Home » அகிலன் கதிர்காமர் » போருக்குப் பின்னான, இலங்கையின் பொருளாதாரம்-ஜனநாயகம்-அதிகாரப் பகிர்வு!

 

போருக்குப் பின்னான, இலங்கையின் பொருளாதாரம்-ஜனநாயகம்-அதிகாரப் பகிர்வு!

 

-அகிலன் கதிர்காமர்-

எனது இந்த உரை  போருக்கு பிந்திய நவதாராள பொருளாதாரத்திற்கும் அதிகாரப்பகிர்வு ஜனநாயகமயப்படுத்தல் ஆகியவற்றுக்குமான உறவை பற்றிய ஒரு பார்வை. கிராம்சி மற்றும் சமகால புவியியல் மார்க்சிய அறிஞர் ஹார்வி (David Harvey)ஆகியோரின் தத்துவார்த்த சிந்தனைமுறை இந்த உரைக்கான அடித்தளமாக அமைகிறது. .   .

அதிகாரப்பகிர்வும் ஜனநாயகமும் அரசியல் பொருளாதாரத்துடன் பின்னி பிணைந்தன. எனவே வர்க்கம் பற்றிய ஆய்வு சாதியம் பற்றிய புரிதல் அவை சமூக உற்பத்தி உறவுகளில் செலுத்தும் தாக்கம் பற்றிய தெளிவின் மூலமே அரசியல் தீர்வு அதிகாரப்பகிர்வு  ஜனநாயகமயப்படுத்தல் பற்றிய புரிந்துணர்வு கிடைக்கும் என்பது எனது கருத்து.

மார்க்சியவாதிகள் கூறுவதுபோல் நவதாராளவாதம் நிதி மூலதன மேலாண்மையை நோக்கி நகரும் ஒரு வர்க்க செயல்பாடு. இந்த வர்க்க செயல்பாடு நிதி மூலத்தனத்திற்கும் அரச அதிகாரத்திற்குமான தொடர்பில் இயங்குகிறது. 1970 களில் நிகழ்ந்த பொருளாதார கொள்கை மாற்றங்களின் பின்னணியிலேயே இந்த வர்க்க செயல்பாடு முகிழ்த்தது. இவ்வர்க்கச்செயல்பாட்டின் விளைவு பல்வேறு தொடர்ச்சியான நிதி நெருக்கடிகளுக்கு இட்டு சென்றது. இன்னெருக்கடியானது பெருமளவில் உடைமை இழப்புக்களையும் ஏற்றதாழ்வுகளையும் தோற்றுவிக்கும் நிலை எழும் போது  இவற்றிற்கெதிராக எழும் மக்கள் எழுச்சிகளை நசுக்க சகல வல்லமை கொண்ட அரசின் அதிகார ஒடுக்குதல் அதிகரிக்கிறது. நவதாராளவாத விஸ்தரிப்பின் விளைவு இது.

நவதாராள கருத்தியலை தக்க வைப்பதற்கும் அதனை நடைமுறை படுத்துவதற்குமான பாத்திரத்தை  ஐ எம் எப் , உலக வங்கி , பங்கு சந்தைகள் போனற சர்வதேச நிறுவனங்கள் வகிக்கின்றன.  1980 களில் வாஷிங்டன் ஒருங்க்கிசைவு (washington Consencus) எனும் கோட்பாடு வளர்முக நாடுகளுக்காக வரையப்பட்டது. இக் கோட்பாடு நவதாராள கருத்தியலால் கட்டப்பட்டு அமைப்பு சரிசெய்தல் ( structural adjustment)  எனும் கொள்கையை முன்னிபந்தனையாக்கி மூலதனம் பண்டங்களின் தடையற்ற பாய்ச்சலுக்கு வழிவகுத்தது. அமெரிக்க நிதி துறையின் ஆசியுடன் சர்வதேச நிதியம் (IMF) உலக வங்கி இரண்டும் இத்திட்டங்களை முன்னெடுத்தன.

1970 களில் நிகழ்ந்த சர்வ தேச உள் நாட்டு பொருளாதார நெருக்கடி நிலை இலங்கையை நவதாராள கொள்கையின் பால் ஈர்த்தன. தென்னாசியாவில் நவதாராள கொள்கையின்பால் ஈர்க்கப்பட்ட நாடுகளில் இலங்கை முதலிடம் வகிக்கிறது. இந்த பாரிய நகர்ச்சி 1977 இல் ஜே ஆரின் அரசு திறந்த பொருளாதாரக் கொள்கையை அறிமுகப்படுத்தியதுடன் ஆரம்பமானது. இதை தொடர்ந்து வந்த பிரேமதாச சந்திரிக்கா அரசுகளும் யுத்த நெருக்கடிக்கு முகம் கொடுத்த அதேவேளை நவதாராள சீர்திருத்தங்களை தொடர்ந்தன. தனியார்மயப்படுத்தல் இச்சீர்திருத்தங்களின் அடிப்படையாக தொடர்ந்தது.

இரண்டாவது நவதாராள அலை

நவதாராள தொடர்ச்சியின் இரண்டாவது அலை 2002 இல் ரணில் விக்கிரமசிங்க அரசால் துரிதப்படுத்தும் முனைப்பில் ஆரம்பமாகியது. புலிகளுடனான உடன்படிக்கையின் தோல்வி, அன்றைய ஜனாதிபதியுடனான எதிரும் புதிருமான உறவு ,தெற்கில் எழுந்த அதிருப்தி போன்ற பல்வேறு காரணிகளால் 2004 இல் விக்கிரமசிங்க அரசு கவிழ்ந்ததுடன் இத்துரிதப்படுத்தும் முயற்சி  முடிவுக்கு வந்தது.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் ராஜபக்ச அரசு இரண்டாவது அலைக்கான புதிய வடிவத்தை கொடுத்தது. யுத்தம் முடிவுக்கு வந்ததால் கிடைத்த நாட்டின் ஸ்திர தன்மையின் அடித்தளத்தில் பொருளாதார வளர்ச்சி பற்றிய கனவே இந்த புதிய வடிவம். இந்த இரண்டாவது அலைக்கு முன்னிபந்தனையாக சர்வ அதிகாரம் கொண்ட வலுவான அரசொன்று தேவைப்ப்டுகிறது. தங்கு தடையுற்ற நிதிமூலதனம் , பண்டங்கள் உள் நுழைய வலுவான அரசு முன் நிபந்தனையாகிறது. இச்சூழ் நிலையின் வருகையானது 2008 இல் எழுந்த சர்வதேச பொருளாதார நெருக்கடி புதிய சந்தைகளை நோக்கிய நிதி மூலதன உள் நுளைவும் 2009 இல் யுத்ததை வென்று தன்னை திடப்படுத்திய ராஜபக்ச அரசின் நடவடிக்கையும் சேர்ந்த ஒரு நிகழ்ச்சி போக்கு.

கடந்த சில தசாப்தங்களாக இலங்கை பொருளாதாரம் தேயிலை ஏற்றுமதி, ஆடையணி உற்பத்தி  மற்றும் வெளி நாடு சென்று உழைக்கும்  தொழிலாளரின் ஊதியத்தால் வரும் அன்னிய வருவாய் ஆகியவற்றில்   தங்கியிருந்தது.  விசேட பொருளாதார வலயங்களை ( special economic zones) அமைப்பதன் மூலம் நடுத்தர பண்டங்களை(intermediate goods) உற்பத்தி செய்யும் தொழில்முறையை ஊக்குவிக்கும் அரசின் கைத்தொழில் கொள்கை அன்னிய நேரடி முதலீட்டின் ( foreign direct investment) பற்றாக்குறையால் தோல்வி கண்டது.

இத்தகைய சூழலில் இரண்டாவது நவதாராள அலை சீனா இந்தியா யப்பான் போன்ற நாடுகளிடமிருந்து இரு நாட்டு  ஒப்பந்த  கடனுதவியையும் ( bilateral aid) உலக வங்கி ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிலிருந்து பல் நாட்டு ஒப்பந்த அபிவிருத்தி கடனுதவியையும் (multilateral development aid) பெற்று புதியவடிவத்தை எடுத்தது. இதன் முக்கிய குணாம்சம் மூலதன சந்தைகளை தாராளமயப்படுத்துவதன் மூலம் சர்வதேச நிதியத்தை வரவழைப்பது. சர்வதேச நிதி மூலதனமானது சர்வதேச பங்கு சந்தையின்( stock market) விருத்திக்கும் சவரின் பொண்ட்ஸின் (sovereign bonds) மூலாதாரமாக இருக்கும் அதே சமயம் வியாபார நம்பிக்கைக்கான உத்தரவாதத்தையும் வேண்டுகிறது.
இலங்கை அரசு  2009 இல் ஐ எம் எப நிபந்தனைக்குட்பட  செய்துகொண்ட கால உடன்படிக்கை (standby agreement)  யானது சர்வ தேச மூலதனகாரரின் நம்பிக்கையை வரவழைப்பதற்கான ஒர் ஒப்பந்தமே.

ஐ எம் எப் ,அரசின் பொருளாதாரக்கொள்கைகள் சர்வதேச நிதி மூலதனத்தை பாதுகாப்பதற்காக செயல்படுகிறதா என்பதை பரிசீலிக்கும் மேற்பார்வையாளனாகவே செயல் படுகிறது. இந்த அடிப்படையில் அரசானது உள் நாட்டு கொள்கைகளை மாற்றி கல்வி சுகாதாரம் போன்ற பொது சேவைக்கான செலவை கட்டுப்படுத்துதல் ,மானியங்களை நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வரவு செலவு திட்டத்தை இறுக்குகிறது. வரி அறவிடுதலில் பாரிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வங்கி துறை தாராளமயமாக்கப்படுகிறது. நிதி முதலீடுகளும் ஊக வாணிபமும் முதலீட்டை அதிகளவில் மீளப்பெறும் ஆவல் கொண்டுள்ளதால் பாரிய மீள்கட்டமைப்பு திட்டங்கள் நியாயப்படுத்த படுகின்றன. பெரும் சாலைகள் அமைத்தல் ,வங்கிகளை விஸ்தரித்தல் தொலை தொடர்பு சாதனங்களின் விரிவாக்கம் போன்றவை இந்த நிகழ்ச்சி நிரலில் அடங்கும்.

பெரும்  பொருளாதார வளர்ச்சி வரும் அதன்மூலம் முதலீட்டை திரும்ப பெறலாம் எனும்  எதிர்பார்ப்பு 2010 இல் 600000 ஆக இருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 2016 இல் 2.5 மில்லியனாகும் என்ற கற்பனை கனவுலகில் கட்டப்பட்டதே. இந்த நிலையற்ற  சுற்றுலா வர்த்தகத்தை மையமாக வைத்து ரியல் எஸ்டேட் வியாபாரம் ஊக்குவிக்கப்படுகிறது.  சுற்றுலா வர்த்தகத்தை ஊக்குவிக்க  விடுதிகள் வீதிகள் வியாபார நிலையங்கள் போன்றவற்றில் முதலீடு செய்வது ஊக்குவிக்கப்படுகிறது.

யதார்த்ததில்  ரியல் எஸ்டேட் ஒரு குமிழி (bubble). அது ஊக நிதி மூலதனத்தின் (speculative financial capital) நிலையற்ற தன்மையில் கட்டப்பட்டது. எனவே ஊக நிதி மூலதனத்தின் வீழ்ச்சியும் எழுச்சியும் ரியல் எஸ்டேட் வியாபாரத்தை நிர்ணயிக்கிறது.

கடந்த சில வருடங்களுள் 3 பில்லியன் பெறுமதியான சவரின் பொண்ட்ஸ்கள் உயர்ந்த வட்டிக்கு விற்கப்பட்டன. இலங்கையின் மொத்த தேசிய  வருமான பெறுமதி(gross domestic product -GDP ) 50 பில்லியன். யுத்தத்தின்  பின் ஜீ டி பி இன் 40 சதவீதம் பங்கு சந்தையின்  பெறுமதியின் கணிப்பே. இவ்வாறான  சர்வதேச நிதிமூலதன உள் நுளைவு   குமிழி பொருளாதாரத்தை(bubble economy) மீளக்கட்டுகிறது.

நவதாராளத்தின் இந்த இரண்டாவது அலையை நிலைகொள்ள வைத்திருப்பது இந்த நிலையற்ற  நிதியே. ரியல் எஸ்டேட்  குமிழிகள். ( financial and land bubbles). தேசிய சர்வதேச பொருளாதார நெருக்கடி ஏற்படும் போது இந்த குமிழி பொருளாதாரம் வெடிக்கும். இச்சமயம் அன்னிய மூலதனம் நாடு விட்டு நாடு பாயும். இக்கட்டத்தில்   சொத்துகளின் பெறுமதி குறைகிறது;   பற்று வரவு நெருக்கடி எற்படுகிறது ( balance of payment crisis); அதனுடன் தேசிய வங்கிகள் நெருக்கடிக்குள்ளாகிறன. அதீத பொருளாதார நெருக்கடி ஒன்று ஏற்படும் போது இலங்கையின் பொருளாதார வீழ்ச்சி தவிர்க்க முடியாதது.  ஏற்கனவே உயர்ந்த வட்டிக்கு எடுத்த கடன் பழு இலங்கையின்  நிலைமையை  மேலும் மோசமான –நிலைக்கு தள்ளும். இன்னிலை வரும் போது ஐ எம் எப் அன்னிய மூலதனக்காரரை மீட்டெடுக்கும் பணியில் ஈடுபடும் சாத்தியம் உருவாகிறது.  இச்சூழலில் ஐ எம் எப் ஆனது வரவு செலவு திட்டத்தில் தலையிட்டு பாரிய வெட்டுக்களை அமூல்படுத்த நிர்ப்பந்திக்கும் நிலை உருவாகும் போது பரந்தளவில் நாடுதழுவிய  உடைமைஇழப்பு (dispossession) உருவாக்க வழிசமைக்கும். மார்க்சிய தத்துவவாதியான டேவிட் ஹார்வியின் கூற்றுப்படி உடைமை இழப்பின் மூலமாக மூலதனத்திரட்சியை உருவாக்குவதுவே சமகால பொருதாராளத்தின் குணாம்சம்.

௦௦௦

தற்போது மக்களை ஒறுத்துவாழ –நிர்ப்பந்திக்கும் அரசின்  திட்டமும் நவதாராள கொள்கையின் ஒருபக்கம். அன்னிய –நிதி மூலதனம் நாட்டை விட்டு ஓடிவிடும் என்ற பீதியில் ராஜபக்ச அரசு வாழ்க்கை செலவு உயர்வு கூலிக்குறைப்பு போன்ற விடயங்களை எதிர்த்து மக்கள் போராடும் போது அதனை தீர்க்கமுடியாத நிதிப்பற்றாகுறையால் திண்டாடுகிறது.  ராணுவ செலவை குறைப்பதற்கோ மக்களுக்கு மறுபங்கீடு செய்வதற்கோ இந்த அரசு தயாராக இல்லை. அதைவிடுத்து நிதி மூலதனத்தில் நம்பிக்கை வைத்து இயங்குகிறது. இந்த நிதி மூலத்தனத்தால் பயன் பெறுபவர்கள் சமூகத்தில் ஒரு குறிப்பிட்ட உயர்வர்க்கத்தினரே.

இவ்வாறான நிலையில் விலைவாசி உயர்வுக்கெதிரான சமீபத்திய போராட்டங்கள் மேலும் பெருகுவதற்கான சந்தர்ப்பங்கள் எழத்தான் செய்யும். இங்கு தான்  ஏதேச்சாதிகார அரசினது மக்களுக்கு சலுகைகளை செய்வதை விடுத்து  தனது  ஒடுக்குமுறை கரங்கள் கொண்டு மக்களை அடக்க முயலும்.

நீண்டகால நோக்கில் –நவதாராள இரண்டாவது அலையால் ஏற்படும்  மாற்றங்கள் வர்க்க வடிவமைப்பில் (class formation) தாக்கத்தை ஏற்படுத்துவது தவிர்க்க முடியாதது. இத்தாக்கத்தினால்  நகர்புற கிராமிய வறிய மக்களின் உடைமை இழப்பு மட்டுமல்ல அரச ஊழியத்தில் தங்கியிருக்கும் கீழ் நடுத்தர , நடுத்தர வர்க்கங்களும் பொருளாதார நலிவுக்குட்படும் நிலைக்கு இட்டுசெல்லும்.

முற்போக்காளர்கள் ராஜபக்ச அரசின் ஏதேச்சாதிகார போக்கு பற்றிய ஆழமான அறிதலுடன் இருப்பினும் சர்வதேச நிதி மூலதனத்திற்கும் எதேச்சாதிகார அரசு அதிகாரத்திற்குமிடையில் உள்ள பிணைப்பு- அது அரசையும் சமூகத்தையும்  பற்றிய ஆய்வுகள் அரிதாகவே உள்ளன. வரலாற்று ரீதியாக சர்வதேச பொருளாதார சக்திகளுக்கு பணிந்தே இந்த பொருளாதாரம் கட்டப்பட்டிருக்கின்றது. முக்கியமாக ஏற்றுமதி இறக்குமதி மூலமாக வெளிசக்திகளை நம்பியிருக்கும் ஒரு சார்பு நிலை பொருளாதாரம் சர்வதேச பொருளாதார மாற்றத்தால் பாதிக்கபடும் ஒன்றாகவே இருக்கிறது. ஒருவகையில் இலங்கை சர்வதேச பொருளாதார வலைப்பின்னலில் ஒருங்க்கிசைவது தவிர்க்கமுடியாதது என்று எடுத்து கொள்ளினும் கேள்வி என்னவெனில் யாருடைய நலங்களை இது பிரதிபலிக்கிறது. சர்வதேச நிதி மூலதனத்தினதும் தேசிய உயர்வர்க்கத்தினதும் நலங்களையா அல்லது பரந்து பட்ட இலங்கை மக்களையா?

அதிகார பரவலாக்கம் ஜனநாயகமயப்படுத்தல்

போருக்கு பிந்திய அரசியல் பொருளாதாரம் நவதாராள பொருளியல் கோட்பாட்டால் கட்டமைக்கபடும் பின்னணியிலிருந்தே அதிகார பரவலாக்கத்தையும் ஜனநாயகமயப்படுத்தலையும்  நாம் புரிந்து கொள்ள முயலவேண்டும். இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வாக மாகாணங்களுக்கான அதிகாரபரவலாக்கம் பற்றிய உரையாடல்கள் குறிப்பிட்டகாலங்களாக முன்னணி வகித்த போதும் –நவதாராள வாதத்தின் இரண்டாவது அலை சமகாலத்தில் ஏற்படுத்திய சூழல் இணைவின் (conjuncture) பின்புலத்தில் வர்க்க சாதிய பிரச்சனைகள் சேர்ந்தே  அதிகார பரவலாக்கம் பற்றிய விவாதங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும். அதிகாரபரவலாக்கம்  யாப்பு மாற்றமும் பொலிஸ் அதிகாரமும் காணி அதிகாரமும் மட்டுமல்ல. இவை அவசியமானது தான். ஆனாலும் இவ்வுரிமைகள் பரந்துபட்டவகையில் சிறுபான்மையினங்களுக்கு எவ்வாறு தொடர்பாகின்றன  என்ற புரிந்துணர்வு அவசியம் – அது தமிழராகட்டும் ,முஸ்லிம்களாகட்டும் அல்லது  , மலையக தமிழர் ஆகட்டும்.

_நவதாராள கொள்கைகளுக்கெதிராக அதிகரித்துவரும் எழுச்சிகளை கருத்தில் கொள்ளும் போது மாகாண ரீதியாக பரந்து  சமூகங்களுக்கு அதிக அதிகாரம் கிடைப்பதற்கு அதிகாரபரவலாக்கம்  வழியாகுமா என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டும். அதிகாரபரவலாக்கம் மூலம்  அதிகார மையப்படுத்தப்பட்ட அரசின் நவதாராளவாத கொள்கையை சவால் கொள்ள முடியுமா?. அத்துடன் அதிகாரபரவலாக்கம் வளங்களயும் அதிகாரத்தையும் விளிம்பு நிலை மாந்தருக்கு மறுபங்கீடு செய்யுமா என்பதை நாம் எவ்வாறு உறுதி செய்வது?. அதிகார பரவலாக்கம் பரந்து பட்ட சமூக மக்களின் கல்வி மருத்துவ வசதிகளை உறுதிசெய்யுமா. காணி மறு பங்கீடு நிகழுமா . . ராணுவத்தலையீடு , ‘ முன்னேற்றம்’ என்ற பதாகையின் கீழ் நிகழும்  பொலிஸ் அட்டூழியம் ஆகியவற்றிற்கெதிராக மக்கள் பாதுகாப்பு உறுதி செய்யப்படுமா. ? இவ்வாறான பல கேள்விகள் எழுகின்றன.

ஜனநாயகமயப்படுத்தல் சம்பந்தமாகவும் இவ்வாறான கேள்விகள் எழத்தான் செய்யும். ஜனநாயக மயப்படுத்தல் என்பது வெறுமே அமைப்புகளினதும் நீதித்துறையினதும் சுயாதீனத்தை உறுதி செய்வதுடனும் ஒழுங்கான தேர்தல் அரசியலை –நிலை நாட்டுவதுடனும் முடிந்து விடுவதில்லை. ராஜபக்ச அரசை எதிர்கொள்வதற்கான வகையில் மேற்சொன்ன விடயங்கள் முக்கியம் வகிப்பினும் ஏதேச்சாதிகார அரசை எதிர்ப்பதற்கும் மக்களின் சமூக வாழ்வை மாற்றுவதற்குமான வகையில் ஜனநாயகமயப்படுத்தலென்பது அடிப்படையில் மக்கள் பங்களிப்பிலும் அவர்களது போராட்டத்திலும் இருந்து தன்னை வடிவமைக்கிறது. நவதாராள கொள்கைகளால் தமது நாளாந்த பொருளியல் வாழ்வு சிதைந்துபோவதற்கெதிரான அவைகளது போராட்டமும் ஜனநாயகமயப்படுத்தலின் முக்கிய அம்சங்கள். யுத்தத்திற்கு பிந்திய புனருத்தாரணங்கள் மற்றும் பொருளாதார முன்னேற்றம் பற்றிய மக்களின் கூற்று என்ன?

இவைபற்றிய விடயங்களை –நாம் ஆராய வேண்டும் . விவாதிக்க வேண்டும்.

௦௦௦௦௦

(கடந்த ஏப்ரல் 21ம்திகதி ,தமிழ்மொழி சமூகங்களின் செயட்பாட்டகத்தால் நடத்தப்பட்ட உரையாடல் அரங்கில் ஆற்றப்பட்ட  உரையின் சுருக்கிய எழுத்து வடிவம்)புகைப்படங்கள்-கே.கே.ராஜா.

 

40 Comments

 1. Nalliah Thayabharan says:

  அன்று தமக்குச் சொந்தமான கிழக்கிந்தியக் கம்பனி மூலம், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளைக் கொள்ளையடித்த ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பல், இன்று அமெரிக்க டாலரை அச்சிடும் தமக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) போன்ற தனியார் வங்கிகள் மூலம், எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி நூற்றுக் கணக்கான பில்லியன் கணக்கில் நாணயத்தாள்களை அச்சிட்டு உலகைக் கொள்ளையடிக்கிறார்கள் .
  அன்று உழைப்பை சார்ந்து உழைப்பாளர்களாலும் தொழிலாளர்ளாலும் உருவாக்கப்பட்ட விவசாயப்பொருட்கள், உற்பத்திப்பொருட்கள் போன்றன தங்கத்திற்கும் வெள்ளிக்கும் கைமாறின. ஆனால் இன்று தங்கம், வெள்ளிக்கு கைமாறியது போய் சர்வதேச செலாவணியான எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்குச் சொந்தமான பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE) அச்சிட்ட அமெரிக்க டாலருக்கு மக்களின் உழைப்பும், நாடுகளின் இயற்கை வளங்களும், உற்பத்தி பொருட்களும் கைமாறுகின்றன என்றும், ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோகக் கூட்டுகளுக்கும் இல்லாமையிலிருந்தே உருவாக்கிய கடனட்டைகளை, வங்கிகளுக்கு விஸ்தரித்து, கடனட்டைகள் மூலம் சாதாரண மக்களை பில்லியன் கணக்கில் கொள்ளையடிக்கின்றார்கள்.
  தனிநபர்களும், பெருநிறுவனங்களும், வங்கிகளிடமிருந்து நுகர்வு மற்றும் முதலீட்டுக் கடனை நம்பி இயங்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகிவிட்டது, எதுவித ஆதார சொத்துக்களும், மூலதனமும் இன்றி, வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்களைப் பெற்றுக் கொண்ட பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிகளின் நுகர்வோர் கடன், ஈட்டுக் கடன் மற்றும் கடனட்டைகளைப் பெற்றுக் கொண்ட தொழிலாளர்களும், நிரந்தரமாகக் கடன்காரர்களாக மாற்றப்படுவதோடு இவ்வங்கிக் கடன்பழுக்கள் மேலும் உயருமே தவிர, முற்றாக திருப்பிச் செலுத்தப்பட இயலாது.
  வங்கிக் கடன்தான் மூலதனம் என மாறிப்போயுள்ள, சேமிப்பே இல்லாத “கடன்” (CR11:01 PM 24/09/2016EDIT) மயமான உலகில், தொடர்ந்து துரத்தும் கடன் பழுவால் ஏற்படும் பணப் பாய்ச்சல் (CASH FLOW) குறைவினால், பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒருவருக்கொருவர் எதிராகச் சண்டையிட்டுக் கொள்வார்களே தவிர, பன்னாட்டு தொழில் நிறுவனங்களும், தொழிலாளர்களும் ஒன்றுபட்டு எதுவுமேயில்லாமல் வெறுமையிலிருந்து உருவாக்கம் பெற்ற வங்கிக்கடன்கள் மற்றும் கடனட்டைகள் மூலமாக தம்மைத் தொடர்ச்சியாகக் கொள்ளையடித்துக் கொண்டே இருக்கின்ற ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலுக்கும் அவர்களது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளுக்கும் எதிராகப் போராடமாட்டார்கள்.
  நாட்டு மக்களின் ஆரோக்கியம், கல்வி போன்றவற்றை பேண, செலவிடப்பட வேண்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்கங்களின் வங்கிக் கடன் சுமைக்கு வட்டியாக செலவிடப்படுகின்றது. 20,000 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் மூழ்கி இருக்கும் அமெரிக்க அரசாங்கம் முதல் 500 பில்லியன் டாலர் வங்கிக் கடனில் ஆழ்ந்து போயுள்ள கிரேக்க அரசாங்கம் வரை அனைத்து அரசாங்கங்களும், பெருவர்த்தக நிறுவனங்களும், சாதாரண மக்களும் தீராத வங்கிக் கடன்களில் மூழ்கி, முன்னொருபோதும் முகம் கொடுத்திருக்காத புதிய “கடன்” சவால்களை எதிர் கொண்டு திண்டாடும், அனைத்தும் “கடன்” மயமான இன்றைய உலகில், வீடுகள், வியாபாரங்கள் உட்பட அனைத்தும் வங்கிகளின் கைவசமான இன்றைய காலகட்டத்தில், “மூலதனம்” பற்றி நூற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட பல விடயங்களெல்லாம் இத்துப்போன கருத்துக்களினதும், காலாவதியான தகவல்களினதும், குவியல்களாக மாறிவிட்டன.
  உலகம் பூராக, உலகவங்கி (WORLD BANK), சர்வதேச நாணய நிதியம் (INTERNATIONAL MONETARY FUND), பெடரல் ரிசெர்வ் (FEDERAL RESERVE), உள்ளிட்ட பல்வேறு வங்கிகளினதும், நிதி மையங்களினதும் சொந்தக்காரர்களான ரொத்ஸ்சைல்ட் (ROTHSCHILD) கும்பலினதும், ரொக்கபெல்லர் (ROCKEFELLER), வாபேர்க் (WARBURG) மற்றும் மோகன் (J.P.MORGAN) உள்ளிட்ட ரொத்ஸ்சைல்ட் கும்பலினது ஏகபோக நிதி மூலதனக் கூட்டுகளினதும் “பணநாயகம்” அனைத்து நாடுகளிலும் ஜனநாயகத்தை அழித்தொழித்துவிடுவதனையே தத்துவஞானி அரிஸ்டோட்டல் 2,400 வருடங்களுக்கு முன் “Democracy is when the indigent, and not the men of property, are the rulers.” எனக் கூறியிருந்ததாக பல ஆங்கில நூல்களில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
  அமெரிக்கா முதல் ஆபிரிக்கா வரை உலகளாவிய ரீதியில், மக்களனைவரும் அச்சுறுத்தல்கள் மூலமும், பயத்தினூடாகவும், கட்டுப்படுத்தப்பட்டு, இலகுவில் ஆளப்படக் கூடியவர்களாக உருவாக்கப்படுகின்றார்கள். 99 சதவீதமான மக்களின் சிந்தனை அன்றாட வேலைச் சுமையுடனும், அடுத்தநேர உணவுடனுமே மட்டுப்படுத்தப்படுகின்ற சூழ்நிலை உருவாக்கப்படுகின்றது.

  – நல்லையா தயாபரன்

 2. Nalliah Thayabharan says:

  Moses Mordechai Marx Levi’s (aka Karl Marx) effort to derive the market price of goods from their value, the labor that went into them, was a vestige of the 19th-century economic theories of David Ricardo and John Stuart Mill. By the time Marx died, economists had already given up trying to relate price to value and were beginning to understand that value was a chimera. With the growing dominance of technology, it had become impossible to locate value in the time required to produce goods, as Marx, following Ricardo and Mill, had tried to do. Machines can make products incredibly fast; but these products aren’t worth any less than if workers had spent days toiling at them, as Marx’s theory suggests. Marx’s essential idea, influenced by Ricardo, was that capitalism would become less and less profitable and that its downward spiral toward the abyss of deflation—lower prices, lower profits—would be followed by worldwide revolution. Instead, capitalism has become vastly more profitable.

  Marx’s writing style was a calamity: full of sometimes puerile vehemence, Marx heaped scorn on his opponents, inaugurating the long Marxist tradition of mercilessly deriding anyone with incorrect opinions. Marx displayed particular contempt for the high-living, dandyish Ferdinand Lassalle, a fellow socialist also of Jewish origin. In a letter to Engels, Marx mocked Lassalle, who supposedly had African ancestry, as a repulsive “combination of Jewry and Germanism with the negroid basic substance”; “the pushiness of this lad is also nigger-like,” he added. In Marx’s pamphlets, mudslinging abounds: His opponents are generally idiots, traitors, and scoundrels, but these heavy-handed insults tend to make us doubt Marx himself, since he relies so much on vituperation instead of reasoned argument.

  The purpose of Marx’s work was to sabotage the nascent socialist movement; he reframed all of the socialists who came before him as exponents of “utopian socialism” and his ideas as so-called “scientific socialism”, the theory of which the people must follow dogmatically as a secular religion, no matter how much it fails in practice. It should be noted that before Marx ever wrote a word the socialist movement already existed in Germany, France, Britain and elsewhere, each with their own national expressions and ideas of how to improve the situation of the working-class following the Industrial Revolution. In later times, after Marx and especially after Lenin used his work to create Bolshevism, his followers have tried to monopolise the phrase and insist unless you follow Marx’s theories, you cannot be a socialist. This is a clear fraud and usurpation.

  Marx’s best known work is the book Das Kapital, which fails to mention that money is printed out of thin air and keeps the name of his cousins, the Rothschilds, out of it, despite the fact that they were the richest and most powerful capitalist family in the whole world. Rothschild hired Marx to draft a social doctrine to invert moral order for centralizing their nation state’s wealth Into Rothschild controlled coffers. Marx saw free trade as positive because it undermines established nations and cultures.

  The most pronounced and consistent aspect of Marx’s ideology was his extreme and radical hatred of Russia and everything to do with the culture of that nation. Marx and Engles regarded Russians and Slavs in general as subhuman (völkerabfall) barbarians. Marx used the newspaper Neue Rheinische Zeitung to try and incite a war against Russia. This Russophobia was also behind the strange alliance with Tory, David Urquhart, when he moved to London and Marx thus has the blood of the people who died in the Crimean War on his Jewish hands. Henry Hyndman, who spent many hours in Marx’s company in his Record of an Adventurous Life attributed this anti-Russian obsession to Marx’s Jewish ethnocentrism.

  In 1863, President Abraham Lincoln discovered that the Tsar of Russia (by then, Alexander II) was also having problems with the Rothschilds; as he was refusing their continual attempts to set up a central bank in Russia. The Tsar then gave President Lincoln some unexpected help: he issued orders that if either England or France actively intervened in the American Civil War, and help the South, Russia would consider such action a declaration of war, and would take the side of President Lincoln. To show that he wasn’t messing about, he sent part of his Pacific Fleet to port in San Francisco and another part to New York. Neither England nor France intervened in the American Civil War, but the Rothschilds would not forget about Russia.

  But first let’s go to Germany a few years back to look at a key figure from the communist movement. It is well known that Marx was from a Jewish origin; he was the son of Herschel Mordechai (lawyer and socialist philosopher), who changed his name to Heinrich Marx. But what most people don’t know is that Karl Marx had family ties with the Rothschilds; through his great grandfather (Barent Cohen), who was also the paternal grandfather of Nathan Rothschild’s wife (Hannah Barent-Cohen). In 1845, Karl Marx moved to Brussels, where, with German philosopher, Friedrich Engels, who he met in Paris in 1844 (where they allegedly joined the Grand Orient Lodge, and together reorganized the Communist League. In 1848 Marx and Engels published the Communist Manifesto; commissioned by the Communist League; though it is also believed that most of the ideals contained in it were already circulating around secret societies since the times of Adam Weishaupt. Marx and Engels’ writings would later inspire the leaders of the Russian Revolution, like Leon Trotsky and Vladimir Ilyich Ulyanov (Lenin); both also from Jewish origins.

  However, to understand how the Rothschild family was directly involved in the Russian Revolution, we first need go back again to 18th century Germany. In 1785, Mayer and his family moved to a larger house, at 148 Judengasse; a five story house known as “The Green Shield” which they shared with the Schiff family; a distinguished rabbinical family. In 1866, Jacob Schiff moved to New York. In 1867, he joined the Budge, Schiff & Company, and in 1875 he leaded the Kuhn, Loeb & Co (and married Solomon Loeb’s daughter). He then directed many important corporations, including: the National City Bank of New York, Equitable Life Assurance Society, Wells Fargo & Company, and the Union Pacific Railroad.

  On December 07,1895, Lenin was arrested for plotting against Tsar Alexander III and was then imprisoned and later exiled to Eastern Siberia. At exile’s end in 1900, Lenin travelled Russia, Munich, Prague, Vienna, Manchester and finally London; where he co-founded the newspaper Iskra (“Spark”). Leon Trotsky was also arrested in 1898 and also sent to exile to Siberia in 1900. In 1902, he escaped from exile and also moved to London, were he wrote for the Iskra newspaper; where he met Lenin. To cut a long story short, Trotsky travelled to New York, where in 1917 he got $20 million dollars from Jacob Schiff. Along with Schiff’s $20 million, he also received money from: Sir George Buchanan, the Warburgs, the Rockefellers, the partners of J.P. Morgan (with at least $1 million), Olaf Aschberg (of the Nye Bank of Stockholm, Sweden), the Rhine Westphalian Syndicate, a financier named Jovotovsky (whose daughter later married Leon Trotsky), William Boyce Thompson (a director of Chase National Bank who contributed $1 million), and Albert H. Wiggin (President of Chase National Bank). According to Jacob Schiff’s grandson, and as it is shown in a report on file with the State Department, Jacob Schiff (long time associate of the Rothschilds) not only financed the Communist Revolution in Russia, he also bankrolled the first five year plan for Stalin through his firm, Kuhn Loeb and Co. Schiff spent millions to overthrow the Tsar. He was sending money to Russia long after the true character of the Bolsheviks was known to the world. Schiff raised $10 million, supposedly for Jewish war relief in Russia, but later events revealed it to be a good business investment. Arsene de Goulevitch, an important White Russian General, wrote: “The main purveyors of funds for the revolution, however, were neither the crackpot Russian millionaires nor the armed bandits of Lenin. The ‘real’ money primarily came from certain British and American circles which for a long time past had lent their support to the Russian revolutionary cause. The important part played by the wealthy American banker Jacob Schiff in the events in Russia, though as yet only partially revealed, is no longer a secret.

Post a Comment