Home » இதழ் 19 » * ரோஷான் ஏ.ஜிப்ரி-கவிதைகள்

 

* ரோஷான் ஏ.ஜிப்ரி-கவிதைகள்

 

வாழ்வை தொலைப்பது….

—————————-

மிக முக்கிய கணங்களை
தூரவிட்டு
வாழ்வை தொலைத்தவன்.

முதுமையின் காட்டில்
தனித்து விரட்டப்பட்ட சாதுவான
விலங்கொன்றின் சாயலில்
இலை விழும் கணம் திரும்புகிறேன்
அமைதியில் திரண்டு

மிக அவதானத்தோடுதான்
அது என்னை அணுகியது
நான்தான்
வழிநடத்த தவறிவிட்டேன்
நம்பிக்கையின்மையால்

இப்போது உணர முடிகிறது
எதையும் இழந்ததன் பின்
வருந்த தெரியும் என்று.

000000000

rozan

வெற்றுப் பாத்திரங்கள்!
—————————
இருப்பதை பிடுங்கிக்கொள்ளும் கைகளிடம்
திருப்பிக் கொடுக்க மனசில்லை

கேட்டு நீட்டப் படும் பாத்திரங்களில்
வெறுமையை தவிர
ஏதும் இருப்பதில்லை

தட்ட முனைகையில்தான்
இறுக்கமாய் தாழிடப் படுகின்றன
திறக்கும் என்ற சொன்ன கதவுகளும்

கொடுக்க நினைக்கவிருக்கும் ஒருவனும்
தடுக்கப் படுகிறான்
மற்ற அனைவராலும்

எதிர் வருபவனின் கண்களை பிடுங்க
தமது முழு பார்வையையும் செலவிட
அலைகின்றன பெரும் கூட்டம்

யாரையாவது தள்ளிவிடவென
மதகுகளை வெட்டுபவனுக்கு
புலப் படுவதில்லை
தனக்கான குழியை வேறொருவன்
தோண்டிக் கொண்டிருப்பது!

0000000

 

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment