Home » இதழ் 20 » *இரவு கொப்பளித்த கனவு – கோ.நாதன்

 

*இரவு கொப்பளித்த கனவு – கோ.நாதன்

 

k

திரையை

இழுத்து சாத்தப்படுகின்ற சந்தர்ப்பங்களில் எனது

உடல்  வெறுமையாக அலையத் தொடங்குகின்றன

நீரில் நடந்து

காற்றில் பறந்து

நெருப்பில் அமிழ்ந்து

கேட்கப்படாத குரலில் மொழி சப்தமின்றி அடங்கிற்று…

.

சிங்கத்தின் கடைவாயின்  பற்களிடையே  குதறுகின்ற  கனவு

பாம்பின் விசர் கொளிக்குகளிடையே கடிக்கின்ற கனவு இரவுகள்

மிகவும் அடர்த்தியான பகுதிகளை

இருளாக எங்கும் கொட்டிக் கிடத்துகிறது.

 

ஒரு பயங்கரத்தை,

ஒரு அச்சத்தை,

ஒரு பயத்தை

இரவின் இருண்மை வீழ்த்துகின்றன பெரும் கனவு ..

 

இரவின்  பாதிப்பு ஏற்படுத்திய மனப்  பிறழ்வுஇரவு கொப்பளித்த கனவு

பிரமையில் அழைத்து வந்திருந்த சாத்தியமா?

எனது அறைச் சுவர்களில் கனவுகளின்

சுவடுகள் வரைபடக்களாகவே  வரைந்து அப்பிருக்கிறது.?

 

வெடிச் சத்தங்களால் அடங்கப்பட்ட எனதுடல்

சிதைப்பட்ட  பங்கர்குழிகளுள்

குறிகள் தள்ளியிருக்கும் கிழிந்த உள்ளாடைகளில்

இரத்தம் சொட்டும் உடல்களிருந்து விம்மி அழும் ஓசை

எனது பெருங்கனவு  துயரில் முடக்கப்பட்டுள்ளது ?

 

உறக்கம் மரணத்தின் வாசல்

கழுகின்  கால் நகங்களிடையே  கிழிக்கின்ற கனவு

ஒரு பிசாசு கழுத்து இறுகத்  தின்கின்ற கனவு

ஒவ்வொரு இரவுகளிலும் ஆழ் மனதில் கொப்பளித்த பிரதி.

 

00000

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment