Home »

 

படிப்பகம்/நூல்கள் 2

 

 

*அஜிதாவின் நினைவுக் குறிப்புகள்
இந்திய அரசால் கைது செய்யப்பட்டு 9 ஆண்டுகள் சிறையில் வன்கொடுமையை எதிர்கொண்டவர். விடுதலைக்குப் பின், தொடர்ந்தும் தலைமறைவாக இருந்து அரசியல் பணியில் ஈடுபட்டவர்.

“மிகச் சாதரணமான கிராமப்புற ஏழை மக்களை நம்பித்தான் நாங்கள் வீட்டையும் குடும்பத்தினையும் துறந்து இந்தப் பயணத்தினை மேற்கொண்டிருக்கிறோம். ஏழைகளையும் விவசாயிகளையும் வறுமையிலும் துன்பத்திலும் தள்ளி உள்ள இந்திய அரசுக்கு எதிரான ஜீவ மரணப் போராட்டத்தினை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம். ”
-அஜிதா
————————–

* உப்பு வேலி
ராய் மாக்ஸம் தமிழில் சிறில் அலெக்ஸ்

உப்புவேலி எனும் இந்தப் புத்தகம் அசாத்திரமானது. ஒரு பயணப் புத்தகத்தையும் ஒரு வரலாற்று துப்பறியும் கதையையும் கலந்திருக்கிறது. சாவி துவாரம் ஒன்றின் வழியே பார்ப்பதைப்போல பிரித்தானிய அரசாங்கத்தின் உள்நோக்கங்களையும், ஆட்சிமுறையையும், ஒரு மனிதனின் வெறித்தனமான தேடலின் வழியே சொல்லிச் செல்கிறது. அதையெல்லாம் விட மன உறுதியும் தேடலும் உள்ள ஒருவன், ஒரு தூசி மண்டிய புத்தகத்தை ஒரு பழைய புத்தகக் கடையில் வாங்கவில்லை என்றால் ஒரு வரலாற்று அதிசயம் மறக்கப்பட்டிருக்கும் என்பதை நமக்கு காண்பிக்கிறது.

———-————————————-

* தாய்
மக்சீம் கார்க்கி

உலகம் முழுவதும் பதிப்பிக்கப்பட்டு கோடிக்கணக்கானவர்களால் வாசிக்கப்பட்ட நாவல் கார்க்கியின் தாய். சுரண்டப்படும் தொழிலாளி வர்க்கமும், நிர்க்கதியான விவசாயிகளும், இளைஞர்களும் கொஞ்சங் கொஞ்சமாக நெஞ்சில் கனல் மூண்டு ஒரு மகத்தான புரட்சியை நோக்கி எப்படி எழுச்சி பெறுகிறார்கள் என்பதை சிறந்த கதையம்சத்தோடு கார்க்கி இதைத் தீட்டியிருக்கிறார். ஒரு மாபெரும் புரட்சியில் பெண்கள் செய்யும் தியாகங்கள் அவர்களின் பங்கு பாத்திரம் பற்றி நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது இந்நாவல்.
—————————————
*கோதானம்
பிரேம்சந்த்

மிகச் சிறந்த இந்திய பத்து நாவல்களில் இதுவும் ஒன்று.சிறந்த எழுத்தாளரான பிரேம்சந்தின் இந்த நாவல் , 60 வருடத்திற்குப் பின் தமிழுக்கு வந்திருப்பது மிக முக்கியமானது.இந்திய இலக்கியத்தின் முதல் முற்போக்கு சிந்தனை எழுத்தாளரான பிரேம்சந்த், இன்றும் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கும் ஏழை மக்களின் வாழ்வை தரிசிக்க மீண்டும் மீண்டும் படிக்கப்பட வேண்டியவராகpadippaham இருக்கிறார்,

 


 

*. வீரம் விளைந்தது
தமிழில்.எஸ்.ராமகிருஸ்ணன்

நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கிப் சோவியத் நாவலாசிரியர்களில் மிகவும் முக்கியமானவர். எளிய போல்ஷ்விக்காக அறிமுகமாகும். பாவெல் கர்ச்சாவின் தனது பங்களிப்பின் மூலம் தனக்களிக்கப்பட்ட கிராமத்தைப் பெரும் போராட்டங்களுக்கு இடையே முன்னேற வைக்கும் கதை.

0000

*அமெரிக்காவின் மறுபக்கம்

நாகேஷ்வரி அண்ணாமலை

அமெரிக்கா என்றதும் மனதில் தோன்றுவது அது வளமிக்க நாடு் இராணுவ பலமிக்க நாடு் தனிமனித சுதந்திரத்தைப் போற்றும் நாடு என்பதே. ஆனால் உண்மையில் மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவின் வரலாற்றுப் பின்னணியைப் புரிந்து கொண்டவர்கள் ஒரு சிலரே
நாகேஸ்வரியின் இந்நூல் இன்றைய அமெரிக்கா எவ்வாறு உருவானது. அதன் அரசியல் சமூகப் பொருளாதாரப் பின்னணி எப்படி இவ்வளவு வளத்தையும் அதிகாரத்தையும் மையப்படுத்த முடிந்திருக்கிறது.

ஐரோப்பியக் குடியேறிகள் எப்படி பூர்வீகக் குடிகளை அழித்துக் காலணிகளை அமைத்தனர். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்ட ஆப்பரிக்கக் கறுப்பர்கள் எந்த அளவிற்கு அந்நாட்டிற்கு வளத்தைச் சேர்த்தனர் போன்ற விஷயங்களில் புதிய வெளிச்சத்தை அளிக்கிறது.
மேலும் உள்நாட்டில் ஜனநாயகம், வெளிநாட்டில் சர்வாதிகாரம் என இரட்டை மனநிலையுடன் இயங்கும் அமெரிக்கா கியூபா, ஈரான் இராக் போன்ற நாடுகளுடன் நடந்துகொண்ட விதம் பற்றியும் சந்தைப் பொருளாதாரத்தால் கார்பரேட் நிறுவனங்கள் மக்களை கடன் அட்டை மூலம் நுகர்வோராகவும் அதீத மருத்துவச் செலவால் கடனாளியாகவும் ஆக்கியிருப்பது பற்றியும் இவை எவ்வாறு சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன போன்ற சமகாலக் கேள்விகள் மீதான புதிய பார்வைகளையும் இந்நூல் முன்வைக்கிறது

00000

* சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு சுருக்கமான பாடம்1938
எம். இஸ்மத் பாஷா

மகத்தான நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா வெளியீடாக, புரட்சியை நடத்திய சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் சுருக்கமான வரலாறு. 1938 ஆம் ஆண்டு ஸ்டாலின் அவர்களின் நேரடி மேற்பார்வையில் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியகுழு தேர்ந்தெடுத்த ஆசிரியர் குழுவால் தொகுக்கப்பட்டது.

லெனின் அவர்கள் செங்கல் செங்கலாய்த் தேர்ந்தெடுத்து இணைத்துக் கட்டிய கட்சியின் தலைமை இல்லாமல் நவம்பர் புரட்சி சாத்தியமாகியிருக்காது. அத்தகைய கட்சியைக் கட்டி அமைக்க லெனினுக்கு முன்பு பிளக்கனோவ் போன்றோரும், லெனினுக்குப் பிறகு ஸ்டாலினும் ஆற்றிய அரும் பணிகளின் வரலாறு… சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் வரலாறு. தமிழின் மிகச் சிறந்த மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவரான இஸ்மத் பாஷாவின் மொழிபெயர்ப்பில் 1947 ஆம் ஆண்டு வெளியாகி, பின் ஸ்டாலின் நூற்றாண்டுவிழாவின் போது (1979) சென்னை புக் ஹவுஸ் வெளியீடாக வந்த நூலின் புதிய அச்சாக்கம்.

 

* குஜராத் கோப்புகள்

ரானா அயூபின்

தமிழில்.ச.வீரமணி

kujarath

2002 குஜராத் வன்முறையில் மோடியின் பங்கு பற்றி அந்தப் புத்தகம் கேள்வி எழுப்பியது. என்கவுண்டர் கொலைகளில் அமித் ஷாவின் பங்களிப்பை வெளிக் கொண்டு வந்தது. பதிப்பாளர்கள் பதிப்பிக்க விரும்பிய மோடியின் அசுர வளர்ச்சி பற்றிய கதை அல்ல .

அது ஒரு அசலான புலனாய்வுப் பணி. இந்திய அரசியலில் இருந்த சில பெருந்தலைகளின் நடவடிக்கைகளையும் நிலைப்பாடுகளையும் கேள்விக்குட்படுத்திய பணி. அது முன் வைத்த கேள்விகள் சங்கடமானவை. எதிர்பார்த்த பதில்களோ கசப்பானவை…..

 

 

*கே.டானியல் படைப்புகள் (ஆறு நாவல்கள்)dani

கே.டானியல்

பஞ்சமர் ,கோவிந்தன்,அடிமைகள், கானல்,பஞ்சகோணங்கள்,தண்ணீர்….. ஆகிய 6 நாவல்கள் உள்ளடக்கியது…..தலித்தியப் படைப்புகளில் பல தன்வரலாற்றுப் போக்கைக் கொண்டிருப்பவை இத்தகைய நாவல்கள் பெரும்பாலும் ஆசிரியர் கூற்றாகவே அமைந்திருப்பதைப் பார்க்கலாம்.

*டிராட்ஸ்கி என் வாழ்க்கை

 *டிராட்ஸ்கி,

தமிழில்: துரை.மடங்கன்

சோவியத் ருஷ்யாவின் அறிஞர் டிராட்ஸ்கி அவரே எழுதிய வாழ்க்கை வரலாற்று நூல்.

1879 -ஆம் ஆண்டு அக்டோபர் திங்களில் தென் ருசியாவின் யனோவ்காவில் (ட்ராட்ஸ்கி) பிறந்தார். இப்புத்தகத்தில் போல்டோவா மாநிலத்தில் தாம் பிறந்த யூத நகரை விட்டு தென் உக்ரைனிய கேர்சன் மாநிலத்திற்கு தாம் வந்ததிலிருந்து பள்ளி,படிப்பு,கல்லூரி,அரசியல்,சிறை,தப்பித்தல்,வெளி நாட்டில் வசித்தல்,மீண்டும் ருசியா திரும்புதல்,1905 -ம் ஆண்டு புரட்சி இரண்டாவது நாடு கடத்தல் போர் பிரான்ஸ் ஸ்பெயின் நியுயார்க், என நாடு விட்டு நாடு செல்லல், அக்டோபர்புரட்சி,ஆட்சி அதிகாரம்,உள்நாட்டு போர் லெனினுடனான உறவு இலெனின் இறப்பு,அதிகார மாற்றம்,கட்சிக்குள் போராட்டம்,நாடு கடத்தல் வெளியேற்றம் துருக்கியில் தங்கியது என்பதுவரை,தன வரலாற்றை ட்ராட்ஸ்கி நாற்பத்தைந்து இயல்களில் பதிவு செய்கிறார்.

*பெண் எனும் பொருள்-விற்பனைக்கு,பெண்கள்,குழந்தைகள்.

ஆசிரியர்,லிடியா காச்சோ.

தமிழில்,விஜயசாய்.

..உலகில் இன்றைய தேதியில் சுமார் 20 மில்லியன் முதல் 30 மில்லியன் வரையிலான எண்ணிக்கையில் அடிமைகள் இருப்பதாகவும் ; உலகளவில் நடைபெற்று வரும் ஆட்கடத்தலில் 80 சதவீதம் பாலியல் சுரண்டலுக்காகவும், 19 சதவீதம் கட்டாய உடலுழைப்புக்காகவுமாக உள்ளதாகவும் மற்றும் சர்வதேச அளவில் மனிதக் கடத்தல் சட்டவிரோத வர்த்தகம் ஆண்டுக்கு $32 பில்லியன் அளவுக்கு இலாபம் குவிப்பதாகத் தெரிய வருவதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. எதோ இதெல்லாம் கம்போடியாவிலும், கொலம்பியாவிலும் தானே என்று அலட்சியப்படுத்தி விட முடியாது.; கூடவும் கூடாது. நம்மூரில், நம்ம தெருவில் கூட பெண்களைத் தொடரும் அந்த ‘பணம் தின்னிப் பிசாசுகள்.’ இருக்கலாம்; எந்த உருவத்திலும், எந்த ஒரு உறவுமுறையிலும் இருக்கலாம்”

*சாட்சி சொல்ல ஒரு மரம்

எஸ்.வி.ராஜதுரை

அரசியல் ​பொருளாதாரம்,சூழலியல்,சமூகவியல்,சர்வ​தேசப் பிரச்னைகள்,மனித உரி​மைப் பிரச்​னைகள் எனப் பல்​வேறு தளங்க​ளை இந்நூலில் ஆசிரியர் எழுதியிருக்கிறார்.எஸ்.வி.ராஜதுரையின் ஐம்பதுக்கும் பேற்பட்ட ஆக்கங்கள் கட்டுரைகள், கவிதைகள், திரைப்பட விமர்சனங்கள், நூலறிமுகங்கள், இலக்கியத் திறனாய்வுகள், இசையனுபவங்கள், திரைப்பட விமர்சனங்கள் எனக் கிளை பரப்பி சாட்சி சொல்லும் மரமாக உருக்கொள்கிறன.

 

*மிளிர் கல்

இரா. முருகவேள்

விகடன் விருதுகள் 2015 – சிறந்த நாவல்

சிலப்பதிகார வரலாற்றினூடே இரத்தினக்கற்களின் அரசியலை நாவல் பேசிய போதிலும் இது மீதேன் பேரிலும், கெயில் குழாய் பதிப்பின் பேரிலும், காடுகள் -மலைகள் – நீர்நிலைகள் – தாது மணல் கொள்ளைகள் என அனைத்தின் பேரிலும் நடக்கும் ஆக்கிரமிப்புகளையும், மக்களின் போராட்டங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் புரிந்துகொள்வதற்கு துணை செய்கிறது.

 

* இந்திய வரலாறு, காந்திக்குப் பிறகு – பாகம் 1,2

kuhaராமசந்திர குஹா

ராமச்சந்திர குஹாவின் India After Gandhi தமிழ் மொழி பெயர்ப்பின் முதல் பாகம் இது. உலகமெங்கும் பல லட்சம் பிரதிகள் விற்பனையாகிக்கொண்டிருக்கும் ஆங்கில நூலின் அதிகாரபூர்வமான தமிழ் மொழி பெயர்ப்பு. இந்தியா ஒரு தேசமாக என்றென்றும் உருவாகப் போவதில்லை என்றொரு பலமான கருத்து நிலவிவந்தது. மொழி, கலாசாரம், மதம், பண்பாடு என்று எந்த வகையிலும் இந்தியர்களிடையே ஒற்றுமையோ, ஒருமித்த அம்சங்களோ இருக்கவில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இதுதான் நிலைமை. சுதந்தரத்துக்குப் பிறகும் பெரிதாக மாற்றமில்லை. அமைதி வழிப் போராட்டம் வெற்றி பெற்றுவிட்டாலும் பல்லாயிரக்கணக்கானவர்கள் ரத்தம் சிந்தவேண்டிவந்தது

 * அரபு இசை

எம்.எஸ்.எம். அனஸ்

அரபு இசை மத்தியக் கிழக்கில் மட்டுமன்றி உலக அளவிலும் பெரிய தாக்கத்தைச் செலுத்தியுள்ளது.இஸ்லாத்துக்கு முந்தைய காலத்தில் அரபு இசை தோன்றியதிலிருந்து இஸ்லாமிய நாகரிக வரலாற்றில் அதன் விளைவுகளையும் இந்நூல் ஆராய்கிறது.

*அமைப்பியலும் அதன் பிறகும்

தமிழவன்

அமைப்பியலும் அதன் பிறகும் என்னும் இந்நூல் ஸ்ட்ரக்சுரலிசம் என்ற பெயரில் 1982இல் வெளிவந்தது. அப்போது இத்துறையில் வெளிவந்த முதல் தமிழ் நூலாக அது அமைந்தது. இந்நூலால் உந்துதல் பெற்று தமிழ் அறிவுலகம் பல வாத விவாதங்களைக் கிளப்பியது….

 *பயாஃப்ராவை நோக்கி

புச்சி யமச்செட்டா தமிழில் இரா.நடராஜன்

நெருடும் நைஜீரியப் பெயர்களைத் தவிர்த்து நாவலெங்கும் நமக்கு அன்னியமாக எதையும் உணர முடியவில்லை.இரா.நடராசனின் ஆற்றொழுக்கான மொழிநடை வாசகனுக்கு மிக நெருக்கமாக இருந்து நாவலைச் சரளமாக நகர்த்திச் செல்கிறது.

“இது ஒரு முழுமையான நைஜீரிய அரசியல் நாவல்.இக்போ என்றழைக்கப்படும் இனத்திற்கு எதிரான கோரப்படுகொலைகள்,இன அழித்தொழிப்பு வேலைகள் எவ்வாறு வல்லரசுகளின் திட்டமிடலுடன் நிகழ்த்தப்பட்டன.இக்போக்களின் பயாஃப்ரா எனும் தனிதேசக் கனவுகள் எதேச்சதிகார சக்திகளால் எங்கனம் முறியடிக்கப்பட்டன என்பனவற்றையெல்லாம் புச்சியெமச்செட்டா உணர்வுப் பூர்வமாகப் பதிவு செய்துள்ளார்.நெருடும் நைஜீரியப் பெயர்களைத் தவிர்த்து நாவலெங்கும் நமக்கு அன்னியமாக எதையும் உணர முடியவில்லை.இரா.நடராசனின் ஆற்றொழுக்கான மொழிநடை வாசகனுக்கு மிக நெருக்கமாக இருந்து நாவலைச் சரளமாக நகர்த்திச் செல்கிறது. ”

 *ஊர் மீண்டு செல்லுதல்

ம.செந்தமிழன்

ஊழி எனும் சொல்லை அறிந்துகொள்ளாமல் வாழ்வது சிறப்பானது. ஏனெனில், அது பேரழிவையும் புதிய படைப்பையும் குறிக்கிறது. பேரழிவைப் பற்றிய சிந்தனைகளும் உரையாடல்களும் தேவையில்லாமல் இருத்தல்தான் வாழ்வின் அமைதிக்கான சூழல். ஆனால், இப்போதைய சமூகத்தில் ஊழியை அறிந்துகொள்ளாமல் இருத்தல் சாத்தியமற்றது. இந்தச் சொல்லை அறியாமல் இருக்கலாம். இது தரும் பொருளை உணராதவர்கள் எவரும் இருக்கவியலாது. ஏனெனில் ஊழி இப்போது நிகழ்ந்துகொண்டுள்ளது.

*புதிய தமிழ்ப்புணர்ச்சி விதிகள்

செ. சீனி நைனா முகம்மது (ஆசிரியர்)

இந்நூலைப் பயில்வோருக்கு, புணர்ச்சி இலக்கணத்தில் இதுவரை உள்ள அத்துணைக் குழப்பங்களுக்கும் விடை கிடைக்கும் என்பது மறுக்கவியலாத உண்மை.பழங்கால இலக்கண ஆசிரியர்கள் பலரும் துறவிகளாக இருந்து தம் துறவின் தலைசிறந்த கடமையாக இலக்கண நூல் எழுதுவதைத் தவம் போல மேற்கொண்டு அதைச் சாதித்திருக்கிறார்கள். அவர்களுக்கு உதவ வள்ளல்கள் இருந்திருக்கிறார்கள்.

இன்று இலக்கண ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்கள் குறைந்து விட்டனர். இலக்கணத்தைக் கற்பது, அதில் ஆராய்ச்சி செய்வது என்பது ஒரு சிலருக்கே கிடைத்த பேறாக இருக்கிறது. அதற்குப் பலமொழிப்பயிற்சி, மொழியியல் பயிற்சி போன்றவையும் தேவைப்படுகின்றன. இவை எல்லாம் பார்க்கும்போது இறையருட்கவிஞர் சீனி அவர்கள் எத்தகையவர் அவர் பணி எத்தகைய சிறப்புடையது என்பது விளங்கும்.

*சர்வதேச பட்டாளி வர்க்க இயக்கம்

சுகுமால் சென்

தமிழில்: மிலிட்டரி பொன்னுசாமி

அ.நிசார் அகமது

உலகத் தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான WFLU துவங்கி 70 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. இருந்தாலும் அதன் வேர்கள் 1864 ஆம் ஆண்டு லண்டனில் ஆரம்பித்த முதலாம் அகிலம் வரை செல்லக் கூடியதாகும். ஏற்ற இறக்கங்கள், பிளவுகள், ஒன்றுக்கூடல்கள், நிரம்பிய இந்த வரலாற்றை விளக்கும் நூல் தோழர். சுகுமால் சென் எழுதிய சர்வதேச பாட்டாளி வர்க்க இயக்கம் இந்தியாவில் முதன்முதலாக தொழிற்சங்க இயக்கம் கண்ட தமிழகத்திற்கு இப்போது தமிழில்.

*கோபல்லபுரத்து மக்கள்ki-ra

கி.ராஜநாராயணன்

கோபல்லபுரத்து மக்கள் 34 வாரங்களாக விகடனில் தொடராக வெளிவந்து பல்லாயிரக்கணக்கான வாசகர்களின் வரவேற்பையும், சாகித்திய அக்காதெமியின் பரிசையும் பெற்றது. இந்தியா சுதந்திரம் பெற்ற கதையோடு முடியும் இந்நாவலில், சமகால வரலாற்றுச் சம்பவங்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களின் பின்னணியில் சாதாரண மக்கள் நாயகர்களாக விளங்குவதையும், பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்துக் கிளர்ந்தெழுவதையும் தமக்கேயுரிய தனீ நடையில் சுவை பொங்க விவரிக்கிறார் கி.ரா.

 

 *  பிரபஞ்சன் கட்டுரைகள்

 ந.முருகேசபாண்டியன்

உலகமயமாக்கல் காலகட்டத்தில், எல்லாம் நுகர்பொருள் பண்பாடாக உருமாற்றமடையும் சூழலில், அசலான சுய சிந்தனை இல்லாமல் போகிறது. பின் -காலனியச் சூழலில் வாழ நேர்ந்திட்ட நம் மனநிலை, மேலைநாடுகள் மேன்மையானவை என்ற புனைவுக்குள் சிக்கித் தவிக்கின்றது. ஊடகங்கள்தொடர்ந்து நிகழ்த்தும் புனைவு வெளியில், ‘நகல்களின் உண்மை’யில் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம்.

பாரம்பரியமான தமிழ் மொழியைப் பேசும் புராதனத்தமிழர், மெல்ல அடையாளமிழக்கும் நிலை உருவாகிக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் பண்டை இலக்கியமான சங்க இலக்கியத்தை முன்வைத்துப் பிரபஞ்சன் முன்னிறுத்தும் சொற்கள், நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன.பண்டிதர்கள்போல் போலிப் பெருமை பேசுவது பிரபஞ்சனின் நோக்கமல்ல. எல்லாம் வணிகமயமாகிச் சுற்றுச்சூழலும் நாசமாகிப்போன தமிழகத்தில், சங்க இலக்கியம் முன்வைத்துள்ள ஐந்திணை வாழ்க்கையைப் பரிசீலித்து , பூமிமீதான, நம் ஈர்ப்பை வலுப்படுத்துகிறார்.

 

*நல்ல தமிழ் இலக்கணம்

செ. சீனி நைனா முகம்மது (ஆசிரியர்)

நல்ல தமிழ் இலக்கணம் எனும் நூல், தமிழ் இலக்கணத்தைக் கற்று தங்கள் மொழியறிவை வளர்த்துக்கொள்ள விரும்பும் அனைவருக்கும் ஏற்ற வகையில், இலக்கணக் கூறுகளை எல்லாம் உள்ளடக்கி மிக எளிமையான முறையில் அமைக்கப்பட்டுள்ளது. இன்று சந்தையில் காணப்படும் இலக்கண நூல்களை ஆராய்ந்தால் அனைத்து நூல்களிலும் திரும்ப திரும்ப ஒரே மாதிரியான எடுத்துக்காட்டுகளே இருப்பதைக் காணலாம்.

 * உலக மக்களின் வரலாறு

கிரிஸ் ஹார்மன்

இது நாடாண்டவர் வரலாறல்ல, ஆளப்பட்டவர்களின் வரலாறு. இது உலகை ஆள்வதற்கு நினைத்தவர் வரலாறல்ல, காலமெல்லாம் உலகை மாற்றுவதற்குப் போராடி வந்த மக்களின் வரலாறு.

*சம்ஸ்காரா

யு.ஆர்.அனந்தமூர்த்தி

இது ஒரு குறியீட்டு நாவல். இந்திய மரபார்ந்த சமூகத்தின் வீழ்ச்சியைப் பற்றி இது குறியீடாகப் பேசுகிறது. இதில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த நாரணப்பா ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த சந்திரியுடன் உறவுகொள்கிறான்.

*மேதைகளின் குரல்கள்

தமிழில்: ஜா. தீபா

சினிமாவில் காட்சிகளை ஓவியமாகக் காண்பிக்கக் கூடியவனும், தற்காலத்தில்கூட வசனமே இல்லாமல் தன் படங்களில் நம்மைத் தொலைந்து போகச் செய்கிறவனும் இலக்கியம் போலத் தீவிரமான பதிவை ஏற்படுத்துபவனும், நம்மை மகிழ வைப்பதின் மூலம் நமது சிந்தனையைச் சோதித்துப் பார்ப்பவனும், படைப்புக்காவே சாகிறவனும் தருகிற படைப்புகளைப் போலவே முக்கியத்துவம் வாய்ந்ததுதான் அவர்களது உரையாடல்களும் அத்தகைய உரையாடல்களின் தொகுப்பே இந்நூல்.

*சாதியப் பிரச்சினைக்குத் தீர்வு:vetri

புத்தர் போதாது!

அம்பேத்கரும் போதாது!

 மார்க்ஸ் அவசியத் தேவை!

தெலுங்கு மூலம்: ரங்கநாயகம்மா

ஆங்கிலத்தில்: பி.ஆர். பாபுஜி

ஆங்கிலம் வழி தமிழில்: கொற்றவை

 

*ஆறிப்போன காயங்களின் வலி
-வெற்றிச்செல்வி
( பம்பைமடு தடுப்புமுகாம் தொடர்பான நூல் )
18 ஆண்டுகள் ஓய்வின்றிப் போராடிய, தன் வாழ்வின் பெரும் பகுதியை போராட்டத்துடன் கழித்த முக்கியமான போராளிகளில் ஒருவரான வெற்றிச்செல்வி யின் ஆறிப்போன காயங்களின் வலி
உண்மையிலே வதை என்பது என்ன? ஒரு வதை முகாம் என்பது எப்படி இருக்கும்? ஒரு வதை முகாமினுடைய அடையாளம் வெறும் முட்கம்பிகளால் மட்டும் சூழப்பட்டதா? நிச்சயமாக இல்லை
உண்மையில் வதைமுகாம் என்பது முள்வேலிகளிலும் முட்களிலும் இருப்பதில்லை. குருதி சிந்துவது மாத்திரமல்ல வதை. உள்ளத்தை அழிப்பதுதான் மாபெரும் வாதை. அந்த வதையைக்காட்டிலும் பெரிய வாதை வேறொன்றுமில்லை.
அப்படியொரு வாதையை சந்தித்த ஒரு இருண்டுபோன நாட்களினுடைய பதிவுதான் இந்த புத்தகம். தன்னுடைய இருண்டுபோன நாட்களை ஒவ்வொன்றாக, ஒவ்வொரு கணங்களாக இங்கே வெற்றிச்செல்வி பதிவு செய்திருக்கின்றார். போருக்குப்பின் விடுதலைப் புலி உறுப்பினர்கள் பல்வேறு தடுப்பு முகாங்களை எதிர்கொண்டார்கள் பம்பைமடு என்ற ஒரு தடுப்புமுகாமை எப்படிக் கடந்தாா்கள் என்பதுதான் இந்த நூல்.
—————————————————————–
*பிம்பச்சிறை
எம்.எஸ்.எஸ்.பாண்டியன்
தமிழில்: பூ.கொ. சரவணன்
நடிகர்களை நாகரிகக் கோமாளி என்றார் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன். ஆனால் எம்.ஜி.ஆர். காரியக் கோமாளி. சமூக வளர்ச்சியைத் தனது படங்களின் நூல் இழையாக வைத்து தனது வளர்ச்சியை கவனத்தோடு நகர்த்தியவர். தொழிலாளியாக நடித்தார். தொழிலாளியாக வாழ்பவர்களுக்கு அது மிகவும் பிடித்து இருந்தது. தன்னையே எம்.ஜி.ஆராகவும், சரோஜாதேவியுடன் தான் ஆடுவதாகவும் ரசிகன் நினைத்தான். உருண்ட மஞ்சள் மார்பை பார்க்க ரசிகை துடித்தாள்.இப்படி ஒரு புருஷன், இப்படி ஒரு அண்ணன் கிடைக்க மாட்டானா என்று தவித்தாள். இதைத்தான், ‘எம்.ஜி.ஆரின் புனைப்பட்ட வாழ்க்கை’ என்கிறார் எம்.எஸ்.எஸ்.பாண்டியன். அடித்தட்டு வர்க்கத்தின் அறிவுப்பூர்வ வெற்றிடத்தை எம்.ஜி.ஆர். என்னும் மயக்கும் மாய உலகம் சுருட்டிக் கொண்டது. நேற்று மட்டுமல்ல. இன்று வரை. நாளையும்.
————————————————————————
*ஈழ இன அழிப்பில் பிரிட்டன்
1979-2009
இலங்கை இனப்போரில், பிரித்தானியா அரசின் வெளிப்படையான ,மறைமுகமான பாத்திரத்தினை ஆதாரத்துடன் முன் வைக்கும் நூல் இது (Britain”s Dirty War ,against tamil people ) ஃபில் மில்லர் எழுதிய இந்த நூலை குழந்தைசாமி மொழிபெயர்த்துள்ளார்.
————————————————————

*கந்தில் பாவை
(நாவல்)
தேவகாந்தன்

யாழ்ப்பாணத்தின் புராதன தலைநகராகக் கருதப்பெறும் கந்தரோடையையும் அதைச் சூழ்ந்த பிரதேசத்தையும் கதைக் களமாய்க்கொண்டு, வரலாறு – ஐதீகம் ஆகிய இரட்டைத் தடங்களில் தன் புனைவுப் பயணத்தைச் செய்திருக்கிறது நாவல்.

1880-2015 க்கு இடைப்பட்ட நீண்டகாலப் பரப்பில் தன் கதையை விரித்துச் செல்கிறது ‘கந்தில்பாவை’. மனநிலை பாதிப்பு எனும் நோய் பரம்பரைபரம்பரையாகத் தொடரும் நுட்பத்தையும், யுத்தம் அந்த வடுக்களை ரணமாக்கி அவர்களைச் மனச்சிதைவு நிலைக்குத் தள்ளும் அவலத்தையும் நான்கு தலைமுறைகளின் அனுபவங்களினூடாக நாவல் வெளிப்படுத்துகிறது.
——————————–

perumaal*மனாமியங்கள்(நாவல்)
சல்மா

சல்மாவின் நாவல் முழுமையாகப் பெண்ணுலகத்தால் நிரம்பியிருக்கிறது. புற உலகம் அறியாத பெண்களின் உள் உலகத்தை விரிக்கும் எழுத்து. துயர் நிரம்பிய உள்ளுக்குள் பெருகும் உணர்வுகளையும் அவற்றில் இருந்து காலத்தின் கைப்பிடித்துத் தாங்களாகவே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வரும் திறனையும் இயல்பாகக் காட்டிச் செல்கிறது நாவல்.

—————————————————————

*என் கதை(சுயசரிதை)
கமலாதாஸ்
தமிழில்: நிர்மால்யா

கமலாதாஸின் ‘என் கதை’யைத் தவிர்த்து, ஒரு பெண்ணின் அக வாழ்க்கையை அதன் சோகத் தனிமையுடனும் உண்மை அன்புக்கான அதன் தீராத வேட்கையுடனும் தன்னையே கடக்கும் அதன் விழைவுடனும் அதன் ஒழுங்கீனத்தின் நிறங்களுடனும் அதன் கொந்தளிக்கும் கவிதையுடனும் இந்த அளவு உண்மையுணர்வுடன் முழுமையாக வெளிப்படுத்திய ஒரு இந்திய சுயசரிதையை என்னால் நினைத்துப் பார்க்கவே முடிவதில்லை.
சச்சிதானந்தன் (மலையாளக் கவிஞர்)
—————————————————————-
*வெர்ரியர் எல்வினும் அவரது பழங்குடிகளும்
இராமச்சந்திர குஹா
ஆங்கிலத்திலிருந்து தமிழில்
வேலு. இராஜகோபால்

இந்தியப் பழங்குடிகள் குறித்த ஆய்வாளராகவும் அம்மக்களின் சமூக சேவகராகவும், அவர்களது மேம்பாட்டுக்கான உயர் அரசு அதிகாரியாகவும் பணியாற்றியவர் வெர்ரியர் எல்வின்.

கிறித்தவ மதபோதகரின் மகனாக இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டில் பயின்று, இந்தியப் பழங்குடிகளிடம் கிறித்தவ மறை பரப்பாளராக வந்து, காந்தியவாதியாக மாறி தம் மறைபரப்பும் பணியைத் துறந்தவர். ஆதிவாசிப் பெண்ணைத் திருமணம் செய்து புத்தசமயத்தைத் தழுவி இந்தியக் குடியுரிமையைப் பெற்றுக் கொண்டவர்.
போராட்டம் மிகுந்த இவரது வாழ்க்கை வரலாறே இந்நூல். நூலாசிரியர் ராமசந்திர குஹா இந்தியாவின் தலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவர். நூலின் சுவை குன்றாதவாறு வேலு. இராஜகோபால் இதைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

——————————————————————————————–

*அசோகமித்திரன்(அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை)
தொ.ஆ: மோகனரங்கன்

தமிழின் முதன்மையான சிறுகதையாளர்களில் ஒருவரான அசோகமித்திரன் இதுகாறும் எழுதிய அனைத்துக் கதைகளும் அடங்கிய பெருந்தொகை இந்நூல். 1956 முதல் 2016 வரை அறுபதாண்டுகளாக எழுதிய கதைகளின் தொகுப்பு. “பெரிய கதையன்றின் சிறுசிறு பகுதிகள்தாம் என் கதைகள்” என்று கூறும் அவர், தான் எழுதிய இச்சிறிய கதைகளின் வாயிலாக என்றுமே எழுதி முடிக்கமுடியாத அந்தப் பெரிய கதையான ‘வாழ்வின்’ பக்கங்களை நமக்குப் புரட்டிக் காட்டுகிறார். முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடியாத அக்கதையினை நாம் பகுதிபகுதியாக வாசித்துக்கொண்டிருக்கும்போதே, ஏதோ ஒரு தருணத்தில் அது நம்மைப் பற்றிய கதையாக மாறிவிடுவதும் அசோகமித்திரனின் இந்த தொகுப்பில் உள்ள 274 கதைகளில் இயல்பாக நடந்தேறுகிறது.

அசோகமித்திரன் செகந்தராபாத்தில் பிறந்து வளர்ந்து சென்னையில் வாழ்ந்துவருபவர். எண்பதுக்கும் அதிகமான வயதுடையவர். அவரது அனுபவங்களாக மட்டும் சுருங்கிவிடாமல், சுதந்திரத்திற்கு முன்னும் பின்னுமாக நீளும் ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டு வரலாற்றைக் குறிப்புணர்த்தும் புனைவுகளாகவும் விரிவுகாட்டி நிற்கின்றன என்பதே இக்கதைகளின் சிறப்பு.தமிழில் 60 ஆண்டுகளுக்கு மேலாக எழுதிவரும் மூத்த படைப்பாளியின் ஒரு முழுத் திரட்டு இது.
——————————–
*சுந்தர ராமசாமி சிறுகதைகள்
– முழுத் தொகுப்பு
சு. ராவின் முழு சிறுகதைகளையும் உள்ளடக்கிய ஒரு நிறைவான தொகுதி இது. 1952 இல் இருந்து 2004 வரை எழுதப்பட்ட 72 சிறுகதைகளையும் ஒரு சேர வாசிக்கின்ற போது சு.ரா என்கிற அந்த பெரிய எழுத்தாளனை நாம் தரிசிக்க முடியும்.

சு.ரா வின் சிறுகதைகள் வாசிப்பினை ஒரு இனிய அனுபவமாக்கும் அதே நேரத்தில் வாழ்வின் பாடங்களையும் நமக்கு முன் வைக்கிறது.செறிவும் நேர்த்தியும் கொண்ட மொழியோடு உறவு கொள்ளும் சுகத்தினை அளிக்கும் அதே நேரம் தேடலின் கனத்தையும் நம்மீது கவியச் செய்து விடுகிறது. தமிழ் நாவல் வரலாற்றிலேயே அதிக விவாதங்களை உருவாக்கியுள்ள ஜே.ஜே. சில குறிப்புகள் நாவலை இவர் எழுதி இருந்தாலும் , இவரது சிறுகதைகளே இவரை தமிழின் முக்கிய படைப்பாளிகளில் ஒருவரான அடையாளத்தினைத் தேடித் தந்தது. நிறைய வாசித்து, தேடி குறைவாக எழுதிய படைப்பாளி இவர். இதனால் இவரது கதைகள் தனி முத்திரைக்குரியது.
—————————————————————
*புதுமைப்பித்தன் வரலாறு
தொ.மு.சி. ரகுநாதன்
, ஆ. இரா. வேங்கடாசலபதி

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கியத் தின் முக்கியப் படைப்பாளர்களுள் ஒருவரான புதுமைப்பித்தனின் வாழ்க்கைக் கதை இது. ஒரு நாவலுக்குரிய விறுவிறுப்பும் சுவையும் கொண்ட இந்த வரலாற்றைப் படித்த வாசகர்கள் புதுமைப்பித்தனின் ஆவி ரகுநாதனிடம் குடிகொண்டுவிட்டது என்று நம்பிவிட்டனர் என்று பாராட்டியிருக்கிறார் சுந்தர ராமசாமி.
1951இல் முதலில் வெளியான இந்நூலுக்கு விரிவான முன்னுரை, ஆய்வுக் குறிப்புகள், படங்களுடன் மறுபதிப்பைத் தயாரித்திருக்கிறார் புதுமைப்பித்தன் படைப்புகளுக்குச் செம்பதிப்புகளை உருவாக்கியுள்ள ஆ.இரா. வேங்கடாசலபதி.

13584769_1218489471494380_2084333092354807705_o

————————————————————————–

*வன்முறையில்லா வகுப்பறை

ஆயிஷா நடராஜன்

லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வழிகாட்டியாக இந்நூல் வெளிவந்துள்ளது. கல்வியாளர்கள் வழியே தண்டனையில்லா பயிற்றுமுறை, வன்முறையில்லா வகுப்பறை நோக்கி நம் குழந்தைகளை அழைத்து செல்கிறது இந்நூல்.

*பெரியார்: ஆகஸ்ட் 15

எஸ்.வி.ராஜதுரை

எஸ்.வி.ராஜதுரையும் வ.கீதாவும் இணையாசிரியர்களாக எழுதிய “பெரியார் சுயமரியாதை சமதர்மம்” என்ற நூலின் தொடர்ச்சியாக periyarவெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும் பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறையை பேசுகிறது.

*இந்திய வரலாற்றில் பகவத்கீதை

பிரேம்நாத் பசாஸ் (ஆசிரியர்), கே. சுப்பிரமணியன் (தமிழில்)

இந்நாள் வரையில், பகவத் கீதையையும் இந்து மதத்தையும் இந்த அளவுக்கு விரிவாகவும் ஆழமாகவும் விமர்சிக்கின்ற நூல் இது ஒன்றுதான் என்பது இந்தியவியலாளர்களின் ஒருமித்த கருத்து

*ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

மொழியாக்கம்: ரா.கிருஷ்ணையா, இரா.பாஸ்கரன், நா.தர்மராஜன்

ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி மாஸ்கோவில் 1821ல் பிறந்து ஏழு குழந்தைகளுள் ஒருவராய் வளர்ந்தார்.இராணுவப் பொறியாளர் பள்ளியில் படித்து முடித்ததும் தஸ்த்யேவ்ஸ்கி இராணுவ உத்தியோகத்தில் சேராமல், இலக்கியத் துறையில் முழு மூச்சுடன் ஈடுபட்டார்.

 *வேர்களின் பேச்சு (முதல் 75 கதைகள்)

தோப்பில் முஹம்மது மீரான்

சாகித்ய அகாடமி பரிசு பெற்ற எழுத்தாளாரான தோப்பில் முஹம்மது மீரான் கடந்த நாற்பதாண்டுக் காலமாக எழுதிய சிறுகதைகளின் தொகுப்பு இது.1968- 2009 வரை பல இதழ்களில் வெளியான என்னுடைய சிறுதைகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பு இது. 1968இல் வெளியான நரகம் பூமியில் என்ற முதல் கதையும் 2009இல் வெளியான தலையில் துண்டு கட்டிய பெண் என்ற கதையும் இதில் அடங்கும். மதி-நா பிறை இன்னும் சில இதழ்களில் வெளியான ஆரம்பகாலக் கதைகள் சில தேடியும் கிடைக்கவில்லை. எந்த ஆண்டு எந்தெந்த இதழ்களில் வெளியாயின என்பது பற்றிய நினைவும் இல்லை.
*புலரியின் முத்தங்கள்
– மனுஷ்யபுத்திரன்

மனுஷ்ய புத்திரனின் இப்புதிய தொகுப்பில் உள்ள கவிதைகள் நவீன கவிதைக்குப் புதிய சாரத்தை அளிக்கின்றன. கவிதையின் பழகிய தடங்களை மாற்றியமைக்கின்றன. இந்த யுகத்தின் அன்பை, காதலை, துரோகத்தை, வன்மத்தை எழுதுவது ஒரு சிலந்தி வலையைப் பிரிப்பது போன்றது. இந்த சவாலை இக்கவிதைகள் வெகு நுட்பமாகவும் நேர்த்தியாகவும் எதிர்கொள்கின்றன. எந்த நேரமும் துளிர்க்கக் காத்திருக்கும் கண்ணீர் துளியின் ததும்பலிலிருந்து எக்கணமும் உருவப்பட காத்திருக்கும் கொலைவாளின் மௌனத்திலிருந்தும் ஒரு சிறிய முத்தத்தில் நீளும் பெரும் யுகத்திலிருந்தும் இக்கவிதைகள் பேசுகின்றன.
——————————————————–
*தெற்குவாசல் : கடல் நடுவே ஒரு களம்
பிரமிள்

இலங்கைத் திருகோணமலையில் பிறந்திருந்தாலும் தமிழக எழுத்தாளராகவே வாழ்ந்து எழுதி மறைந்தவர் பிரமிள். அவரது வாழ்விலும் படைப்பிலும் ‘நாஸ்டால்ஜியா’ வெளிப்பட்டட்ஜி இல்லை என்றாலும் அவரது கவிதைகளிலும் கதைகளிலும் கட்டுரைகளிலும் இலங்கை பற்றிய விசாரம், பெருமளவுக்கு இருந்தே வந்துள்ளது. இத்தொக்குப்பில், பிரமிளின் மொத்த எழுத்துக்களில் இருந்து இலங்கை சம்பந்தப்பட்ட படைப்புகள் மட்டும் ஆய்வுப் பார்வையுடன் தேர்ந்தெடுத்துத் தொகுத்துத் தரப்பட்டுள்ளன.
—————————————————————
*டாக்டர் அம்பேத்கர் வாழ்க்கை வரலாறு
ஏ.எஸ்.கே

தாழ்த்தப்பட்ட மக்களின் ஈடுஇணையற்ற ஜோதியாக அம்பேத்கர் விளங்கினார்.அம்பேத்கர்தான் தாழ்த்தப்பட்ட மக்கள்.தாழ்த்தப்பட்ட மக்கள் தான் அம்பேத்கர் என்ற உண்மை இந்திய உபகண்டத்தில் எல்லா அரசியல் கட்சிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது..
—————————————————————
*புத்ரmanus
லா.ச. ராமாமிருதம்

கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவ மும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம்.

நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார்.
வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
———————————————————————————–
*மீனின் சிறகுகள்( நாவல்)
தஞ்சை பிரகாஷ்

உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள்.
—————————————————————–
*செவ்வி
– தொ.பரமசிவன்

”பெரியார் தோற்றுப் போகவில்லை என்பது மட்டுமல்ல. பெரியாரைத் தோற்கடிக்க முடியாது. ஏனென்றால் அவர் வாக்கு வங்கி அரசியலோடு துளிக்கூட தொடர்பு இல்லாதவர். அவர் மனித குலத்தின் விடுதலைக்காக இந்தியாவின் தென்பகுதியில் முன் வைத்தது சாதி ஒழிப்பு என்பதைத்தான்… எனவே அவரை மனித குலத்தின் விடுதலையைத் தேடியவர் என்று சொல்ல முடியுமே தவிர, தமிழர்களின் விடுதலையைத் தேடியவர் என்றுகூட சொல்ல முடியாது”.

பெரியார் மீதான எதிர்மறை விமர்சனங்கள் வருவதற்குக் காரணம் நம் கல்வியறிவின் வக்கிரங்கள்தான். பெரியாரைக் கொண்டாடியது அறிவுலகத்துக்கு ஒரு அடையாளம் என்று கருதப்பட்டதுபோல இந்தப் பத்தாண்டுகளில் பெரியாரைப் பழிப்பது என்பது அறிவுலகத்துக்கு அடையாளம் ஆகிப்போய்விட்டது.

——————————————————————————————-

svr*எழுத்துகளை எரித்தல் கருத்துகளை ஒடுக்குதல்

எஸ்.வி.ராஜதுரை

தேசிய சர்வதேச ஊடக அரசியல் எதுவாக இருந்தாலும் தமது கருத்துகளை மார்க்ஸியக் கண்ணோட்டத்துடனும் அம்பேத்கர். பெரியார் பார்வையின் வழியாகவும் பட்டுக் கத்தரித்தாற் போல முன்வைப்பவர்.

  * இயற்பியலின் கதை ஈர்ப்பு விசை முதல் ஈர்ப்பு அலைகள் வரை

ஆயிஷா இரா.நடராசன்

சிறார் இலக்கியம், கல்வியியல், அறிவியல் தமிழ் இலக்கியங்களில் நாடறிந்த எழுத்தாளரான ஆயிஷா இரா.நடராசன், எல்லா அறிவியலுக்கும் அடிப்டை அறிவியல் எனப்படும் இயற்பியல் வரலாறு குறித்து ஒரு பருந்துப் பார்வையை வழங்குகின்றார். நியூட்டன் காலத்து ‘ஈர்ப்புவிசை’ முதல் ‘செர்ன்’(சிணிஸிழி) காலத்து ‘ஈர்ப்பு அலைகள்’ வரையிலான வளர்ச்சியின் வரலாற்றை ஒரு புனைவு கதை போல் வாசிப்பு இன்பத்தோடு அறிந்து கொள்ள உதவும் நூல்.

 *உழைப்பை ஒழிப்போம்

பால் லாஃபார்க் , பாப் ப்ளாக் -தமிழில்: வளர்மதி

இந்நூல் பால் லாஃபார்க், பாப் ப்ளாக் ஆகியோர் எழுதிய இரு கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு. இவ்விரு கட்டுரைகளும் உழைப்பு, சோம்பேறித்தனம் குறித்த மரபுவழிப்பட்ட புரிதலை உடைத்து மாற்றுச் சிந்தனைகளைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறது.

*பஷீர் நாவல்கள் – முழுத் தொகுப்பு
தமிழில்: குளச்சல் மு. யூசுப், சுகுமாரன்

வைக்கம் முகம்மது பஷீர் உலகை அதன் அனைத்துக் குறைகளோடும் நேசித்த அபூர்வமான கலைஞர்களுள் ஒருவர். தீமையைச் சிருஷ்டியின் இன்றியமையாத இயங்கு பகுதி என்ற அவரது புரிதலாலும் ஒதுக்கப்பட்டவர்களோடு குறிப்பாக கோமாளிகள், மடையர்கள், திருடர்கள், குற்றவாளிகள் என்று உலகம் கணிக்கும் மனிதர்களோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்வதாலும் இவ்வகையினரைத் தன்னுடைய மந்திர எழுத்தால் அவர்களை நாம் விரும்பும் பாத்திரங்களாக மாற்றி ,மலையாள இலக்கியத்தின் வரைபடத்தைப் பல பத்தாண்டுகளுக்கு முன்பே மாற்றி அமைக்க பஷீரால் முடிந்தது.

வைக்கம் முகம்மது பஷீரின் பால்யகால சகி, சப்தங்கள், எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது, மூணுசீட்டு விளையாட்டுக்காரனின் 13415491_1208859415790719_2044062637523532643_oமகள், ஆனைவாரியும் பொன்குருசும், பாத்துமாவின் ஆடு, மதில்கள், ஆகிய 7 நாவல்களின் மொத்த தொகுப்பு இது.

————————————————————————–
*தாவோ தே ஜிங்
(தத்துவம்)
லாவோ ட்சு (தமிழில்: சி. மணி)

சீனத் தத்துவ ஞாநி லாவோ ட்சு தன்னுடைய ‘தாவோ தே ஜிங்’ நூலில் எழுதியது இது:

“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன
இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன
ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது
ஒன்பது மாடிக் கோபுரம்
சிறு மண் குவியலிலிருந்து எழும்புகிறது
ஆயிரம் மைல் பயணம்
காலடி நிலத்திலிருந்து தொடங்குகிறது
எனவே, பெரிய விஷயங்களை
ஞானி ஒருபோதும் செய்ய முயல்வதில்லை
அதனாலேயே, பெரிய விஷயங்களை
அவன் எப்போதும் சாதிக்க முடிகிறது!”

———————————————————————————-

*வெக்கை– ( நாவல்)
பூமணி

சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் ‘வெக்கை’ ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான
பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஒர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப்
பொருளாதாரக் காரணிகளைப் பற்றியும் ஆராயும் முனைப்புக்கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும்.
—————————————————————————-

*பிறகு -( நாவல்)
பூமணி

பிறகு’ கரிசல் காட்டின் எளிய கிராமம் ஒன்றைப் பற்றிய சுதந்திரத்திற்குப் பிந்தைய கால் நூற்றாண்டுக் கால – சித்திரம். பல நுட்பமான அடுக்குகளைக்
கொண்ட இந்நாவலின் கதையாடல் மொழி வாசகனை அந்தக் கிராமத்தின் எல்லைகளைக் கடந்து அழைத்துச் செல்கிறது. வறுமை சூழ்ந்த இந்தியக் கிராமங்களின்
பொது அடையாளம் குறித்த முப்பரிமாணச் சித்திரமொன்றை வரைந்து காட்டுகிறது.

————————————————————————————————–

*சாதியை அழித்தொழித்தல்
-அம்பேத்கார்
.

விரிவான ஆய்வுக்குறிப்புகளுடன் வெளிவந்துள்ள இப்பதிப்பில் , அருந்ததி ராயின் நீண்ட முன்னுரை மிக முக்கியத்துவம் பெறுகிறது . நவீன சமூகத்தில் சாதி இன்னும் எவ்வாறு வாழ்ந்து கொண்டிருக்கிறது என்பதனையும் அம்பேத்காருக்கும் காந்திக்குமான முரண்கள் அடங்கா அதிர்வுகளாக முழங்கிக் கொண்டிருக்கின்றன.அம்பேத்காரின் சிந்தனைகளுக்கு ராய் புத்துயிர் பாய்ச்சுவதோடு ஒடுக்கப்படும் மக்களின் விடுதலையே சமத்துவ சமுதாயத்தினை உருவாக்கும் என்பதனை அம்பேத்காரை முன் நிறுத்தி நமக்கு வரலாற்றையும் உண்மையையும் காட்டுகிறார். இந்த நூலை ஆங்கிலத்திலிருந்து தமிழில் , பிரேமா ரேவதி செம்மையாக மொழிபெயர்த்துள்ளார்.

————————————————————————————–

*நறுமணம்
-இமயம்

இந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான கதைகள் பெண்களின் வாழ்க்கையை மையப்படுத்துகின்றன.புதிய திழில் நுட்பம் கண்ணுக்கு தெரியும் பல நன்மைகளைச் செய்யும் அதே நேரத்தில்,கண்ணுக்கு சட்டென்று புலப்படாத தளத்தில் உறவுகளையும் மதிப்பீடுகளையும் அது தகர்க்கிறது என்பதையும்,இதில் பெரும்பாலும் பாதிக்கப்படுவது பெண்கள்தான் என்பதையும் இவர் கதைகள் நுட்பமாக சித்தரிக்கின்றன.

—————————————————————————————————————————–

20160601_101501

*தமிழர் மானிடவியல்
– பக்தவத்சல பாரதி

மானிடவியல் என்பது புத்தகவாசிப்பு, மண்வாசிப்பு, மனிதவாசிப்பு ஆகியமூன்றும் சேர்ந்ததாகும். தமிழில் வந்துள்ள எழுத்துக்கள் மனிதவாசிப்பினை நிறைவு செய்யவில்லை. பக்தவச்சல பாரதியின் எழுத்துக்கள் அந்தக்குறையை நிறைவு செய்கின்றன.  பண்பாடு அனைத்தையும் சொல்வதே ‘தமிழர் மானிடவியல்’.

—————————————————————–

*எஸ்.ராமகிருஷ்ணனின் மூன்று சிறுகதைத் தொகுப்புகளும் , இடக்கை நாவலும்

எஸ்.ராமகிருஷ்ணனின் இதுவரையான அனைத்து சிறுகதைகளையும் தொகுத்த மூன்று பெரும் தொகுப்புகள் இவை. முதல் தொகுதியில் 9013415585_1208240195852641_4528873833441863761_o சிறுகதைகளும், இரண்டாம் தொகுதியில் 89 சிறுகதைகளும் , மூன்றாவது தொகுதியில் 51 சிறுகதைகளும் உள்ளன. எஸ்.ராமகிருஷ்ணனின் படைப்புலகத்தினை முழுவதுமாகப் புரிந்து கொள்ள இத் தொகுப்புகள் நமக்கு புதிய வாசலைத் திறக்கிறது.இவரது எழுத்துக்கள் மனித வாழ்வின் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையிலும் பெருகிடும் வாழ்வின் மகத்துவங்களை அடையாளம் காட்டுபவை. நடப்பியல் கதைகள், உருவகக் கதைகள், வரலாற்று மீள்புனைவுகள், மாய யதார்த்தவாத கதைகள், மிகைபுனைவுகள் என புனைவின் அனைத்து சாத்தியங்களையும் நிகழ்த்திக் காட்டும் ஒரு எழுத்தாளர் இவர். காலனியம் ஏற்படுத்திய மோசமான விளைவுகளை தொடர்ந்தும் எழுதும் படைப்பாளி. இவரது கதைகள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

*இடக்கை – நாவல்
எஸ்.ராமகிருஷ்ணன்

வரலாறு என்பது எப்போதும் நீதி மறுக்கப்பட்டவர்களின் வரலாறாக, நீதிக்கு காத்திருப்போரின் வரலாறாகத்தான் இருந்திருக்கிறது. பேரரசுகளின் வீழ்ச்சியின் ஊடே நிகழும் எளிய மனிதர்களின் பேரவலத்தினை இந்த நாவல் ஆழமாகச் சித்தரிக்கிறது. வரலாற்றின் நிழல்களில் ஒளிந்திருக்கும் மாய யதார்த்தத்தினை முற்றிலும் புதிய தளத்தில் எஸ்.ராமகிருஷ்ணன் நகர்த்திச் செல்கிறார்.
————————————————————————————-

 

*ஊதாநிறச் செம்பருத்தி ( நாவல்)
-தமிழில்- பிரேம்

நைஜீரிய பெண் எழுத்தாளர் சிமாமந்தா எங்கோசி அடிச்சி.

எளிய பெண் மொழியில் கலைவுறும் குடும்ப வன்முறை,குடும்ப வன்முறை குறித்த நுணுக்கமான விவரிப்புகளை பதின்வயது சிறுமி காம்பிளியின் மூலமாக கூறிச்செல்கிறது இந்நாவல்.

சிமாமந்தாவின் கதையான ஊதாநிறச் செம்பருத்தி சமயங்கள், மரபுகள், தொமங்கள், மொழிகள் என அனைத்திற்குள்ளும் பெண்மையின் இடமற்ற இடத்தைச் சொல்லிச் செல்கிறது. இடம் மறுக்கப்பட்ட இடத்தில் தனக்கான இடத்தை உருவாக்குவதுதான் பெண்ணியச் செயல்பாடு எனில் அது எதிர்காலத்தை மட்டுமின்றி, இதுவரையான காலங்களையும் தன்வயப்படுத்த வேண்டும்
_________________________________________

*முதலாளித்துவம் பற்றிப் பத்துப் பாடங்கள்
ஒரு மாறுபட்ட பொருளியல் பாட நூல்13418546_1208214635855197_8123820722747624657_o
(கருத்துப் படங்களுடன்)
மிஷேல் உய்ஸோன்
ஃப்ரெஞ்சிலிருந்து தமிழில்:
எஸ்.ஆர். கிருஷ்ணமூர்த்தி

இன்றைய முதலாளித்துவம் நெருக்கடியில் இருப்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. அந்தப் பொருளியல் அமைப்பு எப்படிப்பட்டது? அது தொன்றுதொட்டு வளர்ந்து வந்திருக்கிறதா? அது எவ்வாறு செயல்படுகிறது?
பத்து அத்தியாயங்களில் தெளிவாகவும், படிப்பவர்களுக்குப் புரியும் படியாகவும், மிஷேல் உய்ஸோன் விமர்சனத்தோடு கூடிய பாடப்புத்தகம் ஒன்றைப் படைத்திருக்கிறார்.
நோயைக் கண்டறிதலுக்கு அப்பால் சென்று, ஒரு பொருளியல் அமைப்பு என்ற வகையில் முதலாளித்துவத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவ தென்பது இப்போதுள்ள சூழலில் மிகவும் முக்கியமான கடமைகளில் ஒன்றாகும்; அதைச் செய்யும் நூல் இது.

———————————————————————————–

*புத்ர
லா.ச. ராமாமிருதம்

கவிதைக்குரிய நுட்பங்களுடன் தன் மொழியை வாழ்க்கையின் மீது கவியச் செய்கிறார் லா.ச. ராமாமிருதம். சம்பவங்களின் தொகுப்பிலிருந்து ஓர் ஆழ்ந்த அக உலகத்தைச் சிருஷ்டிக்கிறார். ஆழ்மனத்தின் குரலை ஓர் அசரீரியைப் போல் ஒலிக்கச்செய்ய லா.ச.ரா. கவிமொழியைத்தான் தேர்ந்தெடுக்கிறார். யதார்த்த நடையும் கவித்துவ மும் சிருஷ்டித்த குழந்தை ‘புத்ர’ எனலாம்.

நூறு ஆண்டுகளாகத் தொடரும் சாபம்தான் நாவலின் மையம். ‘புத்ர’ ஒரு வகையில் அவரது முன்னோர்களின் சரித்திரம் எனலாம். கதை சொல்வது மட்டும் அவரது லட்சியமல்ல. மனித மனத்தின் கோபங்களை, தாபங்களை, சஞ்சலங்களை இடையறாது தொடரும் இயக்கத்தின் பிம்பம் என நிறுவ முயல்கிறார்.
வெளிவந்து ஐம்பது ஆண்டுகளைக் கடந்துவிட்ட ‘புத்ர’ தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
——————————————————————————————-
*மீனின் சிறகுகள்
தஞ்சை பிரகாஷ்

உறவுகளின் சிக்கல்களில் அல்லாடித் தத்தளித்து, காமத்தை வென்றெடுக்க . இயலாமல் அலையில் சுழலும் சருகாகி, தனக்கானதைக் கண்டடைகிற மனிதர்களின் சுயம், பரந்த மணல்வெளியின் சின்னஞ்சிறு துகள்களைப்போல் இக்கதைகளில் நிறைந்து கிடக்கிறது. ப்ரகாஷ் சிறந்த கதைசொல்லி. நேரடியாகப் பேசும் தன்மை கொண்டவை அவரது கதைகள். ப்ரகாஷ் கதைகளைப் பற்றிச் சொல்வதைவிட அதை வாசித்து உணரச் செய்வதே இத்தொகுப்பின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

———————————————————————————————————————

*பார்த்தீனியம்- தமிழ்நதி
கடந்த முப்பது ஆண்டுகால ஈழத்தமிழ் வாழ்வை துல்லியமாக சித்தரித்து, எளிய மொழியில் நம்முன் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் இந்த நாவலில் தமிழ் நதி. யுத்தகாலப் படைப்புகளில் இப்பிரதியும் முக்கியமாகிறது.1983ம் ஆண்டு தொடக்கம் 1990ம் ஆண்டு வரையான காலத்தினை பேசுகிறது. அமைதிப்படை என்ற பெயரில் உள் நுழைந்த இந்தியப்படை ஈழமண்ணில் ஆடிய கோரத்தாண்டவத்தினை விரிவாகப் பேசும் பிரதி இது. “நாவல் எழுதுவதென்பது நிகழ்வாழ்விற்கு சமாந்திரமாக இன்னொரு வாழ்வினை வாழ்தலாகும். போர் நடந்த, நடக்கும் நிலத்தின் காயங்களை எழுதுகையில் ,காயத்தின் பொருக்கு இளகிக் குருதி பீறிடுவது தவிர்க்கவியலாதது. இதை எழுதத் தொடங்கிய போது இருந்த ஆளாக முடித்த போது இருக்கவில்லை” என்கிறார் தமிழ்நதி.

*கொழுத்தாடு பிடிப்பேன்
-அ. முத்துலிங்கத்தின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள்20160528_173737 (1)

பல்வேறு கலாசாரச் சூழல்களின் ஊடாக நிகழும் இவரது கதைகளின் ஆதாரமான உணர்வு அங்கதமாகும். எனினும் அதனடியில் விலக்க முடியாத நிழல் போல மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் அழியா சித்திரமாய் விரவிக் கிடக்கின்றன. வெவ்வேறு பிரதேசங்களில் விதவிதமான பண்பாட்டுச் சூழலில் கிடந்துழலும் மனிதத் தொகையின் வினோதமான வாழ்வியல் சித்திரங்களால் ஆனதோரு அழகிய கம்பளமாக இத்தொகுப்பு வாசகர் முன்னுள்ளது.

*ஒ நாய் குலச்சின்னம்
– ஜியாங் ரோங் , தமிழில் சி.மோகன்
2004ம் ஆண்டு சீன மொழியில் வெளியான இந்த நாவல் , அதற்கடுத்த இரண்டு ஆண்டுகளில் பல இலட்சம் வாசகர்களால் வாசிக்கப்பட்டது.மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் மகத்தான நாகரீயம், நவீனத்துவத்தின் வன்முறைத் தாக்குதலால் மறைந்து போன வரலாற்றை பதிவு செய்கிறது.இங்கு புல்லும் மேய்ச்சல் நிலமும்தான் பெரிய உயிர்.மற்றவை எல்லாம் சிறிய உயிர்கள்தான். சீனா கலாசாரப் புரட்சி பற்றிய வாசிப்பில் இன்னொரு பக்கத்தினை இந்த நாவல் நமக்கு நமக்கு காட்டுகிறது.

*அஸ்தினாபுரம்
– ஜோ டி குருஸ்
ஆழி சூழ் உலகு, கொற்கை நாவல்களின் வழியாக தமிழில் கவனம் பெற்ற படைப்பாளி ஜோ டி குருஸின் மூன்றாவது நாவல் இது.கடல் சார்ந்த வாழ்வை சித்தரிக்கும் இந்தப் படைப்பு மனிதர்களின் அகத்தினை நம்முன் கொண்டு வந்து காட்சிப்படுத்துகிறது. அற எழுச்சியுடன் வாழ முற்படும் ஒரு மனிதன் இந்த மண்ணில் எவ்வாறு கசக்கி எறியப்படுகிறான் என்பதனை காட்டுகிறது. சமூகத்தில் இன்னும் அறம் தழைத்தோங்கும் சாத்தியம் இருக்கிறது என்பதனை மெய்ப்படுத்தும் பிரதியாக இந்த நாவல் நம்முன் இருக்கிறது.

*ஒரு கூர்வாளின் நிழலில்…
தமிழினியின் தன் வரலாறு

தமிழினியின் எழுத்து சாட்சியமான இந்த நூல் ,ஈழத்தமிழரின் போராட்ட வரலாற்றில் ஒரு முக்கியமான ஆவணப்பதிவு.அவரது போராட்ட அனுபவங்களும் சிறைத் தடுப்பு ,அதன் பின்னான புனர்வாழ்வு அனுபவங்களுமான எழுத்து இதில் உள்ளது. விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தனது பதின்ம வயதில் இணைந்து, கிட்டத்தட்ட 20 வருடங்கள் அந்த அமைப்பில் பணி செய்து, முக்கிய பொறுப்பு வகித்து , பெரும் துன்பத்தினை எதிர் கொண்டு உயிர் மீண்ட அந்த ஆன்மா , நோயின் கொடுமையால் மரணத்தினை எதிர் கொண்டது. தற்கொலையை வெறுத்ததால் எதிரியிடம் சரணடைந்த அவரை, முள்ளி வாய்க்காலின் பின்னான சூழல் பல்வேறு விசயங்களை உணர்த்திய போது எழுந்த உணர்வின் வலியை தன் வாழ்வை முன் நிறுத்தி பதிவு செய்துள்ளார். பல்வேறு வகைகளில் பாதிப்புக்குள்ளான சமூக, அரசியல் செயற்பாட்டாளரான ஒரு பெண்ணின் கதை இது என்பதால் மேலும் இந்த நூல் முக்கியத்துவமாகிறது.

*அமெரிக்கப் பேரரசின் ரகசிய வரலாறு
– ஜான் பெர்கின்ஸ்
ஒரு பொருளாதார அடியாள் நூலின் ஆசிரியராக தமிழ் உலகுக்கு அறிமுகமான இந்த நூலாசிரியரின் இரண்டாவது நூல் இது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஏற்பட்ட உலகப் புவிசார் அரசியல் அனுபவங்கள் மூலம் அமெரிக்கப் பேரரசு என்கிற , உலக எதோச்சதிகாரத்தினை அம்பலப்படுத்துகிறது. உலகத்தில் தோற்கடிக்கப்பட்ட பல போரட்டங்களை குறித்துரைக்கிறது. அமெரிக்காவின் ஏவலாளர்களான பொருளாதார அடியாட்கள், அதன் ரகசிய உளவாளிகள், உலகளவிலான ஊழல் குறித்த உண்மைகள் என அமெரிக்கப் பேரரசின் முகம் இந்த நூலில் தோலுரிக்கப்படுகிறது. ஒடுக்கப்படும் மக்கள் மீதான அதிகாரத்தின் கொடூர கரத்தை எதிர்ப்போர் அனைவரும் வாசிக்க வேண்டிய விரிந்த அறிவுதரும் பிரதி இது.tamizini

 

*ஈழத்தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்
தெ. வெற்றிச் செல்வன்
புலம்பெயர்க்கப்பட்டு பல திசைகளில் அலையும் ஈழத்தமிழ் படைப்புகளைப் பற்றிய ஒரு ஆய்வு நூல் இது. ஈழத்தமிழ் இலக்கியத்தின் ஒரு முக்கிய பகுதியான புலம்பெயர் இலக்கியம் பற்றிய ஒரு விரிந்த தேடலை வேண்டுவோருக்கு தேவையான தகவல்கள், படைப்புசார் பார்வைகள் இந்த நூலில் உள்ளது.

 

*கு.அழகிரிசாமி சிறுகதைகள்
பதிப்பாசிரியர் – பழ.அதியமான்
கு.அழகிரிசாமி புதுமைப்பித்தன் பரம்பரை எழுத்தாளர். சிறுகதை, கட்டுரை, கவிதை, நாடகம், நாவல், மொழிபெயர்ப்பு மற்றும் பதிப்பு என பல்வேறு தளங்களில் இயங்கியவர். தமிழில் சிறுகதைக்கு , சாகித்திய அகதாமி விருது பெற்ற முதல் எழுத்தாளர். எளிய நடை, சித்திரிப்பின் லாவகம், உள்ளோடும் துயர இழை, மிதக்கும் நகைச்சுவை, கமழும் மண்ணின் மணம் என அழகுகள் கூடிவந்த கலை அழகிரிசாமியின் எழுத்துக்கள். அவரின் 105 சிறுகதைகள் கொண்ட பெருந் தொகுப்பு இது.

 

162. லேவ் தல்ஸ்தோய் (சிறுகதைகளும் குறுநாவல்களும்)
லேவ் தல்ஸ்தோய்
தமிழில்:தர்மராஜன்

தல்ஸ்தோய் மரணமடைவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பு அன்தோன் சேகவ் பின்வருமாறு எழுதினார்: “……..தல்ஸ்தோய் மரணமடைந்துவிட்டால் என்னுடைய வாழ்க்கையில் மாபெரும் சூன்யம் ஏற்பட்டுவிடும்….

———————

*யூத பயங்கரவாதிகளின் இரகசிய அறிக்கை

செர்கி நிலஸ்

ஒரு நூற்றாண்டுக்கும் முன் அம்பலமான சதி ஆவணத்தின் தமிழாக்கம்.சோவியத் ராஷ்யாவில், இந்த புத்தகத்தை வைத்திருப்பது மரண தண்டனைக்குரிய குற்றம், ஏன் ?  21ம் நுாற்றாண்டின் குழப்பம் வாய்ந்த, அரசியல் சூழ்நிலையைப் பற்றி, தெளிவாக அறிந்து கொள்ள உதவும் புத்தகங்களுள் முதன்மையானது, ‘புரோட்டோகால்ஸ்’ எனப்படும், யூத பயங்கரவாதிகளின் ரகசிய அறிக்கை புத்தகம்

 

 *சொல் என்றொரு சொல்

 ரமேஷ் பிரேதன்

எல்லா திசைகளிலும் கதைகளால் நிரம்பி வழியும் தமிழ்ப் பரப்பு. கதைகளினூடாக எல்லா பரப்புகளிலும் பரவிட்ட தமிழ் மனம். இரண்டும் சந்திக்கும் தளத்தில் மூண்டுக் கிளைக்கிறது தமிழ் நினைவு.

*கோயபல்ஸ் சிரிக்கும் குஜராத்

மா.உத்திரகுமார்

குஜராத் வளர்ச்சி என்பது கட்டமைக்கப்பட்ட மாயை என்பதை அனில்குமார் குஜராத்துக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்து நிரூபிக்கிறார்.கல்வி,வேலைவாய்ப்பு,பாரம்பரிய தொழில் வளம்,மதச் சார்பின்மை ஆகியவைகளிலிருந்து சாமானிய குஜராத் மக்கள் எவ்வாறு நசுக்கப்பட்டார்கள் என்பதும்,பிரித்தாளும் சூழ்ச்சியால் பெண்கள்,சிறுபான்மையினர் எவ்வாறு மைய நீரோட்டத்திலிருந்து விலகப்பட்டனர் என்பதையும்,மனித வளக் குறியீட்டில் குஜராத் வெகுதூரம் பின் தங்கியுள்ளது என்பதை புள்ளி விவரங்களுடன்விவரிக்கிறார் அனில் குமார்.குஜராத்தின் சாதாரண மக்களைக் கவனத்தில் கொள்ளாமல் கார்ப்பரேட்டுகளின் அடிவருடிகளாக மோடியும்,பா.ஜ.க அரசும் செயல்பட்டதால் அடித்தட்டு மக்களின் பொருளாதாரம் முற்றிலும் தகர்க்கப்பெற்றதையும் இப்புத்தகம் விரிவாக நம்முடன் பேசுகிறது.

*அவன் பெயர் சொல்

ரமேஷ் பிரேதன்

இந்த நாவல் நவீனத்துவ எழுத்துக்களுடன் அறிமுகமுள்ளவர்களுக்கு ஆர்வமூட்டும் ஒரு படைப்பு.முன்னரே பிரேம்- ரமேஷ் பேரில் வெளிவந்த ‘புதைக்கப்பட்ட பிரதிகளும் எழுதப்பட்ட மனிதர்களும்’ ‘சொல் எனும் சொல்’ போன்ற நாவல்களின் கட்டமைப்பு கொண்டது இந்நாவல்.

ரமேஷ் பிரேதன் எழுதியிருக்கும் இந்நாவல் போன்றவற்றை ஜே.ஜே.சிலகுறிப்புகளில் இருந்து முன்னகர்ந்தவை என்று எடுத்துக்கொள்லலாம். இந்நாவல் எழுத்தாளன் ஒருவனின் கடிதங்கள் உரையாடல்கள் வழியாக துண்டுதுண்டாக உருவாகி வருகிறது. அவன் தனக்கென ஒரு பிம்பத்தை கட்டி எழுப்ப முனைகிறான்.

*நா.முத்துக்குமார் கவிதைகள்

நா.முத்துக்குமார்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டமும். சென்னைப் பல்கலைக் கழகத்தில் திரைப்பாடல் ஆய்விற்காக முனைவர் பட்டமும் பெற்றவர்.

*ஈராக் – நேற்றும் இன்றும்

ஜெயக்குமார் ஸ்ரீனிவாசன்

ஈராக்கில் வசிக்கும் ஒருவரால் நேரடியாகத் தமிழில் எழுதப்படும் புத்தகம் இது.பயணக்கட்டுரை போலவும் இல்லாமல்,ஆய்வுக்கட்டுரை போலவும் இல்லாமல்,இரண்டுக்கும் இடையேயான ஒரு பொதுப்பாதையில் இக்கட்டுரைகள் எழுதப்பட்டுள்ளன .ஈராக் என்றதுமே நமக்கு நினைவுக்கு வருவது பாலைவனமும் ரத்தமும் துப்பாக்கியும்தான்.இது ஈராக்கின் ஒரு பக்க முகம் மட்டுமே

*கீழைத் தீ (பின்-வெண்மணி) – நாவல்

சாதியும் வர்க்கமும் பின்னிப் பிணைந்த வரலாற்று வன்கொடுமை வெண்மணி . தமிழகத்தில் வெண்மணி என்கிற ஒற்றை வார்த்தை தரும் தாக்கத்தையும், எழுச்சியையும், தவிர்க்கவியலாதது போலவே, வெண்மணியைப் பற்றிப் பேசினால்… ‘கீழைத் தீ’ – பின் வெண்மணி நாவல் பற்றிப் பேசுவதையும் தவிர்க்க இயலாது என்பதே இப் படைப்பின் வெற்றி.இது எரிக்கப்பட்டதின் சாம்பல் வரலாறு மட்டுமல்ல. மாறாக, மீண்டெழுந்த மக்கள் மன்றம் எழுதிய தீர்ப்பின் வரலாறும்தான். இது ரத்தம் சிந்திய வரலாறு மட்டுமல்ல. மாறாக, வர்க்க எதிரியின் ரத்தத்தில் கை நனைத்த வரலாறும்தான்.

*ஆதிரை (நாவல்)– சயந்தன்

aathiஅதிகமான புனைவெழுத்தாளர்கள் ஈழத்தில் இருந்து உருவாகின்றார்கள். பெரும்பாலும் இவர்கள் எழுதுவது சாட்சி இலக்கிய வகைக்குள் அடங்கக்கூடியது. தங்களிடம் இருக்கும் கதைகளையும் வலிகளையும் எழுதிக்கடந்துவிடஇ அல்லது புனிதப்படுத்திவிட இடைவிடாது முயல்கிறார்கள்.

மனிதன் சாதாரணமாகக் கடந்து செல்லும் அகம் சார்ந்த உணர்வுகளின் தருணங்கள் மிகச்சிலவாக இருக்கும். இலக்கியம் அதன் வீச்சை இன்னும் அதிகரித்து அகத்தை கொந்தளிக்கவைக்கும். அதன் மூலம் கண்டடையும் வலிகள் அளிக்கும் அனுபவங்கள் இ எம்மை மீண்டும் புதிதாக வேறோர் கோணத்தில் பார்க்க வைக்கும். ஆதிரை அதில் வென்ற ஒன்று.ஆதிரை கண்டடைய வைக்கும் அனுபவங்கள் ஒரு வாழ்க்கையின் உயிர்ப்புள்ள தொகுப்பு..ஆதிரை ஒரு தமிழ் தரப்பு பெண்களின் வாழ்க்கையின் அவலங்களை அவர்கள் பார்வையில் முன்வைக்கும் கட்டற்ற கண்ணீர்.
மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த குடும்பங்களும் ஏற்கனவே வன்னியில் வறுமையில் வாழும் குடும்பங்களும் எதிர்கொள்ளும் கஸ்டங்கள் இவலிகள்இ இழப்புகள் மிகவும் துன்பமானவை. நாவலை வாசிப்பவர்களிடம் பல்வேறு உணர்வுகளையும் சிந்தனைகளையும் தூண்டலாம்.

. எரியும் பனிக்காடு (நாவல்)
பி. எச். டேனியல் (ஆசிரியர்), இரா. முருகவேள் (தமிழில்)

இந்நூல் கதை வடிவில் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரிந்தவர்களின் துன்பதுயரங்களை கண்முன் நிறுத்துவதோடு தொடக்க காலங்களில் அங்கிருந்த நிலைமைகள் குறித்த துல்லியமான விவரணைகளையும் தருகிறது.

———————-

. ஏகாதிபத்திய பண்பாடு
ஜேம்ஸ் பெட்ராஸ்

ஜேம்ஸ் பெட்ராஸ் அமெரிக்காவில் பிறந்து – வளர்ந்து நாற்பதாண்டு களுக்கும் மேலாக சமூகவியல் ஆசிரியராகப் பணியாற்றிவரும் உலகப் புகழ்பெற்ற மார்க்சிய அறிஞர். பாஸ்டனை சார்ந்த பெட்ராஸ், பர்கிலியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். நியூயார்க்கின் பிங்ஹாப்டன் பல்கலைக்கழகத்திலும், கனடாவின் ஹாலிஃபாக்ஸ் செயின்ட் மேரிஸ் பல்கலைக்கழகத்திலும் சமூகவியல் ஆசிரியராகப் பணியாற்றியவர். வளர்ச்சி ஆய்வுகள், லத்தின் அமெரிக்க, கரீபியன், மேற்காசிய நாடுகளின் விவகாரங்கள், புரட்சிகரஇயக்கங்கள், வர்க்கப் பகுப்பாய்வுகள், ஏகாதிபத்தியம், உலகமயமாக்கல், பண்பாடு போன்ற அம்சங்களில் தேர்ச்சி பெற்றவர். வயது 70க்கு மேல் என்றாலும் இப்போதும் தொடர்ந்து எழுதுகிறார்.லத்தீன் அமெரிக்க நாடுகளை சுற்றுகிறார். அங்குள்ள மக்கள் இயக்கங்களுக்கு உதவி வருகிறார். பெட்ராஸ் தன்னை ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்பு புரட்சி ஊழியராக, எழுத்தாளராக அறிவிக்கிறார்.
——————–

*அனல் ஹக்
வைக்கம் முகம்மது பஷீர் சிறுகதைகள்

எப்போதுமே பஷீரின் உலகம் வேறு. நம்மைத் தீண்டிய தென்றல்தான் அவரையும் தீண்டுகிறது.
ஆனாலும் அது அவரிடம் கொண்ட உறவு வேறு. நாம் பேசிய சொற்களும் ஒன்றே என்றாலும்,
அது அவரிடம் தந்த பொருள் வேறு. அதனால்தான் யதார்த்த வாழ்வை அவர் எழுதியபோது
அவரது படைப்புகள் மண்ணின் வாசனையோடு மனதின் மொழியையும் ஆன்ம உலகையும்
பிணைத்துக்கொண்டன.

*.ஈ.வெ.ரா. பெரியார், வாழ்வும் பணியும்
– என்.ராமகிருஷ்ணன்

பெரியார் என்கிற கட்டுக்கடங்காத தனிமனித சரிதையும், தமிழகத்தின் கலாசார வரலாறும் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன.இதனால்தான் தமிழகத்தில் ஒரு மாற்றம் வேண்டும் என்று விரும்பும் எவரும் பெரியாரை மறந்துவிட்டு சிந்திப்பது நடக்காத ஒன்றாகிறது.அவருடைய சமூகத் தாக்கத்தினை மறைப்பது , வரலாற்றை மறைப்பதற்கு ஒப்பானதாகும்.

*மறுபக்கம் –( நாவல்)
-பொன்னீலன்
இந்த நாவல் பல முகங்கள் கொண்டது, பல வாசிப்புகளுக்கான வாய்ப்பினை உருவாக்கவல்லது. எதிரும் புதிருமான கட்டமைப்பினால் வாசக சுதந்திரத்திற்கான இடத்தினை முன் நிறுத்தும் படைப்பு.

*சிவப்புச் சந்தை
– ஸ்காட் கார்னி
இந்த நூல் உலகெங்கும் பரவி உள்ள மனித உடல், மற்றும் உடல் உறுப்புகளை வைத்து நடக்கும் பெரும் லாபம் தரும் பாதாள உலகின் வணிகம் தொடர்பாக பேசுகிறது. புலனாய்வுப் பத்திரிகையாளரான இந்த நூலாசிரியர் ஐந்தாண்டுகள் இது தொடர்பில் களப்பணியாற்றி இந்த நூலை எழுதியுள்ளார். உலகில் உள்ள உடல் உறுப்பு தரகர்கள், எலும்புத் திருடர்கள், இரத்தப் பண்ணை நடாத்துவோர், குழந்தைகளைக் கடத்துவோர் தொடர்பில் , நமக்கு அச்சமூட்டும் உலகைக் காட்டுகிறார்.

 *உருமாற்றம்
-காஃப்கா
சமூக அதிகாரத்தின் அபத்தமான அமைப்பு சட்டங்களும் தம் கண்ணுக்குத் தெரியாத கைகளால் நவீன மனிதனை ஒடுக்கி, அவனைப் பதற்றத்திற்கும் குழப்பத்திற்கும் ஆளாக்குவதை பதிவு செய்யும் இவருடைய எழுத்தில் நாம் காணும் பாத்திரங்கள் காஃப்காவும் நாமும்தான். இந்த சூழ் நிலையை அனுபவிக்காத நவீன கால மனிதர்கள் மிகச் சொற்பம் என்ற உண்மையே அவருடைய எழுத்தின் பொதுமையை உணர்த்தும்.

*உனக்கு படிக்கத் தெரியாது
-கமலாலயன்
கறுப்பினத்தினருக்கு கல்வி மறுக்கப்பட்டிருந்த அமெரிக்கச் சமூகத்தில், உனக்கு படிக்கத் தெரியாது என நெஞ்சில் அடிவாங்கிய கறுப்பினக் குழந்தைகளுக்காக ஒரு பாடசாலையை உருவாக்கியே தீருவது என்ற ஆவேசத்துடன் ஒரு பெண் நடாத்தும் போராட்டம் இது. உலகெங்கும் கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களின் குரல் இது.

*டப்ளின் நகரத்தார்
– ஜேம்ஸ் ஜாய்ஸ்
இக்கதைகளின் மாந்தர்கள் அடையாளமற்றவர்கள், ஜன்னல் வழியே தெரியும் துண்டு வானமே முழு உலகம் என மயங்குபவர்கள். எதையும் எதிர்கொள்ளவோ ஏற்றுக் கொள்ளவோ தயங்குபவர்கள் மரணத்தினை எதிர்கொள்ளும் வரை. அயர்லாந்தின் மத்தியதர வாழ்க்கையை பிரதான களமாகக் கொண்ட இதில் உள்ள 15 கதைகளும் ஐரிஸ் தேசியவாதம் உச்சத்தில் இருந்த போது எழுதப்பட்டவை.

*எழுதும் கலை
-ஜெயமோகன்
நவீன இலக்கியத்தில் எழுத ஆரம்பிப்போர் வாசிக்க வேண்டிய சிறு நூல் இது. சிறுகதை,னாவல், கட்டுரை போன்ற எழுத்துகளுக்கான வாசலை நம்முன் எளிமையாக நிறுத்துகிறது. எழுதுவதற்கான பயிற்சியை வலியுறுத்துகிறது.எழுதுபவர்களுக்கு மட்டுமல்ல ,ஒரு நல்ல வாசிப்பாளனுக்கும் இதில் விசயம் உண்டு.

.*அன்னா கரீனினா
– லியோ லால்ஸ்டாய்
வாழ்க்கையைப் பிரதிபலிப்பது கலை என்கிறார் லியோ லால்ஸ்டாய். அன்னா கரீனினா என்கிற இந்த நாவல் உலக இலக்கியத்தில் மிக முக்கிய படைப்பாக இன்றுவரை போற்றப்படுகிறது. மனிதர்களின் மனப் போராட்டங்களை மிகத்துல்லியமாக விபரிக்கும் இந்த நாவல் ,உணர்ச்சிகரமான மனித வாழ்வை எழுதிச் செல்கிறது. லால்ஸ்டாயின் போரும் வாழ்வும் நாவல் வரலாற்றைக் கலைத்து எழுதப்பட்டது. ஆனால் சந்தோசமான முடிவினைக் கொண்டது. ஆனால் அன்னா கரீனினா ஒரு சோகச் சித்திரம்.எழுதப்பட்டு 150 ஆண்டுகள் கடந்துவிட்ட போதும் இன்றும் மீள மீள வாசிக்கப்படும் பிரதி இது.

 

194.*கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை
– தமிழாக்கமும் விளக்கக் குறிப்புகளும்..
எஸ்.வி. ராஜதுரை
உலக வரலாற்றில் முக்கியமான அரசியல் ஆவணம். மானுட வரலாற்றைப் பற்றிய புரட்சிகரமான கண்ணோட்டம். இன்றுள்ள உலகப் பொருளாதாரம், அரசியல் பற்றிய தொலை நோக்குப்பார்வை. தத்துவம்,வரலாறு, அரசியல், பொருளாதாரம், மானிடவியல் ,சமூகவியல், இலக்கியம் பற்றிய பல்வேறு பரிமாணங்கள் இதன் உள்ளடக்கம்.

 

195.*PEOPLES AND CULTURES OF
EARLY SRILANKA
– Dr. Siva Thiyagarajah
PEOPLES AND CULTURES OF EARLY SRILANKA is primarily a work of science. Although the subject essentially concerns the prehistory and proto-history of south asian peoples…. population genetics is the science for the twenty first century .for the first time a book dealing with the prehistory of south asian peoples …..

 

196. *PRIDE OF TAMIL CINEMA
1931- 2013
– G. Dhananjayan
1931- தொடக்கம் 2013ம் ஆண்டுவரையான முக்கிய தமிழ் திரைப்படங்கள், அதன் முக்கியத்துவம், அதில் பணியாற்றிய கலைஞர்களின் விபரங்கள் என பல்லாண்டு கால முயற்சியில் உருவான அரிய தொகுப்பு. தமிழ் சினிமாவின் முழு வரலாற்றையும் இத்தொகுப்பில் காணலாம்.

187.*ஈழத்து தமிழ் நாவல் இலக்கியம்
– நா.சுப்பிரமணியன்
ஈழத்தில் தமிழ் நாவல் இலக்கியம் தோன்றி வளர்ந்த வரலாற்றினை மதிப்பீடு செய்வதாக இந்த நூல் உள்ளது.1978ம் ஆண்டில் இந்த நூல் வெளிவந்து, பின்னர் 2008ம் ஆண்டுவரையான காலப்பகுதியையும் உள்ளடக்கி ஈழத்தினதும், புகலிட நாடுகளினதும் படைப்புகளையும் உள்வாங்கி திருத்தி , விரிவாக்கிய நூல் இது.( 2009ம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்பு) இக்காலப்பகுதி வரை வெளிவந்த பல நூறு நாவல்களினதும் நாவலாசிரியர்களினதும் விபரங்களுடன், நாவல்கள் பற்றிய விரிவான கருத்துக்களும், அதன் உள்ளடகங்களும் விபரிக்கப்பட்டுள்ளன.

188.*ஒடுக்கப்பட்டவர்களின்
விடுதலைக்கான கல்விமுறை
-பாவ்லோ ஃப்ரையிரே
தமிழில். இரா நடராசன்
இன்றைய பாடப் பொருள் மாணவர்களின் சமூக அறிவுக்கு வெளியில் உள்ளது. ஆசிரியர்களின் வேலையே இட்டு நிரப்புவதாகும். வங்கி சேமிப்புப் போல் நடக்கும் கல்விமுறையில் அறிவு என்பது தாங்கள் தரவு, தகவல்களை அதிகம் சேமித்து வைத்திருப்போர் என்பவரால் ஒன்றுமே தெரியாது என்று கருதப்படும் பலருக்கு , பரிசாக வழங்கப்படும் ஒன்றாய்த்தான் இன்றைய கல்வி முறை அமைந்துள்ளது. மாற்று கல்விமுறைமையை முன்வைக்கும் முக்கியமான நூல் இது.

 

189.*திராவிட இயக்கம்
புனைவும் உண்மையும்
– மலர்மன்னன்
திராவிட என்ற சொல்லின் பின்னால் உள்ள அரசியல் என்ன? நீர்த்துப் போய்விட்ட இந்த சொல்லுக்கு மீண்டும் மீண்டும் உயிர் கொடுக்கத் துடிப்பதேன்? என்கிற கேள்விகளுடன் இதன் ஆரம்பம் தொடங்கி, திராவிட அரசியலை தூக்கிப் பிடித்ததன் பின்னணி, நோக்கம், நிலைப்பாடு என்று அனைத்டையும் கட்டுடைக்கும் நூல் இது.

 

190. *1984
-ஜார்ஜ் ஆர்வல், தமிழில் க. நா.சு
ஜார்ஜ் ஆர்வல் பிரசார இலக்கியத்தில் சிறிதும் நம்பிக்கையற்றவர்.ஒரு தலைமுறையின் மனச்சாட்சி என்று அவரைச் சொல்லலாம். அந்த மனச்சாட்சியின் உத்வேகம் காரணமாகவே அவர் விலங்குப் பண்ணை நாவலையும் , 1984 நாவலையும் எழுதினார்.

 

191. *முதல் உலகப் போர்
ஆரம்பம் முதல் இறுதி வரை
-மருதன்
உலக வரைபடத்தினை மாற்றி அமைத்த முதல் பெரும் போர். உலகம் அதுவரைக் கண்டிராத பெரும் போர் இது. நூற்றாண்டு கால உலக சாம்ராஜ்யங்கள் பல சரிந்து விழுந்தன. முசோலியின் பாசிசம்.. ஹிட்லரின் எழுச்சி இவைகளுக்கு காரணம் முதல் உலகப் போரில் இருக்கிறது.முதல் உலகப் போரின் அரசியல்,சமூக, இராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது.

 

192. * இரண்டாம் உலகப் போர்
ஆரம்பம் முதல் இறுதி வரை
-மருதன்
மனித குலம் மீது அதிகமான குரூரத்தினை விதைத்த போர் இது. உயிரிழப்பு 60 மில்லியன் தொடக்கம் 70 மில்லியன் வரை. போரின் மையம் ஐரோப்பா என்றாலும் அது ஏற்படுத்திய நாசமும் அழிவும் ஆசியா, ஆபிரிக்கா, அமெரிக்கா வரை பரந்தது. கிட்டத்தட்ட முழு உலகையும் உலுக்கி எடுத்த போர் இது. ஹிட்லரோடு தொடங்கி ஹிட்லரோடு முடிந்து விட்ட போர் அல்ல இது.திடீரென்று ஒரு நாள் தொடங்கிய போருமல்ல. மனித குலத்தின் மீது திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட மிருகத்தனம் இதன் பின்னால் உள்ளது. இரண்டாம் போரின் அரசியல்,சமூக, இராணுவ வரலாற்றை விரிவாகப் பதிவு செய்கிறது இந்த நூல்

183. அப்பால் ஒரு நிலம்
-குணா கவியழகன்
போருக்குப் பிந்தைய காலகட்டத்தினை தனது விடமேறிய கனவு நாவலில் எழுதிய குணா கவியழகன், போரின் சாட்சியமாய் இறுதிக் கணம் வரை வாழ்ந்தவர். போரின் அந்த அழிவுமிகு காலத்தை எழுத முடியாது நிலைகுலைந்திருந்த படைப்பாளி, கால நீட்சியில் இப்போது அதன் ஒரு கட்டத்தினை பிரதியாக எழுத்தில் தந்துள்ளார்.

ஜெயசிக்குறு நடவடிக்கை மூலம் புலிகள் கிளி நொச்சியை கைப்பற்றியது ஒரு திருப்பமுனையாக இருந்தது. அந்த சமருக்குத் தேவையான வேவு நடவடிக்கை, அந்த சூழல், மற்றும் இதனுடன் தொடர்புபட்ட பல்வேறு கதைகளை இப்பிரதியில் காணலாம். இது ஒரு வென்ற கதையின் பின்னோக்கிய பார்வை. வன்னிப் போரின் மனித வாழ்வை மையமாகச் சுற்றி போரின் பாடுகளை சொல்லும் பிரதி.

184.ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்
யுகியோ மிஷிமா

இரண்டாம் உலகப்போருக்குப் பிறகான ஜப்பானிய இலக்கியத்தின் மிக முக்கியமான ஆளுமைகளில் ஒருவர் என யுகியோ மிஷிமாவைக் குறிப்பிடலாம். நாவல், சிறுகதை, நாடகம், கவிதை மற்றும் திரைப்படங்கள் என தான் ஈடுபாடு கொண்டிருந்த அனைத்திலும் தனக்கென ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கிக் கொண்டவர். மூன்று முறை இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு மிஷிமா பரிந்துரைக்கப்பட்டிருக்கிறார்.
வெளிப்பார்வைக்கு ஒற்றை மனிதராகத் தெரிந்தாலும் மிஷிமாவுக்குள் பல மனிதர்கள் உறைந்திருந்தார்கள் என்பதற்கான மிகச் சிறந்த எடுத்துக்காட்டு “ஒரு முகமூடியின் ஒப்புதல் வாக்குமூலம்”. அவர் எழுதிய இந்த முதல் நாவலை கிட்டத்தட்ட மிஷிமாவின் சுய-சரிதை என்றே சொல்லலாம். பிறழ்ந்த காமத்தை இயல்பாகக் கொண்டிருக்கும் இளைஞனின் பார்வையினூடாக வாழ்வின் அபத்தத்தையும் மரணத்தின் அற்புதங்களையும் இந்த நாவல் விரிவாகப் பேசுகிறது.

185. அஜிதாவின் நினைவுக்குறிப்புகள்

மக்களின் வாழ்வாதாரங்கள் சூறையாடப்படும் போது, பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் எழுப்புவது மக்கள் விரோத அரசுகளின் முன் பயங்கரவாதமாகிவிடும்.ஒன்பது வருடகாலம் இந்திய அரசின் கொடூர சிறையிலும் சித்திரவதையிலும் வாடிய அஜிதா, இறுதிவரைப் பணியாத ஒரு குரலாக இருந்தார்.இது அவரது சரிதமாகும்.
போராட்டங்களில் ஏற்படும் தோல்விகள் , அமைப்புகளில் நிலவும் தவறுகள் ஆகியன எப்படி அதன் நோக்கத்தினை சிதறடித்துவிடும் என இதில் சொல்லப்பட்டுள்ளது.விளிம்பு நிலை மக்கள், சமூகப் போரளிகள் பற்றிய விரிவான வாசிப்புக்கு ஒரு அவசியமான ஆவணமும் சாட்சியமும் இந்த நூல்.

186. சிவப்பு ரிக்க்ஷா
தி. ஜானகிராமன்

தன்னைச் சுற்றிலுமுள்ள உலகம் சிறிதும் பெரிதுமாக, சாதாரண அசைவுகளில்கூட வியப்புகள் நிறைந்து இயங்குவதை ரசனையுடன் வெளிப்படுத்துபவை தி.ஜா.வின் கதைகள். அந்த இயக்கத்தின் ஆதாரப் புள்ளியான மனித இயல்பைக் கரிசனத்துடன் வெளிப்படுத்துகிறார். எளிய மனிதர்களின் அசாதாரணத் தருணங்களாக அவை உருமாற்றம் கொள்கின்றன. தமிழில் இதுவரை வெளிவந்துள்ள கலைத்தன்மை மிகுந்த கதைகளின் வரிசையில் சந்தேகமின்றி இடம் பெறும் கதைகள் இவை.

ஒரு சொல் குறைபடாமலும் ஒரு சொல்லை மிகையாகக் கொள்ளாமலும் தேர்ச்சியுடன் கச்சிதமாக உருவாக்கப்பட்டவை தி.ஜா.வின் கதைகள். தனது அனுபவ உலகத்தை முன்வைக்க எந்தெந்த வடிவங்கள் துணையாக அமையுமோ என்று அந்தரங்கமாகப் பரிசீலித்தே தனது கதைகளை உருவாக்கியிருக்கிறார். அவற்றை வெகுஅநாயாசமாகவே மேற்கொண்டிருக்கிறார் என்பதன் சான்று அந்தக் கதைகளில் மிளிரும் மேதைமை.

 

 

0000000

bb11.*கனவுச் சிறை- நாவல்
– தேவகாந்தன்
அமைதியிலிருந்து கொந்தளிப்புக்கு வாசகனை நகர்த்திச் செல்லும் தேவகாந்தனின் படைப்பு மொழி வாசிப்பை ஒரு செயற்பாடாக மாற்றுகிறது. சோதனை முயற்சிகளோ நவீனத்துவ,பின் நவீனத்துவப் பாசாங்குகளோ அற்ற அதன் நேரடித் தன்மை தன்விரிவில் பன்முக அர்த்தங்களை உருவாக்குகிறது…… நிராதரவாக நிற்கும் ஒரு இனத்தின் முடிவற்ற போரட்டத்தினைப் பற்றிப் பேசும் இந் நாவல் தன் காலத்திற்கு அப்பால் நீண்டு செல்கிறது.
ஐந்து பாகங்களாக வெவ்வேறு காலப்பகுதிகளில் வெளிவந்த இந்த நாவலின் முழுத் தொகுப்பு இது.

12.*ஆயுத எழுத்து – நாவல்
– சாத்திரி
அவன் ஒவ்வொரு ஊரிலும் , ஒவ்வொரு நாட்டிலும் , வெவ்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டான். பல்வேறு கடவுச்சீட்டுகளில் பல நாடுகளுக்கும் பறந்து திரிந்தான்…… இந்த நாவலைப் படிக்கும் உங்களுக்குள் கோபம், வெறுப்பு, ஆதங்கம், ஆச்சர்யம், சிரிப்பு, கவலை ,சலிப்பு……என்ற ஏதாவது ஒரு உணர்வை இந் நாவல் ஏற்படுத்தி இருப்பின் இதன் நோக்கத்தில் எனக்கு வெற்றியே……என்னுடைய அனுபவங்களில் ஏறக்குறைய நாற்பது சதவிகிதம் மட்டுமே இந் நூலில் பதிவு பெற்றுள்ளது.
வெளீயீடு-திலிபன் பதிப்பகம்

13.*ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல்
– ஜான் பெர்க்கின்ஸ்
உலகின் எல்லா நாடுகளையும் திட்டமிட்டு சூறையாடி வரும் பொருளாதார அடியாட்கள் பன்னாட்டு நிதி அமைப்புக்களின் பணத்தை பணப் பெட்டிகளில் குவிப்பதையும் , தேசத்தின் இயற்கை வளங்களை சுரண்டிக் கொண்டிருக்கும் பண முதலைகளுக்கு தீனியாக திணிப்பதையும் தொழிலாகக் கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களின் கையாளாக அமெரிக்கா அரசு செயற்படுகிறது. உலக நாடுகளின் தலைவர்களை அமெரிக்காவின் விசுவாசிகளாக மாற்றுவதுதான் இந்த பொருளாதார அடியாட்களின் தலையாய பணி…
உயரிய ஜனநாயகத்திற்கு உலகத்திற்கே எடுத்துக் காட்டு அமெரிக்காவே என்ற சித்தரிப்பு பரவலாக பயன்படுத்தப்படுவதுண்டு. ஆனால், இது ஒரு போலிச் சித்திரம் என்றும் இந்த சித்திரத் திரைக்குப் பின்னால் ஒரு பாசிஸ்ட் கொடூரம் மறைந்திருக்கிறது என்பதையும் ,அது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலகம் முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரைமறைவு சதி வேலைகளை செய்து வருகிறது என்பதனையும் இந் நூல் வெளிச்சத்திற்கு கொண்டு வருகிறது.

14.*வால்காவிலிருந்து கங்கை வரை
– எஸ். ராகுல சாங்கிருத்தியாயன்
1949 முதல் இன்றுவரை 27 பதிப்புகள் கண்ட இந்த அரிய அறிவுப்புதையலான இந்த நூல் , தமிழில் சிந்தணப் புரட்சிக்கு வித்திட்ட குறிப்பிடத்தக்க நூலாகும். சமூதாயத்தின் தோற்றம், வளர்ச்சி , நாகரியம் முதலியவைகளப் பற்றி சாதாரண மக்களும் புரிந்து கொள்வதற்காக இந் நூல் எழுதப்பட்டுள்ளது.
தமிழில், கண முத்தையா

 

15.*இலங்கையின் இனவரைவியலும் மானிடவியலும்
– க. சண்முகலிங்கம்
12 கட்டுரைகளைக் கொண்ட இந்த நூல், இலங்கைச் சமூகங்களின் அடிப்படையை விரிவாக எடுத்துரைக்கிறது. இந் நூலில் இடம்பெற்றுள்ள மேற்கு நாட்டை சேர்ந்த அறிஞர்களினதும் இலங்கை அறிஞர்களினதும் மூலக் கட்டுரைகள் உலகளவிய ரீதியில் நன்கு வாசிக்கப்பெற்றவை. தமிழில் சமூகவியல், மானிடவியல் துறைகள் சார்ந்த அறிவிலக்கியத்திற்கு இந் நூல் ஒரு பங்களிப்பு.

 

16.*போரின் படிப்பினைகள்
– ஜோன் றிச்சார்ட்டன்
பதினெட்டு வருடங்களாக நான் மேற் கொண்ட உழைப்பின் அறுவடை இந்த நூல். 1948-1988 என்ற எல்லைக்கு உட்பட்டதும் ,சுதந்திரத்தின் பின்னருமான இலங்கையின் வரலாறு என்ற கண்ணாடி வழியாக வன்முறை, மோதல், அபிவிருத்தி பற்றி ஆராய்ந்துள்ளேன். முதியவர்களாக உள்ள இலங்கையர்கள் இந்த வரலாற்றை புதிய தலைமுறையினரை விட நன்கு தெரிந்து வைத்துள்ளனர்.
1987இல் நான் இலங்கையில் இருந்தேன்.சிவில் யுத்தங்களின் தாக்கங்களுக்கு முகம் கொடுக்கும் பெரும்பாட்டை மக்கள் எதிர்கொண்டிருந்தனர். அமைதியான சூழ்நிலை எப்படி மறைந்தது.?யுத்தமும் வன்முறை மோதல்களும் எவ்வாறு நாட்டை சீரழித்தது என்பதைப் பற்றிய எனது ஆராய்வே இந்த சிறு நூல்.
தமிழில், க. சண்முகலிங்கம்

17.*இலங்கையின் அரசியற் திட்டங்களின் பரிணாம வளர்ச்சி
– வேலுப்பிள்ளை குணரத்தினம்
இலங்கையின் அரசியற் திட்டங்களின் வளர்ச்சியை வரலாற்று ரீதியாக ஆய்வு செய்யும் இந்த நூல் அரசியலமைப்பு பற்றிய பொது விளக்கம்,இலங்கையில் தேசியவாத இயக்கம், பிரித்தானிய காலனித்துவ அரசியல் நிலை(1833-1931),டொனமூர் அரசியல் சீர்திருத்தங்கள்(1931),சோல்பரி அரசியலமைப்பு (1947),முதலாம் குடியரசு யாப்பு (1972), இரண்டாம் குடியரசு யாப்பு (1978) மாகாண சபையும் உள்ளூராட்சி மன்றங்களும், இலங்கையின் அமைதியின்மையும் இன முரண்பாடும், இலங்கையின் வெளி நாட்டுக் கொள்கை ஆகிய பத்து அத்தியாயங்களை கொண்டுள்ளது.

 

18.*இன மோதலும் சமாதானமும் 2002-2004
– கலாநிதி .கீதபொன்கலன்
இலங்கையின் முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் விவாதங்கள் மிக உயர்மட்டத்திலேயே இடம்பெற்று வருவது ஜனநாயகத்தின் ஒரு குறைபாடாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இது சாதாரண மக்கள் மத்தியில் அரசியல் தெளிவின்மைக்கு காரணமாய் அமைவதுடன் அவர்கள் தவறான முடிவுகளை மேற்கொள்வதற்கும் உதவியுள்ளது.
2002 இல் மேற் கொள்ளப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடக்கம் , 2004 போரின் ஆரம்ப கால கட்டம் வரை, அனைத்து வெளி நாட்டு பேச்சுவரையும் இந்த நூல் தகவல் பூர்வமாகவும் அரசியல் ரீதியாகவும் எடுத்துரைக்கிறது.

19.*சில நேரங்களில் சில மனிதர்கள்- நாவல்
– ஜெயகாந்தன்

ஒரு நாவலின் முடிவைக் குறித்து தாங்கள் மிகவும் வருந்தி,துயருற்றுக் கண்ணீர் விட்டதாக எழுதுகின்ற வாசகர்களுக்கு நான் ஒன்று சொல்வேன். உங்களை விட அதிகமாக வருந்தி ,துயருற்று கண்ணீர் உகுத்துத்தான் அந்த ஆசிரியன் அந்த முடிவை எழுதி இருக்கிறான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்…..

நீங்கள் வருத்தப்படுகிறீர்களா? ரொம்ப நல்லது.அதற்காகத்தான் அந்த முடிவு! அந்த வருத்தத்தின் ஊடே வாழ்வின் போக்கைப் புரிந்து கொண்டால் வருத்தம் என்கிற உணர்ச்சி குறைந்து வாழ்வில் அப்படிப்பட்டவர்களை ,அந்த நிகழ்ச்சிகளை சந்திக்கும் மனம் விசாலமுறும்.

 

20.*தீ- நாவல்
– எஸ். பொன்னுத்துரை

தீக்குள் விரலை வைத்தால் இன்பம் தோன்றுமா?என்பதே தீயின் அடிப்படையான உசாவல். பல தடவைகளாக…….வெவ்வேறான இடங்களில்……வித்தியாசமான பருவங்களில் ……..

தீக்குள் விரலை வைக்கும் எத்தனங்களும் ,அவற்றுள் சிலவற்றில் ஏற்படும் தோல்வியும் ,சிலவற்றில் வெற்றி கொள்வதாக ஏற்படும் வீண் மயக்கமும் , பின்னர் அவற்றின் பாலான விளைவுகள் தரும் வெம்மையிலும் பொசுங்கிப் போய்த் தறி கெட்டோடும் ஒரு மனிதனது கதையின் சில அத்தியாயங்களையே தீ தொட்டுச் செல்கிறது.

21.*கரமாஸவ் சகோதரர்கள்- The Brothers Karamazov
-தஸ்தயேவ்ஸ்கி

உலகின் மகத்தான படைப்பாகிய கரமாஸவ் சகோதரர்கள் நாவல், அதன் மூல மொழியாகிய ரஸ்ய மொழியிலிருந்து தமிழில் நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.வாழ்வைப் பரிசீலிக்கத் தூண்டும் தஸ்தயோவ்ஸ்கியின் ஒவ்வொரு வரியையும் நுட்பமாக உள்வாங்கி சாரத்தை பிடித்திருக்கும் அரிய மொழிபெயர்ப்பு இது. பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலான இதைத் தமிழின் மரபான சொல்லாட்சிகளும் நவீன சொற்களும் கலந்துவரும் வகையில் உருவாக்கி இருப்பதனை வாசிப்பு தெளிவாக உணர்த்தும்.
22.*என் பெயர் சிவப்பு- My Name is Red
– Orhan Pamuk – இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற நாவல்
– பதினாறாம் நூற்றாண்டின் ஒட்டமன் சாம்ராஜ்ஜியத்தில் துருக்கியின் தலை நகரான இஸ்தான்புல்லில் இந்த கதை நடக்கிறது. நாவலின் இரு புள்ளிகள் காதலும் குற்றமும். இவற்றை இணைக்கும் கதைகோட்டுக்கு மேலும் கீழுமாக மதத்தின் கட்டுப்பாடுகளையும் கலையின் சுதந்திரத்தினையும் விவாதிக்கிறார் ஒரான் பாமுக்.
தன்னுடைய சொந்த மண்ணின் துயரம் பூண்ட ஆன்மாவைத் தேடும் பணியில் கலாசார மோதல்களையும் இணைப்புகளையும் புதிய உருவகங்களில் கண்டடைந்த ஒரான் பாமுக்குக்கு 2006ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது .

தமிழில் – ஜி.குப்புசாமி

000000000

23.*சாட்சியமற்ற போரின் சாட்சியங்கள்
– பிரான்ஸிஸ் ஹாரிசன்
-Still Counting the Dead- 2000 ஆண்டு தொடக்கம் 2004ம் ஆண்டுவரை பிபிசியின் இலங்கைச் செய்தியாளராகப் பணியாற்றிய இந்த நூலாசிரியர் , ஆம்னெஸ்டி இன்ரர் நெசனல் நிறுவனத்திலும் பணிபுரிந்துள்ளார்.
“நான் பதிவு செய்த எல்லாக் கதைகளையும் இந்த நூலில் பதிவு செய்யவில்லை…. அழிவின் அளவையும் எவ்வளவு துரிதமாக அது நடைபெற்றது என்பதையும் பார்க்கும் போது , மிக மோசமான பேரழிவு இது என்பதில் எத்தகைய ஐயங்களுக்கும் இடமில்லை. “பான்கீ மூனின் றுவாண்டா” என சிலர் இதனை வர்ணித்தனர்.போரின் இறுதி 5 மாதங்களில் எழுபதாயிரம் பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டனர் என முதல் தடவையாக ஐ. நா அறிக்கை கூறியது… ”
தமிழில், என்.கே. மகாலிங்கம், அகிலன் எத்திராஜன்
c124. *கூண்டு – The Gage
(இலங்கைப் போரும், விடுதலைப் புலிகளின் இறுதி நாட்களும்..)
– கார்டன் வைஸ்
யுத்த காலத்தின் கடைசி இரண்டு ஆண்டுகளான 2007இல் இருந்து 2009 வரை ,இலங்கையில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக பணியாற்றியவர் கார்டன் வைஸ்.சாதாரண மக்கள் ஆயிரக் கணக்கில் கொல்லப்பட்டதை உலகின் முன் அம்பலப்படுத்தியதன் பின், இலங்கை அரசால் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக்கப்பட்டார். பொஸ்னியா, கொசோவோ, ஆப்கானிஸ்தான், காங்கோ, உகண்டா, காசா போன்ற உள் நாட்டு போராட்டங்கள் மற்றும் பேரிடல்களால் பல நாடுகளில் வைஸ் பணியாற்றி உள்ளார்.
“பக்கச் சார்பற்ற அறக் கோட்பாட்டோடு எழுதப்பட்டுள்ள இந்த நூலின் கருத்துகள் எல்லாவற்றோடும் ஒருவர் உடன்பட வேண்டியதில்லை. எனினும் இந்த நூல் அம்பலப்படுத்துகின்ற ஏராளமானவற்றை நாம் எதிர் கொண்டேயாக வேண்டும் .”
தமிழில், கானகன்

 

25.*குட்டி இளவரசன்
– அந்த்வான் து செந்த் -எக்சுபெரி
இரு நூறுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படைப்பு. The Little Prince குழந்தைகளுக்கு மட்டுமன்றி பெரியவர்களுக்குமான அழகான கதை. தமிழிலும் நான்காவது பதிப்பை கண்ட புத்தகம்.
பிரஞ்சிலிருந்து தமிழில், வெ.ஸ்ரீராம், ச.மதனகல்யாணி
26. *அந்நியன் –
-ஆல்பெர் காம்யு
இருபதாம் நூற்றாண்டின் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்று. 1942இல் வெளிவந்தது. கிட்டத்தட்ட உலகின் எல்லா முக்கிய மொழிகளிலும் இது மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இன்றைய மனிதனின் மனச்சாட்சி குறித்த பிரச்சினைகளை தெளிவான நேர்மையுடன் தன் இலக்கியப்படைப்புகளில் விளக்கி இருப்பதற்காக ஆல்பெர் காம்யுவிற்கு 1957ம் ஆண்டு நோபல் பரிசு அளிக்கப்பட்டது.
பிரஞ்சிலிருந்து தமிழில், வெ.ஸ்ரீராம்,

 

27.* முதல் மனிதன் ( நாவல்)
-ஆல்பெர் காம்யு
இந்த நாவலாசிரியர் 1960ம் ஆண்டு கார் விபத்தில் உயிரிழந்த போது, அவரது கைப்பையில் எழுத்துப் பிரதியாக இந்த நாவல் இருந்தது.
மனிதனின் மறுப்பு ,கிளர்ச்சி, இந்த இரண்டு எதிர்மறையான போக்குகளுமே மனித குலத்தினை அழிவுக்கு இட்டுச் செல்கின்றன என்ற பிரஞ்ஞையுடன், இவை இரண்டிற்கும் அப்பால் சென்று சவாலை எதிர்கொள்ள மனிதனிடம் இருக்கும் சக்தி நேசம் என்று காம்யு நம்பினார்.காதல், பக்தி, அன்பு, நட்பு, பரிவு, விருப்பம், பாசம் என்ற பல பரிமாணங்களை உள்ளடக்கிய சொல்லாக நேசம் இருப்பதை அவர் இந்த நாவலில் ஆழமாக கையாள்கிறார்.
பிரஞ்சிலிருந்து தமிழில், வெ.ஸ்ரீராம்,

 

28.*பஞ்சமர் ( நாவல்)
– கே.டானியல்
இந்த நாவலில் பஞ்சமரில் நானும் ஒருவனாக நிற்கிறேன். அறிவார்ந்த பருவம் முதல் ,இன்றுவரை இந்த மக்கள் கூட்டத்தினரின் பிரச்சினைகளில் பங்கு கொண்டு, இவர்கள் துன்பப்பட்டு கண்ணீர் விட்ட போதெல்லாம் சேர்ந்து கண்ணீர் விட்டு … சாதிக் கொடுமைகளை எதிர்த்து நின்று ….. இந்த நாவலை எழுதினேன். -( கே.டானியல்)

.

29.*தீப்பற்றிய பாதங்கள்
(தலித் இயக்கம், கலாசார நினைவுகள், அரசியல் வன்முறை, பற்றிய கட்டுரைகளின் தொகுப்பு)
-டி.ஆர். நாகராஜ்
நாகராஜின் எழுத்துக்களில் தலித்துகள், தட்டையான மனிதர்களாகவோ , சமூகக் குழுக்களாகவோ இருப்பதில்லை. அவர்கள் ஏழைகளாக மட்டுமோ, ஒடுக்கப்பட்டவர்களாக மட்டுமோ இருப்பதில்லை. மாறாக அவர்கள் செழிப்பான கலாசாரத்தினையும் நினைவுகளின் தொகுப்புகளையும் கொண்டுள்ளார்கள்.
அவர்களுடைய கதைகள், இசை, அறிவார்ந்த முறைமைகள், தொழில் நுட்பத் திறமைகள், … படைப்பூக்க திறன் கொண்ட வடிவங்கள் . துயரம் மற்றும் ஒதுக்கப்படுதல் நினைவுகளை பதிவுகளாகக் கொண்ட திடகாத்திரமான கற்பனைகளையும் கடந்த காலம் பற்றிய கட்டமைப்புகளையும் கொண்டுள்ளன.-(அஸிஸ் நந்தி)
ஆங்கிலத்திலிருந்து தமிழில், ராமாநுஜம்
—————————————————————————————————————-
30.* ஒரு பனஞ் சோலைக் கிராமத்தின் கதை ( வரலாற்றுக் குறிப்பு)
-என்.கே. ரகு நாதன்
நான் ,1991ம் ஆண்டில் யாழ் மண்ணிலிருந்து இந்த வரலாற்றை எழுதத் தொடங்கினேன்…… ஒராண்டுக்குள் கொழும்பு வந்து அங்கு பத்தாண்டுகள் தங்கியிருந்த வேளையிலும் ,பின்னர் கனடாவில் குடி புகுந்து இரண்டு வருடங்கள் எனது பேனாவை ஓட்டி இதனை பூர்த்தி செய்துள்ளேன்.(என்.கே. ரகு நாதன்)
எண்பது ஆண்டுகால தலித் சமூகத்தின் வரலாறு இதில் பதியப்பட்டுள்ளது.சாதிய அடக்குமுறைக்கெதிரான எழுச்சிகளோடு மட்டும் நின்றுவிடாது, தமது பிள்ளைகளை கல்வியிலும் முன்னேற்றம் பெறச் செய்து அகலக் கால் பதித்தார்கள். இந்த வரலாறுதான் ஒரு பனஞ் சோலைக் கிராமத்தின் எழுச்சியாகும்.

 

31.*முடையும் வாழ்வு ( ஒரு தலித் பெண்ணின் வாழ்க்கைக் குறிப்பு)
– ஊர்மிளா பவார்
ஊர்மிளா பவார் தலித் சமூகத்தில் பிறந்தவர். முதன்மையான தலித் பெண் எழுத்தாளர். மகாராஷ்ட்ராவில் நன்கு அறியப்பட்ட தலித் செயற்பாட்டாளர். சிறுகதை எழுத்தாளர். மத அடிப்படை வாதிகளின் தாக்குதலுக்கு இலக்கானவர்.தலித் பெண்களின் பிரச்சினைகளை பல்வேறு கோணங்களில் பார்க்க வேண்டும் என்பதை ஆணித்தரமாக முன்னிருத்தியவர் இவர்.
மராத்தியிலிருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கப்பட்டதை தமிழுக்கு கொண்டு வந்தவர். போப்பு

 

32. *மீள முடியுமா?
– ழான் போல் சார்த்ர் ( நாடகம்)
மற்றவர்களாலும் போலி மனச்சாட்சியாலும் தங்களுடைய சுதந்திரம் பாதிக்கப்பட்ட நிலையில் , மனிதர்களின் இருத்தல் எந்த அளவுக்கு அர்த்தமற்றுப் போய் விடுகிறது என்பதை சித்தரிக்கும் சார்த்ரின் இந்த நாடகம், மனிதனின் நிலையில் காணப்படும் அவலத்தினை காட்டும் ஒரு துன்பவியல் நாடகமாக படைக்கப்பட்டிருக்கிறது.
பிரஞ்சிலிருந்து தமிழில், வெ.ஸ்ரீராம்,

0000000

 

c333.*மோடி அரசாங்கம், வகுப்புவாதத்தின் புதிய அலை ( கட்டுரைகள்)
– சீத்தாரம் யெச்சூரி
இந்த நூலாசிரியர் பொருளாதாரத் துறை சார்ந்த , இந்தியாவில் நன்கு அறிமுகமான கல்வியலாளர், எழுத்தாளர்.இக்கட்டுரைகள் அனைத்தும் எழுதப்பட்ட காலங்களில் அதிக கவனிப்பை பெற்றவை.ஆர் எஸ் எஸ் இயக்கம் தொடக்கம், இன்றைய இந்திய அரசாங்கம் வரையான பல விடயங்கள் இதில் கவனத்திற்கு கொண்டுவரப்படுகிறது. மதச்சார்பற்ற இந்தியாவின் உருவாக்கத்திற்கான அடிப்படையை வலியுறுத்தும் இந்த கட்டுரைகள், இதனை நோக்கி மக்களுக்கான வழியை தெளிவுபடுத்துகிறது.
.

34.* நொருங்கிய குடியரசு (அனுபவப் பார்வைகள்)
– அருந்ததி ராய்
அருந்ததி ராயால் அபாரமான பகுப்பாய்வையும் ,படைப்பூக்கம் கொண்ட அனுபவப் பகிர்வையும் இணைத்து பதியப்பட்டது இந்த நூல். உலக வல்லரசாக எழுச்சி பெற்று வருகின்ற இந்தியாவின் முன்னேற்றம், வளர்ச்சி, ஆகியவற்றின் பின்னுள்ள அசலான தன்மையை இந் நூல் ஆராய்கிறது. அத்துடன் நவீன நாகரிகம் பற்றிய அடிப்படையான கேள்விகளையும் எழுப்புகிறது.
ஆங்கிலத்திலிருந்து தமிழில், க.பூரணசந்திரன்

 

35.* நஞ்சுண்ட காடு ( கதைப்பிரதி)
– குணா கவியழகன்
குடும்பத்தையும் ,அதற்கான தமது பொறுப்புகளையும் விட்டு விலகிய போராளிகளினதும், சமவேளையில் ஆண்களற்ற குடும்பங்களை கொண்டிருந்த அன்னையர்களினதும் ,அம்மாக்களினதும் நிராதரவான வாழ்வு குறித்தும், போரில் சதா உழன்று கொண்டிருந்த ஒரு காலத்தில், ஒரு போராளியால் எழுதப்பட்ட பதிவு இது.

 

36. * சொல்ல மறந்த கதைகள் (அனுபவப் பார்வைகள்)
– முருகபூபதி
இலக்கியவாதியாகவும் ஊடகவியலாளனாகவும் இயங்கியதனாலும் , எழுதுவதுடன் பணி முடித்து ஓய்ந்து விடாதிருந்தமையாலும் ,சமூகப் பணியாளனாக அயராது செயற்பட்டதாலும் பல்வேறு இன்னல்களுக்கும் தொல்லைகளுக்கும் ஆளாகி இருக்கிறேன். …. என்னை ஒரு படைப்பிலக்கியவாதியாக அறிந்து வைத்திருப்பவர்களுக்கு இந்த தொகுதி எனது மற்றுமொரு பக்கத்தையும் இனம் காட்டி இருக்கும்.

 

37. காலனியம் (கட்டுரைத் தொகுப்பு)
பிபன் சந்திரா- தமிழில் அ. முத்துசாமி
காலனியம் குறித்தும், தேசியம் குறித்தும் பேரா, பிபன் சந்திரா கடந்த 20 ஆண்டுகளாக எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வரலாற்றைப் பகுத்து ஆராய்வதில் காலனிய வரலாற்று ஆய்வாளர்கள் பின்பற்றி வந்த அணுகுமுறைகளை விமர்சன ரீதியான ஆய்வுக்கு உள்ளாக்குகின்ற இந்த எழுத்துக்கள், காலனியத்தின் அடிப்படைக் கூறுகளாக விளங்குகின்ற சில முக்கிய போக்குகளைப் பற்றிய தெளிவான பார்வையை முன்வைக்கின்றன.இக்கட்டுரை ஆசிரியர் இந்திய வரலாற்றுத் துறை பேராசிரியராக பணி செய்து ஒய்வு பெற்றவர்.

 

38. கூலித் தமிழ்
மு. நித்தியானந்தன்
19ம் நூற்றாண்டில் தமிழகத்திலிருந்து ,இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளுக்கு கூலிகளாகக் கொண்டு செல்லப்பட்ட இந்திய வம்சாவளித் தமிழர்களின் மத்தியில் எழுந்த முதல் எழுத்து முயற்சிகளை இந்த நூல் பதிவு செய்கிறது.

குதிரைகளில் பவனிவரும் துரைமார்கள்,சவுக்கடிகள், தண்டனைகளை நிறைவேற்றும் கம்பங்கள், மிருகங்களைப் போன்று அடைக்கப்பட்ட லய வாழ்க்கை ,பெரட்டுக் களங்கள், இயந்திரம் போன்ற உழைப்பு, கையெழுத்து மங்கும் வரை மலைக்காடுகளில் வதை,வயிற்றுக்கே போதாத சம்பளம்,தோட்டத்தினை விட்டும் ஓட முடியாத நிலை என்று , கொடுங்கோன்மை தலைவிரித்தாடிய கோப்பி யுகத்தின் நிலையை, அனுபவத்தின் வழியாகவும், ஆய்வின் வழி நின்றும் பதிவு செய்துள்ள காத்திரமான நூல்.

 

d39. PARADISE POISONED
Learning about Conflict, Terrorism and Developent from Srilanka Civil Wars
By- John Richardson
“John Richardson spent a great deal of time over the past two decades living and working in Srlanka with people on both sides of the president conflict there. From his exhaustive work has emerged the definitive reference on the morphology of violence in Srilanka and a breakthrough theory of links between development and deadly conflict” –Prof Dennis Meadows

 

40. தனிமையின் நூறு ஆண்டுகள் ( நாவல்)
One Hundred years of Solitade
காப்ரியல் கார்சியா மார்க்கோஸ்
ஒரு நகரத்தின் நூறு ஆண்டுத் தனிமையையும் ஒரு மக்கள் கூட்டத்தின் தனிமையான நூறு ஆண்டுகளையும் சொல்கிறது இந்த நாவல். ஏறத்தாழ அரை நூற்றாண்டுக்கு முன்பு எழுதப்பட்ட நாவல், இன்றும் புதிய வாசகர்களை ஈர்த்துக் கொண்டிருக்கும் காலத்தினை மீறிய படைப்பு. எந்த மொழியில் , மொழி பெயர்க்கப்பட்டாலும் அந்த மொழியைத் தாண்டி நிலைத்திருக்கும் மானிடக் கதையாடல். 1982ம் ஆண்டு இந்த நாவலை முன் நிறுத்தி கார்சியா மார்க்கோஸுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

 

41. MINORITY PRODECTION IN SOUTH ASIA
– Ameena Mohsin, Jayadeva Uyangoda, N.Mohapatra, Mahendra Lawothi, Ahamed Salim
This publication makes an attempt to present to the reader information on the state of minorities through country –spceific papers on minority prodection and National standards in Srilanka, India, Pakistan , Nepal and Bangaladesh. The papers provide representation of the perspectives on the status of minorities in the south Asia region.


42. திராவிட மானிடவியல்
– பக்தவத்சல பாரதி
ஒன்றுடன் ஒன்று ஒப்பிட்டு அறியப்படும் நிலையில் திராவிடமும் ஆரியமும் உள்ளன. சளைக்காத ஒரு தர்க்கமுறை இவற்றுக்கிடையே தொன்று தொட்டு நிலவி வருகிறது. பல அரிய வரலாற்றுத் தரவுகளை முன்வைப்பதன் மூலம் மானிடவியல் குறித்த அடுத்த கட்டத் தேடல்களை செய்யும் முனைபினை இந்த நூல் தூண்டுகிறது.இவரது முந்தைய இரு நூல்களான வரலாற்று மானிடவியல், பண்பாட்டு மானிடவியல் ஆகிய நூல்களும் அதிக முக்கியத்துவத்தினை பெற்றது.
00000000000

 

43.*இலங்கையின் இன வர்க்க முரண்பாடு
-குமாரி ஜெயவர்த்தன
இந்த நூல் சிங்கள -பௌத்த உணர்வு நிலையின் கடந்த 100 ஆண்டுகால வரலாற்றை அரசியல், பொருளாதார , சமூக விஞ்ஞான ரீதியில் ஆராய்கிறது.இவ் இன உணர்வுநிலை 1883இன் கிறிஸ்தவ எதிர்ப்பியக்கம், 1915இன் முஸ்லிம்களுக்கெதிரான வன்முறைக் கலவரம், 1930களில் மலையாளிகளை நாட்டை விட்டு துரத்துதல் ஆகியவற்றோடு நின்றுவிடவில்லை. 1948இல் மலையகத் தமிழர்களை நாடற்றவராக்கிய பின் 1956இல் இலங்கைத் தமிழருக்கெதிராக வடிவமெடுத்தது… இதன் அடியாக உள்ள பல விடயங்களை சமூக விஞ்ஞான அடிப்படையில் இந் நூலாசிரியர் ஆய்கிறார்.
தமிழில்- சித்திரலேகா, நித்தியானந்தன், செ. கணேசலிங்கம்

 

———————————————
44**அடிப்படை வாதங்களின் மோதல்
– தாரிக் அலி
2001 செப்டம்பர் 11 அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் தீவிரவாத தாக்குதலால் நொருங்கியபோது உலகின் மனிதத் தன்மை கடுமையாக இதன் பெயரால் ஒடுக்கப்பட்டது. இத்தாக்குதலை பலர் ஆதரித்தனர்.அல்லது மறை முகமாக மகிழ்ந்தனர். இதன் பின்னால் உள்ள பல்வேறு கேள்விகளை ஆராயும் ஆழமான கட்டுரைகளைக் கொண்டது இந்த நூல்.
உலகின் இன்றைய நெருக்கடிகள் பலவற்றிற்கு பின்னுள்ள அமெரிக்காவின் செயற்பாடுகள், இஸ்லாமின் வரலாறு ,கலாசாரம், அதன் உள்ளடக்கம் குறித்து ஒரு விவாதத்தினை உருவாக்கும் நோக்கில் இந்த நூலை எழுதி உள்ளார். தாரிக் அலி பாகிஸ்தானில் பிறந்து லண்டனில் வசித்து வரும் நன்கு அறியப்[பட்ட கல்வியாளரும் எழுத்தாளருமாவார்.
தமிழில் – கி.ரமேஷ்

 

—————————
45* இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் முக்கோண
அதிகாரப் போட்டியும் இலங்கை இன மோதலும்
– தனபாலசிங்கம் கிருஷ்ணமோகன்
கடல் வழி தொடர்பாடலின் முக்கியத்தும் கருதி இலங்கை இன்று கேந்திரமாகவுள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் இலங்கையில் இன்று செல்வாக்கு செலுத்த அதிகம் முனைகின்றன. இலங்கையை தமது செல்வாக்குக்குட்படுத்த முனைகின்றன .
மேற்படி நாடுகள் இலங்கையின் உள்நாட்டு மோதலில் வகித்த பாத்திரம், தமது நலன் சார்ந்து எப்படு செயற்படுகின்றன என்பதனை தெளிவுபடுத்தும் நூலிது.
வெளியீடு- குமரன் பத்தக இல்லம்
————————————————–

 

e1
46* ரோசா லக்ஸம்பர்க்
(வரலாறும் கட்டுரைகளும்)
ரோசா லக்ஸம்பர்க் உலகறிந்த பெண் சமூக செயற்பாட்டாளர். @கருத்து சுதந்திரம் என்பது எப்போதும் மாறுபட்டு சிந்திப்பவர்களுக்கான சுதந்திரம் தான் என்று சொன்ன ரோசா, தனித்துவமான மார்க்சிய சிந்தனையாளர். தனது சம காலத்தில் வாழ்ந்த லெனின் உள்ளிட்ட பலரோடும் கருத்து வேறுபாடுகள் கொண்டிருந்த போதிலும் அவரது கருத்துக்கள் முக்கியத்துவமானதாக கொள்ளப்பட்டன. அவரது புரட்சிகர வாழ்க்கையை சமூக மாற்ற சக்திகள் அறிந்து கொள்ளத்தக்க வகையில் தெரியப்படுத்த இந் நூல் வாசிக்கப்படுவது முக்கியமாகும்.
தமிழில். பொன்னுச்சாமி

———————————-
47* மார்க்சியமும் இலக்கியத் திறனாய்வும்
-எம், ஏ. நுஹ்மான்
இலக்கியத்தின் அடித்தளத்தினை, அதன் சமூக வேர்களை புரிந்து கொள்ளவும், இலக்கிய வரலாற்றை அற்புத நிகழ்வுகளாக அன்றி சமூக அசைவியக்கத்தின் வெளிச்சத்தில் காணவும், இலக்கியத்தினை ஒரு அறிதல் முறையாக ஏற்றுக் கொண்டு வாழ்க்கை அனுபவத்தினைக் காணவும் இதன் உள்ள்டக்கம் துணைபுரியும்.

————————————————-

48 * நாங்கள் அவர்கள்
– மணி வேலுப்பிள்ளை
ஆள், இடம், காலம், மொழி எனும் நான்கு பரிமாணங்களையும் உடறுத்து விரையும் இந்த நூல்- பல ஆளுமைகளின் படைப்பு மற்றும் கருத்துக்களை முன் வைப்பதுடன் பல்வேறு காலகட்டங்களின் கருத்து நிலைகளையும் முரண்பாடுகளையும் ஒருங்கே புலப்படுத்துகிறது. வாசகர்களை சிக்கலான, கூரிய நோக்குடன் தளங்களுக்கு அழைத்துச் செல்லும் நூல்கள் தமிழில் இல்லை என்கிற குற்றச்சாட்டுக்கு இந்த நூல் ஒரு தகுந்த பதிலை முன் வைக்கிறது.
வெளியீடு- காலச் சுவடு

49*விடமேறிய கனவு ( நாவல்)
– குணா கவியழகன்
என் முதல் நாவல் நஞ்சுண்டகாடு, தமிழீழப் போராட்டத்தின் இறுதிப் போருக்கு முன்னான சமாதானச்சூழல் நிலவிய பொழுதில் fஎழுதப்பட்டது. அறிவுதந்த திண்ணியமான ஒளியால் ஆழ்மனம் அபாயச் சங்கெடுத்து ஊதி என்னுள் அலறிய பொழுதது. நான் பொறுக்கவொண்ணாது போரின் பாடுகளை , பொங்கிவந்த கண்ணீரில் தாள்கள் தோய எழுதினேன். எழுதிய பொழுதில் எவர் கண்ணிலும் படாது போன நஞ்சுண்டகாட்டின் வாழ்வு எங்கள் கண்களையே குத்தியது.
தமிழீழமே பிரளயத்தைக் கண்டு முள்ளிவாய்க்காலின் நந்திக்கடலில் மோதி அழிந்தது. எஞ்சியவரிடம் எஞ்சிப் போன வாழ்வு. இதைச் சுமக்கவும் முடியாமல் இறக்கவும் முடியாமல் மனித மனத்தின் விந்தையான பாடுகளில் விடமேறிய கனவாய் வீழ்ந்து வருகிறது தமிழ்ச்சாதியின் வாழ்வு.
இப்போது சங்கெடுத்து ஊதாமல், சாமங்களில் தலைமோதி அலறும் கனவிலிருந்து விடுதலை பெற்று நான் அமைதி கொள்ள முடியாது என்றுணர்ந்தேன். விளைவு, நிசிகளில் கொதிக்கும் இரத்தம், தாள்களில் வழிந்து கதையாகிப் போனது.

———————————-
50. *மௌனத்தின் சாட்சியங்கள்- ( நாவல்)
– சம்சுதீன் ஹீரா
கோவைக் குண்டு வெடிப்புக்கு முன்னும் பின்னும் நிகழ்ந்த கலவரங்களையும் , கோயம்பத்தூர் மக்களின் வாழ்வை சின்னாபின்னமாக்கிய கதைகளையும் நேர்மையாகப் பதிவு செய்யும் முக்கியமான படைப்பு .
போரும் அமைதியும் நாவலில் டால்ஸ்டாய் சொல்வது போல , சம்பவங்கள் தவிர்க்க முடியாத சமூக விதிகளின் அடிப்படையில் நகர்கின்றன. தனிநபர்கள் அதை முழுமையாகத் தீர்மானிப்பதில்லை. கோவையில் ஜூரவேகத்தில் பத்தாண்டுகளுக்கும் குறைவான ஒரு காலப்பகுதியில் மதவெறி உச்சக்கட்டத்தினை அடைந்து வீழ்ச்சியையும் சந்தித்தது.
சமகால வரலாற்றைப் பதிவு செய்வது மிகக் கடினமானது, சிக்கலானதும் கூட, அதுவும் கோவைக் கலவரங்களின் அரசியல் சமூக பொருளாதரப் பின்னணி குறித்து ஆய்வு நூல்கள் இல்லாத நிலையில் ஒரு நாவலாசிரியரின் பணி இன்னும் கடுமையானதாகி விடுகிறது.ஆசிரியர் கத்தி மேல் நடப்பதைப் போன்ற நிதானத்துடன் இந்தப் பணியை செய்துள்ளார். இது இவரது முதல் நாவலுமாகும்.
00000000

———————————————–

 

51.*PALMYRA FALLEN – from Rajani to war’s end
– Dr Rajan Hoole
“The book as Rajani would have wished , is mainly to remember the ordinary people who boast of no pomp or heardly , but lost many loved ones

and have been left to cope with trauma, poverty, repression, and 20150806_173943 - Copyphysical disability . they were let down and suffered grievously for the vanity , greed and vainglory of those who knew better and ought to have done better”

 

52.*வந்தேறிகள்- ( நாவல்) இரா- பாரதி நாதன்
தறியுடன் எனும் நாவலில், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை எழுதி அதிக கவனிப்பினை பெற்ற இந்த நாவலாசிரியரின் இரண்டாவது நாவல் இது. பல்வேறு வாழ்க்கை நெருக்கடிகளினால் உழைக்கும் மக்கள் பல்வேறு ஊர்களுக்கும், நாடுகளுக்கும் புலம்பெயரும் போது ,எதிர்கொள்கின்ற நெருக்கடிகளை தனது சொந்த வாழ்பனுபவத்தினை முன்னிறுத்தி எழுதியுள்ளார் பாரதி நாதன்.
53. *மனித சமூகங்களின் நிலையத் தீர்மானித்த காரணிகள்
(துப்பாக்கிகள், கிருமிகள், எஃகு)
– ஜாரெட் டைமன்ட், தமிழில்- ப்ரவாஹன்
இந்த உலகில் ஒரு சில நாடுகள் வளமாகவும், மற்ற நாடுகள் ஏழ்மையாகவும் இருக்கிறதே அது ஏன் என்ற கேள்விக்கு விடையத்தேடி பயணிக்கிறார் இந்த நூலாசிரியர். மனித சமூகத்தின் மீதான அடிப்படையான சுற்றுச் சூழல் சக்திகளின் தாக்கத்தினை உலகளவில் புகழ் பெற்ற இந்த நூல் ஆழமாக விளக்குகிறது.
54. * காலம் – ஒரு வரலாற்றுச் சுருக்கம் (A BRIEF HISTORY OF TIME )
– ஸ்டீபன் ஹாக்கிங்- தமிழில் , நலங்கிள்ளி
இந்த நூல் 12 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் தமிழில் வந்தது. நூல் பிரதிகள் இன்றைய வாசிப்பாளர்களுக்கு கிடைக்க வழியில்லாத போதும், இந்த நூலின் முக்கியத்துவம் கருதியும் இந்த நூல் 2015 ஜனவரியில் வெளிவந்த போது, சென்னை புத்தக சந்தையில் அதிகம் வாசகர்கள் வாங்கிய நூல்பட்டியலில் முதலிடத்தினைப் பெற்றது.

——————————————————————————————————————————-

55.*பிடல் கஸ்ட்ரோ-என் வாழ்க்கை வரலாறு

“உலகத்தின் பிரபலமான பத்திரிகையாளர்கள் கஸ்ட்ரோவின் பேட்டிக்காகப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கிறார்கள். கடந்த 60 ஆண்டுகளில் உலகத்தின் முக்கியமான தலைவர்களில் கஸ்ட்ரோவும் ஒருவர் என்பதில் சந்தேகமில்லை. உலகத்தில் மிகவும் அதிகமான ஆண்டுகள் அரசுத் தலைவராக இருப்பவர் கஸ்ட்ரோ.முப்பத்தியிரண்டு வயதில் , சர்வாதிகாரி பாடிஸ்டாவின் இராணுவத்தினை முறியடித்து ஹவானாவுக்குள் நுழைந்து 1959இல் பதவியேற்றார்.
மேற்கின் மோசமான முதலாளித்துவ அரசுத் தலைவர்களை எதிர்கொண்டவர். நம் காலத்து சிறந்த சிந்தனயாளர்கள் பலருடன் நெருங்கிய உறவினைப் பேணியவர். அமெரிக்காவால் கவிழ்க்க முடியாமல் போன ஆட்சி அவருடையது. அமெரிக்காவால் அவரை சதிகள் மூலம் கொல்லவும் முடியவில்லை.அவருடன் பல ஆண்டு நேர்கண்டு எழுதப்பட்டது இந்த நூல்.

தமிழாக்கம்- நா.தர்மராஜன்

 

——————————–
56.பனி- ஓரான் பாமுக் ( நாவல்)
ஓரான் பாமுக்கின் படைப்புகளில் வெளிப்படையாக அரசியல் பேசும் நாவல் பனி. மதச்சார்புக்கும் சார்பின்மைக்கும் இடையிலான மோதலை வேகத்துடனும் திருப்பங்களுடனும் சொல்கிறது இந்த நாவல். ஒரு பனிக்காலத்தில் அந்த நகரத்திற்கு வந்து சேரும் பத்திரிகையாளன் “கா” வின் அனுபவங்களே இதன் கதை. இரட்டை ஆன்மா கொண்ட துருக்கியின் நிகழ்கால வரலாற்றையும் மானுட நிலையையும் நுட்பமாக முன்வைக்கும் படைப்பு.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
தமிழாக்கம்- ஜி. குப்புசாமி

20150814_173703 - Copy
57. *தலைமுறைகள் – நீல. பத்மநாபன் ( நாவல்)
——————————————————————–
நாவல் என்பது நவீன இதிகாசம், வாழ்வை இதிகாசம் போல் சித்தரிப்பவனே உயர்ந்த படைப்பாளி. நீல. பத்மநாபனிடம் இந்த அம்சம் மேலோங்கி இருக்கிறது. வாசகனுக்கு இதிகாச உணர்வைத்தரும் நவீனத் தமிழ் நாவல்கள் வெகு சொற்பம். மகத்தான நாவலாசிரியர்களோடு, வைக்கத்தகுந்தவர் நீல. பத்மநாபன். (முன்னுரையில் , வண்ண நிலவன் )
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
58. *முகலாயர்கள்- முகில் ( வரலாற்று பதிவு)
———————————————————————-
பாபர் முதல் பகதூர் ஷா வரையான முழுமையான 330 ஆண்டுகளின் வரலாறு. உண்மையில் ஒரு பிரமாண்டமான சரித்திர சமுத்திரம். முகலாயர்களின் எழுச்சி முதல் வீழ்ச்சி வரை தமிழில் விபரிக்கும் நூல் இதுவே. இந்திய தேசியம் என்னும் கருத்தாக்கம் தோன்றி வலுப்பெற்று, எழுந்து கோலோச்சத் தொடங்கிய கதையின் அடி நாதம் இதனுள் இருக்கிறது.
வெளியீடு- கிழக்கு
59 .*BOX கதைப் புத்தகம் ( நாவல்)
——————————————————————–
ஷோபா சக்தியின் மூன்றாவது நாவல் இது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி. யுத்தத்தின் ஊடும் பாவுமான கதைகளை சித்தரிக்கும் உபவரலாறு

வெளியீடு- கருப்புப் பிரதிகள்

20150820_17595460.* கொரில்லா ( நாவல்) ஷோபா சக்தி
———————————-
தேச எல்லைகளை பிளந்து கொண்டு பயணிக்க முனையும் மனித இருப்பின் அலைவுறும் வாழ்வை , புகலிடச் சூழலில் அகதி விண்ணப்பப் போராட்டங்களை , வட்டார வழக்கிலும், நவீன மொழியிலும் வாசகனுக்கு கடத்தும் ஆற்றல் மிகுந்த தற்புனைவு.
வெளியீடு- கருப்புப் பிரதிகள்
61* ம் . ( நாவல்) ஷோபா சக்தி
———————————————–
வெலிக்கடை சிறைப்படுகொலை, மட்டக்களப்பு சிறை உடைப்பு, இயக்கப் படு கொலைகள், என்கிற வரலாற்றுப் பின்னணியில் மனித இருப்பைப் புரிந்து கொள்ள முயலும் சிக்கலான பணியை வேகம் குன்றாமல் செய்கிறது இந்தப் புதினம்.
62. *முப்பது நிறச்சொல் ( கட்டுரை ,கதை, )ஷோபா சக்தி
———————————————————————-
2008 ம் ஆண்டு தொடக்கம் 2014ம் ஆண்டு வரை ஷோபா சக்தி எழுதிய 30 கட்டுரைகளின் தொகுப்பு
வெளியீடு- கருப்புப் பிரதிகள்

63 . *கண்டி வீரன் ( சிறுகதைகள் )ஷோபா சக்தி
———————————————————————-
2011- 2014 காலத்திற்குள் எழுதப்பட்ட 10 கதைகளின் தொகுப்பு.அரசியற் போரையும் புலம் பெயர்தலில் எதிர்கொள்கின்ற உளவியல் அவதியையும் ஒருங்கே பிரதிபலிக்கக் கூடிய கதைகள்.

64. *எவராலும் கற்பனை செய்ய முடியாத நான்
( நேர்காணல்கள் )ஷோபா சக்தி
——————————————————-
தமிழ்க்கவி, ஸர்மிளா செய்யித், பழ. ரிச்சர்ட், கருணாகரன் ஆகியோரின் நேர்காணல்கள், நிலாந்தனின் முன்னுரையுடன்.

—————————————————————————————————————

65.*சின்ன விசயங்களின் கடவுள் -அருந்ததி ராய் ( நாவல்)
1997ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு பெற்ற நாவல்
“மானுடத்தின் நிர்வாணத்தைப் பகிரங்கப்படுத்தும் இப்படியான புத்தகம், மிக அரிதாகவே காணக் கிடைக்கும் -Daily Telegraph
தமிழில் – ஜி.குப்புசாமி
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
—————————————————
66. *TOWARDS DEMOCRATIC GOVERNANCE IN SRILANKA
( A Constitutional Miscellany) Dr Jayampathhy Wickramaratne
“This collection of papers , a miscellany as it may seem, attempts to build a case for a power -sharing democracy , a strong rights regime and constitutionalism which are not only today’s desirables but th only way forward”
Published – Institute for Constitutional Studies
———————————————–
67.*தாய் – மாக்ஸிம் கார்க்கி ( நாவல்)
இதுவரை தமிழில் அதிகமாக வாசிக்கப்பட்ட நாவலாக இதனை கொள்ள முடியும். காலம் கடந்தும் வாழும் படைப்பு. கார்க்கியின் படைப்புகளினால் உந்தப்பட்டு , மக்கள் நலன்களுக்காக போராட புறப்பட்டவர்கள் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழில் – தெ.மு.சி. ரகுநாதன்
வெளியீடு- NGBH
———————————————
68. *Time will Write a Song for You
(Contemporary Tamil Writing from Srilanka)
“This anthology framed by war , brings together poems, stories and a memoir by tamil writers living in srilanka and beyond. Wide ranging and from resent decades , these pieces have been translated with great skill for the first time into English ”
Published – FRENCH Institute of pondicherry

 

20150821_175127

 

 

 

 

 

 

69.*புதியதோர் உலகம் – கோவிந்தன் ( நாவல்)
ஈழப் போராட்ட இயக்கங்கள் தொடர்பாக வெளிவந்த பதிவுகளில் முக்கியமான நாவல் இது.அராஜகங்களின் பிடிக்குள் சின்னாபின்னமாக்கப்பட்ட மனிதாபிமானங்களின் குரலாகவும் அது பேசுகிறது. அனுபவங்களின் நேரடி ரணங்களோடு ஒரு படிப்பினையை மீட்டுக் கொண்டு நம் காலத்தின் ஒரு கதையை நம்முன் வைக்கிறது.
வெளியீடு- விடியல் பதிப்பகம்
—————————————————
70 . * POLITICS AND SOCIETY – REGI SRIWARDENA (Selected Writings)20150822_173103
Volume-02
Edited by- A.J. CANAGARATNA
Published – International Centre for Ethnic Studies
———————————————–
71. ஜி. நாகராஜன் படைப்புகள்
நவீன தமிழின் முக்கியமான படைப்பாளிகளில் ஒருவரான ஜி. நாகராஜனின் இலக்கிய ஆளுமையை மிகத் துல்லியமாக அறிய உதவும் தொகுப்பு இது. நாளை மற்றுமொரு நாளே( நாவல்), குறத்தி முடுக்கு (குறு நாவல்) 33 சிறுகதைகள் , 3 கவிதைகள், கட்டுரைகளை உள்ளடக்கிய தொகுப்பு இது.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
————————————————
72.Protection of Minority Rights and Diversity
Edited by P. Wanasundera
Published – International Centre for Ethnic Studies
————————————————-
73. ஜே.ஜே. சில குறிப்புகள் – சுந்தர ராமசாமி ( நாவல் )
நவீன தமிழ் படைப்புச் சூழலை உலுக்கிய நாவல், தமிழ் படைப்புலகில் நவீனப் போக்கின் முன்னோடி எழுத்து. இதுவரை 15க்கும் மேற்பட்ட பதிப்புகளை கண்ட இந்த நாவல் இளம் தலைமுறை எழுத்தாளார்களையும் வாசகர்களையும் முதல் வாசிப்பிலேயே ஆரத் தழுவிக் கொள்ளும் வல்லமை கொண்டது.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
————————————————-
74. ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை
(செவ்வியல் அரசியல் பொருளாதாரம்)
எஸ்- நீலகண்டன்
– எந்தப் பெரு நகரத்தின் நடுவில் நின்று பார்த்தாலும் முதலாளியத்தின் அபரிதமான உற்பத்தித் திறனையும் , அதே சமயம் அதன் விளைவான ஏற்றத்தாழ்வுகளையும் வீணடிப்புகளையும் கண்கூடாகக் காணலாம். ஆடம் ஸ்மித் முதல் கார்ல் மார்க்ஸ் வரை ஐரோப்பிய முதலாளியம் பற்றிச் சிந்தித்த முக்கிய சிந்தனையாளர்களின் கருத்துரைகளை வரலாற்றுப் பின்னணியோடு இந் நூல் தெளிவாக அறிமுகப்படுத்துகிறது.
வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்

——————————————————————————————————————————————————————-

75.*ஒரு கறுப்புச் சிலந்தியுடன் ஒர் இரவு -அம்பை ( சிறுகதைகள் )
அம்பையின் ஐந்தாவது சிறுகதைத் தொகுப்பு இது.பெண்களின் உலகத்தினை பெண் மட்டுமல்ல, ஆண்களும் புரிந்து கொள்ள வேண்டுமென உணர்த்தும் எழுத்துக்கள் அம்பையினுடயவை. அதுவொரு சலுகையல்ல, பெண்களின் உரிமை, தனித்துவம் என்கிற அடிப்படை உரிமையிலிருந்து பிறப்பவை என்பதே இக்கதைகளின் ஊடான வாழ்வின் தர்சனம்.

வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
—————————————————
76 . * நந்தினி சேவியர் படைப்புகள்
( கதைகள்,கட்டுரைகள், பதிவுகள் )

மக்களின் ஆழ் மனங்களுக்குள் உருவாகும் மன எழுச்சியை, அவர்களின் துன்பவியல் வாழ்வை, புறவயமாக அதற்கேயுரிய கால நீட்சியுடன் கண்டடையும் முயற்சியாக நந்தினி சேவியரின் படைப்புலகம் அமைகிறது.

வெளியீடு- விடியல் பதிப்பகம்
—————————————————–

20150823_130855

77. இரண்டாம் ஜாமங்களின் கதை – சல்மா ( நாவல்)
பெண்களின் மொழி பெரிதும் மௌனத்தால் ஆக்கப்பட்டிருக்குமென சிந்தனையாளர்கள் பலர் கூறி வந்துள்ளனர். ஆனால் இடைவிடாத பேச்சுகளால் நிரம்பியுள்ள இந்தப் பிரதியும் பெண் மொழியின் பிரத்தியேக அம்சங்கள் கொண்டதாவே உள்ளது. நுண்ணுணர்வு கொண்ட வாசகர் இந்த உரையாடல்களின் வழியே வேறு உலகங்களுக்குள் செல்ல முடியும்.

வெளியீடு- காலச்சுவடு பதிப்பகம்
————————————————
78.மண்ட்டோ படைப்புகள்
(கதைகள், சொற்சித்திரங்கள், நினைவோடைகள் )
என் கதைகளில் தவறு என்று சொல்லப்படுவன எல்லாம் உண்மையில் அழுகிப்போன இந்த சமூக அமைப்பைத்தான் குறிக்கிறது. என் இலக்கியத்தினை எதிர்ப்பதை காட்டிலும் , இப்படிப்பட்ட இலக்கியங்கள் உருவாவதற்கு ஏதுவாக இருக்கும் சூழ் நிலையை மாற்ற முயற்சி செய்யுங்கள் .
– சதாத் ஹசன் மண்ட்டோ
வெளியீடு- புலம் பதிப்பகம்
———————————————–

79.*காண்டாவனம் – சண்முகம் சிவலிங்கம் (சிறுகதைகள்)

ஈழத்துக் கவிதைகள் பற்றிப் பேசுவோர் , எவ்வாறு சண்முகம் சிவலிங்கத்தையோ ,அவரது கவிதைகளையோ தவிர்த்துவிட்டுப் பேச முடியாதோ அதேபோல் காண்டாவனத்தின் வருகையின் பின்னர் ஈழத்தின் சிறுகதைகள் பற்றிப் பேசுவோரும் அவரது சிறுகதைகளை தவிர்க்க முடியாது என்பது தெரிய வரும்.
வெளியீடு – iPMCG inc – USA
—————————————————
80. * புளியமரத்தின் கதை – சுந்தர ராமசாமி ( நாவல்)
– முதல் பதிப்பு வெளியான போதே தீவிர வாசகர்களை ஈர்த்த இப்படைப்பு இதுவரை 18 பதிப்புகளைக் கண்டுள்ளது. மலையாளம், இந்தி போன்ற இந்திய மொழிபெயர்ப்புகளை கண்டதுடன், ஆங்கிலம், ஹீப்ரு, ஜேர்மன் மொழிகளிலும் வெளிவந்துள்ளது. நாவல் படைப்பிலக்கிய துறைக்குள் இந்த நாவலூடாக வந்தது தனக்கு முக்கியமானதாக இருந்ததாக சு.ரா எழுதுகிறார். ஒட்டுமொத்த இந்திய இலக்கியத்திலும் இந்த நாவல் ஒரு மைல்கல் என சொல்லப்படுகிறது.
வெளீயீடு- காலச்சுவடு பதிப்பகம்

————————————————-
20150830_18524281. *A Contemporary Tamil Prose Reader
with notes,translation and glossary
_ஆங்கிலமும் தமிழும்
The present reader contains a selection of 23 texts of contemporary prose,15 of creative writing and 8 of non-fiction,thereby providing a cross section of the myriad Tamil writings.The translations of the text has been revised with the inputs from native speakers of English.
வெளியீடு- Mozhi
—————————————————-
82. * பலஸ்தீனக் கவிதைகள் – தமிழில் எம். ஏ. நுஃமான்
(30 கவிஞர்களின் 109 கவிதைகள்)
அநியாயத்திற்கும் அடக்குமுறைக்கும் அடிபணிய மறுக்கும் மக்களின் எதிர்ப்புக் குரல்கள். உலகெங்கும் இத்தகைய அனுபவத்திற்குள்ளாகும் அனைத்து மக்களின் குரலாகவும் இவை ஒலிக்கின்றன. மனித உள்ளத்தில் நீதி உணர்வை உயிர்ப்பிக்கக் கூடிய வல்லமை இக்கவிதைகளுக்கு உண்டு.
வெளியீடு- அடையாளம்
——————————————————-
83. எரியாத நினைவுகள் – அசோகமித்திரன்
( அனுபவக் கட்டுரைகள் )
அசோகமித்திரனின் பல்துறை அனுபவங்களை, அவரது ஆளுமை வழியாகப் பார்ப்பதற்கு தக்க நூல் இது. தனிமனிதர்கள் பற்றிய நுண்மையான சித்தரிப்புகள் , அவரது படைப்புகளில் இடம் பெற்றதையும் தாண்டி இங்கு பதிவாகிறது.
வெளீயீடு- காலச்சுவடு பதிப்பகம்
—————————————————–
84. அக்னியும் மழையும்
– கிரீஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள்
நாடக ஆக்கத்தினைப் பொறுத்தவரை இந்திய அளவில் அபூர்வமான படைப்பாளிகளில் ஒருவராக கார்னாட் விளங்குகிறார்.ஹயவதனன், நாகமண்டலம், அக்னியும் மழையும்,துக்ளக், பலிபீடம் ஆகிய நாடகங்களின் மொத்த தொகுப்பு
தமிழில் – பாவண்ணன்
வெளீயீடு- காலச்சுவடு பதிப்பகம்
———————————————————————-

85.*யாழ்ப்பாணம் – கா.சிவத்தம்பி
சமூகம், பண்பாடு, கருத்துநிலை

யாழ்ப்பாண சமூகத்தின் இயங்கியல் விவரணம், அச்சமூகத்தில் மேலாண்மை பெற்று விளங்கும் கருத்து நிலைகள் பற்றிய ஆழமான நூல். யாழ் சமூக வரலாற்றை அறிந்து கொள்ள , பகுப்பாய்வுக்கு உட்படுத்த தேவையான , பேசப்படாத பல விடயங்களை , சமூக விஞ்ஞான நோக்கில் நமக்குத் தருகிறது.
வெளியீடு – குமரன் புத்தக இல்லம்
—————————————————
86. *உம்மத் – ஸர்மிளா ஸெய்யித் ( நாவல்)
– இருண்ட காலங்களில் பெண்கள் படும் பாடுகளின் கதை . முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த யுத்தம் மனிதர்களிடையே திணித்த அவலத்தினையும் நெருக்கடிகளையும் சொல்லும் கதை. தவக்குல், யோகா, தெய்வானை என்ற மூன்று பெண்முனைகளிலிருந்து நாவல் உருவம் கொள்கிறது.
வெளீயீடு- காலச்சுவடு பதிப்பகம்
————————————————-
87. *பட்ட விரட்டி The Kite Runner – காலித் ஹுசைனி ( நாவல்)
-ஆப்கானிஸ்தானின் முடியரசின் வீழ்ச்சி, சோவியத் படையெடுப்பு, மக்கள் வெளியேற்றம், மற்றும் தலிபான் ஆட்சி என பல்வேறு காலகட்டங்களின் நெருக்கடியான வாழ்வை குறிக்கும் படைப்பு இது. உலகெங்கிலும் 55 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல்லாயிரம் வாசகர்களை ஈர்த்த பிரதி இது .
– எதிர் வெளீயீடு
—————————————————-

85
88.89 * இலங்கையில் சமாதானம் பேசுதல்(தொகுதி- 01, 02)
– முயற்சிகள்- தோல்விகள் – படிப்பினைகள்
தொகுப்பு- குமார் ரூபசிங்க
திம்பு பேச்சுவார்த்தை தொடங்கி , இலங்கை -இந்திய ஒப்பந்தம் மற்றும் இலங்கை அரசு விடுதலைப் புலிகளுக்கிடையிலான அனைத்துப் பேச்சுவார்தைகளையும், இலங்கையின் அரசியல் நிலையையும் தொகுத்து வெளிவந்த ஆவணங்கள் இவை. சக வாழ்வு மன்றத்தினால் முதற்பதிப்பு வெளியிடப்பட்டன. கடந்த காலத்தினைப் பற்றிய மதிப்பீட்டுக்கும், சுய விமர்சனத்திற்கும், தவறுகளை இனம் காணவும் உதவும் ஆவணங்களில் இந்த தொகுப்புகளுக்கும் முக்கிய பங்குண்டு

வெளியீடு- அடையாளம்
——————————————————-
90 . தனிமைத் தளிர் – ஆர். சூடாமணி
( தேர்ந்தெடுத்த சிறுகதைகள் )
ஆழ்ந்த வாஞ்சையும் மனித நேயமும் எல்லாக் கதைகளிலும் பொதிந்திருக்கிறது. கலைந்த கூடுகளிலிருந்து பறக்கும் கிளிகளாய் , பொந்துகளிலிருந்து வெளிப்படும் அணில்களாய் சிதறிக் கிடக்கும் அவருடைய கதைகளை நண்பர்களாகிய நாங்கள் பொருக்கிக் கொண்டிருக்கிறோம். – அம்பை
வெளீயீடு- காலச்சுவடு பதிப்பகம்
—————————————————–

91.*ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ( நாவல்)
-ஜெயகாந்தன்
எழுதப்பட்டு ஏறத்தாழ முப்பத்தைந்தாண்டுகளாகி விட்ட பின்னரும் இன்றைய சூழலுக்கும் பொருந்துவதான வாசிப்பனுபவத்தைத் தருவதன் மூலம் இந்த நாவல் ஒரு கலைப்படைப்பாக நிமிர்ந்து நிற்கிறது.

—————————————————

92. * விசாரணை ( நாவல்)
– ஃப்ரண்ஸ் காஃப்கா
இது நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல , எளிதான விவரண முறையில் எழுதப்பட்ட கதையுமல்ல.
இது நேர்கோட்டில் செல்லும் கதை அல்ல , எளிதான விவரண முறையில் எழுதப்பட்ட கதையுமல்ல. ஒரு நிலைமையின் பல்வேறு புள்ளிகளை ஒரே நேரத்தில் எழுத்தில் பதிவு செய்ய இந்த நாவலில் காஃப்காவால் முடிந்திருக்கிறது.
——————————————————————————
93. *சாய்வு நாற்காலி -தோப்பில் மீரான்
இந்திரிய சுகங்களுக்கு அடிமையான நிலவுடமைச் சமூகத்தின் கடைசிக் கண்ணியான முஸ்தபாக் கண்ணிடம் சக்கோலி தின்பதற்காகவும் ,குமரிப் பெண்ணைக் கூடுவதற்காகவும் பெயர்த்து விற்ற கதவுகளையும் கட்டளைகளையும் தவிர எஞ்சி இருப்பது அதபு பிரம்பும் சாய்வு நாற்காலியும்தான். 1997ம் ஆண்டுக்கான சாகித்திய அகதமி விருதினை இந்த நாவல் பெற்றுக் கொண்டது.
——————————————–
91

94. விலங்குப் பண்ணை – ஜார்ஜ் ஆர்வெல் -( நாவல்)
ஜார்ஜ் ஆர்வெல் பிரச்சார இலக்கியத்திலே சிறிதும் நம்பிக்கையற்றவர்.ஒரு தலைமுறையின் மனச்சாட்சி என்று வேண்டுமானால் அவரைச் சொல்லலாம். அதன் காரணமாகத்தான் அவரால் விலங்குப் பண்ணையையும் 1984ஐயும் எழுத முடிந்தது.
தமிழில் – க. நா.சு
————————————–
95. இஸ்தான்புல் – ஒரு நகரத்தின் நினைவுகள்
– ஒரான் பாமுக்
இஸ்தான்புல் ஒரு பண்பாட்டின் மையமாகவும் மாற்றங்களின் திருப்பமுனையாகவும் மனிதர்களின் கதைக்களமாகவும் வரலாற்றின் சின்னமாகவும் மாறுகிறது… பாமுக்கின் படைப்பாற்றல் வழியாக.. தான் பிறந்து வளர்ந்த ஒரு நகரத்தினை நுண்ணியதாக எழுதுவதற்கு அவரது படைப்பாற்றல் கைகொடுக்கிறது.
தமிழில் – ஜி. குப்புசாமி
————————————
96. தி. ஜானகிராமன் சிறுகதைகள்

– சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தவர். மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர்.ஜானகிராமனின் அனைத்துக் கதைகளையும் உள்ளடக்கிய 1000க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்ட பெருந் தொகுப்பு இது.

——————————————————

*97.புதுமைப்பித்தன் கதைகள் ( முழுத் தொகுப்பு)
—————————————————————————
இத்தொகுப்பில் புதுமைப்பித்தன் கதைகள் அனைத்தும் இடம் பெற்றுள்ளது. காலவரிசையில் கதைகள் தொகுக்கப்பட்டுள்ளன. புதுமைப்பித்தனை தேடி வாசிக்கும் வாசகர்கள் நாளுக்கு நாள் பெருகியே வருகிறார்கள்.தமிழ் சிறுகதைப் படைப்பாளி ஒருவர் புதுமைப்பித்தனை வாசிப்பதன் மூலம் மேலும் செழுமைப்படுத்தப்படுகின்றாள்/ன். வாசகர்களுக்கும் புதிய புதிய வாழ் அனுபவங்கள் நிறைந்து கிடக்கிறது.
பதிப்பாசிரியர்- ஆ.இரா. வேங்கடாசலபதி
98. மன வளமான சமுதாயம் – எரிக் ஃபிராம்
– தமிழில் – ராஜ்கௌதமன்
————————————————————–
இலட்சியங்களும் நம்பிக்கைகளும் இல்லாத மானிட சமுதாயங்கள் வரலாற்றில் எப்போதும் இல்லாமல் இருந்ததில்லை. மானிடப் பரிமாணத்திற்கு இவை இன்றியமையாத ஊக்கங்கள், பிடிமானங்கள், அகவயமான உந்துதல்கள்.இருபதாம் நூற்றாண்டின் மக்களாட்சி முறை, மற்றும் தப்பித்தல் மனோபாவம், அந்நியமாதல் போன்ற விடயங்களை ஆழ்ந்த20150926_172144 பார்வையோடு முன்வைக்கும் நூல் இது. இந்த நூலாசியர் உலகப் புகழ் பெற்ற சமூகத் தத்துவ ஆசிரியராவார்.

 

99.அந்தேரி மேம்பாலத்தில் ஒரு சந்திப்பு- அம்பை

பல சிறிய, பெரிய ஊர்களிலிருந்து நிதம் பல்லாயிரக் கணக்கான மனிதர்கள் வந்து குவியும் மும்பையின் வாழ்க்கைப் போக்கில் கலந்திருக்கும் ஆண் பெண் உறவுச் சிக்கல்கள், மகிழ்ச்சி, குதுகலம், ஏமாற்றம், ஏக்கம், சோகம், வக்கிரம், வன்முறை கலந்த வாழ்வை துப்பறியும் பெண் ஒருத்தியின் தொழில்முறை அனுபவங்கள் மூலமாகக் கூறும் மூன்று நீண்ட கதைகள்.

100. * வரலாறும் வழக்காறும் – ஆ.சிவசுப்பிரமணியன்
———————————————————————————–
மக்களிடையே வழங்கும் வாய்மொழி வழக்காறுகளும் வழிபாட்டு முறைகளும் வரலாற்று வரைபிற்கான ஆதாரங்களாகும். இது தொடர்பான பத்து கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். இந் நூலாசியர் தமிழில் அறியப்பட்ட சமூக ஆய்வாளராகும்.
101. * பிள்ளை கடத்தல்காரன் – அ.முத்துலிங்கம்
—————————————————————————

20 சிறுகதைகள் ,பல்வேறுபட்ட நிலப்பரப்புகள் , மாறுபட்ட மனிதர்கள், பரிச்சயமற்ற கலாசார சூழல்களின் ஊடாக நிகழும் இக்கதைகளின் ஆதாரம் அங்கதம் கலந்த உணர்வு. அதேபோல் மானிட உணர்வுகளின் ஏக்கமும் நெகிழ்வும் துயரமும் அழியாத சித்திரமாய் இக்கதைகளில் விரவிக் கிடக்கின்றன.
102. *மோக முள் – தி. ஜானகிராமன்
——————————————————–
மனிதனின் பலத்தையும் பலவீனத்தினையும் நுண்ணிய வகையில் வெளிப்படுத்தும் இந்த நாவல் தமிழில் ஒரு சாதனையாக கொண்டாடப்பட்டது. காலத்தினை பின்னுக்கு தள்ளிவிடும் செவ்வியல் படைப்பு இது.
———————————————————————————————-

103.*ஊரடங்கு இரவு
பஷரத் பீர் (ஆசிரியர்), க.பூர்ணச்சந்திரன் (தமிழில்)
—————————————————————————–
காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கம் 1989இல் வெடித்தபோது பஷரத் பீர் பதின்வயதுகளில் இருந்தவர். பின் வந்த ஆண்டுகளில் பாதுகாப்பு வேண்டி, பீர் அலீகட்டிற்குப் படிக்க அனுப்பப்பட்டார். பின்னர் தில்லியில் பத்திரிகைப் பணி ஏற்றார். ஆனால், கோபமுற்ற, மேன்மேலும் மூர்க்கமாகிய, துணையற்றுப்போன காஷ்மீர் அவரிடமிருந்து ஒருபோதும் வெகு தொலைவில் இல்லை.

 

104.*சிலிர்ப்பு தேர்ந்தெடுத்த சிறுகதைகள்
தி.ஜானகிராமன்
————————————————————-
ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த 29 கதைகளின் தொகுப்பு நூல்.
சிறுகதை எழுத்தாளர்களில் அதிக வசீகரம் கொண்டவர் தி.ஜானகிராமன். ஆபூர்வமான அழுகுணர்ச்சிகொண்ட இவர் நினைவில் நீங்காது நிற்கும் அற்புதமானபல சிறுகதைகளைப் படைதிருக்கிறார். சிருஷ்டியின் விசித்திரங்களை மேடையேற்றி, கடைசி நாற்காலியில் அமர்ந்து, புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தவர்.மனிதனின் வீழ்ச்சியையும் பிறழ்வையும் தத்தளிப்பையும் அனுதாபத்துடன் பார்த்தவர். ஒழுக்கம், தர்மத்தின் விதிகள் இவற்றைத் தாண்டி உணர்வு நிலைகளே மனித வாழ்வைத் தீர்மானிக்கின்றன என்பதில் நம்பிக்கை கொண்டிருந்தவர்.
105.*கொற்கை- நாவல்
ஆர்.என்.ஜோ டி குருஸ்
————————————————————————————–
காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது.

 

12122665_1060910310585631_3887559520489984530_n106.*குறத்தி முடுக்கு – நாவல்
ஜி.நாகராஜன்
—————————————————————————————–
Non-linear என சொல்லப்படும் இலக்கிய வகையினை இந்நாவல் கொண்டுள்ளது. பக்கங்களும் அதில் கதைகளும் சிதர வாசகன் அதனை, பிரதியினை மறு உருவாக்கம் செய்கிறான். நாவலின் பக்கங்கள் ஒவ்வொன்றும் காலத்தினை கடந்து இப்போது எழுதப்பட்டது போலவே நமக்கு தோன்றுகிறது.
கதை என்ன என்பதை எண்ணி நாவலினை வாசிக்க ஆரம்பித்தால் அது வாசகனை நிச்சயம் குழப்பும். குழப்பும் என்றால் அதனை தாண்டி வாசிக்க முடியாதா என்றால் அப்படியில்லை. பக்கங்கள் கடந்தவாறே நாவல் முடியுமே தவிர கதை தேடுபவர்களுக்கு ஒன்றும் சிக்காது. இது எழுத்தாளனின் தேடல்.

 

107.*ஊரும் சேரியும்
சித்தலிங்கையா (ஆசிரியர்), தி.அ.ஸ்ரீனிவாஸன் (தொகுப்பு)
——————————————————————————————-
நம் நாட்டில் எல்லோருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாக கல்வி இல்லை. அத்தகு சூழலை உருவாக்க இயலாததற்கான காரணங்களில் வறுமையும் ஒன்று. வறுமைக் கொடுமையோடு சாதிக்கொடுமையும் சேர்ந்துகொள்ளும் போது இயலாமையும் ஆற்றாமையும் இன்னும் தீவிரமடைகின்றன. வறுமைக்கான காரணத்தையும் சாதிக்கான காரணத்தையும் என்னவென்றே அறியாத ஓர் இளம்நெஞ்சம் இக்கொடுமைகளிடையே உழல நேரும்போது படும் பாடு கொசநஞ்சமல்ல.

 

108.*வெல்லிங்டன்- நாவல்
சுகுமாரன்
——————————————————————————-
வெல்லிங்டன் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ராணுவத் தேவைகளுக்காக 1852 – 1860 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட ஊர். இந்த வரலாற்றுப் பெருமையைத் தவிர தனிப்பட்ட முக்கியத்துவம் இல்லாத இடம். இன்றும் ராணுவத் தளத்தை வைத்தே ஊர் அறியப்படுகிறது.
அந்த உருவாக்கத்தில் நீலகிரி மலையின் பூர்வகுடியினரும் முதலாவது குடியேற்ற இனத்தவரும் தமது நிலத்திலிருந்து பெயர்ந்தனர். அந்நியர்களும் சமவெளி மனிதர்களும் மலையேறி வசித்தனர். அவர்கள் அந்த இடத்தால் அறியப்பட்டனர். காலப்போக்கில் அந்த ஊர் அதன் மனிதர்களால் அறியப்பட்டது. எனினும் அந்த அறியப்படாத மனிதர்களை வரலாற்றின் மௌன இடைவெளிக்குள் இந்த நாவல் தேடுகிறது. அந்த வகையில் இது சரித்திர இடத்தின் கதை. இன்று வெல்லிங்டனின் வரலாறு சில வரிகளிலாவது எழுதப்பட்டிருக்கிறது.

109.*ஈழமும் தேசிய இனப்பிரச்சினையும்
– சமரன் வெளியீட்டகம்
1983ம் ஆண்டிலிருந்து ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பாக வெளியான 21 ஆய்வுகளின் தொகுப்பு நூல் இது. ஏகாதிபத்திய அமெரிக்கத் தலையீடு, இந்தியத் தலையீடு தொடக்கம், இறுதி யுத்தத்தில் ஒரே நாளில் 40 ஆயிரத்திற்கும் மேலாக மக்களை கொன்றொழித்த துயரத்தினை, இடதுசாரிப் பார்வையில் பதிவு செய்யும் ஆவணம் இது.
——————————————————-
110.*யாருக்காக இந்த மணி ஒலிக்கிறது- ( நாவல்)
For Whom the Bell tolls
– எர்னெஸ்ட் ஹெமிங்வே- தமிழில் சி. சீனிவாசன்
ஹெமிங்வேயின் புகழ்பெற்ற படைப்பு இது. உலகளவில் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டதுடன், தமிழ் வாசகர்களினது நீண்ட காத்திருப்புக்கு பின் தமிழில் வருகிறது.
——————————————————————
111.*அடகு வைக்கப்பட்ட இந்தியா
– நாகி ரெட்டி , தமிழில் தோழர் கோவை ஈஸ்வரன்
நிலவும் பிற்போக்கு சமூக அமைப்பின் இயல்பை அம்பலப்படுத்தும் வகையிலும் ,இந்திய ஆளும் வர்க்கங்களின் ஏதோச்சதிகாரத்துடன் கூடிய ,சுரண்டல் தன்மை வாய்ந்த கொள்கைகளை அம்பலப்படுத்தும் வகையிலும் ஜனநாயகத் தன்மை கொண்ட அறிவுஜீவிகளின் எழுத்துக்களிலிருந்து அவர்களின் சொந்த வார்த்தைகளிலேயே எடுத்தாளப்படுகிறது.
————————————————————————————-
112.*ஈழத்தமிழர் உரிமைப் போராட்ட வரலாறு
– கி.இலக்குவன்
ஒவ்வொரு தேசிய இனமும் தன்னுடைய மொழியை,பண்பாட்டை , தனித்துவங்களை பாதுகாத்து வளர்ப்பதற்கான சூழல் நிலவ வேண்டும். அவ்வாறு இல்லாத போது ,உரிமைக்கான போராட்டங்கள் வெடிப்பது என்பது தவிர்க்க முடியாதது. இந்தப் பின்னணியில்தான் ஈழத்தமிழரின் போராட்டமும் உள்ளது. சமத்துவமும் கவுரவமுமான வாழ்க்கைக்காகப் போராடிவரும் ஈழத்தமிழரின் ஒரு நூற்றாண்டு போராட்ட வரலாறு , காய்தல் உவத்தலின்றி உள்ளதை உள்ளவாறு முன் வைக்கிறது.

 

12106924_1060987853911210_2634732797745422772_n

——————————————————————————-
113.*வாழ்க்கை , ஒரு பலப்பரீட்சை
-அந்தோன் செகாவ் – தமிழில் சுப்பாராவ்
அந்தோன் செகாவ் ரஷ்யாவை சேர்ந்த அறியப்பட்ட சிறுகதையாளர், நாவலாசிரியர். இவரது கதைகள் துன்பப்படும் மக்களின் வாழ்க்கையை சொல்கின்ற அதே நேரம் கலை நயமிக்கதாகவும் அமைகிறது. இவரது இரு நாவல்களான வாழ்க்கை, ஒரு பலப்பரீட்சை ஆகியவை ஒரு தொகுப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
———————————————-
114. காந்தியை அறிதல்
-தரம்பால்
சிந்தனை ஆழமும் விரிவும் கொண்ட இந்தக் கட்டுரைகளில் , இந்தியாவின் முக்கிய வரலாற்று ஆசிரியர்களில் ஒருவரான தரம்பால் காந்தி பற்றிய தனது பார்வையை முன்வைக்கிறார். காந்தியை ஒரு புதிய கோணத்தில் பார்க்க இந்த எழுத்துக்கள் நமக்கு வாய்ப்பினைத் தருகிறது.
———————————————————————-

115. பசித்த மானிடம்
-கரிச்சான் குஞ்சு
தமிழில் அதிகம் படிக்கப்பட்ட நாவல்களில் ஒன்று இது. காமம்,பணம்,அதிகாரம் என மனிதனின் அளவற்ற பல்வேறு பசிகள் பற்றிப் பேசுகிறது.எவ்வளவு தீனி போட்டாலும் அடங்காத இந்தப் பசிகள், ஒரு கட்டத்திற்குப் பின் வேகமடங்கி வெறுமையை நோக்கிச் செல்லும் பயணத்தையும் படைப்பாளி சித்தரிக்கிறார்.முட்டி மோதி வாழ்க்கையில் மேலே வரும் மனிதர்கள் பல்வேறு இன்பங்களையும் துய்த்தபின், கடைசியில் அடைவது என்ன எனும் கேள்வியை வலுவாக எழுப்புகிறது இப்படைப்பு.

—————
116. தமிழகத்தின் ஈழ அகதிகள்
-தொ.பத்தினாதன்
ஈழத்திலிருந்து வந்து, தமிழகத்தில் அகதிகளாக இன்னும் முகாம்களில் வாழும் மக்களின் துயரங்களை சொல்கிறது இந்த நூல். அவர்களைப்பற்றி யார் கவலைப்படுகின்றனர்?.அரச அதிகாரம் அவர்களை நடாத்தும் விதம், அவர்களின் துன்ப வாழ் நிலை, எப்போதும் கண்காணிப்பு எனும் அவலம், எனப் பல்வேறு கதைகளை சொந்த அனுபவத்திலிருந்து இந்த நூல் முன்வைக்கிறது. நமது சமூகம் அவர்களை தமது அரசியலுக்கு அவ்வப்போது ஊறுகாய் போல் பாவிப்பதை உண்மையான அக்கறை எனக் கொள்ளலாமா என்கிற வினாவை எழுப்பவும் செய்கிறது.

—————————
117.மூதாதையரைத் தேடி...
-சு.கி.ஜெயகரன்
இந்த நூலில் குலம்,இனம், உறவு, என்கிற பதங்கள் பரந்த அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகின்றன. பலகோடி ஆண்டு வரலாறு கொண்ட பூமியில் எத்தனையோ விதமான உயிரினங்கள் தோன்றி மறைந்துள்ளன. அவற்றில் பல அழிவுற்றன,பல உயிர்தரித்தன.இயற்கையோடு போராடி தம்மை தக்க வைத்துக் கொண்டுள்ள மனித இனம் பற்றிய ஒரு ஆய்வுதான் இந்த நூல்.

——————————————
115118. அம்மா வந்தாள் ( நாவல் )
-ஜானகிராமன்
மனித உறவுகள் நியதிக்கு கட்டுப்பட்டவை என்றும், இல்லை அவை உணர்ச்சிகளுக்கு வசப்படுபவை என்றும் இரு வகையான கருத்தோட்டங்கள் உள்ளன. இந்தக் கருத்தோட்டங்களின் சாரமாகவே மனித வாழ்வு இருக்கிறது. இருக்கும் என்பதை வலியுறுத்துகிறது இந்த நாவல். இவற்றிற்கு இடையிலான ஊசலாட்டத்தையே கலையாக்கி நமக்குத் தருகிறார் ஜானகிராமன் . தமிழில் வெளிவந்த மீறலின் முதல் பிரதியாக இதனை படிக்கலாம்.

————————————-
119. அர்ப்பண வாழ்வின் வலி சுமந்த மனிதன்
டேவிட் ஐயா
காந்தீயம் தொடர்பாகவும் டேவிட் ஐயா தொடர்பாகவும் எழுதப்பட வேண்டி உள்ள விரிவான ஆய்வு முயற்சிகளுக்கான தொடக்கப் புள்ளியை அழுத்தி வலியுறுத்துவதே இத் தொகுப்பின் நோக்கமாகும். இதில் உள்ள எழுத்துக்களைப் படிக்கின்ற போது பல்வேறு விடயங்களை , ஒரு காலகட்டத்தின் சமூக, அரசியல் வரலாறுகளை படிக்க, தெரிந்து கொள்ள , கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள தலைமுறைகளுக்கு விரிவாகவும் , வரலாற்று நேர்மையுடனும் எழுதப்பட வேண்டிய தேவை நம்முன் இருக்கிறது என்பதை உணரச் செய்வது தவிர்க்க முடியாததாக மாறி விடுகிறது.

—————————————
120. அந்தரத்தில் பறக்கும் கொடி (கட்டுரைத் தொகுப்பு )
– சுந்தர ராமசாமி
இலக்கிய விமர்சனம், அனுபவப்பதிவுகள்,சமூக நிகழ்வுகள் குறித்த எதிர்வினைகள், ஆளுமைகள் பற்றிய மதிப்பீடுகள், என ஆசிரியரின் உரை நடை எழுத்துக்களின் ஒரு பகுதித் தொகுப்பு இந்த நூல். சீரிய வாசகர்கள் தமது வாசிப்பு தேவைக்காக அவசியம் வாசிக்க வேண்டிய தொகுப்புகளில் இதுவும் ஒன்று.

 

121. இரத்தப் பூ இதழ்கள் (கென்ய நாவல்)
-கூகி வா தியாங்கோ
தமிழில் – சிங்கராயர்
ஆபிரிக்காவின் மிக முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவரான கூகி வா தியாங்கோ 2014ம் ஆண்டு நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட இவரது மற்றுமொரு நாவலான “சிலுவையில் தொங்கும் சாத்தான் “ தமிழ்ச்சூழலில் இவருக்கொரு வாசகப்பரப்பினை உருவாக்கியது. இந்த நாவல் வெளிவந்தவுடன் கென்ய அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவரது கைதுக்கு எதிராக உலக அளவில் பல்வேறு போராட்டங்கள் நடந்தன. இதுவரை இவரது 18 நூல்கள், நாவல், சிறுகதைத் தொகுப்பு, நாடகங்கள், சிறைக்குறிப்புகள், கட்டுரைத் தொகுப்பு என வெளிவந்துள்ளது. கலிபோர்னிய பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகவும், அப்பல்கலைக்கழகத்தின் சர்வதேச எழுத்து ,மற்றும் மொழிபெயர்ப்புத்துறையின் இயக்குனராகவும் பணிபுரிகிறார்.

—————————————————————–
122. மெய்யியல் (கிரேக்கம் முதல் தற்காலம் வரை)
-எம்.எஸ்.எம். அனஸ்
ஆதிகிரேக்க காலம் முதல் பல்வேறு மெய்யியல் வரலாற்றுக் கால கட்டங்களில் சிந்தனைகளில் நிகழ்ந்த மாற்றங்களும் பின்னணிகளும் இந்த நூலின் உள்ளடக்கமாக இருக்கிறது. மெய்யியலின் தன்மை, பிரச்சினை, அணுகுமுறைகள், அதன் தனித்துவம் பற்றிய பரிசீலனையாகவும் வரலாற்று ஒட்டத்தின் வழியாக மெய்யியலை அறிந்து கொள்ளும் முயற்சியாகவும் இந்த நூல் அமைகிறது.

——————————————————
123.தமிழ்மொழி அரசியல்
-சு..இராசாராம்
மொழி ஒரு மக்கள் பிரிவின் விளைச்சல். கடந்த 25 வருடங்களுக்கு மேலாக இந்தியா, இலங்கை உட்பட புலம்பெயர் நாடுகள் வரை நிலவி 126வரும், மொழி, அரசியல், பொருளாதாரம், பண்பாடு போன்ற தளங்களில் உள்ள விடயதானங்களை, பல்வேறு அறிவுமிகுந்த சிந்தனையாளர்களால் எழுதி விவாதிக்கப்பட்ட 44 கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல்.

———————————————–
124. சிறு புள் மனம்
-திருமாவளவன் கவித்தொகை
துயரமே மேலோங்கி நிற்கிற கவிதைகள். புகலிட வாழ்வின் இன்னுமொரு பக்கத்தினை சொல்பவை. வாழ்வின் முழுமையை பிரதிபலிக்கின்ற கவிதைகள் இவை. வாழ்வுக்கும் மரணத்திற்குமிடையே திருமாவளவன் எழுதிய கவிதைகளில் இருந்து, அவரால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.

—————————————————
125. பொய்த் தேவு ( நாவல்)
– கா. நா.சு
தயவு தாட்சண்யமில்லாத விமர்சன எழுத்திற்கு பெயர்பெற்றவர் கா. நா.சு. பொய்த்தேவுடன், அசுரகணம், பித்தப் பூ, தாமஸ் வந்தார் ஆகிய 4 நாவல்களை தமிழ் இலக்கிய உலகுக்கு தந்து மறைந்து விட்டார். சமூகத் தளத்தில் வாழும் அனைத்துவகை மனிதர்களையும், வெவ்வேறு தளங்களில் பிரிந்தும் இணைந்தும் உருவாகும் உறவுக் கண்ணிகளை நுட்பமாக சித்தரிக்கிறது இந்த நாவல். ஒரு ஊரின் வரலாறு என்பது, சிறந்த மனிதர்களின் வரலாறு மட்டுமல்ல, சமூக அடுக்கின் கீழ் வாழும் மனித உயிரிகளையும் உள்ளடக்கியதுதான் என்பதை வலியுறுத்துகிறது இந்தப் படைப்பு.

——————————————————–
126. வ.ஐ.ஜெயபாலன் குறுந்தொகை
ஜெயபாலனின் தேர்வு செய்யப்பட்ட 90 கவிதைகளின் தொகுப்பு. சாகிற வரைக்கும் வாழுகிற வயசு என சொல்லும்  ஈழத்தின் முக்கிய கவிஞனின் படைப்புகள்.

——————————————————————————————————-

127. கிராம்சி- சிறைக்குறிப்புகள்
-Seletion from The Prison Notebooks of Antonio Gramsci
தமிழில் – வான் முகிலன்
உலகின் முதல் பாசிச அரசு என வர்ணிக்கப்படும் இத்தாலிய அரசால் 1926ம் வருடம் கைது செய்யப்பட்ட அந்தோனி கிராம்சி, சிறையில் இருந்த போது சுமார் 3000 பக்கம் தனது சிறைக்குறிப்புகளை எழுதினார். மருத்துவக் காவலில் வைக்கப்பட்ட போது அக்குறிப்புகளை கைமாற்றினார். அவர் மரணித்த பின் இத்தாலிக்கு வெளியில் அவை தொகுக்கப்பட்டு நூலானது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பகுதிக் குறிப்புகளே இவை.
சிவில் சமூகக் கருத்தியல் பற்றிய படிப்பின் போதும், விவாதங்களின் போதும் கிராம்சி அதிகம் தேவைப்படுபவராக இருக்கிறார். கிராம்சியின் உலகப் புகழ்பெற்ற இந்த நூல் காலம் தாழ்த்தியே தமிழுக்கு வந்துள்ளது.

————————————————-
130128. புயலிலே ஒரு தோணி ( நாவல்)
-ப.சிங்காரம்
மனித வாழ்வு தவிர்க்க முடியாமைகளினால் ஆன பெரும் நாடகம். சாத்தியங்களின் எல்லையின்மைக்கும், மானிட வாழ்வின் இன்றியமையாமைக்கும் இடையேயான உச்சகட்ட மோதலையே பேரிலக்கியங்கள் காட்டுகின்றன. ஆனால் இந்த நாவல் இவ் உள்மோதலை கணக்கில் கொள்ளவேயில்லை. ஒன்றொடொன்று உறவற்ற மிதக்கும் தனிப்புள்ளிகளாக ஒவ்வொன்றையும் கண்டு நகர்ந்து முடிகிறது அது. அதாவது வாழ்வை விலகி நின்று வேடிக்கை பார்க்கிறது.

——————————————————–
129. உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
-ஜான் ரீடு – தமிழில் , ரா.கிருஷ்ணையா
நவம்பர் புரட்சி நிகழ்ந்த நாட்களில் அதனை நேரில் பார்த்த ஒரு அமெரிக்க இடதுசாரியால் எழுதப்பட்ட நூல் இது. சமூக மாற்றத்தைக் கோரும் சமூக சக்திகள் இந்த நூலின் உள்ளடக்கத்தால் பெரிதும் கவரப்பட்டுள்ளனர்.பல மாயைகளை உடைக்கும் தன்மையும், படிப்போர் மனதில் சமூக மாற்றத்திற்கான பணியில் நம்பிக்கையையும் தருகிறது உள்ளடக்கம்.

———————————————–
130. சமகால உலகக் கவிதை
-தொகுப்பாளர் –பிரம்மராஜன்
58 உலகக் கவிஞர்களின் கவிதைகளை திரட்டித்தரும் இத்தொகுதி, கிழக்கு ஐரோப்பா தொடக்கம் ஆசியா நாடுகள் வரையிலான கவிஞர்களை பிரதி நிதித்துவம் செய்கிறது. இதில் பல முக்கிய கவிஞர்கள் என சொல்லத்தக்கவர்கள் முதன்முறையாக தமிழுக்கு அறிமுகமாகின்றனர். உலகளாவிய முக்கிய பெண் கவிஞர்களின் கவிதைகள் இத்தொகுப்பில் இடம் பெறுவது இன்னுமொரு சிறப்பாகும். பாப்லோ நெருதா, ராபர்ட் யூவாரோஸ் ஆகிய லத்தீன் அமெரிக்க கவிஞர்களின் படைப்புகளும் இந்த நூலுக்கென மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

——————————————————————–
.
131. நிகழ்ந்த போது எழுதப்பட்ட வரலாறு
– Monthly Review கட்டுரைகள்
1949 தொடக்கம் 1998 வரையில் உலகளவில் நடந்த முக்கிய விடயங்களையிட்டு ,அரசியல் சமூக விமர்சனத்திற்கு உலகப்புகழ் பெற்ற இதழான Monthly Reviewவில் வந்த பதிவுகள் .இவ்விதழ் கடந்த 65 ஆண்டுகளில் உலக நிகழ்வுகள் குறித்து வந்த கட்டுரைகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட 24 கட்டுரைகளின் தமிழ் மொழிபெயர்ப்பு இது.

—————————————————————————
132. அந்நிய நிலத்தின் பெண்- கவிதைத் தொகுதி
-மனுஷ்ய புத்திரன்
அடர்ந்த கானகம் ஒன்றின் எண்ணற்ற வாசனைகளாலும் ஓசைகளாலும் நிரம்பியவை மனுஷ்யபுத்திரனின் கவிதைகள். நம் காலத்தின் மனித சாரத்தை இக்கவிதைகள் வெகு ஆழமாகத் தீண்டுகின்றன.

————————————————————————

54. கறுப்பு அடிமைகளின் கதை ( நாவல்)
தமிழில் – வான் முகிலன்
அடிமைத்தனத்திற்கு எதிரான இந்தப் படைப்பு, உலகளவில் அதிகம் வாசிக்கப்பட்டதுடன் 37 மொழிகளில் வெளிவந்துள்ளது. ஆங்கிலத்தில் UNCLE TOM’S CABIN என்ற தலைப்பில் வெளிவந்தது. சுதந்திரத்தின் சின்னமாக மேட்டிமைவாதிகளாலும், ஆழமாய் அறியாதவர்களாலும் வர்ணிக்கப்படும் அமெரிக்காவின் மோசமான பக்கத்தினை இந்தப் புதினம் நமக்கு காட்டுகிறது.அமெரிக்கர்களால் பண்ணை அடிமைகளாக கொடுமைப்படுத்தப்பட்ட ஆபிரிக்க கறுப்பின மக்களின் துயரம் இந்த நாவல் முழுக்க இழையோடுகிறது.

—————————

53. கியூபா புரட்சிகர யுத்தத்தின் நினைவுகள்
-சே குவரா
இதுவொரு வரலாற்று ஆவணம். சேயின் குறிப்புகள் போராட்டத்திற்கும், அயராத பணிக்கும் மத்தியில் எழுதப்பட்டவை.கியூபா புரட்சிகர யுத்தம் பற்றிய நினைவுகள் தனித்துவமான, செழுமையான நடையில் எழுதப்பட்டிருந்தாலும் அதனுடன் சேர்த்து இத்தொகுப்பில் சேயின் விடுதலைக்கான துடிப்பையும் வேகத்தையும் காண முடியும். இக்குறிப்புகள் விலைமதிப்பற்ற வரலாற்று ஆவணமாகத் திகழ்கின்றன.

———————————————————–

52. யாருடைய எலிகள் நாம் (கட்டுரைத் தொகுப்பு)20151128_194059
-சமஸ்
இதழியலுக்காக எழுதப்பட்ட கட்டுரைகள் இவை. சமகால உலகையும், வரலாற்றையும் பார்க்க இக்கட்டுரைகள் நமக்குத் துணை புரிகிறது.தமிழ் அரசியல் தொடக்கம், இயற்கை, சூழலியம், போர், மொழி,கல்வி, சுதந்திரம், ஜன நாயகம், பொருளாதாரம், வறுமை, மனித வாழ்வு,ஊடகம் உட்பட சர்வதேச விவகாரங்களையும் உள்ளடக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட சமஸின் கட்டுரைத் தொகுப்பு இது.

=================================

51. எதிர் சினிமா
-ரதன்
நவீன யுகத்தின் மானிட நெருக்கடிகளையும் போராட்டங்களையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட அரிதான சினிமாக்களைப் பற்றியே இந்த நூல் பேசுகிறது. சினிமாவின் அரசியலே இந்தக் கட்டுரைகளின் மையமும் விரிவும்.

=================================
50. காந்திஜியின் இறுதி 200 நாட்கள்
– வி. ராமமூர்த்தி
காந்தியின் வாழ்க்கையின் அவருடைய இறுதி நாட்கள் பல பேருண்மைகளை உணர்த்தவல்லவை.வன்முறை நிலவிய அந்த நாட்களில் அவர் தொடர்ச்சியாக பயணம் செய்தார், கண்துஞ்சாது மோசமான நெருக்கடி நிலைக்கு மத்தியில் வேலை செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுடன் இருந்தார்.பலரையும் எதிர் கொண்டார். அந்த நாட்களை நம்முன் தருகிறார் இந்த நூலாசிரியர்.

=======================================

49. மனித அறிவுத் தேடலின் முழுக்கதை
A Short History of Nearly Everything
அறிவியலின் வரலாறு நாம் வரை,அதாவது நான் வரை. நீங்கள் வரை. இதுதான் இந்த நூலாசிரியர் பில் பிரைசனின் நோக்கம். அறிவியல் துறை சார் எழுத்துக்கள் தமிழில் வெளிவருவது மிகக் குறைவு, தான் உலகெல்லாம் பயணம் செய்து திரட்டிய செல்வத்தினை தன்பார்வையில் மெருகூட்டி, நகை யதார்த்த நடையில் முன்வைக்கிறார் ஆசிரியர்.

======================================================

48. வண்ணநிலவன் சிறுகதைகள்
வண்ணநிலவன்
1970 செப்டம்பரில் எனது முதல் சிறுகதை வெளியானது. எழுத்தாளனாக வேண்டும் என்ற ஆசையினால் கதை எழுத வரவில்லை. எட்டு, ஒன்பது வயதிலிருந்தே கதை படிக்கிற ஆர்வம் இருக்கிறது. “எமிலி ஜோலா” எவ்வளவு புகழ்பெற்ற எழுத்தாளர் என்பதெல்லாம் தெரியாமலேயே, நூலகத்திலிருந்த அவரது நாவல் மொழிபெயர்ப்புகளை வாசித்தேன். ‘வாசிக்க வேண்டும் என்ற மாளாத ஆசை என்னை சதா இயக்கியது. கதைகளின் மீது இருந்த தீராத கவர்ச்சி என்னை இழுத்துச் சென்றது. வாசித்துக் கொண்டிருப்பதே போதும் என்று தோன்றவில்லை. நாமும் எழுதிப் பார்த்தால் என்ன என்று ஆரம்பித்ததுதான் இது.
– வண்ணநிலவன்
———————————————————————
47.ஆழி சூழ் உலகு
ஜோ டி குருஸ்
சிறந்த நூலுக்கான தமிழக அரசின் விருது பெற்ற நூல். கடலிலும் கரையிலும் பாரவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தைப் அதன் வண்ணங்களோடும் வலிகளோடும் சி்த்தரிக்கும் இது தமிழின் சிறந்த நாவல்களில் ஒன்று.
———————————–
46.கருத்தாயுதம் – வகுப்புவாதத்தை எதிர்கொள்ள…..
பாலகோபால்
டாக்டர் பாலகோபாலின் “கருத்தாயுதம்” தமிழில்..
டாக்டர் பாலகோபால் ஒரு களப்போராளி மட்டுமல்ல. சமகாலப் பிரச்சினைகள் குறித்து மிக ஆழமாக ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் aஎழுதியவர். உலக அளவில் புகழ்பெற்ற EPW இதழில் அவர் எழுதிய ஆங்கிலக் கட்டுரைகள் தனி நூலாக வெளி வந்துள்ளது. தெலுங்கு இதழ்களில் அவர் நிறைய எழுதியுள்ளார். பத்திக் கட்டுரைகளும் அவர் தொடர்ந்து எழுதியதுண்டு. அவையும் தொகுக்கப்பட்டுள்ளன.
பெருகிவரும் இந்து மதவெறி, வெறும் மைனாரிட்டிகளுக்கு மட்டும் ஆபத்தான தல்ல. ஜனநாயக பெருமதிகளுக்கும் ஜனநாயக உரிமைகளுக்கும் ஆபத்தானது. அது வெறும் முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும், சீக்கியர்களுக்கும், இதர மைனாரிட்டிகளுக்கும் எதிரியல்ல. சுரண்டலுக்கும் அடக்கு முறைக்கும் இரை யாகும் மக்கள் அனைவருக்கும் எதிரியே. இந்து பாசிசம் நம்மை கவ்வும்முன் ஜனநாயக பெருமதிகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அதன் பகுதியாக மதசார்பின்மையைப் பாதுகாத்துக் கொள்வதற்காக ஒன்றுபடுவோம். இந்து மதவெறிக்கு பதில், மற்றொரு மதவெறியல்ல, அரசாங்க சர்வாதிகாரமும் அல்ல. ஜனநாயக விழிப்புணர்வே அதற்கு பதில்.
————————————–

45. தீண்டாத வசந்தம்
ஜி. கல்யாண ராவ்
தீண்டாத வசந்தம் ஒரு அற்புதமான நாவல். வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைக்கூட நிறைவு செய்து கொள்ள முடியாத நிலையிலும், மனித உரிமைகள் பலவும் மறுக்கப்பட்ட நிலையிலும், வசந்தத்தை தீண்ட முடியாதவர்களாக அல்லற்பட்டு ஆற்றாது நிற்கும் தாழ்த்தப்பட்ட சமூகங்களின் (சக்கிலியர் மற்றும் பறையர்) சில தலைமுறை மாந்தர்களின் உணர்வு பூர்வமான வரலாற்றை இந்நாவல் காட்சிப்படுத்துகிறது.
———————————–
44. எம்.ஆர்.ராதா:கலகக்காரனின் கதை
முகில்
கொப்பளிக்கும் புத்திக் கூர்மை. டைமிங். மிரட்டும் மாடுலேஷன். அநாயாசமான நகைச்சுவை உணர்வு.வில்லன் வேடமேற்பவரையும் விழுந்து விழுந்து ரசிக்கலாம் என்று ரசிகர்கள் எண்ணத் தொடங்கியதே ராதாவுக்குப் பிறகுதான். அவருக்கு முன்னும் பின்னும் இந்தியத் திரையுலகில் அவருக்கு நிகரான இன்னொரு கலைஞர் உதித்ததில்லை.
———————————————————–

43.நுகர்வெனும் பெரும்பசி -சுற்றுச் சூழலியலில் கடந்த வரலாறும் எதிர்கால கனவுகளும்
ராமசந்திர குஹா (ஆசிரியர்), போப்பு (தமிழில்)

அறிவியலை நாம் தவறாக் பயன்படுத்துகின்றோம் என்பதை அடிக்கடிச் சுட்டிக் காட்டிக் கொண்டே இருக்கிறேன். மக்களுக்குத் தலைமை தாங்கும் போது நான் உண்மையிலேயே அறிவியலுக்கு எதிரானவன் என்பதை மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. அறிவியல் தேடலுக்குச் சில வரையறைகள் உண்டு என்பது எனது பணிவான கருத்து. அறிவியலின் மீது நான் எல்லை நிர்ணயிக்கக் காரணம் மனிதத் தன்மை நம் மீது எல்லையை வரையறுக்கிறது.
——————————-
42.மௌன வசந்தம்
ரெய்ச்சல் கார்சன் (ஆசிரியர்), பேரா.ச.வின்சென்ட் (தமிழில்)

ரெய்ச்சல் கார்சன் தமிழில் : பேரா. ச. வின்சென்ட் உலகை மாற்றிய ஐந்து புத்தகங்களில் ஒன்று. சுற்றுச்சூழல் குறித்த முதன்மையான நூல்.
——————————
41.சோசலிசம் தான் எதிர்காலம்
டாக்டர். ரெக்ஸ் சற்குணம்

சோவியத் ஒன்றியத்தின் சிதைவுக்குக் காரணமாக அங்கு நிகழ்ந்த சோசலிசப் புரட்சி, சோசலிச ஜனநாயகமாக மாறாததைச் சுட்டிக்காட்டுகிறார். இப்படியான படிப்பினைகளைக் கருத்தில் கொண்டு சோசலிசத்தை முன்னெடுத்துச் செல்வது நம் காலத்தின் கட்டாயம் என்ற கருத்தைப் புத்தகத்தின் நெடுகிலும் டாக்டர் ரெக்ஸ் இழையோட விட்டிருக்கிறார். இந்த நூலுக்கு மார்க்சிய அறிஞர் பிரபாத் பட்நாயக் வழங்கிய அணிந்துரையும் முக்கியமானது.
———————————b
40. சூதாடி
ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி

மிகவும் கேவலமான என்னுடைய தற்போதைய இழிநிலையை நான் எவ்வளவு நன்றாய் உணர்கிறேன் என்பதை மட்டும் இவர்கள் அறிவார்களாயின், இவர்கள் என்னைத் தூற்ற இப்படி முன்வர மாட்டார்கள். ஏற்கெனவே எனக்குத் தெரியாத எந்தப்புதிய விஷயத்தை இவர்கள் எனக்குச்சொல்லப்போகிறார்கள் என்று கேட்கிறேன். இங்குள்ள விவகாரம்தான் என்ன? விவகாரம் இதுதான். சக்கரத்தின் ஒரேயொரு சுற்றால் யாவும் தலைகீழாய் மாறிவிடும். எனக்கு இப்பொழுது புத்திமதி கூற வருகிறார்களே இதே ஆட்கள் அப்பொழுது எல்லோருக்கும் முதலாய் (இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை) என்னிடம் ஓடிவந்து சிரித்து மகிழ்ந்து பேசுவார்கள்.
——————————-
39.மரண தண்டனைக் கைதியின் இறுதி நாள்
விக்தோர் ஹ்யூகோ
பிரெஞ்சு மொழியிலிருந்து மொழிபெயர்ப்பும் பின்னுரையும்
குமரன் வளவன்
மொழிபெயர்ப்பில் ஆலோசனை
வெ. ஸ்ரீராம்

விக்தோர் ஹ்யூகோ தன் வாழ்நாள் முழுவதும் இலக்கியப் படைப்புகள், அரசியல் போராட்டங்கள் என்று தன் பணிகளைப் பிரித்துப் பார்க்கவில்லை. ஏறக்குறைய அவருடைய எல்லாப் படைப்புகளையும் அவருடைய சமுதாயப் போராட்டத்துடன்இணைத்துப் பார்க்கலாம்…
இந்தக் குறுநாவல்கூட மரண தண்டனைக்கு எதிரான அவருடைய போராட்டத்தின் ஒரு அங்கம்தான்… வறுமை எதிர்ப்பு, மரண தண்டனை எதிர்ப்பு, சமத்துவம், பெண்உரிமை, கலைஞனின் படைப்புரிமை என்று பல முற்போக்குச்சிந்தனைகளைக் கொண்ட விக்தோர் ஹ்யூகோ அவற்றை எழுத்து வடிவமாகவும் பிறகு அரசியல் போராட்டங்களாகவும் முன்நிறுத்தினார்…

———————————————————–
38.காதுகள்
எம்.வி.வெங்கட்ராம்

எம்.வி.வி. தன் வாழ்க்கையின் சுமார் 20 ஆண்டுகால அனுபவத்தைக் ’காதுகள்’ என்ற பெயரில் எழுதினார். இந்த நாவலின் கதாநாயகன் மகாலிங்கத்தின் மத்திய வயதில் அவன் உள்ளிருந்தும் வெட்ட வெளியிலிருந்தும் பல ஓசைகளை, குரல்களை அவன் காதுகளுக்குள் கேட்க நேர்கிறது. கெட்ட வார்த்தைகள் கூட அவருக்குள் கேட்டன.1993ஆம் ஆண்டு – சாகித்ய அகாதெமி விருது பெற்ற நூல்…..
—————————————————————-

37.தீண்டத்தகாதவன் – ஈழத்து தலித் சிறுகதைகள்
சுகன்
ஈழத்தமிழ் மக்கள் மத்தியில் நிலவும் தீண்டாமைத் கொடுமைகளைக் களமாகக் கொண்டு படைக்கப்பட்ட சிறுகதைகளின் இத் தொகுதியைச் சுமார் ஏழாண்டுகளுக்கு முன் நண்பர் சுகன் தொகுத்த தோடன்றி தன் சொந்த முயற்சியில் வெளியிடவும் செய்தார்.
———————————————–
36.ஓரு குட்டி பூர்ஷ்வாவின் அனுபவங்கள் -வண்ணநிலவன்c

தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவரான வண்ணநிலவனின் கட்டுரைகளும் நேர்காணல்களும் அடங்கிய தொகுப்பு. ஒரு படைப்பாளியின் பார்வை ஒளியிலிருந்து வெளிப்படும் அவதானிப்புகளும் சிந்தனைகளும் நினைவுகளும் எண்ணவோட்டங்களும் கொண்டது.
————————-
35.குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்
எங்கெல்ஸ்
குடும்பங்கள் சேர்ந்து சமூகம் உண்டானதா? அவ்வக்கால சமூகங்கள் குடும்பங்களின் தன்மையை தீர்மானித்தனவா? குலங்கள் இனங்கள், குடும்பங்களாய் பரிணமித்த்து எப்படி? இப்படி பல கேள்விகளுக்கு விடை தருகிறது.
—————————
34.சே குவேரா
மருதன்

வாழ்க்கை முழுவதும் யுத்தங்கள்! போராட்டங்கள்! லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்தை யும் அடிமைத் தளையிலிருந்து விடுவிக்கும்வேட்கை. சே ஒரு தனிமனிதரல்லர். ஒரு மாபெரும் நிலப்பரப்பின் மனச்சாட்சி.
———————————
33.ஆனி பிராங்க் டைரிக் குறிப்புகள்
ஆசிரியர்-தமிழில் உஷாதரன்
இரண்டாம் உலகப்போரின்போது ஹிட்லரின் நாஜி முகாம் ஒன்றில் அடைக்கப்பட்டு தனது 15ஆம் வயதில் இறந்துபோன யூதச்சிறுமி ஆனி பிராங்க், தனது 13,14ஆம் வயதின் இரண்டு ஆண்டுகள் தான் மறைந்து வாழந்த வாழக்கையில் எழுதிய நாட்குறிப்பினால் உலகு ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் தெரிய வந்தவள். நாட்குறிப்புகளின் தொகுப்பு – உலகையே குலுக்கிய புத்தகம் – நாஜிகள் நடத்திய அக்கிரமங்களையும், அடக்குமுறைகளையும் நேருக்கு நேர் பார்த்து எழுதி வைத்துவிட்டுப்போன குறிப்புகளின் தொகுப்பே இந்நூல். 70க்கும் மேற்பட்ட மொழிகளில் வந்த இந்நூல் இப்போது முதல்முறையாக தமிழில்.
——————————–
32.பச்சை விரல்
வில்சன் ஐசக் (ஆசிரியர்), எஸ்.ராமன் (தமிழில்)
கேரளாவின் பாலா கிராமத்தில், சுதந்திரப் போராட்டத் தியாகிக்கு மகளாகப் பிறந்த மேர்சி மாத்யூ என்னும் சிறுமி, தின்ஸை (மத்தியப் பிரதேசம்) கிராமத்தின் கோண்டு பழங்குடிகளில் ஒருத்தியாகவே மாறி, அம்மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய போராட்டக்களம்தான் பச்சை விரல். காடு சார்ந்த வாழ்க்கையால் விலங்குகளாகவே வாழச் சபிக்கப்பட்ட பழங்குடி இன மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பி, இந்திய அரசியல் சட்டம் தன் குடிமக்களுக்கு வழங்கிய அடிப்படை உரிமைகளை அவர்களுக்குப் பெற்றுத் தந்த ஒரு போராளியின் கதை இது.
————————————————————-

31. போரும் வாழ்வும்
லியோ டால்ஸ்டாய்,
தமிழில்: டி.எஸ்.சொக்கலிங்கம்
(மூன்று தொகுதிகள் )
லியோ டால்ஸ்டாய் மாபெரும் நாவலாசிரியர். அவருடைய முக்கியமன நாவல்கள் போரும் வாழ்வும்.156
போரும் வாழ்வும் ரஷ்யாவின் இலியட், ஒடிசி என்றுபோற்றப்படுகிறது. இந்த பெரும் நாவல், வரலாற்று மனிதர்களை நம்முடன் உறவாட வைக்கின்றது
—————————————————————————
30.வேர்கள்
அலெக்ஸ் ஹேலி
தமிழில்: பொன். சின்னத்தம்பி முருகேசன்
1976ல் வேர்கள் வெளிவந்தவுடன் அது அமெரிக்காவில் மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. உலகிலேயே அதிகமாக விற்கப்பட்ட நூல்களின் பட்டியலில் வேர்கள் இடம் பெற்றது. ஒவ்வொரு ஆப்பிரிக்க குடும்பத்தினரிடமும் புனித நூலாக இருக்குமளவுக்கு இந்நூல் முக்கியத்துவம் பெற்றது. தங்கள் வரலாற்றை மீட்டெடுப்பதிலும் உலகிற்கு பறைசாற்றுவதிலும் இந்நூல் ஆற்றிய பங்கு அளப்பரியது. இதுவரை 50க்கும் அதிகமான மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நூற்றிருபது வருட நீண்ட காலத்தில் உலகத்தை உலுக்கிய இது போன்ற ஒரு புத்தகம் வேறெதுவுமே வந்ததில்லை.‘வேர்கள்’ (ரூட்ஸ்) நாவல். 1976-ல் வெளியான இந்த நாவல், தொலைக்காட்சித் தொடராக வெளிவந்து, பெரும் வரவேற்பைப் பெற்றது. ஆப்பிரிக்க – அமெரிக்க மக்களின் வாழ்க்கை, அவர்களது கலாச்சாரம் பற்றிய தகவல்கள் கொண்ட இந்தப் புத்தகம்.
———————————————————————————-

29.பொலிவியன் டைரி – சே
அர்ஜெண்டினாவில் தொடங்கி சிலி, பெரு, வெனிசூலா, பொலிவியா என்று லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே எர்னஸ்டோ மேற்கொண்ட பயண அனுபவங்கள் மோட்டார் சைக்கிள் டைரிக் குறிப்புகளாக வெளிவந்தன. தனித்துவமிக்க இந்தப் புத்தகத்தில் எர்னஸ்டோ சேகுவரா தன் அனுபவங்களையும், தரிசித்த நாடுகளின் அரசியல், சமூக, வரலாற்றுப் பின்புலத்தையும் பதிவு செய்திருக்கிறார்.

—————————————-
28. சந்திரபாபு : கண்ணீரும் புன்னகையும்
கண்ணீரும் புன்னகையும் – சந்திரபாபுவின் வாழ்க்கை வரலாறு…தமிழ்சினிமாவில் ஒரு தனித்துவமான ஆளுமை. சமூக மாற்றத்திற்கு சினிமாவின் பல தளங்களைப் பாவித்த கலைஞன். சிரித்துக் கொண்டும் அழுது கொண்டும் வாழ்ந்த அவனின் கதை .

————————————–
158 (2)27. ஜெருசலேம் உலகத்தின் வரலாறு
சைமன் சிபாக் மாண்ட்டிஃபயர் , தமிழில் சரவணன், அனுராதா ரமேஷ் , சந்தியா நடராஜன்
ஜெருசலேம் ஒரு பிரபஞ்ச நகரம்; இருவேறு இனத்திற்குத் தலைநகர்; மூன்று மதங்களின் புனித பூமி. இறுதித் தீர்ப்புக்கான நிகழிடம். இன்றைய கலாச்சார மோதல்களின் போர்க்களம். உலகின் மையமாக ஜெருசலேம்கருதப்படுவது ஏன்? இன்று மத்திய கிழக்கின் அமைதிக்கான திறவுகோலானது எப்படி?
போர்கள், காதல் களியாட்டங்கள், மன்னர்கள், பேரரசிகள், தீர்க்கதரிசிகள், கவிஞர்கள், துறவிகள், வெற்றியாளர்கள் மற்றும் விலைமகளிர் ஆகியோரின் வியப்புமிகு செய்திகளின் ஊடே என்றென்றும் மாறிவரும் இந்த நகரின் கதையைப் புதிய ஆவணங்களின் வழியாகத் தனது வாழ்வை அர்ப்பணித்து எழுதியிருக்கிறார் மாண்ட்டிஃபையர்.

————————————–
26. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு
ரேமண்ட் கார்வர் (ஆசிரியர்), எம்.கோபாலகிருஷ்ணன் (தமிழில்), க.மோகனரங்கன்
ரேமண்ட் கார்வர் அமெரிக்கச் சிறுகதையாளர். நசிந்துபோயிருந்த யதார்த்தவாத சிறுகதை மரபைப் பெரும் வீச்சுடன் மீண்டும் உயிர்ப்பித்தவர். எளிமையான சித்தரிப்பும் அலட்டலில்லாத மொழிநடையும் வாசிப்பில் எவ்வளவு ஆழங்களையும் சாத்தியங்களையும் உருவாக்க முடியும் என்பதை உறுதிப்படுத்தியவர். உலக சிறுகதை வரலாற்றில் தவிர்க்க முடியாத, ஆளுமையான கார்வரின் கதைகள் தமிழில் இப்போதுதான் முதன்முறையாகத் தொகுப்பாக வெளிவருகிறது. நேரடியாகச் சொல்லும் யதார்த்தவாதக் கதை மரபின் மீதிருக்கும் கோணல் பார்வையையும் எள்ளலையும் வெகு சாதாரணமாகத் துடைத்தெறியும் இக்கதைகள் தமிழுக்கு மிக முக்கியமான வரவாகும்.

 

25. காலம்

எம்.டி.வாசுதேவன் நாயர்
தமிழில்: மணவை முஸ்தபா
1970 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி பரிசு பெற்ற மலையாள நாவல் காலம். ஒரு எளிய மத்திய தரக் குடும்ப இளைஞனின் வாலிப உணர்வுகள், கானல் நீராகக் காட்சி தந்த சமுதாயக் கோணல் நிலைகள், அவனது எதிர்நீச்சல்களும் தோல்விகளும் அவன் வாழ்வில் பதித்துச் சென்ற சுவடுகளை, யதார்த்த அடிப்படையில் விளக்கும் இலக்கியப் படைப்பு இந்நூல்.

b24. முச்சந்தி இலக்கியம்
ஆ.இரா.வேங்கடாசலபதி
‘பெரிய எழுத்துப் புத்தகங்கள்’, ‘குஜிலி நூல்கள்’, ‘காலணா, அரையணா பாட்டுப் புத்தகங்கள்’, ‘தெருப்பாடல்கள்’ என்று பலவாறாக அழைக்கப்பட்ட வெகுசன இலக்கியக் கருவூலம் பற்றிய முதல் நூல் இது. மெல்லியதாளில், மலிவான அச்சில், பெரிய எழுத்தில், பல்வேறு பொருள்கள் பற்றி 19ஆம் நூற்றாண்டின் கடைசியிலிருந்து 20ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை வெளியான வெகுசன இலக்கியம் குறித்த விரிவான ஆய்வு.
.
இவ்விலக்கியத்தின் தன்மை, உருவாக்கம், உள்ளடக்கம், இயற்றியோர், வெளியிட்டோர், பரப்பியோர், வாசகர்கள், வாசிப்பு முறை ஆகியவற்றை இந்நூல் விரிவாக ஆராய்கிறது. துண்டு துணுக்குகளாகப் பல்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் அரிய செய்திகளைக் கொண்டு சுவையாகவும் விறுவிறுப்பாகவும் எழுதப்பட்ட நூல் இது.

23. சார்த்தர் விடுதலையின் பாதைகள்
எஸ்.வி.ராஜதுரை

இந்த நூல் சார்த்தரின் அரசியல், தத்துவ வரலாறு மட்டுமல்ல, இருபதாம் நூற்றாண்டின் மாபெரும் நிகழ்ச்சிகளின் வழியான ஒரு அறிவுப் பயணமுமாகும். 1968 இல் பிரான்சில் நடைபெற்ற மாணவர், தொழிலாளர் போராட்டத்தின் ஒரு ஊக்க சக்தியாக திகழ்ந்த சார்த்தர் ,ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திரண்டெழுந்த ஆயிரக்கணக்கானோரின் சாட்சியமாக செயற்பட்ட வரலாறும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

22. 18வது அட்சக்கோடு
அசோகமித்திரன்

தனிமனிதனில் இருந்து தேசம் நோக்கிப் பார்க்கும் ஒரு படைப்பாளியின் பார்வையில் பதிவு செய்யப்பட்ட ‘மைக்ரோ’ வரலாறு. இதில் தனி மனிதர்களின் அரசியல் கோட்பாடுகள் பதிவு செய்யப்படுகின்றன. அவர்களின் பொருளாதார நிலை பேசப்படுகிறது. தனிமனிதப் பார்வையில் நிஜாமினுடைய காரியதரிசிகளின் செயல்பாடுகள் அலசப்படுகின்றன. ‘மைக்ரோ’ வரலாறுகள் காலத்தின் ஓட்டத்தில் மறுவாசிப்புகளிலும் மறுஆய்வுகளிலும் மாற்றம்பெறுவதில்லை. அவை தனிமனிதனின் பார்வையில் இருந்து எழுதப்படும் எளிய சாட்சிகளாக படிமங்களாகின்றன. 1940களின் நிகழ்வுகள் 1970களில் நாவலாகப் பதிவு செய்யப்பட்டு 2010களில் வாசிக்கும் இன்றைய தலைமுறை வாசகனையும் தன்னோடு சேர்த்துக்கொண்டு இந்நாவல் பயணப்படுகிறது

21.திருடன் மணியன்பிள்ளை
ஜி.ஆர்.இந்துகோபன் (ஆசிரியர்), குளச்சல் மு.யூசுப் (தமிழில்)

செய்யாத குற்றத்திற்காகச் சிறைத் தண்டனை அனுபவித்ததிலிருந்து இவரது குற்றவாசனை வெளிப்பட ஆரம்பிக்கிறது. திருட்டுகளில் ஈடுபடுகிறார். இதற்காக இவர் கையாள்கிற நுட்பங்கள் பிரமிக்க வைப்பவை; சாகசத் தன்மை கொண்டவை. போலீசில் பிடிபட்டதுமே உண்மைகளை ஒப்புக்கொண்டுவிடுகிற இவர், தன் மீதான வழக்குகளுக்கு வழக்கறிஞர்களை நியமித்துக்கொள்ளாமல் தானாகவே வாதாடுவார். இவரது குறுக்கு விசாரணைகள், போலீஸ் அதிகாரிகளும் நீதிபதிகளும் பயப்படுமளவுக்கு அமைந்திருக்கும்.ஒரு விளிம்பு நிலை மனிதனின் கதை இது.
20 . மொகலாயர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும்
டி.கே.இரவீந்திரன்

மொகலாயர்களின் ஆட்சி நிறைவடைந்து 200 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டாலும் அவர்கள் விட்டுச்சென்ற விஷயங்கள் இன்றும் இந்தியாவின் பெருமைமிக்க அடையாளங்களாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. அவற்றுள் தாஜ்மஹாலும், செங்கோட்டையும் மொகலாயர்களின் பெருமைகளைப் பறைசாற்றிக் கொண்டு அழிக்கவொண்ணா சாட்சியங்களாக கம்பீரமாக காட்சி தந்துகொண்டிருக்கின்றன.மன்னர் அக்பரின் ஆட்சி பற்றிய முழுமையான ஒரு சித்திரம் இந்த நூல்.

19. பாலைவனப் பூ
– காத்லீன் மில்லர்
தமிழில் : எஸ்.அர்ஷியா

நான் பேசியிருப்பது, என்னிடமுள்ள மிகமுக்கியமான ரகசியம். எனது நெருங்கிய நண்பர்களுக்குக்கூடத்
தெரியாது, எனது சிறுவயதில் எனக்கு என்ன நடந்தது என்று. அது சோமாலியாவில் நெடுங்காலமாகக்
கடைபிடிக்கப்பட்டுவரும் ஒரு தனிப்பட்டக் கலாச்சாரம். அதை நான், என்னால் முடிந்த அளவுக்கு எப்போதும் பேசுவதுபோல, மிக எளிதாக வெளிப்படுத்திவிட்டேன்.பல லட்சம் முகமறியாதவர்களின் அந்தரங்கத்தை நான்இப்போது பேசியிருக்கிறேன்…

பெண் விருத்தசேதனம் அல்லது பெண் பிறப்புறுப்பு சிதைப்பு போல பலவிஷயங்கள்,ஆப்பிரிக்காவிலுள்ள
இருபத்தெட்டு நாடுகளில் பெருவாரியாக நடந்துவருகின்றன. சிறுமிகளும் பெண்களுமாக இதுவரை 13
கோடி பேரிடம் இக்கொடும் நடவடிக்கை கைக்கொள்ளப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நடவடிக்கைக்கான பிரிவு மதிப்பீடு செய்திருந்தது.

a
18. மரப்பசு-நாவல்
தி.ஜானகிராமன்

தி. ஜானகிராமன் நாவல்களில் மிக நவீனமான படைப்பு ‘மரப்பசு’. அவரது பிற நாவல்கள் கடந்தகாலத்தின் மறு உருவாக்கங்கள். ஆனால் நிகழ்காலத்தை நேர்முகமாக எதிரொலித்த படைப்பு ‘மரப்பசு’. பிற நாவல்கள் வாழ்வனுபவத்தின் மீதான படைப்புகள். அவற்றில் கருத்துகள் பின்புலமாகவே அமைந்தவை. மரப்பசு கருத்தை முன்னிறுத்தி வாழ்வைப் பாதித்த படைப்பு. இதில் அனுபவங்கள், கருத்துகளை வலுப்படுத்துவதற்கான காரணிகளாகவே உருப்பெற்றிருப்பவை. உலகம் முழுவதும் பெண்ணியக் கருத்துகள் அலையடித்துக்கொண்டிருந்த தருணத்தில் அவற்றை தமிழில் விவாதித்த முதல் ஆக்கம் ‘மரப்பசு’.

பூமியிலிருக்கும் சகல உயிர்களையும் அன்பின் கரங்களால் தழுவ விரும்பும் அம்மணி நவீன தமிழ் இலக்கியத்தில் மறக்க முடியாத பாத்திரங்களில் ஒன்று. அம்மணி மழைத் துளிபோல புதிதானவள். அதே சமயம் நதியைப் போல் பழமையானவள். காற்றைப் போல் சுதந்திரமானவள். அதே சமயம் சிறகுகளின் பாதுகாப்பில் ஒடுங்க விரும்பியவள். உறவுகளைத் தேடி அலைந்தவள். அதே சமயம் தனிமையானவள்.

 

17. ராஜா வந்திருக்கிறார்
கு.அழகிரிசாமி

கு.அழகிரிசாமி தமிழில் சிறுகதைக்காக சாகித்திய அக்காடமி பரிசு பெற்ற முதல் எழுத்தாளர்.
’ராஜா வந்திருக்கிறார்’ என்ற அவரது இந்தத் தேர்ந்தெடுத்த கதைகளில் கு.அழகிரிசாமியின்
கதைசொல்லும் பன்முக ஆற்றலின் கீற்றுகளை வாசகன் உணர முடியும்.

16.போராளியின் காதலி (குறு நாவல்)
– வெற்றிச்செல்வி

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் வன்னியிலிருந்து எழுதப்பட்ட முதல் நாவல் இது. மன்னார் அடம்பன் பிரதேசத்தினை சேர்ந்த இந்தப் படைப்பாளி விடுதலைப்புலி உறுப்பினராக இருந்ததுடன் , இறுதி யுத்தம் வரை இயக்கத்தில் இருந்தவர். 1993இல் நிகழ்ந்த ஒரு வெடிவிபத்தின் போது தனது கண்ணொன்றையும் காலொன்றையும் இழந்தவர். இதன் பின் எழுதத் தொடங்கிய இவர் விடுதலைப்புலிகளின் ஊடகங்களிலும், தமிழ் நாட்டு ஊடகங்களிலும் எழுதி உள்ளார்.

15. கவர்ன்மென்ட் பிராமணன்
அரவிந்த மாளகத்தி
கன்னடத்திலிருந்து தமிழில்: பாவண்ணன்

பல நூற்றாண்டுகளாக நிகழ்ந்த கொடுமைகளின் விளைவாக, சமூகத்தின் உடல்முழுக்கக் காய்ப்பேறிய தழும்புகள் மட்டுமே உள்ளன. ஒரே ஒரு அங்குலம்கூட அதன் உடல்பகுதி வெளியே தெரியாதபடி எங்கெங்கும் தழும்புகள். அரவிந்த மாளகத்தியின் எழுத்துகளில் இத்தகு தழும்புகளையே நாம் காண்கிறோம். எழுத்தும் படிப்பும் கைவரப்பெற்ற ஒருவரின் குறிப்புகளே இந்த அளவுக்கு நமக்குத் தலைகுனிவையும் நாணத்தையும் உண்டாக்கவல்லன எனில், படிப்பும் எழுத்தும் அறியாத பாமர ஜனங்கள் வாய்திறந்து பேசத் தொடங்கினால் நம் முகத்தை எங்கே போய் வைத்துக்கொள்வது என்றே தெரியவில்லை.ஒரு தன் வரலாற்று ஆவணம் இது.

14.  கிழவனும் கடலும்
எர்னெஸ்ட் ஹெமிங்வே, தமிழில்: எம்.எஸ்

கியூபாவின் முன்னாள் அதிபரும் இலக்கிய ரசிகருமான ஃபிடல் காஸ்ட்ரோ தனது காரில் எப்போதும் வைத்திருந்த புத்தகங்களில் ஒன்று இது.ஒரு தீவிரமான சூழ்நிலையில், எதிர்மறை யான நிலைமைகளிலும் போராடுவதற்கு வலுவுடன் எழும் உத்வேகம்குறித்து எழுதப்பட்ட மகத்தான படைப்பு இது. 1952-ல் வெளியிடப்பட்ட இப்படைப்பு, உச்சபட்ச வார்த்தைச் சிக்கனம் மற்றும் வர்ணனைகள் கொண்ட சிறுநாவலாகும். 1954-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றது.

c

13 . கசாக்கின் இதிகாசம்
ஓ.வி.விஜயன் (ஆசிரியர்), யூமா வாசுகி (தமிழில்)

நவீன இந்திய இலக்கியத்தின் மகத்தான படைப்புகளில் ஒன்று ஓ.வி.விஜயன் எழுதிய ‘ கசாக்கின் இதிகாசம்’ மலையாள நவீனத்துவ எழுத்தின் ஆகச் சிறந்த முன் மாதிரியும் நிகரற்ற சாதனையும் இந்த நாவல்கள்.

12. தமிழ்ப் பெண்புலி

  நிரோமி டி செய்ஸா

மத்தியதர பின்புலத்தினைக் கொண்ட இந்த காதாசிரியர், தான் எப்படி விடுதலைப் புலிகளில் இணைந்தது, போரிட்டது, உடன்பாடு கொண்டது, முரண்பட்டது என்பதை விரிவாக விபரிக்கும் பிரதி இது. தற்போது இதன் ஆசிரியர் கணவர், குழந்தைகளுடன் அவுஸ்ரேலியாவில் வாழ்ந்து வருகிறார்.

11. அஞ்சல் நிலையம்
சார்லஸ் புகோவ்ஸ்கி
தமிழில்: பாலகுமார் விஜயராமன்

ஹென்றி சார்லஸ் புகோவ்ஸ்கி ஜெர்மனியில் பிறந்து, அமெரிக்காவில் வாழ்ந்த கவிஞர், புதினம் மற்றும் சிறுகதை எழுத்தாளர். அவர் வாழ்ந்த லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார சூழ்விளைவுகளின் பாதிப்பு அவரது படைப்புகளில் பொதிந்திருக்கும். அமெரிக்காவில் உள்ள ஏழைகளின் எளிய வாழ்வு, எழுதும் கலை, குடி, பெண்களுடனான தொடர்பு, அடிமைத்தொழில் ஆகியவற்றை அவர்து படைப்புகள் பேசுகின்றன. புகோவ்ஸ்கி ஆயிரக்கணக்கான கவிதைகள், நூற்றுக்கணக்கான சிறுகதைகள் மற்றும் ஆறு புதினங்கள் எழுதியுள்ளார். அவை அறுபதுக்கும் மேற்பட்ட புத்தகங்களாக வெளிவந்துள்ளன. அமெரிக்க செய்தித்தாளான “ஓபன் சிட்டி”யில் இழிந்த கிழவனின் குறிப்புகள் என்ற பெயரில் பத்தி எழுதியதைத் தொடர்ந்து, அமெரிக்க உளவுத்துறையான எஃப்.பி.ஐ. அவருக்கென தனி கோப்பு தயாரித்து கண்காணித்து வந்தது. 1986ம் ஆண்டு “டைம்” பத்திரிக்கை புகோவ்ஸ்கியை ”அமெரிக்க கீழ்நிலை வாழ்வின் அரசவைக்கவிஞர்” என்று புகழாரம் சூட்டியது.இப்புதினம் புனைவு என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும், புகோவ்ஸ்கியின் சுயசரிதையாகவே கருதப்படுகின்றது.

 

10.*ஊழிக்காலம் ( நாவல்)
– வாக்களித்து திரட்டப்பட்ட சேனை வலுவிழந்தது எப்படி? எல்லாம் ஒரு கனவு போலக் கலைந்து போனது எப்படி?……. – இந் நாவல் நான் நடந்த பாதையில் கண்டவை, இன்னொருவர் நடந்த தடம் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்களும் அவலமும் ஒன்றுதான் . -தமிழ்க்கவி

a

09.*அகாலம் ( நினைவுக் குறிப்புகள்)
– ஈழப் போராட்டத்தின் இன்னும் எழுதப்படாத இலட்சக்கணக்கான பக்கங்களில் ஒரு நூறு பக்கங்களையாவது நான் எழுதிவிட முயற்சிக்கிறேன்………. உற்சாகத்தையும் பெருமிதத்தையும் வலியையும் அவமானத்தினையும் கலவையாக என்னில் சுமத்திய அந்த நாட்களை ஒளிவு மறைவின்றி உங்களிடம் சொல்லத் தொடங்குகிறேன் – புஷ்பராணி

 

08.*வன்னி யுத்தம்- ( நினைவுக் குறிப்புகள்)
கடந்த மூன்று தசாப்தங்களாக நடைபெற்ற யுத்தத்தில் , வறிய கூலிக் குடும்பங்களை சேர்ந்த பிள்ளைகளே பெரும்பாலும் ஈடுபட்டதால் ஒவ்வொரு போராளிக்குப் பின்னாலும் கண்ணீர்க் காலம் இருந்தது. இந்தப் போராளிகளின் குடும்பங்கள் பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தார்கள் .அந்தப் போராளிக் குடும்பங்கள் அனுபவித்த துயரங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக நான் நேரில் கண்ட சம்பவங்களில் சிலவற்றை இங்கு குறிப்பிட்டுள்ளேன். – அப்பு –

 

07*ஈழப்[போராட்டத்தில் , எனது பதிவுகள் ( வரலாற்றுக் குறிப்புகள்)
– தம்பி என்று அழைக்கப்பட்ட பிரபாகரனுடன் முதன் முதலில் உருவாக்கிக் கொண்ட அமைப்பின் மத்திய குழுவில் நானும் ஒருவன் என்ற வகையில் இழப்புகள் எல்லாம் இன்னும் இறுக்கமாய் எனது இதயத்தை அறைந்தது . …..இருபதுகளில் ஏற்படுகின்ற இளைஞனுக்கே உரித்தான நாட்டங்களிலிருந்தெல்லாம் விடுபட்டு புரட்சி, போராட்டம் என்பன குறித்து சிந்திக்கிறோம். – கணேசன் (ஐயர்)

 

06.*முறிந்த பனை – ( இலங்கை தமிழர் பிரச்சினை உள்ளிருந்து ஒரு ஆய்வு )
சமுதாயம் புத்தெழுச்சி பெற வேண்டுமென நாம் கடுமையாக உணர்ந்துள்ளோம்.அதைச் செய்வதற்கு எங்களைப் பற்றியும் , எங்கள் மீட்பர்களாக கருதப்படுபவர்களைப் பற்றியுமான உண்மைகளை அவற்றின் நிர்வாணத்தன்மையில் எதிர் கொள்ள வேண்டும். ஆழமாக உணரப்பட்ட இன்றைய தேவையை நிறைவேற்றும் ஆர்வத்தினால் நாம் எழுதத் தொடங்கினோம்…..மேலும் இந் நூலின் வெளியீடு அநேக பகுதிகளில் மகிழ்ச்சியின்மையை உண்டாக்கும் ஒரு செயலுமாகும். இது தற்காலிகமானதெனவும் , எல்லாக் கட்சிகளும் தனி நபர்களும் இந் நூலை வாசிப்பது மிக நன்மையாக இருக்குமெனவும் நாம் நம்புகிறோம்.- ஆசிரியர்கள் – பேராசிரியர்களான ராஜனி திராணகம, ராஜன் ஹூல், தயா சோமசுந்தரம் , கே. சிறிதரன்

 

05.*ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம் ( வரலாற்றுக் குறிப்புகள்)
– நான் எந்த விடயத்திலும் எந்த சந்தர்ப்பத்திலும் மௌனியாக இருக்க விரும்பவில்லை , மௌனியாக இருக்க வேண்டிய அவசியமும் எனக்கில்லை. நான் கூறுவதுதான் சரியானது என்கிற பிடிவாதமும் இல்லை. இவர்களுடன்தான் பேசுவேன் , இவர்களுடன்தான் உறவு கொள்வேன் என்ற இறுமாப்பும் இல்லை….. நான் இப்புத்தகத்தினை எழுத வேண்டுமென எண்ணியதிலிருந்து எனக்குள் தேடலில் ஒர் ஆர்வம் எழுந்தது.இப்புத்தகத்தினை எழுதத் தொடங்கிய போது அதன் அவசியத்தினை உணர்ந்து கொண்டேன். ஈழப் போராட்டம் சம்பந்தமாக சரியான தகவல்கள் அடங்கிய நூல்கள் எம்மிடையே இல்லை என்பதனை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். சி.புஸ்பராஜா

04.* CHERAN IN A TIME OF BURNING
எரிந்து கொண்டிருக்கும் நேரம்
ஆங்கிலத்திலும் தமிழிலும் சேரனின் 36 கவிதைகள்
This collection brings together some of the finest poetry written over more then three decades by Cheran , one of the best known Tamil poets today, impeccably translated by Lakshmi Holmstrom.

 

03.*MIRRORED IMAGES
– An Anthology of Sri lankan Poetry , Edited by Rajiva wijesinha
The collection is intended to showcase Srilankan poetry of the period since independence.Though I have included a few very recent poems…..
இத் தொகுதியில் தமிழில் எழுதிவரும் ஆழியாள், பி. அகிலன், அனார், கி.பி அரவிந்தன், அஸ்வகோஸ், அவ்வை, செழியன், சேரன், ஏ.இக்பால், நட்சத்திரன் செவ்விந்தியன், வ.ஐ.ச. ஜெயபாலன், அ.யேசுராசா, கரலின் கைதம்பிள்ளை, கருணாகரன், பண்ணாமத்து கவிராயர், மஹாகவி, முருகையன், எம்,ஏ. நுஹ்மான், எஸ்.பத்மநாதன், ரி. ராமலிங்கம், தவ சஜிதரன், பி. சத்தியசீலன், சில்லையூர் செல்வராசன், செல்வி, சித்தாந்தன், சண்முகம் சிவலிங்கம், ஆர். சிவானந்தன், தர்மு சிவராமு, சிவரமணி, சோலைக்கிளி, திருமாவளவன், ஊர்வசி,வில்வரத்தினம், வினோதினி, விவேக், இளவாலை விஜேயந்திரன், யாவனிக்கா, ஆகிய 39 கவிஞர்களின் கவிதைகள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.மறைந்த செல்வா கனக நாயகம் தமிழ்க் கவிதை பற்றிய விரிவான குறிப்பினையும் எழுதியுள்ளார்.

 

02*வரலாற்று மானிடவியல்- Historical Anthropology
-பக்தவத்சல பாரதி
இந்த நூல் வரலாறு எழுதுதல் பற்றியது, எழுதப்பட்ட வரலாற்றை அணுகுவது பற்றியது, மானிடவியலின் நோக்கு நிலைகளை அறிவது பற்றியது.வரலாறு எழுதுவதில் இன்று கீழிருந்து மேல் நோக்கி செல்லுதல் எனும் போக்கு விளிம்பு நிலை சார்ந்த வரலாறாகப் பேசப்படுகிறது…… வரலாற்றை அணுகுவதற்கான முறையியல் சார்ந்த பார்வையைத் தேடுவது இந் நூலின் இலக்குகளில் ஒன்றாகும்.

 

01.*பண்பாட்டு அசைவுகள்-
– தொ.பரமசிவன்
-தான் சுற்றியுள்ள சமூகத்தின் அசைவுகளைத் தன்னின் பகுதியாக காணும் போக்கு இன்னமும் தமிழ் வாசிப்பாளர்களுக்கு போதிய அளவுக்கு கைகூடவில்லை என நாம் கருதவேண்டியுள்ளது.இன்று உலக மயமாக்கம் மிகப்பெரிய பண்பாட்டு நெருக்கடியை நமக்கு உருவாக்கி உள்ளது. அதனை நாம் முழுமையாக உணர்ந்தபாடில்லை. ஒற்றைப் பண்பாட்டை உருவாக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு பண்பாட்டின் பன்மியத் தன்மையினை உணர்வதும் பேணுவதுமே வழியாகும்.

 

 

 

———————————————————

 ஐரோப்பிய ,அமெரிக்க நாடுகளுக்குள் ,லண்டனில் அமைந்துள்ள எமது படிப்பக நிலையத்தால்,இந்த நூல்களை வான் வழி பொதிச் சேவை மூலம் அனுப்பி வைக்க முடியும். இலங்கை மற்றும் மத்திய கிழக்கிலுள்ள வாசகர்கள்  நூல்கள் தேவைப்படின் தொடர்பு கொள்ளுங்கள். எம்மிடம் உள்ள நூல்களின் விபரம் தேவையானோரும், நூல்கள் தேவையானோரும் கீழ்வரும் தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொள்ளுங்கள் .Mobile 0044 (0) 7817262980 . Email. eathuvarai@gmail.com.பிரித்தானியாவில் உள்ளவர்கள் 317, 1st Floor, High Street north, Eastham,LONDON, E12 6SL எனும் முகவரியில் திங்கள்,செவ்வாய், வியாழன்,வெள்ளி, சனி ஆகிய தினங்களில் பெற்றுக் கொள்ளலாம்.

0000000

மேலதிக நூல்களுக்கு

படிப்பகம்/நூல்கள்1 பார்க்கவும்

 
http://eathuvarai.net/?page_id=205