Home » இதழ் 02 » முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

 

முஸ்லிம் மக்கள் எதிர்கொள்கின்ற நெருக்கடிகள்: அரசாங்கம், பௌத்த சிங்கள தேசியவாதம்!

 


 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

-விக்டர் செருபம்-

 

இங்கே வருகை தந்திருக்கின்ற நீங்கள் அனைவரும் தம்புள்ள பள்ளி வாசல் அழிப்புச் சம்பவத்துக்குப் பின்னர் அதிகரித்துள்ள பொது மக்கள் பிரச்சினை குறித்து விழிப்பாக இருக்கிறீர்கள். முஸ்லிம்களின் வணக்கஸ்தலம் உடைக்கப்பட்டு அசிங்கப்படுத்தப்பட்ட சம்பவத்துக்குப் பின்னர்  அங்குள்ள அரசியல் கட்சிகளின் முதிர்ச்சியற்ற கோபமூட்டக்கூடிய வெற்றுப் பேச்சுக்களையும், ஏனையவர்களின் கருணையற்ற மௌனத்தையும் நாம் கேள்வியுற்றோம். பின்னர் நடந்த சம்பவங்களை நாங்கள் விளங்கிக் கொள்ள முடியும் அதேநேரம்  முன்னர் நடந்த சம்பவங்களையும் புறக்கணித்துவிட முடியாது.
தம்புள்ள விவகாரம் சந்தேகமின்றி இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கிலும் வாழுகின்ற முஸ்லிம்களுக்கும் பௌத்தர்களுக்குமிடையிலான உறவில் ஓர் உடைப்பை ஏற்படுத்தும்.

இந்த தம்புள்ள விவகாரமானது யுத்த காலத்தின்போது LTTE யினர் அப்பாவி முஸ்லிம்களை யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றியமை மற்றும் 1915ல் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் போன்ற அல்லது அதைவிடவும் ஒரு பாரதூரமான விடயமாக, இலகுவில் மறந்துவிட முடியாத ஒரு விவகாரமாக உள்ளது.
உண்மையில் முஸ்லிம்களின் கடந்த கால வரலாற்றை உற்று நோக்குகின்றபோது 1915ல் அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். 1915ல் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் முஸ்லிம் வர்த்தகர்கள் சிங்கள நுகர்வாளர்களை சுரண்டுகின்றவர்களாக அடையாளம் காட்டின. இத்தகைய செயற்பாடுகளே முஸ்லிம்களுக்கெதிரான  வன்முறைகளையும் தூண்டிவிட்டன. ‘சிங்கள ஜாதிய’ (Sinhala Jatiya) எனும் இதழின் ஆசிரியர் பியதாச சிறிசேன சிங்கள தேசியவாத எழுச்சிக்கு உதவினார். அதேநேரம் முஸ்லிம்களுக்கெதிரானதும் மற்ற சோனகர் தொடர்பான கதைகளையும் ஒரே நேரத்தில் தனது பத்திரிகையில் தனது பத்தி எழுத்துக்களில் 1915 கலவரத்துக்கு முன் அவர் எழுதினார்.

கரையோர முஸ்லிம்களுடன் சிங்களவர்கள் மேற்கொண்டு வந்த வர்த்தக நடவடிக்கைகளை தடுப்பதற்கு அவரது இந்த எழுத்துக்கள் சிங்களவர்களைத் தூண்டின. ‘தினமின’ எனும் பத்திரிகையும் முஸ்லிம்களையும், சோனகர்களையும்(Moors)  கேலி செய்தது. மேலும் அவர்களை சிங்கள மக்களின் எதிரிகள் எனவும் அழைத்தது. அதேபோன்று தம்புள்ள விவகாரத்திலும் ஊடகங்கள் மக்களுக்கு அவநம்பிக்கையைத் தோற்றுவித்துள்ளன. நான் சந்தித்த முஸ்லிம்கள், இலங்கையில் முஸ்லிம்களாக இருப்பது அச்சத்தை தோற்றுவித்துள்ளது என்று  அவர்களது ஞாபகத்தில் இருப்பதை முதல் தடவையாக கூறினர். அவர்கள் ஆளுங்கட்சியானது, பௌத்த சமூகத்தில் தனது வாக்கு வங்கியை அதிகரிக்கவும் அல்லது இலங்கையை ஒரு பௌத்த நாடாக மீள் புத்தாக்கம் செய்யவும் விரும்புவதாக உணர்கின்றனர். அந்தக் குழு உடைத்தது தம்புள்ள பள்ளிவாசலையல்ல. இலங்கையினுடைய வெளிப்படையாகக் கூறப்பட்ட மதச்சார்பின்மை எனும் கொள்கையானது எதிர்வரும் தேர்தலில் ஒரு சில ஆசனங்களுக்காக சுக்குநூறாக்கப்பட்டிருப்பதாக முஸ்லிம்கள் முழுமையாக நம்புகின்றனர்.

இச்செயற்பாடு உடனடியாக இல்லாவிட்டாலுங் கூட பின்னரேனும் நாட்டில் ஒரு கடினத் தன்மையை ஏற்படுத்தும் என்று பொது நோக்குடைய நபர்கள் கூறுகின்றனர். இலங்கை முஸ்லிம்களின் பார்வை மட்டுமன்றி உலகெங்கிலும் வாழும் முஸ்லிம்களின் பார்வை மற்றும் சர்வதேச சமூகத்தினது பார்வையும் அது நாட்டின் ஒருமைப்பாட்டின் மீதும்  ஒரு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதாகவேயுள்ளது.
இலங்கையின் மதச்சார்பின்மை எனும் பண்புக்கு இத்தகையதொரு பாரிய பாதகமான நிலமை யுத்தத்தின் போது அல்லது வெளித் தலையீடுகளின் போது மட்டுமன்றி தம்புள்ள பள்ளிவாயல் மீதான திட்டமிட்ட அழிப்புச் சம்பவத்தின் போதும் நேரிட்டுள்ளது. இந்த சம்பவத்தை தூண்டிய மற்றும் அதில் ஈடுபட்டவர்களின் அறம் மற்றும் நியாயத் தன்மை உண்மையிலேயே பலவீனமடைந்திருப்பதையே அது சுட்டிக்காட்டுகிறது. அது தவிர ,தள்ளாடுகின்ற இந்த அரசாங்கம் இந்தக் குறுகியவாதக் கொள்கையைத் தொடர்ந்து கடைப்பிடிக்கப் போவதையுமே அது சுட்டிக்காட்டுகிறது.

 

தம்புள்ள பள்ளிவாயலானது இலங்கையின் பன்மைத்துவத் தத்துவத்துக்கு அத்தாட்சியாக கடந்த 50 வருடங்களுக்கு மேலாக எழுந்து நிற்கிறது. வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சுதந்திரம், ஏனையவர்களின் மத நம்பிக்கைககளுக்கு மதிப்பளித்தல், ஒவ்வொருவரினதும் நம்பிக்கைகள் மற்றும் மத சகிப்புத்தன்மையை அங்கீகரித்தல், போன்ற கலாசார உரிமையோடு சம்பந்தப்பட்ட விடயங்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 60 வருடங்களுக்கு மேலாக சிங்களவர்களுக்கும் முஸ்லிம்களுக்கு மத்தியில் இந்நிலைமை காணப்பட்டும் வருகிறது.

ஆகவே இந்தச் சம்பவத்தை நம்மை வழிநடாத்தும் பொறுப்பிலுள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி அரசியல் தலைவர்களின் அரசியல் விளையாட்டாகவும், அவர்களின் திட்டமிட்ட ஒரு சதிகார மௌனமாகவுமே பார்க்க வேண்டும். இது இந்தத் தீய செயலில் ஈடுபடுபவர்களின் குற்றச் செயலை ஏதெனுமொரு வழியில் குறைக்குமா? இந்த மஸ்ஜித் அழிப்புச் சம்பவமானது ஒரு பொது அறிதலுக்குட்பட்டது. அது கமராவில் கூட பதிவு செய்யப்பட்டுவிட்டது.
பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சம்பவங்கள் பல ஆண்டுகளாக இடம்பெற்று வந்துள்ளன. மிக அண்மையில் கூட ‘கிறீஸ் மனிதன்’ என்றொரு பாரதூரமான ஒரு சம்பவம் இடம்பெற்றது. இது முஸ்லிம்களை கடுமையாக குறிப்பாக நோன்பு நோற்றுக் கொண்டிருந்த முஸ்லிம் பெண்களை அச்சுறுத்துகின்ற, பயமுறுத்துகின்ற ஒரு திட்டமிட்ட சம்பவமாகும். ஆனால் அரசாங்கம் புலிகளுக்கெதிரான யுத்தத்தின்போது பல முஸ்லிம் இளைஞர்களை வட-கிழக்கில் தமிழர்களுக்கெதிரான ஆயுதப்படை நிர்மாணத்திலும்  முஸ்லிம் இளைஞர்களைப் பயன்படுத்தியது. நாட்டுக்காக பல தியாகங்களை அவர்கள் புரிந்திருக்கிற போதும் அவர்களை அரசாங்கம் மறந்துவிட்டது. மேலும் முஸ்லிம்கள் மத்தியில் வட-கிழக்கு முஸ்லிம்கள் மற்றும் தென்னிலங்கை முஸ்லிம்கள் என்ற பிரிவினைகளும் உருவாக்கப்பட்டுள்ளன. இது முஸ்லிம்களுக்கெதிரான ஓர் எதிர்ப்புவாதக் கொள்கை என்பது தெளிவானதாகும்.

யாழ்ப்பாணத்திலிருந்து கிட்டத்தட்ட 75000 முஸ்லிம்கள் பலவந்தமாக புலிகளால் வெளியேற்றப்பட்டு 22 வருடங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் அவர்கள் தற்போதும் புத்தளத்திலேயே வாழ்கின்றனர். யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்டன. யாழ்ப்பான முஸ்லிம்களின் சொந்த இடங்ளுக்கு மீளத் திரும்ப வேண்டிய அவர்களின் உரிமையை  பொறுப்புள்ள அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டியுள்ளது. தற்போது அது ஒரு புறக்கணிக்கப்பட்ட விடயமாகவேயுள்ளது. கிழக்கில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான நிலங்கள் அடிப்படைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பௌத்தர்கள் தீகவாபி உள்ளிட்ட ஏனைய சில பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ளனர். சுனாமியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மற்றும் ஏனைய பகுதி முஸ்லிம்களுக்கு 400 வீடுகள் நிர்மாணிப்பதற்கான சவுதி அரசாங்கத்தின் நிதி உதவிக்கு என்ன நடந்தது?

தம்புள்ள மஸ்ஜித் விடயத்தில் இலங்கையின் இந்த தவறான செயல் ஒரு போதும் மறக்கக்கூடியதல்ல.  ஊடகங்களில் கூறப்பட்டதைப் போன்று பிரதமரின் கூற்றுக்கள் தம்புள்ள விவகாரத்துக்கு ஆதரவாக இருப்பது உண்மையாக இருந்தால் உண்மையில் அது தவறான வழிகாட்டலாகும்.அரசாங்க அமைச்சர்கள் கடந்த காலம் பற்றியே பேசிக்கொண்டிருக்கின்றனர். இன்றைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை எடுக்காது வெறும் மன்னிப்புக் கோரும் நடவடிக்கையுடன் நின்று விடுகின்றனர். இது விசனிக்கத்தக்க ஒரு விடயமாகும்.
இந்த நிலமைகளை அனுசரித்துக் கொண்டு செல்வது இன்று முஸ்லிம்களின் முன்னுள்ள தெரிவாகவுள்ளது. இதன் கருத்து முஸ்லிம்-முஸ்லிமல்லாத அனைத்து இலங்கை மக்களும் இந்த அநீதியை சகித்துக் கொண்டும், இந்த மௌனநிலையைத் தொடர்ந்தும கடைப்பிடிக் வேண்டும் என்பதல்ல, தற்போது பொதுமக்களின் மனோநிலையில் மெதுமெதுவாக ஆனால் உறுதியான மாற்றங்கள் ஏற்பட்டு வருவதை நீங்கள் கண்கிறீர்களா?

எனினும் இத்தயைதொரு தருணத்தில், சமாதானத்திற்கானதும் நல்லிணக்கத்துக்கானதுமான பாதையை கற்றுக்கொள்வது அவசியமானதாகும். எனது பார்வையில் இங்கு இரு முக்கிய பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவை மத நம்பிக்கை(Faith) மற்றும் தேசியம்  (Nationality)ஆகும். தேசியத்துவத்தின் கொண்டாட்டத்துக்கு மத நம்பிக்கையை மீளிணக்கம் செய்தல் என்பது பிரச்சினையின் ஒரு பகுதியாகும். தம்புள்ளவின் பிரதான மதகுரு தம்புள்ள பள்ளிவாசல் விவகாரத்தின் போது வெளிப்படையாக அறிவித்தது- முஸ்லிம்கள் தேசியம் பற்றி அக்கறைகொள்வதில்லை. முஸ்லிம்கள் தங்கள் வசிக்கும் பதிகளில் வாழும் சிங்களவர்கள், தமிழர்களுடன் இடைத் திருமணங்களை முடித்துள்ளனர். முஸ்லிம்கள் தங்களுடன்; வாழும் மக்களின் வாழ்க்கை முறையில் மாற்றங்களை ஏறபடுத்துவதைக் காட்டிலும் அவர்களது நிலமையில் அவர்கள் திருப்தியடைந்துள்ளனர். இது வாழ்த்துதல் மற்றும் ஆபத்திற்குள்ளாக்குதல் எனும் இரு செயற்பாட்டையும் ஒரேநேரத்தில் புரிவதாகவுள்ளது.

அவர்களுடைய(முஸ்லிம்களுடைய) வாழிடங்களில் அவர்கள் தங்களது கலாசாரத்தோடு ஒன்றிப்போவதற்கு இது ஒரு சீரியஸான தடையாகக் கூட உள்ளது.சுதேச தேசியவாதிகளுக்கும் முஸ்லிம்களுக்குமிடையில் ஒரு இடைவெளி காணப்படுகிறது. மதமும் தேசியமும் இரு தனித்தனியான அடையாளங்களாகும். அவை நூற்றாண்டுகளாக எஞ்சியுள்ள அடையாளமாகும். ஏன் அடையாளங்களுக்கிடையில் முரண்பாடுகள் இருக்க வேண்டும் என்பதற்கு காரணமில்லை. அவர்களுடைய சுயத்தை, சுய பெறுமானத்தை அவர்கள் வெளிப்படுத்த விரும்பும் விதத்தில் ஏற்றுக் கொள்வதுதான் சிறந்தது. ஆனால் கலாசார ஒருமைவாதத்தை அங்கீகரித்து அனைவரையும் ஒரே கலாசாரத்தின் கீழ் கொண்டு வருதல் எல்லாவற்றையும் ஒருசேர அடக்கிக்கொள்ளும் கொள்கையை (Policy of inclusivness)உருவாக்கிவிடுகிறது. இதுவே ‘நேர்மறைப் புறக்கணிப்பு’ (Positive discrimination) எனப்படுகிறது.

ஏன் சிங்கள பௌத்தர்கள் பல்-கலாசாரத் தாராண்மைவாதக் கொள்கையை தழுவிக்கொள்ள முடியாது? அதேபோன்று தமிழ் பேசும் மக்கள் ஏன் அரசாங்கத்தின் இராணுவ வெற்றி ஆரவாரங்களில் பங்கெடுத்துக்கொள்ள முடியாது? என்கின்ற கேள்விகள்தான் இன்று மீளிணக்கத்தை சிக்கலானதாக ஆக்கியுள்ளதாக ஒருவர் கருதலாம். இத்தகையதொரு தருணத்தில்தான் இங்கே ஒரு சகிப்புத்தன்மையுள்ள சமூகத்துக்காக கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இன்றுள்ள மிக முக்கிய தேவை வித்தியாசங்களுடன் எவ்வாறு சேர்ந்து வேலைசெய்வது என்பது பற்றியதுதான். அதற்கு மேலும் கலந்துரையாடல்களும் சந்திப்புக்களும் உரையாடல்களும் அவசியம்.

௦௦௦௦

தமிழில்: ஜே. எச்

கடந்த மாதம் தமிழ்மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகத்தால் லண்டனில் நடைபெற்ற உரையாடல் அரங்கில் முன்வைக்கப்பட்ட கருத்தின் சுருக்கிய தமிழ் வடிவம்

 

No comments

Be the first one to leave a comment.

Post a Comment