுமந்த ஒருத்தியைப் பற்றிய உரையாடல் வரும்போது அது நுஃமான் சேராக இருக்காது என்று குழம்புவேன். ச.சியுடன் சைக்கிளோடுவது தனித்தனியாக இருவேறு நண்பர்கள் என பிறகு நானே எனக்குள் தற்காலிகமாகச் சமாதானமடைந்தேன். 93இன் பின்னர் சைக்கிளில் ஊர், வயல், வெளி, ஆறு, காடுமேடென்று அக்கறைப்பற்றில் ரஷ்மியுடன் சுற்றித்திரிந்த பொழுதுகளிலெல்லாம் ‘நாங்கள் இரு தும்பிகள்’ கவிதை அந்த ஊரின் இதமான காற்றோடு மனதுக்குள் கதகதத்தது.
‘………………
நாங்கள் இருதும்பிகள் பாடிவந்தோம்
நாங்கள் இருபறவைகள் பறந்துசென்றோம்
எங்கும் திரிந்தோம்-புல்-வெளி-மலை-அருவி-ஆறு
எங்கும் பறந்தோம்-கிறவல்-மணல்-கடல்-காற்று.

…………………..’ (நீர் வளையங்கள்: பக்-11)

அக்கறைப்பற்றில் ஒரு வீட்டின் மொட்டைமாடியின் பெல்கனியில் நாங்கள் உறங்கிய காலத்தில் நடுச்சாமம் சிறுநீர் கழிக்க இறங்கி வந்து பற்றையருகே குந்தி நிமிர்ந்து பார்த்தால் பிரகாசமான நீலவானம் தெரியும், ‘வெளியார் வருகை’ கவிதையில் போல
‘………………
மூத்திரம் பெய்ய இடையில் முழித்தெழுந்தேன்
வார்த்தடியை நீக்கிக் கதவைத் திறக்க-
இருள் போர்த்தித் தெரிந்தது
கோடிக்குள் போகையிலே
வானத்தை அண்ணார்ந்து பார்த்தேன்
வடிவாக வெள்ளிகள் பூத்து மினுங்கின
மூத்திரம் பெய்யும் பொழுது
பிறகும் ஒருமுறை
அண்ணார்ந்து பார்த்தேன்-அடடா
-ஓ அடடா!’
(நீர் வளையங்கள்: பக்-92)

என்றிருக்கும். கவிதையில் தொடர்வது போல் ‘வானத்திலிருந்து வெள்ளிகள் கீழ் இறங்குவது போன்று தெரியும், வெளியில் வருவதற்கு இருட்டில் கதவிற்குக் குறுக்காகப் போட்டிருக்கும் வார்த்தடியை நீக்கும் போதும் அந்தக்கவிதை நினைவு வரும், அதையும் எழுதியிருக்கிறார் என்று நினைப்பேன். கிணற்றடியில் போய்க் குந்தும் நாட்களில்
‘…………….
அதோ இந்த நிலவில்
அகன்ற இலை வாழையிலே பனி சொட்டும் கீதம்
“இச்”
என்ற ஒலியுடனே எழுகிறது மீண்டும்

………………………….’ (நீர் வளையங்கள்: பக்-26)

என்ற வரிகள் மனதுக்குள் நிழலாடும். அந்தக் காலத்தில் வந்த நிலாநாட்களெல்லாம் ச.சியுடையனவாகவே இருந்தன. நித்திரை சீரழியும் இரவுகளில் பனிக்குப் பயந்து தலையைச் சேர்த்துச் சாறனை இழுத்துப் போர்த்துக் கொண்டு, யாரென்று தெரியாத, அவ்வப்போது மனதில் தோன்றி உள்ளுக்குள் குளிர் மின்னல் பாய்ச்சும் பெண்ணொருத்தியை நினைத்து அவரது தொகுப்பிலுள்ள நீர் வளையங்கள் என்ற தலைப்பிலமைந்த கவிதையைச் சினமாப் பாடல் போல முணுமுணுத்தபடி தவ நிலையில் உட்கார்ந்திருப்பேன்.
‘…………
இன்று மிகத் துயர் உற்றேன்
என் இனிய அன்பே,
இவ்விரவின் நிலவொளியில் என்னுடன் நீ இருந்தால்
வெண்பனியின் துளி சொட்டும்,
பூங்கொத்தைப் போன்று விம்முகிற என் நெஞ்சில்
ஆறுதல்கள் தருவாய்…

………………………………… ‘(நீர் வளையங்கள்: பக்-23,24)

என்று அவரெழுதும் போது ஆரையம்பதியில் நான் களவாக போகன்விலாக் கந்துகள் உடைத்த பூமரங்களெல்லாம் திரும்பிப் பார்க்கும் போது ஆடியது ஞாபகம் வரும். விம்முவதை இதைவிட சிறப்பாகக் காட்சிப்படுத்த முடியுமா என்று யோசிப்பேன். அப்படியொரு உயிரோட்டமான படிமமாக அது தெரிந்தது.

அது போல ‘வாழ்வும் மரணமும்’ கவிதையில் வரும்
‘…………………………
கோயில் அரசமரம் முன்னால் தெரிந்தது
எல்லா இலையும்
உதிர்ந்த கிளைகளின் பின்னால்,
நரைத்த பெரிய நிலாப்பந்து

……………….’ (நீர் வளையங்கள்: பக்-18)

வரிகளின் பாதிப்பில் இன்றும் கூட இலையுதிர்த்த எந்த மரத்திற்கும் பின்னால் எனக்கு வெள்ளைவெளீரென்ற ஒரு முழுநிலாத் தேவைப்படுகிறது.

நிலவும் வழிப்போக்கனும் கவிதையைப் படித்து விட்டு ‘என்ன மாதிரி யோசித்திருக்கிறார்’ என்று வியந்திருக்கிறேன். ஒருவர் நடக்கும் போது நிலவும் அவரோடு நடப்பது போன்ற பிரமையனுபவம் எவருக்கும் சாதாரணமாகத் தோன்றக் கூடியது. ச.சிக்கு நிலவிடம் கேள்விகள் இருந்தன.
;…………………………………
உனது
வெள்ளி ஓர விளிம்பின்
இமைப்புக்குள்
இந்தச்
சின்ன மனிதன் தெரிகிறானா?
நீ இந்த வழிப்போக்கனைக் காண்கிறாயா?

………………………’ (நீர் வளையங்கள்: பக்-45)
என்கிறார். இத்தகைய தத்துவார்த்தம் மிகுந்த கற்பனைகள் அவரை ஏனைய கவிஞர்களிலிருந்து வேறுபடுத்துகின்றன.

(தொடரும்)

en.aathmaa@gmail.com

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment