Home »

 
 

தொடர்புகள்

 

பங்காற்றுனர்கள்..

உங்கள் கருத்துக்களை, படைப்புகளை, விமர்சனங்களை, ஆலோசனைகளை கணனியில் தட்டச்சு செய்து எமது மின்னஞ்சல் முகவரிக்கு eathuvarai@gmail.com அனுப்பிவைத்தால் இதழ் தயாரிப்புக்கு உதவியாக இருக்கும் என்பதை கவனத்திற்கொள்ளவும்.

எதுவரை சஞ்சிகையை உங்கள் நண்பர், நண்பிகளுக்கும் அறிமுகப்படுத்தவும். நூல் மதிப்புரைக்காக நூல்களை அனுப்பிவைப்பவர் இரு பிரதிகளை அனுப்பிவைக்கவும்.

நன்றி

-ஆசிரியர்-

 

490 Comments

 1. pidungi says:

  எல்லாம் முடிந்து போனது என்று எண்ணிய இந்த கணங்களில் தங்களின் எதுவரை இணைய நூலைப் பார்த்துப் புளகாங்கிதமடைகின்றேன். நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

 2. மிக நல்ல முயற்சி. முழுமையாக படித்துவிட்டு கருத்துகளை பதிவு செய்கிறேன்.ஒரு சின்ன வேண்டுகோள் .குழு மனப்பான்மையுடனோ, பிரபல புகழுடனோ என்கிற ரீதியலான கருதுகோள்கள் இல்லாமல் இந்த இணைய இதழ் மிக உன்னதமாக செயல் பட நெஞ்சார்ந்த வாழ்த்துகளும் ,பாராட்டுகளும்.
  ஃபிர்தவ்ஸ் ராஜகுமாரன்.

 3. எதுவரை வாசித்தேன்.
  வழமைபோல கனதியான கருத்தாடல்களினூடு எல்லாப்பரப்புக்களையும் விசாலித்து செல்கின்றன படைப்புகள். உண்மையில் கையில் வைத்து வாசிக்கும் சஞ்சிகையின் சுவை கிடைக்குதில்லை. கொம்பியூட்டருக்கு முன்னால் இருந்து வாசிக்க இனி பழக வேண்டும். புத்தகம் என்றால் படுத்திருந்து வாசித்து முடித்துவிடுவேன்.சமகாலத்தில் பிரின்ட் சஞ்சிகையாகவும் கொண்டு வாருங்கள். வாழ்த்துக்கள்.

 4. prasath says:

  all the best.

 5. nafeel says:

  எதுவரை படித்தேன்! மண் குளிரப்பெய்யும் மழையின் பெரும் கருணையில் உடலினதும் உளத்தினதும் வெம்மையை தனித்து விடும் போல் உள்ளது.ஒரு சொல் கூட அதிகமின்றி எழுதப்பட்டது போல் கட்டுரைகள் எட்டியுள்ளன.எமது மண்ணில் வெளிவரும் நல்ல இலக்கிய நுல்களின் உள் ஊற்றை நிறைய அடையாளப்படுத்துங்கள்.

 6. mansoorcader says:

  thoddam thoddamaaka vaasiththu mudiththuvidden.Arumayaana padaippukkal. arumayaanathokuppu. vaalththukkal.

 7. சற்றுக் காலந்தாழ்த்தியே தங்கள் ’எதுவரை’யைப் படிக்க நேர்ந்தது. நல்ல முயற்சி எனினும் எளியதன்று.தொய்வின்றித் தொடருங்கள் எங்களைப் போன்றோரின் ஆதரவு என்றும் உண்டு.

 8. எதுவரை முதலாவது இதழ் அச்சுப்பிரதியாகக் கிடைத்தது ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன். பின்னர் இணைய இதழாக வெளிவருவதாக அறிந்தேன். மூன்றாவது மனிதன் விட்ட இடைவெளியை எதுவரை நிரப்பும் என்ற எதிர்பார்ப்பு இணைய இதழ் என்றதோடு தொக்கிப் போனது. இப்போது பறவாயில்லை இன்றுதான் பல ஆக்கங்களைப் படித்து முடித்தேன். விரைவில் முழுமையாகப் படித்து முடித்து விடுவேன். இதயபூர்வமான வாழ்த்துக்கள். அச்சு இதழ் தந்த நஷ்டத்தை இணைய இதழ் தராது, அத்துடன் தட்டச்சு போன்ற வேலைப்பலுவும் குறைவு தொடர்ச்சியாகப் பணி செய்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்
  அன்புடன்
  முஸ்டீன்

 9. Keshayinie Edmund says:

  பணி தொடர என் வாழ்த்துக்கள். எழுத்தாளர்களினது மின்னஞ்சல் முகவரியினை அவர்களின் ஆக்கங்களின் முடிவில் பெயருடன் பிரசுரித்தால் விளக்கங்களை அவர்களிடமிருந்து பெறுவது இலகுவாயிருக்கும்

 10. Anonymous says:

  எதுவரை மிகச்சிறப்பாக வருகிறது. பலர் எழுத ஆரம்பித்து விட்டார்கள் சந்தோஷமாக இருக்கிறது.கட்டுரைகள் சிறப்பாக வருகின்றன.

  ஸர்மிளா ஸெய்யித்

 11. M.H.Musthak Mohamed says:

  எதுவரை மிகவும் சிறப்பாக வருகிறது பணி தொடர வாழத்துகள்

 12. I appreciate the good work you are doing! I’ve really enjoyed reading it. You’ve arouse me a great interest. I’ll investigate it more. Keep up doing it!

 13. கணினியில் வாசிப்பதும் பதிவு செய்வதும் இப்பொழுதுதான் பயின்று வருகிறேன்.’எதுவரை’ இதுவரை முழுமையாய் வாசிக்கவில்லை.முழுமையாக வாசிக்கும் தருணம் நெருங்கி வந்திருப்பதாக உணர்கிறேன்.அதுவரை வையை நதிக்கரையின் வாழ்த்துக்கள்.

 14. அருமையான சமூக சிந்தனையுள்ள பகிர்வுகள்

 15. வணக்கம்,நான் மலேசியாவின் மூத்த எழுத்தாளன்.தங்களின் எதுவரையைப் படித்தேன்,மகிழ்ந்தேன்.எனது படைபுகளையும் அனுப்பிள்ளேன்.எனது 50 ஆண்டுகாள மலேசிய இலக்கியப்பணியின் வெற்றியாக எனது படைப்புகளை arunveloo.blogspot.com மற்றும் arunveloo.wordpress.com இல் வாசித்து கருத்தை தெரிவிக்கலாம்.

  நன்றி.
  வே.ம.அருச்சுணன் – மலேசியா

 16. வணக்கம்,அருமையான வளைத்தலம்.வாசித்து பயன்பெறாவிட்டால்
  இலக்கிய உலகிற்க்கு நாம் செய்யும் துரோகம்.எதுவரை என்றுமே வாழும்.நன்றி.

  அரு.நலவேந்தன்

Post a Comment


 

வகைகள்..